சென்ற கட்டுரையில் வண்ணார்பண்ணைக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்தில் உள்ள விவரங்களைப் பற்றிப் பார்த்தோம். இனி யாழ்ப்பாண நகரத்தோடு எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் இன்னொரு கோவிற்பற்றான சுண்டிக்குழிக் கோவிற்பற்றைக் குறித்துப் பார்க்கலாம். இக் கோவிற்பற்றில் சுண்டிக்குழி, கரையூர், கொழும்புத்துறை, சிவியாதெரு, நளவபரவு, கடையகுடியிருப்பு என்னும் ஆறு துணைப் பிரிவுகள் இருந்ததாக நிலப்படம் காட்டுகிறது. (படம்-1) இவற்றுள் கரையூர் தற்காலத்தில் குருநகர் எனவும், சிவியாதெரு இப்போது அரியாலை எனவும் அழைக்கப்படுகின்றன. நளவபரவு, கடையகுடியிருப்பு என்னும் […]
அண்மைக்காலத்தில் வடஇலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள முக்கிய தொல்லியல் மையங்களில் தீவகத்தில் உள்ள சாட்டியும் ஒன்றாகும். இது யாழ்ப்பாண நகரத்தில் இருந்து ஆறு மைல் தொலைவில் வேலணைப் பிரதேசத்தில் உள்ள ஒரு கடற்கரைக் கிராமமாகும். இலங்கையின் வரலாற்றுப் பழைமை வாய்ந்த துறைமுகங்களைக் கொண்ட கிராமம் என்ற வகையில் சாட்டிக்குத் தனித்துவமான வரலாற்றுச் சிறப்புண்டு. இதன் அமைவிடம் புவிச் சரிதவியல் அடிப்படையில் தமிழகத்திற்கு மிகக் கிட்டிய தூரத்தில் அமைந்திருப்பதால் இவ்விடம் பண்டுதொட்டு தென்னிந்தியாவுடனும், […]
“இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்தூர்வது அஃதொப்ப தில்”திருக்குறள் (621) மு. கருணாநிதி விளக்கம் : சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான். எனது உயர் படிப்பை ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்துவிட்டு, முப்பது வருடங்களுக்கு முன் (1994 ஆம் ஆண்டு) ஐக்கிய அமெரிக்காவில் எனது தொழில் வாழ்க்கையை தொடங்கினேன். இந்த முப்பது வருடங்களில் மூன்று உலகளாவிய நிறுவனங்களிலும் இரண்டு ஆரம்பத் தொழில்நுட்ப நிறுவனங்களில் […]
அறிமுகம் இன்றைய மனித சமூகம் எதிர்கொள்ளுகின்ற மிக முக்கியமான இயற்கை அனர்த்தங்களுள் வறட்சியும் ஒன்றாகும். பூகோள ரீதியிலான காலநிலை மாற்றம் உலகளாவிய ரீதியில் வறட்சி அனர்த்தங்களின் நிகழ்வு எண்ணிக்கையையும் பாதிக்கும் தன்மையையும் அதிகரித்து வருகின்றது (Dananjaya et al., 2022). 2019 ஆம் ஆண்டின் ஐ.பி.சி.சி. யின் அறிக்கை, உலகளாவிய ரீதியில் ஆண்டுக்கு சராசரியாக 42 நாடுகள் வறட்சியினால் பாதிக்கப்படுவதாக குறிப்பிடுகின்றது (Abeysinghe & Rajapaksha, 2020). அத்தோடு எல் […]
மானிடவியலாளர் பேரின்பநாயகத்தின் கட்டுரை ‘CASTE, RELIGION AND RITUAL IN CEYLON’ என்ற தலைப்பில் றொபர்ட் சித்தார்த்தன் பேரின்பநாயகம் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் ‘யாழ்ப்பாணத்தில் சாதி, சமயம், சடங்கு’ என்னும் தலைப்பில் இந்நூலில் இடம்பெறுகிறது. இக் கட்டுரையினை பேரின்பநாயகம் 1965 ஆம் ஆண்டில் எழுதினார். ஏறக்குறைய 60 ஆண்டுகள் கடந்தபின் இக்கட்டுரை தமிழாக்கம் மூலமாக தமிழ் அறிவுலகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணச் சமூகம் பற்றி ‘THE KARMIC […]
தமிழில் : த. சிவதாசன் 2015 இல் நான் யாழ்ப்பாணத்திற்குக் குடிபெயர்ந்ததிலிருந்து அங்கு போர் விதவைகளால் நடாத்தப்படும் உணவகம் பற்றி பல வதந்திகளைக் கேள்விப்பட்டிருந்தேன். கொழும்பிலிருந்து வடக்கே வரும் நண்பர்கள் கிளிநொச்சிக்கு அருகே, A9 வீதியில் இது இருப்பதாகச் சொன்னார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து ஒன்றரை மணித்தியால வாகன ஓட்டத்தில் (சிலர் இதை ஒரு மணித்தியாலத்தில் கடந்துவிடுவார்கள்) கிளிநொச்சிக்கு அருகே இருக்கும் இவ்விடத்தைத் தரிசிக்க எனக்கு ஒரு வருடம் பிடித்தது. பின்னர் தான் […]
தொடக்கக் குறிப்புகள் இலங்கையின் கடந்த கால்நூற்றாண்டு கால அபிவிருத்தி அரசியலின் வரலாற்றில் மக்களின் பாரிய எதிர்ப்பைச் சம்பாதித்த அபிவிருத்தித் திட்டங்களில் மேல்கொத்மலைத் திட்டம் முதன்மையானது. மக்களின் எதிர்ப்பையும் மீறி அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் இலங்கையின் சூழலியல் போராட்டங்களின் வரலாற்றில் முக்கிய இடம் இத் திட்டத்திற் கெதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு உண்டு. தேச நலனின் பெயரால் மலையகத் தமிழர்கள் தங்கள் வாழிடங்களில் இருந்து இடம் பெயர்க்கப்பட்டார்கள். இயற்கை அழிக்கப்பட்டது. நீர் மின்சாரமும் அதற்காக […]
இன்றைய நாட்களில் சமூக ஊடகங்களின் வகிபாகம் மிக முக்கியமானது. சகல துறைகளிலும் அதன் செல்வாக்கை் தவிர்க்க முடியாதுள்ளது. நல்லதோ கெட்டதோ சமூக ஊடகம் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. கால்நடை வளர்ப்புச் செயன்முறையும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்றைய நவீன கால்நடை வளர்பில் கணிசமான விடயங்களை சமூக ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்த முடிகிறது. இனிவருங் காலங்களின் அதன் பங்களிப்பு இன்னுமின்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தக் கட்டுரை கால்நடை வளர்ப்பு விரிவாக்கத்தில் சமூக ஊடகத்தின் பங்களிப்பை ஆராய்கிறது. […]
முதலாளித்துவ யுகத்தில் ஐரோப்பியர்களின் எழுச்சிக்கும் தெற்குலகின் வீழ்ச்சிக்குமான காரணங்களை பின்வருமாறு சுருக்கலாம்: 1) விஞ்ஞானம், மனித குல, பொருளாதார, நாகரிக வளர்ச்சி என்பன ஒரு நாட்டுக்கோ ஒரு கண்டத்துக்கோ ஓர் இனத்துக்கோ சொந்தமானதல்ல. அவை மனித குலம் தோன்றிய காலம் முதல், ஆதிக்குடிகளாகவும், பின்னர் கோத்திரங்களாகவும், அரசுகளாகவும், தேசங்களாகவும் அது பரிணாமம் அடைந்து காலங்காலமாக, சிறுகச்சிறுக, ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு படிப்படியாக வளர்க்கப்பட்ட திரட்சியேயாகும். இவ் வளர்ச்சியில் […]
கூட்டுறவு, ஒரு பலமான சமூக – பொருளாதார அடித்தளத்தையும் சமூக மூலதனத்தையும் சம அளவில் உள்வாங்கி, பல மட்டங்களில் (கிராம, பிரதேச, மாவட்ட மற்றும் மாகாணச் சம்மேளனங்களாக) கிளைவிட்டுத் தழைக்கும் ஒரு அமைப்பு ஆகும். இலங்கையில், மிகவும் குறிப்பாக, வடக்கு – கிழக்கு மற்றும் மலையக நிர்வாக நிலப்பரப்பில் கூட்டுறவின் அசைவியக்கம் ஒரு தேங்கு நிலைக்குச் சென்றுள்ளது. அண்மையில் கூட, இது பற்றிய கரிசனை பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. தற்போதைய கூட்டுறவின் […]