தற்கொலைகள்: சமூக அவலத்தின் கண்ணாடி
40 நிமிட வாசிப்பு
தொடக்கக் குறிப்புகள் 2013 ஆம் ஆண்டு கள ஆய்வொன்றிற்காக முல்லைத்தீவுக்குச் சென்றிருந்தோம். குறித்த தினம் எமது கள ஆய்வை நிறைவுசெய்து, எமக்கு உதவிபுரிந்த நண்பர் ஒருவரின் வீட்டில் மாலை இளைப்பாறிக் கொண்டிருந்தோம். தீடிரென ஒருவர் ஓடி வந்தார். அவர்களது அயலவர் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும் அவரைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் சொன்னார். ஆனால் அதற்கான போக்குவரத்து வசதி இருக்கவில்லை. ஏனெனில் நாம் தரித்து நின்ற […]
மேலும் பார்க்க
கதிர்காமம்: தமிழ் நாட்டவர்க்கான யாத்திரை வழிகாட்டி
25 நிமிட வாசிப்பு
இலங்கையின் புராதன முருகன் ஆலயங்களுள் ஒன்றான கதிர்காமம் சைவர்களதும் பௌத்தர்களதும் பிரதான யாத்திரைத்தலமாக விளங்கி வருகின்றது. நாடு முழுவதுமிருந்து முருக பக்தர்கள் கதிர்காமத்துக்கு யாத்திரை செல்கின்றனர். இந்த யாத்திரையும் யாத்திரைக் காலத்து நடைமுறைகளும் இலங்கையின் கலாசார வாழ்வின் முக்கியமான கூறுகளாக விளங்குவதுடன் ஒவ்வொரு இனத்தினதும் பிராந்தியத்தினதும் வழமைகளுக்கு ஏற்ப, தனித்துவம்மிக்க உபபண்பாட்டுக் கூறுகளும் உருவாக்கம் பெற்றுள்ளன. கதிர்காமத்தோடும் கதிர்காம யாத்திரையோடும் தொடர்புபட்ட வகையில் ஆலய உருவாக்கங்கள், ஆலய நடைமுறைகள் முதலானவை […]
மேலும் பார்க்க
இந்தியச் சமஷ்டி முறை
15 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: ஜயம்பதி விக்கிரமரட்ண உலக நாடுகளின் சமஷ்டி முறைகளில் இந்தியாவின் சமஷ்டி முறை தனித்துவம் மிக்கது. இந்தியாவின் சமஷ்டி முறை அரசியல் யாப்புகளை உருவாக்குதல் (Constitution Making) தொடர்பாகச் சிறந்த பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கான முன் உதாரணமாகத் திகழ்வது. சட்ட அறிஞர் ஜயம்பதி விக்கிரமரட்ண ‘Constitution Making in Multi – cultural Societies: Some International Experiences’ என்னும் கட்டுரையில் ‘Success in India’ என்னும் உப தலைப்பின் […]
மேலும் பார்க்க
முள்ளிவாய்க்கால் படுகொலையின் கொடிய வேர்களை இலங்கையின் நீண்டகால அரசியல், சமூக, பொருளாதாரக் கட்டமைப்புகளில் காண முடிவது எப்படி?
16 நிமிட வாசிப்பு
தூய இலட்சியங்களினாலும், தர்ம போதனைகளினாலும், ஓசோனை உடைக்கவல்ல ஒப்பாரிகளினாலும், வரலாற்றை நிர்ணயிக்க முடியாது. சிங்கத்தின் பிடியில் யானையின் அலறல் காட்டைப் பிளந்து ஓசோனை உடைக்கும். ஆனாலும் கூட, யானையைக் கூறுபோட்டுச் சிங்கங்கள் உண்ணத் தவறுவதில்லை. “எதனையும் அரசியலாகப் பார்க்க வேண்டும்;அனைத்தும் அரசியலுக்குக் கீழ்ப்பட்டவையே” அரசியல் என்பது நலன்களைக் கையாள்வது பற்றிய இயங்கியல் ஆகும். உறவுகள் நலன்களால் ஆனவை. நலன்கள் கொடுக்கல், வாங்கல் அல்லது ஆக்கிரமிப்பாலானவை. தாய்க்கும் – பிள்ளைக்கும், காதலனுக்கும் […]
மேலும் பார்க்க
இலங்கையின் சமய மறுமலர்ச்சி இயக்கமும் முதலாளித்துவமும்: அநகாரிக தர்மபாலவின் வகிபாகம்
15 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: குமாரி ஜயவர்த்தன குமாரி ஜயவர்த்தன அவர்கள் எழுதிய ‘Nobodies to Somebodies: The Rise of the Colonial Bourgeoisie in Sri Lanka’ என்னும் நூல் இலங்கையில் காலனிய காலத்து முதலாளித்துவத்தின் தோற்றம் பற்றியும், முதலாளித்துவ வகுப்பின் தோற்றத்தின் விளைவாக ஏற்பட்ட சமூக, பொருளாதார அரசியல் மாற்றங்கள் பற்றியும் ஆராயும் நூலாகும். இந்நூல் ‘அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை: இலங்கையில் காலனித்துவ முதலாளித்துவ வகுப்பின் தோற்றம்’ என்ற […]
மேலும் பார்க்க
ஈழத் தமிழ்க்கூத்தின் நாடகக் கட்டமைப்பு முறை
20 நிமிட வாசிப்பு
பொதுவான நாடக அமைப்பு நாடகம் ஒரு முழுமையான வடிவமாக உருவாகியமைக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. ஆரம்பத்தில் சடங்குகளே ஆற்றுகைகளாக இருந்தன. இந்தச் சடங்குகள் நம்பிக்கையோடு செய்யப்பட்டன. அந்தச் சடங்குகள் செய்யும் முறையில் ஓர் அமைப்பு உண்டு. அதாவது இப்படி ஆரம்பித்து இப்படிச் சென்று இப்படி முடிக்க வேண்டும் என்று ஓர் அமைப்பு அதற்கு உண்டு. சடங்கில் இருந்து பிறந்தவைதான் பொழுதுபோக்குக்குரிய கதை தழுவாத ஆட்ட வடிவங்கள். அந்த ஆட்ட […]
மேலும் பார்க்க
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நீர்வளம், வேளாண்மைத் துறை பற்றிய அடிப்படைத் தகவல்கள்: முரண்பாட்டுக்கு முன்னரும் பின்னரும்
20 நிமிட வாசிப்பு
3.1 அறிமுகம் விவசாயத்துறையில் காடுகள் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளும் அடங்கும். இது இம்மாகாணங்களின் முதன்மைப் பொருளாதார நடவடிக்கையாகும். 1980களில், நாட்டின் மொத்த விவசாய உற்பத்தியில் ஏறத்தாழ 20.5% வரை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பங்களித்தன. தேசிய திட்டமிடல் துறையால் தயாரிக்கப்பட்ட 1981-1990 காலகட்டத்திற்கான (1975 ஆம் ஆண்டு மாறாத விலையில்) மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Provincial GDP) தற்காலிக மதிப்பீட்டின்படி, அக்காலகட்டத்தின் தொடக்கத்தில் தேசிய மொத்த […]
மேலும் பார்க்க
வல்லிபுரமும் நாகர்கோயிலும்
30 நிமிட வாசிப்பு
வல்லிபுரம் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சிப் பகுதியில் இன்று ஒரு சிறு கிராமமாகக் காட்சியளிக்கிறது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மக்கள் குடியேற்றம் செறிந்த, பிரபலமான, ஓர் ஆரம்பகால கடற்கரை நகரமாக அது விளங்கியிருக்கிறது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்? இன்று புன்னாலையிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் வடக்குக் கடற்கரை வீதி வழியே சென்றால், வீதி முடிவிலிருந்து இரண்டு மைல்களுக்கு அப்பால் இக்கிராமம் இருக்கிறது. இப்போதைய வல்லிபுரம் கிராமம் கடற்கரையிலிருந்து […]
மேலும் பார்க்க
1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 4
14 நிமிட வாசிப்பு
தமிழரசுக்கட்சி தடை செய்யப்படுதலும் அதன் தலைவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படலும் தமிழரசுக்கட்சி தடை செய்யப்பட்டதுடன் கே.எம்.பி. ராஜரட்னாவின் இயக்கமும் தடை செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பிரசார ஏடான ‘சுதந்திரன்’ பத்திரிகையும் தடை செய்யப்பட்டது. 1958 யூன் 05 ஆம் திகதி கட்சியின் தலைவர்களும் மத்திய குழு உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். பெரும்பாலானோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட, அமிர்தலிங்கம், வன்னியசிங்கம், இராசவரோதயம், செ. இராசதுரை, வி.என். நவரத்தினம், வி. நவரத்தினம், செனட்டர் நடராசா என்போர் […]
மேலும் பார்க்க
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – புத்தூர்
10 நிமிட வாசிப்பு
லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் அச்சுவேலிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், புத்தூர்க் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலுள்ள விவரங்களை ஆராயலாம். புத்தூர்க் கோவிற்பற்றில் புத்தூர், சிறுப்பிட்டி, அச்செழு, ஆவரங்கால் ஆகிய நான்கு துணைப்பிரிவுகள் இருப்பதை நிலப்படம் காட்டுகிறது (படம்-1). எல்லைகள் புத்தூர்க் கோவிற்பற்றின் வடக்கு எல்லையில் அச்சுவேலிக் கோவிற்பற்றும்; மேற்கில் மயிலிட்டி, மல்லாகம் ஆகிய கோவிற்பற்றுகளும்; […]
மேலும் பார்க்க