ஆங்கில மூலம்: ஏ.எம். நவரட்ண பண்டார, ஜயதேவ உயன்கொட
லக்சிறி பெர்ணான்டோ
பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் அவர்களின் மாணவராக கனடாவின் நியு பிரண்ஸ்விக் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பின்பட்டப் படிப்பை மேற்கொண்ட இன்னொருவர் பேராசிரியர் லக்சிறி பெர்ணான்டோ (Laksiri Fernando) ஆவார். அவர் வித்தியோதயப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையில் விரிவுரையாளராக தனது கல்விப் பணியை ஆரம்பித்தார் (இப்பல்கலைக்கழகம் பின்னர் சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது). லக்சிறி பெர்ணான்டோ அவர்கள் 2002 ஆம் ஆண்டில் ‘Human Rights, Politics and Sri Lanka’ என்ற நூலை வெளியிட்டார். அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்திற்கு பெர்ணாண்டோ சமர்ப்பித்த ஆய்வேடு மேற்குறிப்பிட்ட தலைப்புடைய நூலாக இலங்கை சமூக விஞ்ஞானிகள் சங்கத்தால் பிரசுரிக்கப்பட்டது.
காமினி சமரநாயக்க
பேராசிரியர் காமினி சமரநாயக்க (Gamini Samaranayake) அரசியல் வன்முறையும் முரண்பாடுகளைத் தீர்வு செய்தலும் (Political Violence and Conflict Resolution) எனும் கற்கை நெறியைப் பயின்றவர். அத்துறையில் கலாநிதிப்பட்டம் (Ph.d) பெற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் பாடவிதானத்தில், ‘அரசியல் வன்முறையும் முரண்பாடுகளைத் தீர்வு செய்தலும்’ என்ற விடயத்தை உள்ளடக்குவதற்கும், அவ்விடயம் பற்றிக் கற்பிப்பதற்கும் இவர் உதவினார். அரசியல் சமூகக் கோட்பாடு, கிளர்ச்சி அரசியல் (Radical Politics) என்பன பற்றி இவர் நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். Political Violence in Sri Lanka 1971 – 1987 (2008, Gayan Publishing) என்பது இவரது நூல்களில் ஒன்றாகும். கட்டுரைத் தொகுப்பு நூல்களின் அத்தியாயங்களாக அமையும் கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.

கமலா லியனகே
பேராசிரியர் கமலா லியனகே (Kamala Liyanage) அவர்கள் ‘பெண்களும் அரசியலும்’ (Women and Politics) என்னும் விடயம் பற்றிய சிறப்புத் தேர்ச்சியுடையவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானப் பிரிவில் ‘Gender Studies’ என்னும் விடயப் பொருளை அறிமுகம் செய்த முன்னோடியாக இவர் விளங்குகிறார். கட்டுரைத் தொகுப்பு நூல்களின் அத்தியாயங்கள் என்ற வகையிலும், குறுநூல்கள் என்ற வகையிலும் அமையும் பின்வரும் ஆய்வுகளை இவர் வெளியிட்டுள்ளார்.
- Party Women: Their Role in Sri Lankan Politics (1996)
- Women in Political Parties: The Sri Lankan Experience (1999)
- Testing the Politics of Presence: Women Representation in Local Government in Sri Lanka (2028)
- Women and Political Parties in Sri Lanka (2018)
A.M. நவரட்ண பண்டார
பேராசிரியர் நவரட்ண பண்டார ‘பொது நிர்வாகமும் பொதுக் கொள்கையும்’ (Public Administration and Public Policy) என்னும் பாடத்தை அரசியல் விஞ்ஞானத்துறைக் கல்வியில் அறிமுகம் செய்த முன்னோடியாவார். இப்பாடத்தை விட இலங்கையின் அரசாங்கம், இலங்கையின் அரசியல், மனித உரிமைகளும் பிரஜா அந்தஸ்தும், பொது முகாமைத்துவம் ஆகிய பாடங்களையும் கற்பித்து வந்துள்ளார். அவரது முக்கியமான ஆய்வுகள் பின்வருவன.
- Management of Ethnic Secessionist Conflict: The Big Neighbor Syndrome (Dartmouth, Aldershot 1995). இந்நூல் யோர்க் பல்கலைக்கழகத்திற்கு இவர் சமர்ப்பித்த கலாநிதிப்பட்ட ஆய்வேட்டின் திருத்திய பதிப்பாகும்.
- National Movement during British Colonialism (2007). சிங்களத்தில் எழுதப்பட்ட இந்நூல் இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டத்திற்காகச் சமர்ப்பித்த ஆய்வேட்டின் திருத்திய பதிப்பாகும்.
கட்டுரைத் தொகுப்புகளின் அத்தியாயங்களாக அமையும் இவரது ஆய்வுக் கட்டுரைகளில் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
- Local Government in Sri Lanka (Cooray and Abeyaratne (Eds)) Public Administration in South Asia. Taylor and Francis, 2013)
- History and Context of Public Administration in Sri Lanka (Sabhrwal and Bermen (Eds)) Public Administration in South Asia. Taylor and Francis, 2013)
- Politics of Devolving Power. C. Y. R. Amarasinghe et.al (Eds) Thirty Years Of Devolution: The Working of The Provincial Councils in Srilanka (ICS, Colombo, 2010)
- State Building and Nation Building in India C. Y. R. Amarasinghe et.al. (Eds) Power Sharing International Experience ICS, Colombo, 2011
- Nation Building or Nations Building a Critical Evaluation of The Theory and Practice of National Integration in Sri Lanka, 2006 (Amal Jeyawardene et.al)
- Ethnic Relations and State Crafting in Post Independence Sri Lanka (Lakshman and Tisdell (Eds) Secrets of Development of Sri Lanka Since Independence, The University of Queensland, 1999)
நவரட்ண பண்டார அவர்கள் பருவ இதழ்களிலும் ஆய்வுக் கட்டுரைகளைப் பிரசுரித்துள்ளார். Journal of Church and State (Vol, 57. No, 4. 2015) இதழில் அவர் Nation, Constitutionalism and Buddhism (2015) என்ற நூல் பற்றிய மதிப்புரையை எழுதியுள்ளார்.
குமாரி ஜயவர்த்தன
ஆய்வு நூல்களை எழுதிப் பிரசுரிப்பதில் முன்னோடியாக விளங்கிய ஒருவரான குமாரி ஜயவர்த்தன இலங்கையில் H.S.C வகுப்புவரை (இன்றைய A/L பரீட்சைக்குச் சமமானது) கல்வி கற்ற பின்னர் இங்கிலாந்து சென்று மேற்படிப்பை மேற்கொண்டார். அவர் ‘லண்டன் ஸ்கூல் ஒவ் இகொனமிக்ஸ்’ இல் கலாநிதிப் பட்டத்திற்காகச் சமர்ப்பித்த ஆய்வேடு பின்னர் ‘The Rise of the Labour Movement in Ceylon’ என்னும் நூலாக 1972 இல் Duke University Press பதிப்பாக வெளிவந்தது. இலங்கையின் தொழிலாளர் இயக்க வரலாறு பற்றிய சிறப்பு மிக்க நூல் என்ற தகுதியைப் பெற்ற இந்நூல் இன்று வரை இத்துறை பற்றிய முக்கியமான நூலாக மதிக்கப்பட்டு வருகிறது. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையில் பணியாற்றிய குமாரி ஜயவர்த்தன அவர்கள் நெதர்லாந்தின் ஹேக் (Hague) நகரின் ‘Institute of Social Studies’ நிறுவனத்திலும் கல்விப் பணியாற்றினார். பல்கலைக்கழகங்களின் கல்விப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இலங்கையினது சமூக வரலாறு (Social History), தொழிலாளர் இயக்கங்களிலும், சமூக இயக்கங்களிலும் இலங்கைப் பெண்களின் வகிபாகம் ஆகிய விடயங்கள் குறித்துப் பல நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவரது முக்கியமான நூல்களில் சில வருமாறு.

- Feminism and Nationalism in the Third World (1986, Zed Press)
- The White Women’s Other Burden: Western Women in South Asia during British Rule (1995, Routledge)
- Erasure of The Euro – Asian: Recovering Early Radicalism and Feminism in South Asia (2007, Social Scientists Association)
- No Body to Some Bodies: The Rise of the Colonial Bourgeoisie in Sri Lanka (2002, Zed and 2007 Social Scientist Association)
- Perpetual Ferment: Popular Revolts in Sri Lanka during the 18th and 19th Centuries (2010, Social Scientist Association)
- Class, Ethnicity, and Patriarchy in Sri Lankan Plantations: Two Centuries of Power and Protest (2015 With Rachel Kurien, Orient Blackswan)
குமாரி ஜயவர்த்தன அவர்கள் மூன்றாம் உலக நாடுகளின் பெண்ணிய இயக்கங்கள் (Feminist Movements) பற்றிய ஆய்வுகளை எழுதிய முன்னோடியாகவும் மதிக்கப்படுகிறார்.
ரெஸ்ஸி லெய்டன்
பேராசிரியர் ரெஸ்ஸி லெய்டன் (Tressie Leitan) கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தை நீண்டகாலமாகக் கற்பித்து வந்தார். இலங்கையில் பொது நிர்வாகம், இலங்கையில் உள்ளுராட்சி முறையின் வளர்ச்சியும், வரலாறும் ஆகிய இரு விடயங்களின் ஆய்வில் லெய்டன் அவர்கள் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அவரது முதலாவது ஆய்வு நூலான ‘Local Government and Decentralised Administration in Sri Lanka (1979, Lake House)’ ஒரு முன்னோடியான ஆய்வு நூலாகும். ‘லண்டன் ஸ்கூல் ஒவ் இகொனமிக்ஸ்’ இல் கலாநிதிப்பட்ட ஆய்வாகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேட்டை அவர் மேற்படி நூலாக வெளியிட்டார். லெய்டன் அவர்களின் ஏனைய ஆக்கங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
- The System of Provincial Councils in Sri Lanka: Centre – Province Relations (1992)
- Political Integration through Decentralisation and Devolution of Power: The Sri Lankan Experience (1999)
- Evolution of Local Government in Post Independent Sri Lanka. (2015) (இக்கட்டுரை 2015 இல் வெளியிடப்பட்ட கட்டுரைத் தொகுப்பு நூலொன்றின் ஓர் அத்தியாயமாக விளங்குகிறது.)
பேராசிரியர் ஜயதேவ உயன்கொட
ஜயதேவ உயன்கொட அவர்கள் 1981 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இணைந்து அரசியல் விஞ்ஞானத் துறையில் பணியாற்றத் தொடங்கினார். அவர் அரசியல் விஞ்ஞானம் தொடர்பான பல்வேறு விடயங்கள் பற்றிய நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். அவரது நூல்களில் சில வருமாறு.
- Reframing Democracy: Perspectives on The Cultures of Inclusion and Exclusion in Contemporary Sri Lanka (Coordinator Author, 2011, Social Scientist Association)
- Liberal Peace in Question: Politics of State and Market Reforms in Sri Lanka (Coordinator Author, 2011, Anthem Press)
- State Reforms in Sri Lanka: Issues Directions and Perspectives (Editor Author, 2013, Social Scientist’s Association)
- Social Research: Philosophical and Methodological Foundations (2015, Social Scientists’ Association)
- Local Government and Local Democracy in Sri Lanka: Institutional and Social Dimensions (Editor – Author, 2015, Social Scientists’ Association)
- Political Parties in Sri Lanka: Change and Continuity (Co. Editor- Author, 2018, New Delhi, Oxford University Press)

ஜயதேவ உயன்கொட அவர்கள் பருவ இதழ்களில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். நூல்கள் பலவற்றின் அத்தியாயங்களாக அமையும் கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். புதுடில்லி, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட இலங்கையின் அரசியல் கட்சிகள் குறித்த மேற்படி நூல் மிக முக்கியம் வாய்ந்த ஆய்வு நூலாகும். ‘Social Research: Philosophical and Methodological Foundations (2016)’ என்னும் அவரது நூல் ‘சமூக ஆராய்ச்சி, அதன் மெய்யியல் – முறையியல் அடிப்படைகள்’ என்னும் விடயப் பொருள் பற்றியது. இவ்விடயம் பற்றி தென்னாசியாவில் முதன்முதலாக வெளியாகியுள்ள தரமான நூல் என்ற சிறப்புடைய இந்நூலுக்கு இலங்கை அரசின் விருது (State Literary Award) வழங்கப்பட்டது.
கட்டுரைத் தொகுப்பு நூல்களின் அத்தியாயங்களாக அமையும் அவரது ஆய்வுக் கட்டுரைகள் சில கீழே தரப்பட்டுள்ளன.
- The Indo-Lanka Agreement and The State in Sri Lanka (1989)
- Indo – Bangaladesh Perspectives (1990)
- The President and Parliament in Sri Lanka: Conflicts, Checks and Balances (1991)
- Economic Change, The State and The Questions of Security in Sri Lanka (1992)
- Youth Unrest and Politics in Sri Lanka (1993)
- The State and The Process of Devolution in Sri Lanka (1995)
- Militarisation, Violent State, Violent Society: Sri Lanka (1996)
- Emerging Issues in South Asia’s Insecurity (1997)
- Sri Lanka: Political Violence and Ethnic Conflict (1998)
- Postindependence Social Movements (Sri Lanka) (1999)
- A State of Desire? Some Reflections of The Unreformability of Sri Lanka’s Post Colonial State (2000)
- Security’s Insecurity: South Asia’s States, Societies and Citizens in the Age of Globalisation (2001)
- Sri Lanka’s Conflict: Complexities in a Negotiated Settlement (2002)
- Social Conflict, Radical Resistance and Projects of State Power: The Case of Janatha Vimukthi Peramuna in Sri Lanka (2012)
- Travails of Protracted Civil War in Sri Lanka (2011)
- The Dynamics of Coalition Politics and Democracy in Sri Lanka (2012)
- The Puzzle of State Reform during the Civil War in Sri Lanka: Contexts, Barriers and Outcomes (2013)
- Local Democracy and Citizenship in the Social Margins (2012)
- Local Government in the Decentralisation, Devolution and Local Self –government Discourses in Sri Lanka (2015)
- Left Parties in Permanent Decline (in Sri Lanka): Ideological and Strategic Shift and Survival Strategies (2018)
2018 ஆம் ஆண்டில் ஜயதேவ உயன்கொட அவர்கள் இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். இவை பருவ இதழ்களில் பிரசுரமாயின. விவரம் வருமாறு.
- Decolonial Thinking, Southern Theory and Search for Alternative Epistemologies in South Asia. இக்கட்டுரை Colombo Arts Journal of Social Sciences and Humanities என்னும் பருவ இதழில் பிரசுரிக்கப்பட்டது.
- Modern Buddhism and Democracy: Diverse Encounters in India and Sri Lanka. இக்கட்டுரை Society and Culture in South Asia என்னும் பருவ இதழில் பிரசுரமாயிற்று.
தொகுப்புரை
பேராசிரியர் நவரட்ண பண்டார, ஜயதேவ உயன்கொட என்னும் இருவராலும் இணைந்து எழுதப்பட்ட கட்டுரையினைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட இக்கட்டுரை இலங்கையில் அரசியல் விஞ்ஞானக் கல்வியின் வளர்ச்சிப் போக்குகளை விவரித்துக் கூறுவதாகவும், அரசியல் விஞ்ஞானத் துறைப் பேராசிரியர்களாலும், புலமையாளர்களாலும் எழுதப்பட்ட ஆய்வுகளைக் கால ஒழுங்குப்படி நிரற்படுத்திக் கூறி அறிமுகம் செய்வதாகவும் அமைந்துள்ளது. இக்கட்டுரையை வாசிக்கும் போது தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு ஓருண்மை தெற்றெனப் புலப்படும். தமிழில் இலங்கையின் அரசியல் பற்றிய பன்முக நோக்கிலான ஆய்வு நூல்கள் போதியளவு இல்லை என்று கூறுவதை விட, முற்றாகவே இல்லை என்பதே உண்மை நிலை. ஆகையால் எந்தவொரு விடயம் பற்றியும் ஆய்வுக் கட்டுரையை எழுத விரும்பும் ஆய்வு மாணவர் குறித்த விடயம் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஆய்வுகள் எவை? அவை யாரால் எழுதப்பட்டன? அவ்வாய்வுகளின் அறிவுப் பங்களிப்பு என்ன? என்பன பற்றித் தெரிந்து கொள்ளுதல் முதற்படியாகும். இவ்வினாக்களை மனதில் இருத்தி ஆய்வாளர் ஒருவர் தேடலில் இறங்கும் செயல்முறையை ஆங்கிலத்தில் ‘Literature Survey’ என அழைப்பர். இதனைத் தமிழில் ‘ஆய்வு நூல்களைத் தேடலும், அவற்றில் பொதிந்துள்ள கருத்துகளையும் ஆய்வு முடிவுகளையும் தொகுத்துக் கொள்ளுதலும், மதிப்பிடுதலும்’ எனக் கூறலாம். ‘Literature Survey’ ஒன்றிற்குப் பெரிதும் உதவக் கூடியதான இது போன்ற கட்டுரைகள் எவையும் நாம் அறிந்தவரை தமிழில் எழுதப்படவில்லை. இக்கட்டுரை ஆய்வு மாணவர்களுக்குப் பேருதவியாக அமையும் என்பது எமது நம்பிக்கை.



