சங்கடப் படலை – அருகிச் செல்லும் பாரம்பரியம்
6 நிமிட வாசிப்பு
யாழ்ப்பாணப் பாரம்பரிய வீடுகளிற் காணக் கிடைக்கக்கூடிய கட்டுமான அலகுகளில் ஒன்று சங்கடப் படலை எனும் வாயிற் கட்டட அமைப்பாகும். பேராசிரியர் கா.சிவத்தம்பி யாழ்ப்பாணத்தில் வீடு என்பது வளவுடன் கூடிய வேலியால் (மதிலால்) எல்லையிடப்பட்ட முழு மனையமைப்பு பரப்பாகும் என்பார். அதாவது வீட்டுக்கட்டடம், கொட்டில், கிணற்றடி, முற்றம் முதலியவற்றை உள்ளடக்கிய கட்டுமானங்களும், அதனைச் சூழ்ந்த எல்லையிடப்பட்ட பரப்பே யாழ்ப்பாணத்தில் வீடென்பதன் பரந்த பொருள் கொள்ளலாகும். இந்த எல்லையானது பாரம்பரியமாகப் பனையோலை அல்லது […]
மேலும் பார்க்க
பாடசாலைகளின் கட்டட மரபுரிமைகள்: பழைய மாணவர் சங்கங்களும் அபிவிருத்தி நிதிகளும்
10 நிமிட வாசிப்பு
பெரும்பாலும் ஆசிரியர்களின் வீட்டுத் திண்ணைகள், முற்றம், பெருமரச்சாரல்கள் சார்ந்து மிகச் சுருக்கமான ஒரு இடத்தினுள் சுழன்றுகொண்டிருந்த ஈழத்துக் பள்ளிக் கல்விப்பாரம்பரியத்தை அதன் அனைத்து அர்த்தங்களிலும் வெடித்துப் பரவச் செய்ததில் காலனியத்திற்கு மிக முக்கியமான இடமுண்டு. கிறிஸ்தவ மிஷனரிகளும் – அதற்கு எதிரிடையாக எழுந்த சைவக்கல்வி இயக்கங்களும், ஊர்கள் தோறும் ஒன்றுக்கு மேற்பட்ட கல்விச்சாலைகளைத் திறந்துவிட்டன. அவை தமது பாடத்திட்டத்தில் மட்டுமின்றி தமது பாடசாலைக் கட்டடங்களிலும் தத்தமது மதப் பண்பாட்டுக் கருத்துநிலை […]
மேலும் பார்க்க
பெண்களும் மரபுரிமைகளும்: எழுதப்படாத பக்கங்கள்
7 நிமிட வாசிப்பு
பால்நிலை அசமந்தம், ஆண்முதன்மை ஆகிய சமூக பண்பாட்டு நிலவரங்கள் பலவேளைகளில் சமூக இயக்கத்தில் பெண்களது செயற்பாடுகள், பங்களிப்புக்கள், தனித்துவங்களை அடையாளப்படுத்தாமல் விட்டுவிடுகிறது. இதனால், பெண்கள் உட்பட்ட சிறுபான்மைக் குழுக்களது தனியடையாளங்கள், வரலாற்று வகிபாகங்கள் என்பன சமூக பண்பாட்டு வரலாறுகளில் தொடர்ச்சியாக விடுபட்ட – எழுதப்படாத பக்கங்களாகவே உள்ளன. இந்த நிலைமையானது மரபுரிமைகள் பற்றிய எழுத்துக்களில் மேலோங்கியுள்ள மேட்டுக்குடிமைத் (elitism) தன்மையை ஒத்த இன்னொரு பிரச்சினைக்குரிய அம்சமாகும். அவ்வகையில் பால்நிலைப்பட்ட அசமந்தமானது […]
மேலும் பார்க்க
காலம் என்பது கறங்கு போல!
10 நிமிட வாசிப்பு
இது நெருக்கடிகள் மிகுந்த காலம்… “என்ன வளம் இல்லை எங்கள் தாய் நிலத்தில்“ என்று பாடிய காலம் மாறி உணவுக்கும் எரிபொருளுக்கும் நெருக்குண்டு தள்ளுண்டு நீண்ட வரிசைகளில் நாம் காத்திருக்கத் தொடங்கியிருக்கும் காலம்… எங்களிடம் நிலைத்திருந்த தன்னிறைவை நாமே தொலைத்து விட்டிருப்பதை உணரத் தொடங்கியிருக்கும் காலம்… உணவுப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் உருவாகியிருக்கும் காலம். முன்னைய காலங்களிலே வட பிராந்தியத்திலே பெரும் பொருளாதாரத் தடை அமுலில் இருந்தபோதும் கூட அதை […]
மேலும் பார்க்க
தவக்காலச் சிந்தனைகள்: உடக்கு பாஸ்க்கும் பஸாமும் உயிர்த்த ஆண்டவர் நிகழ்வும்
10 நிமிட வாசிப்பு
உடக்கு தமிழ் கிறிஸ்தவத்திற்கு ஒரு ஈழ மரபுண்டு. அது ரோமின் திருச்சபை ஆளுகைக்குட்பட்டதாயினும், தமிழ் கிறிஸ்தவத்தின் உலகளாவிய தன்மைகளைப் பகிர்ந்து கொண்டதாயினும், அதன் அமைவிடம் – சமூக பண்பாட்டு வரலாறு – அதன் வரலாற்று உருவாக்கத்தில் மேலாதிக்கஞ் செலுத்திய காரணிகள் – அதன் உள்ளூர் பண்பாட்டுக் களங்கள் மற்றும் அவற்றின் மோதல்கள் என்பனவற்றினால் அதன் சிறப்புப் பண்புகள் உருவாகின எனச் சுருக்கமாகக் கூறலாம். அதற்கு அதற்கான தனிமுகம் உண்டு. ஆனால், […]
மேலும் பார்க்க
கீரிமலை பாசுபத – கபாலிகச் சைவ மரபுகளின் மூத்த மையங்களில் ஒன்றா?
7 நிமிட வாசிப்பு
கீரிமலை யாழ்ப்பாணத்தின் பழம்பெரும் ஊர்களில் ஒன்று. இலங்கைத் தீவில் காணப்படும் புராதனமான பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான நகுலேஸ்வரம் இங்குதான் காணப்படுகிறது. அத்துடன் யாழ்ப்பாணத்தின் பிரதான பிதிரர்களுக்கான கடமைகளை ஆற்றும் நீர்பெருக்கும் இங்குதான் உள்ளது. கீரிமலை பற்றிய கர்ண பரம்பரைக் கதைகளின் புராணிக அடிப்படைகளை வரலாற்று அறிவியற் கண்டுக்கொண்டு திறக்க முற்படுகையில் நீண்ட நெடிய சைவ மரபுகளின் ஆதிவேர்களை கண்டுக்கொள்ள முடிகிறது. இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் சிவராத்திரி இரவில் இருளிற் கசியும் […]
மேலும் பார்க்க
20 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் சாதி
10 நிமிட வாசிப்பு
மொழிபெயர்ப்புக் கட்டுரை : க. அருமைநாயகம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதிப் பிரச்சினை மிகத் தெளிவாக வெளிப்பட்டது. படித்த முற்போக்குச் சிந்தனையுடைய உயர்சாதி இந்துக்கள் சிலரும், தாழ்ந்த சாதியினர் எனப்படுவோரும் சாதிய நடைமுறைகளையும், அதன் தீங்கான அம்சங்களையும் ஒழிக்க வேண்டும் என்று முயற்சித்ததைக் காண்கிறோம். ஒடுக்கப்பட்டோர் சமத்துவ உரிமைகளையும் சலுகைகளையும் கோரிநின்றனர். மரணச் சடங்கின் போது மேளமடித்தல், பாடசாலைகளில் தம் பிள்ளைகளிற்குச் சம ஆசனம், கோயில்களில் உள்மண்டபத்திற்குள் […]
மேலும் பார்க்க
வடக்கின் பண்பாட்டுச் சுற்றுலாவும் காலனிய கட்டட மரபுரிமையும்
7 நிமிட வாசிப்பு
பண்பாட்டுச் சுற்றுலா (cultural tourism) என்பது குறித்த ஒரு பிராந்தியத்தின் பண்பாட்டுச் சொத்துக்கள் மீது கவனத்தைக் குவித்துள்ள சுற்றுலா ஆகும். அது குறிப்பிட்ட பிராந்தியம் அல்லது குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் பௌதீகச் சொத்துக்கள், வழக்காறுகள், பயில்வுகள், நம்பிக்கைகள் என்பனவற்றின் மீது கவனத்தைக் கோருகின்ற பண்பாட்டு மேம்பாட்டு முறையாகும். அது பல்வேறுபட்ட உப களங்களைக் கொண்ட ஒரு பரந்த பரப்பாகும். இன்று இலங்கைச் சுற்றுலாத்துறையின் புதிய அல்லது மீள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு […]
மேலும் பார்க்க
19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் சாதி
10 நிமிட வாசிப்பு
மொழிபெயர்ப்புக் கட்டுரை: க. அருமைநாயகம் யாழ்ப்பாண மக்களின் பொருளாதார சமூக, சமய வாழ்க்கையில் சாதிமுறை முக்கிய பங்கினைப் பெற்றிருந்தது. அங்கு சாதிப் பிரிவுகள் பலவாக இருந்தன. உயர் சாதியான வேளாளர் முக்கிய வகிபாகத்தை பெற்றிருந்தனர். கோவியர், பள்ளர், நளவர் என்பன அடிமைச் சாதிகள் எனவும், அம்பட்டர், வண்ணார், கொல்லர், தச்சர், பறையர் ஆகியன குடிமைச்சாதிகள் எனவும் கருதப்பட்டன. சாதிகள் அகமணக் குழுக்களாகும். ஒரு சாதியினர் பிறசாதிகளுடன் சமபந்திபோசனம் வைத்துக்கொள்வதோ, விவாக […]
மேலும் பார்க்க
உள்ளூரை இரண்டும் கெட்டதாக்கல்: அபிவிருத்தித் திட்டங்களும் மரபுரிமையும்
7 நிமிட வாசிப்பு
‘ஒரே நாடு ஒரே தேசம்’ என்ற சொற்றொடரைக் கேட்டால் எம்மிற் பலர் வெகுண்டு எழுந்துவிடுகிறோம். அதனை ஒரு ஜனநாயக விரோத அறைகூவலாகவும் பன்மைத் தன்மைகள் பண்பாட்டு வேறுபாடுகளை மறுதலிக்கும், அதேநேரம் அதனை ஒற்றைப்படையாக்கஞ் செய்யும் மேலாதிக்கச் செயற்பாடாகவும் கருதி பெருங்குரல் எடுத்து அதனை எதிர்க்கும் குரல்களை பதிவிடுகிறோம். “அந்நியன் கரங்கள் எம் குரல்வளை நெரிப்பினும், பாடுவோம் உயர்த்திய குரல்களில்” என்று எண்பதுகளில் தமிழ்ப் பகுதிகளில் ஒலித்தடங்கிய இளைஞர் குரல்கள் இக்கட்டுரையை […]
மேலும் பார்க்க