Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

முப்பதாண்டுப் போரும் வடக்கு – கிழக்கு விவசாயமும்

10 நிமிட வாசிப்பு

அறிமுகம் இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆட்சி செய்த சிங்கள ஆட்சியாளர்களால் காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட பேரினவாதம் சார்பான சட்டங்களும் மற்றும் சட்டத் திருத்தங்களும், உதாரணமாக தனிச் சிங்களச் சட்டம், பெளத்தம் அரச மதமாக்கப்படல், கல்வி தரப்படுத்தல் சட்டங்கள், தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், இனக் கலவரங்கள், வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு, ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும், மேலும் பலவும்,  தமிழ் இளைஞர்களை இலங்கை அரசிற்கு  எதிராக சத்தியாக்கிரகப்  போராட்டங்களை முன்னெடுக்க […]

மேலும் பார்க்க

மேலைக் கடலில் பிளாஸ்டிக் கப்பலும் வடகடலில் பேருந்துகளும்

10 நிமிட வாசிப்பு

2021 மே 20 தொடக்கம், யூன் மாதத்தின் நடுப்பகுதியான இன்றுவரை கொரோனாப் பாதிப்புகளை தவிர்த்து இரு கடல்சார் நிகழ்வுகள் – அனர்த்தங்கள், பல விவாதங்களையும் விசனங்களையும் இலங்கையில் பரவலாக ஏற்படுத்தியுள்ளன. அவையாவன X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் இலங்கையின் வடகடலில் இறக்கப்பட்ட பேருந்துகள் (பழைய அலுமினிய பஸ் வண்டிகள்) பற்றியனவாகும்.   இவ்விரு நிகழ்வுகளும் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல மட்டங்களில் விவாதங்களை தூண்டியுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். அதேவேளை […]

மேலும் பார்க்க

விக்டோரியா மகாராணியின் “ஆங்கில காலை உணவு இலங்கைத் தேநீர்” (English Breakfast Tea)

7 நிமிட வாசிப்பு

இலங்கைத்  தேயிலையை உலக அரங்கில் பிரபல்யமடையச் செய்த முதலாவது நிகழ்வு 1888இல் ஸ்கொட்லாந்தில் நடைப்பெற்றது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 4 சர்வதேச கண்காட்சிகளில் முதலாவது அறிவியல், கலை மற்றும் தொழில்துறை சர்வதேச கண்காட்சி  1888 மே மாதம் முதல்  நவம்பர் மாதம் வரை கெல்விங்ரோவ் பூங்காவில் (Kelvingrove Park) நடந்தது. அங்கு இலங்கை தேயிலையும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இன்னும் வானொலியோ தொலைக்காட்சியோ […]

மேலும் பார்க்க

பெல்ஜியத்தின் சமஷ்டி முறை ஆட்சி: அதன் அடிப்படைகளும், குறை நிறைகளும் – பகுதி 1

19 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் – கெல்லி பிறியன் – அறிமுகம் பெல்ஜியம் நாட்டின் சமஷ்டி ஆட்சி முறையை நெகிழ்ச்சியுடைய, வளைந்து கொடுக்கக்கூடிய சிறந்த முறையாக இன்று பலர் கருதுகின்றனர். அதன் ஆதரவாளர்கள் அதனை தனித்துவம் மிக்க ஒரு முறையாகக் கருதுகின்றனர். இலங்கையிலும் இதுபற்றிய ஆர்வம் வெளிப்பட்டுள்ளது. எல்லா இனக்குழுமங்களிற்கும் பிரதிநிதித்துவத்தை நன்முறையில் வழங்குவதோடு, உள்நாட்டில் தேசிய இனங்களின் முரண்பாடுகளைத் தணிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் பெல்ஜியம் வெற்றிகண்டுள்ளது. அது சமஷ்டியாக மாறுவதற்கான தீர்மானத்தை (1988இல்) […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண பாரம்பரிய மரக்கறி வகைகளில் காய்கறிகள், கிழங்குகள் – பகுதி 1

19 நிமிட வாசிப்பு

முள்ளங்கி இலை, கிழங்கு “முள்ளங்கி யிலைக்கு வாயு முதிர்ந்திடும் வலிகுன் மம்போம்எள்ளலி லிதன்கி ழங்கிற் கேகுமே மூல மேகம்விள்ளுறு சேட காச மிகுகுன்ம மிருமல் வாந்திதள்ளிடு மிதனின் கொட்டை சார்கொள்ளிக் கரப்ப னீக்கும்” – பக். 68, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி. முள்ளங்கி இலைக்கு வாதம் அதிகரிக்கும், வலிகுன்மம் (வலியுடன் கூடிய வயிற்றுப்புண்) மாறும். முள்ளங்கிக் கிழங்குக்கு, மூல நோய், மேக (சிறுநீரக நோய்கள், பாலியல் நோய்கள், நீரிழிவு போன்ற […]

மேலும் பார்க்க

அரங்கேற்றப்பட்ட கபடநாடகம்

7 நிமிட வாசிப்பு

இந்த நாட்டில் இந்திய வம்சாவழி தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத சிந்தனை 1918 களிலேயே தோன்ற ஆரம்பித்து விட்டது. ஆரம்பத்தில் அது ஒரு பொருளாதார ரீதியான பொறாமையாக இருந்தது. ஏற்றுமதி – இறக்குமதி தொழிலை மையமாகக் கொண்ட ஒரு பொருளாதாரத்தின் எழுச்சி காரணமாக கொழும்பு மாநகரம் சனத்தொகைப் பெருக்கம் அடைந்து பெரும் பொருளாதார மையமாக வளர்ச்சி அடைந்தது. கொழும்பு துறைமுகம்,  ரயில்வே திணைக்களம், அச்சுக் கூடங்கள், தபால் தந்தி திணைக்களம் […]

மேலும் பார்க்க

மையத் தகர்ப்புடன் வணிக மீளெழுச்சி

18 நிமிட வாசிப்பு

வீரயுக முடிவில் மூன்று பேரரசுகளையும் தகர்த்துப் பலநூறு ஆள்புலங்களாகத் தமிழகத்தை ஆக்கியவாறு களப்பிரர்களது ஆட்சி ஏற்பட்ட சூழலில் தோற்றம்பெற்ற நூல் “திருக்குறள்”. இது மிகப் பெரும் சமூக மாற்றக் காலகட்டம்; பல தசாப்தங்களாக மேலாதிக்கத்துடன் திகழ்ந்த விவசாயச் சமூக சக்தியான கிழார்களின் திணையானது தனக்குரியதான அரச அதிகாரத்தை இழந்து வரும் அதேவேளை வணிகச் சமூக சக்தியின் மேலாதிக்கத்துக்கு அனுசரணை வழங்கும் ஆட்சி முறையைச் சாத்தியப்படுத்துகிற மாற்றம் நடந்தேறி வரத் தொடங்கி […]

மேலும் பார்க்க

வாணிபம் ஆரம்பிக்க தேவையான 4 நிதி தொடர் அடிப்படைகள்

6 நிமிட வாசிப்பு

“தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை” – திருக்குறள் (672) மு.வரததாசனார் விளக்கம் காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக்கூடாது. நான் ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்ப தொழில் நிறுவனங்களைத் தொடங்கியபோது, ஈழத்தில் சின்ன வயதில் கற்ற மற்றும் அனுபவித்த பல விடயங்கள் எனக்கு மிக்க துணையாக இருந்தன. அவற்றில் சில விடயங்கள் வகுப்பறைகளில் படித்தவை, மற்றவை வெளியே அனுபவரீதியாகக் […]

மேலும் பார்க்க

கிழக்கிலங்கை தொல்குடிகள் மீதான நில ஆக்கிரமிப்பும் – குவேனி பழங்குடி அமைப்பின் தோற்றமும்

10 நிமிட வாசிப்பு

இற்றைக்கு 28000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அதாவது இடைக்கற்கால காலத்தில் இருந்தே இலங்கையில் வேடர் சமூகம் வாழ்ந்து வருகின்றது என்பதனை, இலங்கை மானிடவியல் மற்றும் வரலாற்று ஆய்வுகள் தமது வரையறைக்கு எட்டியவரை எடுத்துக்காட்டி நிற்கின்றன. இயக்கர், நாகர் என்னும் வரலாற்றுக்கு முந்தைய குடிகளை தமது மூதாதையர்களாக சிங்கள மற்றும் தமிழ் மக்கள் அடையாளப்படுத்தும் முயற்சியில் இருக்கும் சூழ்நிலையில் அந்த குடிகளின் காலத்துக்கு எத்தனையோ ஆயிரமாண்டு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த குடிகளாகவும் […]

மேலும் பார்க்க

கால்நடைகளில் குடற்புழுக்களால் ஏற்படும் பொருளாதார இழப்புகளும் தீர்வுகளும்

17 நிமிட வாசிப்பு

இலங்கையின் பாலுற்பத்திக் குறைவில், கால்நடைகளில் ஏற்படும் குடற்புழுக்களின் தாக்கம் முக்கிய பங்கை வகிக்கிறது. குடற்புழுக்கள் கால்நடைகளின் குடல், இரப்பை போன்ற உறுப்புகளில் இருந்துகொண்டு ஊட்டச்சத்துகளையும் இரத்தத்தையும் உறிஞ்சுவதுடன் ஏராளமான நோய்கள் ஏற்படுவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துகின்றன. இவற்றைத் அழிக்கும் முறையான நீக்க மருந்துகளை எமது பண்ணையாளர்கள் வழங்குவதில்லை. குடற்புழு நீக்கம் என்னும் மிக முக்கியமான முகாமைத்துவ நடவடிக்கையை புறக்கணிப்பதால் பல கால்நடைகள் உற்பத்தி மட்டத்தில் குறைவடைவதுடன் கணிசமான அளவில் இறந்தும் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்