Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

உலக வர்த்தகத்தாபனத்தின் (WTO) கீழ் இலங்கையும் சர்வதேசத் தேயிலை வர்த்தகமும் – பகுதி 2

10 நிமிட வாசிப்பு

இலங்கையின் வர்த்தகக்கொள்கைகளும் உறுகுவேசுற்று உடன்படிக்கைகளும் இறுப்புகள் GATT இல் கைச்சாத்திட்டுள்ள நாடுகளுள் இலங்கையும் ஒன்றாகும். எனவே, அது வர்த்தக இறுப்புகள் தொடர்பான உலகவர்த்தக தாபனத்தின் விதிகளைப் பின்பற்றவேண்டியது அவசியமாகும். உறுகுவேசுற்று விவசாய உடன்படிக்கையின் கீழ் விவசாயப்பண்டங்களின் மீதான இறுப்புகளின் உச்சவரம்பை இலங்கை 50.0 வீதமாக நிர்ணயித்துள்ளது. ஆனால், இன்று நடைமுறையிலிருக்கும் இறுப்புகள் இதிலும் பார்க்க குறைவானவையேயாகும். எனவே, மேற்படி உச்சவரம்பு எதிர்காலத்தில் இறுப்புகளை உயர்த்துவதற்கான ஒரு உச்சவரம்பேயாகும். உலக வர்த்தகத்தாபனத்தின் […]

மேலும் பார்க்க

பெல்ஜியத்தின் சமஷ்டி முறை ஆட்சி: அதன் அடிப்படைகளும், குறை நிறைகளும் – பகுதி 2

20 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் – கெல்லி பிறியன் – பெல்ஜியம் சமஷ்டியின் சாதகமான அம்சங்கள் 1. பல்வேறு மக்கள் குழுக்களுக்கும் அவர்களின் குரலை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் பெல்ஜியம் சமஷ்டியை இலங்கைக்குப் பொருத்தமானதெனச் சிலர் குறிப்பிட்டுள்ளனர். இலங்கையில் இனக்குழுமங்களின் பரம்பலில் பெல்ஜியம் போன்றதொரு நிலை காணப்படுகிறது. தமிழர் செறிந்து வாழும் பகுதியான வடக்குக் கிழக்கு, சிங்களவர் செறிந்து வாழும் ஏனைய மாகாணங்கள் என்ற மொழி அடிப்படையான பிரிவுகள் உள்ளன. இதனைவிட இலங்கையின் மத்திய […]

மேலும் பார்க்க

பதார்த்த சூடாமணி

12 நிமிட வாசிப்பு

நாள்தோறும் நாம் உணவாகக் கொள்ளும் தானியங்கள், காய்கறிகள், சுவையூட்டிகள், பாலுணவுகள் என்பவற்றின் குணங்கள் மற்றும் பயன்பாடு பற்றிக் கூறும் நூல் பதார்த்தகுணம் என்று அறியப்படும். அகத்தியர், தேரையர் முதலானோரின் பெயர்களில் பதார்த்தகுணம், குணபாடம் போன்ற தலைப்புகளில் பலநூல்கள் கிடைக்கின்றன. இவ்வகையில் இலங்கை யாழ்ப்பாணத்தில் ஆக்கப்பெற்ற நூல்களுள் ஒன்றே இருபாலைச்செட்டியார் என்று அறியப்படும் ஒரு மருத்துவரால் ஆக்கப்பெற்ற பதார்த்தசூடாமணியாகும். இற்றைக்கு ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மேற்படி நூல் எழுதப்பெற்றதாக அறியமுடிகின்றது. […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் விவசாயத்துறையும் வாய்ப்புகளும் : வடக்கு – கிழக்கில் மரக்கறிப்பயிர்களின் உற்பத்தி

10 நிமிட வாசிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வாய்ப்பான தொழில் வளமாகக்  காணப்படும் விவசாயத்துறையில் அதிக பங்கை நிர்ணயிக்கும் நெல் மற்றும் தானியப் பயிர்களின் பங்களிப்புத் தொடர்பாக கடந்த இரு தொடர்களில் நாம் பரிசீலித்தோம். இன்று இதே துறையில் கணிசமான வாய்ப்பைக் கொண்டிருக்கும் மரக்கறிப்பயிர்களின் உற்பத்தி தொடர்பாக ஆராய்வோம். இலங்கைத் திருநாட்டின் தேசிய நெருக்கடியாக உருப்பெற்றுள்ள பொருளாதாரப் பின்னடைவை வெற்றி கொள்வதில் அதிக பங்களிப்பை வழங்கி வரும் உள்நாட்டு விவசாயத்துறையில் இப்போது பல […]

மேலும் பார்க்க

மலையகத் தமிழர்களின் பிராஜாவுரிமை பறிப்பும் அரசியல் துரோகங்களும்

8 நிமிட வாசிப்பு

இந்திய வம்சாவளி  மலையகத் தமிழ் மக்களின் பிரஜா உரிமையை இல்லாமல் ஆக்குவதற்கான சட்டம்  நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது அதற்கு ஆதரவாகவும் எதிராகவும்  நாடாளுமன்றத்தில் பலமான குரல்கள் ஓங்கி ஒலித்தன. ஆனால் இந்த வாதப்பிரதிவாதங்கள் எல்லாம் வெறும் முறைசார் நடவடிக்கைகளேயன்றி அதனை நிறைவேற்றவிடாமல் தடுத்து விடப்போவதில்லை என்பது அன்றைய பிரதமர்  டி. எஸ். சேனாநாயக்கவுக்கு நன்றாகவே தெரியும்.  அவர் எத்தனை பேர் இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்? எத்தனை பேர் […]

மேலும் பார்க்க

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகள் : தாய்வழிக்குடிமரபு

10 நிமிட வாசிப்பு

தாய்வழிக்குடிமரபு கிழக்கிலங்கை என்ற நிலப்பரப்பு பற்றி நோக்கும் போது கிழக்கிலங்கை என்ற தரைத்தோற்றத்தைவிட பண்பாடு சார்ந்த பரப்பை இக்கட்டுரை கவனத்திற்கொள்கின்றது. ஆய்வாளர் துலாஞ்சனன்   ‘கொட்டியாரக்குடாவுக்கும் குமுக்கனாற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் பிரதானமாக தமிழ் பேசும் சமூகங்களாலானதும், தாய்வழிக்குடிமரபைப் பின்பற்றும் சைவ மற்றும் இஸ்லாமியப் பண்பாட்டு நுண்பிராந்தியங்களால் ஆனதும் கிறிஸ்தவர்களதும் வேடர்களதும் பண்பாட்டுப் பங்களிப்பால் செழுமையூட்டப்பட்டதும் அவ்வப்போதான சிங்களவர்களது ஊடாட்டத்தைக் கொண்டதுமான ஊர்களின் கொத்தணிகள் அடங்கும் நிலப்பரப்பு’ (துலாஞ்சனன் 2022) என்ற […]

மேலும் பார்க்க

இந்துவாக்கப் பேரலையின் பின்னணியில் ஈழத்துச் சைவத்துக்கும் – சைவசித்தாந்தத்திற்கும் ஒரு ஆவணவெளி

10 நிமிட வாசிப்பு

இப்போது உலகளாவிய அல்லது அகன்ற இந்துவாக்கப் பேரலையின் தந்திரோபாயங்களுள் ஈழத்துச் சைவமும் சிக்குண்டுள்ளது அல்லது சிக்கவைக்கப்பட்டுள்ளது. அது ஒருவகையில் ஈழச் சைவத்தின் தனியடையாளத்தை பெரும் இந்துப்போர்வை கொண்டு மூடி அதன் தனித்துவத்தை கரைக்கத்தொடங்கியுள்ளது என்பதை எங்களிற் பலர் கவனிக்கத் தவறியுள்ளோம். ஈழச் சைவ மரபுரிமைகளைப் பின் தள்ளி – அகன்ற இந்துவாதத்துள் அதனை அங்கவீனமடையச் செய்யும் இந்த மாற்றத்தை கண்மூடித்தனமாகப் பின்பற்றல் அல்லது எந்தக் கேள்விகளுமற்று பொதுப்போக்குகளிற்கு பின்னால் ஓடும் […]

மேலும் பார்க்க

அமெரிக்காவிலிருந்து வந்த அன்புவெள்ளம்

7 நிமிட வாசிப்பு

பிரபல்யமான அமெரிக்க மிசனரிகள் சிலர் யாழ்ப்பாணத்தில் ஆற்றிய தொண்டுகளைப் பற்றி தென்னிந்தியத் திருச்சபையின் ஓய்வுநிலைப் பேராயர் பேரருட்கலாநிதி எஸ். ஜெபநேசன் அவர்கள் ஆற்றிய விரிவுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக ஆங்கிலத்திலும் தமிழிலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது. அந்நூலுக்கு “அமெரிக்காவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குள் ஆறாகப் பாய்ந்து வந்த அன்பு வெள்ளம்” என்று பெயரிட்டிருந்தார் பேராயர். அந்த அன்பு வெள்ளத்தில் மருத்துவர் கிறீனும் ஒருவர். 1858 இல் அமெரிக்கா திரும்பிய கிறீன் தமிழிலே […]

மேலும் பார்க்க

உலக வர்த்தகத்தாபனத்தின் (WTO) கீழ் இலங்கையும் சர்வதேசத் தேயிலை வர்த்தகமும் – பகுதி 1

13 நிமிட வாசிப்பு

உலக வர்த்தகத் தாபனம் சுமார் எட்டு வருடகாலமாக நடைபெற்றுவந்த உறுகுவேசுற்று வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் பல்வேறு வாதப்பிரதிவாதங்களின் பின்னர் 1994ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தன. உறுகுவேசுற்று பேச்சுவார்த்தைகளானவை பல்பக்கவர்த்தக அமைப்பினது வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகின்றன. உலகவங்கி, சர்வதேச நாணயநிதியம் போன்றதொரு தாபனத்தை உருவாக்குவதன் மூலம் வர்த்தகம், இறுப்புக்கள் என்பன தொடர்பான பொதுஒப்பந்தத்தின் (General Agreement  on Trade and Tariff – GATT) தாபனரீதியான அம்சங்களை பலப்படுத்துவதே மேற்படி பேச்சுவார்த்தைகளின் […]

மேலும் பார்க்க

தமிழர்களுக்கு மாகாண தலைப்பட்டினத்தைக் கொடுக்கக் கூடாது எனக் குறிப்பிடும் பதுளைக் கல்வெட்டு

7 நிமிட வாசிப்பு

பதுளை பொதுநூலகத்தின் முன்பக்கம் ஒரு உயரமான தூண் நடப்பட்டுள்ளது. இது நான்கு பக்கங்களும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டாகும். இதன் மேல்பகுதியில் சிறிய கூரை போடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்தத்தூண் கல்வெட்டு ’சொரபொர வெவ’ எனும் குளக்கட்டின் அருகில் கண்டெடுக்கப்பட்டு, பதுளை கச்சேரிக்கு கொண்டு வந்து வைக்கப்பட்டு, பின்பு அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, தற்போது பதுளை பொதுநூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் உள்ள மகியங்கனையின் வடக்குப் பக்கமாக 4 கி. […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்