Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

பிரஜாவுரிமைச்சட்டமும் இரண்டு வரலாற்றுத் தவறுகளும்

8 நிமிட வாசிப்பு

1948 ஆம் ஆண்டின் பிரஜாவுரிமைச் சட்டமானது ஒட்டுமொத்த இந்திய வம்சாவளித் தமிழர்களினதும் பிரஜாவுரிமையைப் பறித்ததுடன், இந்திய – பாகிஸ்தானிய முஸ்லிம்கள், போரா,  மேமன், பார்சி போன்ற ஏனைய  இனத்தவர்களின் பிரஜாவுரிமையைக்கூட விட்டு வைக்கவில்லை. இது இலங்கையின் ஜனநாயக அரசியலில் ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கியது. அத்துடன் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக அவசர அவசரமாக 1949 ஆம் ஆண்டின் இந்திய – பாகிஸ்தானியர் வதிவிடப் பிரஜாவுரிமைச் சட்டம் ஒன்றை  நாடாளுமன்றத்தில் கொண்டு […]

மேலும் பார்க்க

பறிக்கூடு போட்டு மீன்பிடித்தல் போய், பஸ் போட்டு மீன்பிடித்தல் சாத்தியமா?

10 நிமிட வாசிப்பு

எனது அம்மாவின் தந்தையார், வைத்தியான் சந்தியாகு இறக்கும்வரை பறிக்கூடு (Fishing Trap) வைத்து மீன்பிடித்தார். பறிக்கூடுகளை கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் அளவான தூரத்தில் கொண்டு சென்று அங்குள்ள முருகை, சல்லி, பார் என்று எம்மவரால் அழைக்கப்படும் பவளப்பாறைகளுக்கு இடையில் வைத்து விடுவார். அடுத்த நாள் வெயில் நன்றாக ஏறிய பின் பறிக்கூடுகளை மரக்கோலின் கொக்கியால் தோணிக்குள் எடுப்பார். மீன்களை பறிகளிலிருந்து எடுத்துவிட்டு, மறுபடியும் பறிக்கூடுகளை அதே இடத்தில் வைத்துவிட்டு […]

மேலும் பார்க்க

குயர் மக்களும் மதங்களும்

10 நிமிட வாசிப்பு

இலங்கை, வேறுபட்ட மதங்களையும் தந்தையாதிக்கக் கருத்தியல்களையும் தன்னகத்தே கொண்டு கட்டமைக்கப்பட்ட பாரம்பரியமான பண்பாடுகளைப் பின்பற்றக்கூடிய பெரும்பாலான மக்களைக் கொண்ட ஒரு நாடு. இது பௌத்தர்கள் மற்றும் சைவர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடாக இருக்கிறது. வடபுலத்தில் இருக்கக்கூடிய மக்கள் அதிகமாக சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். இங்கு தென்னிந்திய இந்துப் பண்பாட்டின் செல்வாக்குகளை அதிகம் காணலாம். “தன்பாலீர்ப்பு இயற்கைக்கு மாறானது. அது எங்களுடைய சமயத்துக்கும் கலாசாரத்திற்கும் எதிரானது. […]

மேலும் பார்க்க

மேமன்கள் (Memons)

7 நிமிட வாசிப்பு

இலங்கை முஸ்லிம் உப மரபினங்களில் மற்றொரு பிரிவினர் மேமன்களாவர். இவர்கள் மேமன் சமூகம் எனவும் அழைக்கப்படுகின்றனர். மேமன்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து வணிக நடவடிக்கைகளுக்காக 1800 களின் தொடக்கத்தில் இலங்கை வந்தனர். காலனித்துவ காலத்தில் வர்த்தக நோக்கங்களுக்காகவே இவர்கள் இலங்கையில் குடியேறியதாக வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பெரும்பாலான மேமன்கள் போர்த்துக்கேயரின் ஆட்சிக்காலப்பகுதியிலேயே இலங்கை வந்ததாக விக்கிபீடியாத் தகவல் ஒன்று கூறுகிறது. 1947 இல் இந்தியப் பிரிவினையை அடுத்து அவர்கள் இலங்கையின் நிரந்தரக் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண பாரம்பரிய மரக்கறி வகைகளில் காய்கறிகள், கிழங்குகள் – பகுதி 2

15 நிமிட வாசிப்பு

வாழைப்பூ – காய் – தண்டு “வாழையின் பூவி னாலே வளர்பெரும் பாடு போங்காய்சூழுறு மரிய மூலப் பிரமேகந் தொலைக்கு மித்தண்டாழுறு மலக்கட் டெல்லா மகற்றுமென் றுரைத்தார் முன்னேதாழ்விலாப் பொதிகை மேய தபோதனர் கோமான் றானே” – பக்.76, அமிர்தசாகரம் பதார்த்தசூடாமணி வாழைப்பூவினால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப்பெருக்கு  குறையும். வாழைக்காய்க்கு மூல நோய்கள், நீரிழிவு என்பன கட்டுப்படும். (ஏனைய நீரிழிவுக்குரிய பத்தியம் காக்கப்பட வேண்டும்). வாழைத்தண்டினால் மலக்கட்டு […]

மேலும் பார்க்க

பல ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க் கல்வெட்டு தம்பலகாமத்தில் மீளவும் கண்டுபிடிப்பு

9 நிமிட வாசிப்பு

1796 காலப்பகுதியில் திருகோணமலையின் ஆளுநராக இருந்த பன்-சென்டன் அவர்கள்  திருகோணமலைக்கான தனது சுற்றுப்பயணத்தின் போது தம்பலகாமம் வயல் வெளியில் நாட்டப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்றைப் பார்வையிட்டதாகவும், அக்கல்வெட்டின் காலத்தையும், அதில் எழுதப்பட்ட வரலாற்று விடயங்களையும் அறிந்துகொள்வதற்கும், அங்கு வாழ்ந்த மக்கள் உதவ முன்வரவில்லை எனவும், தனது பயணக் குறிப்பில் பதிவுசெய்துள்ளார். இந்தக்கல்வெட்டை 1930 களில் பார்வையிட்ட பேராசிரியர் பரணவிதான அந்தக்கல்வெட்டின் முன்பக்கத்திலுள்ள 11 வரிகளைப் படியெடுத்து அது பற்றிய செய்தியை முதன் […]

மேலும் பார்க்க

தொலமியின் “தப்ரபானா” நிலப்படம்

10 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணப் பிரதேசத்தின் விவரங்களைக் காட்டுவதற்கெனச் சிறப்பாக வரைந்த நிலப்படங்களைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், இலங்கையைக் காட்டும் சில பழைய நிலப்படங்களில், பொதுவாக வடபகுதியைக் குறித்தும், சிறப்பாக யாழ்ப்பாணப் பகுதியைக் குறித்தும் எவ்வாறான தகவல்கள் உள்ளன எனப் பார்க்கலாம். இலங்கைத் தீவைக் காட்டும் நிலப்படங்களில் காலத்தால் முந்தியது, குளோடியஸ் தொலமியின் நிலப்படமாகும். இந்தக் கட்டுரைத் தொடர் குடியேற்றவாதக் காலத்துக்குரிய நிலப்படங்களையே குறிப்பாகக் கையாளுகின்றது. எனினும், குடியேற்றவாதக் காலத்துக்கு முந்திய இலங்கையைக் காட்டும் […]

மேலும் பார்க்க

கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு II

20 நிமிட வாசிப்பு

நாடுகாட்டுப் பரவணியில் கிடைக்கும் இரண்டு சுவையான தகவல்கள் குறிப்பிடத்தக்கவை. ஒன்று, குலக்கலப்பு மற்றையது குலமுரண்பாடுகள் பற்றிய தகவல்கள். இராசபக்ச முதலியாரின் குடும்பம் முதலில் தளவில்லில் குடியேறியபோது, வழியில் கண்டெடுத்த வேடக்குழந்தையை பறைநாச்சி என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார்கள். சலவைத்தொழிலாளியினது மனைவி இறந்தபோது அந்தக் குழந்தையின் பரம்பரையே சலவைத்தொழிலாளர் வம்சம் தழைக்க உதவுகிறது. ஏனெனில், கொள்ளை நோய்களின் தாக்கம், குடித்தொகை எண்ணிக்கை குறைவு முதலிய காரணங்களால் மக்கட்செல்வம் மிக அருமையானதாகக் கருதப்பட்ட […]

மேலும் பார்க்க

பிரச்சினைகளுக்கான தீர்வும் இயற்பியல் அடித்தளப் பயன்பாடும்

7 நிமிட வாசிப்பு

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு” – திருக்குறள் (620) மு.வரததாசனார் விளக்கம்: எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும். ஐக்கிய அமெரிக்காவில்  என் வாழிடம்  சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி. அதை சிலிக்கன் வலியென்றும் சொல்வர். அது முன்தொழில் நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவோருமுண்டு. இந்த இடம் இப்படி  தொழில்நிறுவனங்களுக்கெல்லாம் தலைமையாக இருப்பதற்கு பல காரணங்கள் […]

மேலும் பார்க்க

மாடுகளைப் பாதிக்கும் லம்பி தோல் நோய்

11 நிமிட வாசிப்பு

2020-21 களில் நாடு முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய லம்பி தோல் நோய் [Lumpy skin disease]  எனும் ஒரு வகை பெரியம்மை நோய் மீளவும் இந்த வருடம் (2023 இல்) வளர்ப்பு மாடுகளைப் பாதித்திருக்கிறது. மாடுகளின் உடல் முழுதும் சிறியது முதல் பெரியது வரையான வீக்கங்களை உருவாக்கும்  இந்த நோய் கடந்த முறையை விட மாறுபட்ட விதத்தில் சற்று வீரியத்துடன்  மாடுகளைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது. மாடு வளர்ப்பாளர்களின் பொருளாதாரத்தைக் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்