Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

கடலட்டை வளர்ப்புக்கு எதிராக நடைபெறும் மக்கள் போராட்டங்கள்

21 நிமிட வாசிப்பு

கடலட்டைகள்  என்பன ஹோலோதுரைடியா Holothuroidea உயிரியல் வகுப்பின் கீழ் உள்ள “விலங்குகளில்” மிகவும் மாறுபட்டதான, சந்தைப் பெறுமதி மிக்கதும் அழகானதுமான உயிரினங்களாகும். இவை சக உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத உயிரிகள். வழமையாக சேற்று மணல் மற்றும் கடல் அறுகுகள் – கடற்புற்கள் விளைந்திருக்கும் கடலடித்தளங்களையே இவை தமது வாழ்விடமாக கொண்டுள்ளன. அதேவேளை, மணல்களும் – கற்களும், முக்கியமாக பவளப் பாறைகளுக்கு மத்தியிலும் இவை ஆழ்கடலில் வாழ்கின்றன. இவற்றின் நீளம் சில […]

மேலும் பார்க்க

அரசியல் தலையீடும் விவசாய வீழ்ச்சியும்

13 நிமிட வாசிப்பு

அறிமுகம் இலங்கையின் விவசாயம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட ஒரு மிக முக்கியாமான பொருளாதாரத்துறை. அந்நிய சக்திகள் இலங்கையில் காலூன்றுவதற்கு முன்னர், மன்னர் ஆட்சிக்காலத்தில் மன்னர்களின் (இன்றைய காலத்தில் அரசியல்)  தலையீடு இலங்கை முழுவதும் உணவுப் புரட்சியை ஏற்படுத்தும் அளவுக்கு விவசாயத்துறையை வளர்த்தது. ஆனால் அந்நியர் ஆட்சிக்குப் பின்னர் இலங்கை ஒரு ஜனநாயக சோசலிசக் குடியரசாக மாறியது முதல்  இலங்கையில் காலம் காலமாக நிகழ்ந்துவரும் அரசியல் தலையீடு நாட்டின் […]

மேலும் பார்க்க

பத்தினித் தெய்வ வழிபாடும் சிங்கள – பௌத்தப் பண்பாடும்

17 நிமிட வாசிப்பு

ஒரு விமர்சன அறிமுகம் பத்தினி வழிபாடு கேரளத்தில் இருந்து வந்து குடியேறிய மக்களால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தக் குடியேற்றம் 12-14 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்டது. இந்தக் குடியேறிகள் தற்போதைய வகைப்படுத்தலாக அமையும் மேல் மாகாணம், தென் மாகாணம், சப்பிரகமுவ மாகாணம் ஆகிய இடங்களில் குடியேறினர். இவர்கள் சிங்கள மொழி பேசுவோராகவும் பௌத்தர்களாகவும் காலப்போக்கில் மாறினர். இவ்வாறாக அவர்கள் பௌத்த – சிங்களப் பண்பாட்டில் தம்மைக் கரைத்துக் கொண்டனர். கேரளத்தில் இருந்து […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் கிறீனது இறுதி நாள்கள்

8 நிமிட வாசிப்பு

1838.11.29 அன்று யாழ்ப்பாணத்தில் பிறந்த மருத்துவர் எட்வின் லோசன் கொச் ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணத்தில் பயின்று தனது 20 ஆவது வயதில் அரச புலமைப்பரிசிலைப் பெற்று கல்கத்தா மருத்துவக் கல்லூரிக்குச் சென்று மருத்துவப் பட்டம் பெற்றார். இவர் கொழும்பு மருத்துவபீடத்தின் ஆரம்ப விரிவுரையாளர்களில் ஒருவராகவும் இதன் 2 ஆவது அதிபராகவும் கடமையாற்றினார். 1870 இல்  ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு மருத்துவபீடத்தின் முதலாவது அணி மாணவர்களது 2 ஆவது விரிவுரையின் போது உரையாற்றிய மருத்துவர் […]

மேலும் பார்க்க

ஈழத்துக் கடலுணவுகளும் சாதக பாதகங்களும்

6 நிமிட வாசிப்பு

இறைச்சி வகைகளுடன் ஒப்பிடும்போது பொதுவாகக் கடல் உணவுகளே சிறந்த ஆரோக்கியமிக்க உணவு வகைகளாகக் கருதப்படுகின்றன. கடல் உணவுகளானது இதய நோய்கள், வாதநோய்கள், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, அதியுடற் பருமன் போன்றவற்றின் தாக்கங்களைக் குறைக்கின்றன. இதற்கு காரணம் கடல் உணவுகளில், நிரம்பிய கொழுப்புக்கள் (Saturated fat) குறைவு. அதேவேளை இதயத்துக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒமேகா 3 (Omega 3) கொழுப்பமிலங்கள் உட்பட, நிரம்பாத கொழுப்புக்களையும் (Unsaturated fatty acids) கொண்டவை. […]

மேலும் பார்க்க

சிறிமாவின் நான்குமுனை அரசியல் சதுரங்கம்

10 நிமிட வாசிப்பு

1950 களைத் தொடர்ந்துவந்த ஒன்றரை தசாப்த காலம் இலங்கைத் திருநாட்டை சிங்கள நாடாக மாற்றுவது தொடர்பான முயற்சிகளிலேயே கழிந்தது. அதனால் தமிழ்-முஸ்லிம் சிறுபான்மையினர்கள் தமது எதிர்ப்பை தொடர்ந்து வெளிக்காட்டி வந்தனர். இதனால் அவ்வப்போது ரத்தக்களரிகளும் போராட்டங்களும் சத்தியாக்கிரகங்களும் வெடித்த வண்ணமே இருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இலங்கையின் முதலாவது பிரதமரான டி . எஸ் . சேனநாயக்கவால் ஆரம்பிக்கப்பட்ட இனவாதக் கொள்கைகளை அடுத்து வந்த அனைத்து பிரதமர்களும் உள்ளது […]

மேலும் பார்க்க

இருப்பு, இழப்பு, நினைவு – ஊர்களைச் சுவடியாக்கஞ்செய்தல் – விரிவான உரையாடலுக்கான முற்குறிப்பு

21 நிமிட வாசிப்பு

“ஊரான ஊரிழந்தோம் ஒற்றைப் பனைத் தோப்பிழந்தோம்”(கவிதா நிகழ்வு – எங்கள் மண்ணும் இந்தநாட்களும் :1985) ஊர்களைச் சுவடிப்படுத்தல் என்பது ஊரை அதன் அனைத்து அம்சங்களோடும் அவதானித்தல்,  அடையாளம் காணல், அது தொடர்பான அனைத்து விடயங்களையும் சேகரித்தல், அவற்றை ஒழுங்கமைக்கப்பட்ட முறையிற் பதிவுசெய்தல் ஆகியவற்யோடு கூடிய ஒரு செயற்பாடாகும். அது ஊர்களை வரலாற்று நிலைப்படுத்தி, உள்ளூர் வரலாற்றுச் சட்டகத்திற்கு வலுச்சேர்க்கிறது. அத்துடன் ஊர்களை ஆற்றல்மிக்க முறையில் பராமரித்தல், நிர்வகித்தல், பயன்படுத்துதல், பாதுகாத்தல்  முதலியவற்றுக்கான முதலீடாகவும் காணப்படுகிறது. எப்போது நாம் ஊரை இழந்தோம்? எப்போது ஊர் நினைவாகியது? அது எப்போது கழிவிரக்கமாயும், முடிவடையாத – […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண நகரம் தோன்றிய காலத்தை மீளாய்வு செய்யும் யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வாய்வு

13 நிமிட வாசிப்பு

 2500 ஆண்டுகால இலங்கை வரலாற்றில் வட இலங்கை சிறப்பாக யாழ்ப்பாணம் பாளி மொழியில் நாகதீப(ம்) எனவும், தமிழ் மொழியில் நாகநாடு எனவும் தனியொரு பிராந்தியமாக அடையாளப்படுத்திக் கூறும் மரபு பண்டுதொட்டுக் காணப்படுகின்றது. இதற்கு இப்பிராந்தியத்தில்  தோன்றி வளர்ந்த தனித்துவமான பண்பாட்டு அம்சங்களும் ஒரு காரணம் என்பதை அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகளும் உறுதிசெய்து வருகின்றன. இதை யாழ்ப்பாண நகரத்திற்கு தெற்கே கடல் நீரேரியுடன் அமைந்துள்ள ஒல்லாந்தர்காலக் கோட்டையின் உட்பகுதியில் 2012- 2017 […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத் தமிழர்களின் சமூக ஒழுங்கமைப்பு – பகுதி 1

26 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : மைக்கல் பாங்ஸ் மைக்கல் பாங்ஸ் ஆய்வு குறித்த ஓர் அறிமுகம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ரினிட்டிக் கல்லூரியின் மாணவராக இருந்த போது மைக்கல் பாங்ஸ் (Michael Banks) 1950களின் முற்பகுதியில் கள ஆய்வு வேலைக்காக யாழ்ப்பாணம் வந்தார். இவர் தம் ஆய்விற்கான களப்பணியில் ஒரு வருடம் சிறுப்பிட்டி என்ற கிராமத்திலும் ஆறுமாதங்கள் கிளிநொச்சியிலும் செலவிட்டார். யாழ்ப்பாணத் தமிழர்களின் சமூக ஒழுங்கமைப்பு (The social organization of Jaffna […]

மேலும் பார்க்க

நுண்ணுயிர்க் கொல்லிகளின் எதிர்ப்பு நிலை – கால்நடை மருத்துவத்தின் நிலைப்பாடு

11 நிமிட வாசிப்பு

அறிமுகம் மனிதர்களிலும் விலங்குகளிலும் நோய் சிகிச்சைக்கும் நோய்கள் வராமல் தடுப்பதற்கும் நுண்ணுயிர்க் கொல்லிகள் [Antibiotics] பயன்படுத்தப்படுகின்றன. பல வருடங்களாக ஆபத்தான நுண்ணுயிர்களால் [Bacteria] ஏற்பட்ட மிகக் கொடிய  நோய்களில் இருந்து மனிதர்களையும் விலங்குகளையும் பாதுகாத்த மேற்படி நுண்ணுயிர்க் கொல்லிகள் அண்மை நாட்களில் பயனற்றவையாக மாற்றமடைந்து  வருகின்றன. குறிப்பாக, நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு நிலை [Antibiotic resistant] பெரும்பாலான நுண்ணுயிர்க்  கொல்லி மருந்துகளுக்கு தோன்றியுள்ளது. நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பான நுண்ணுயிர்களின் அதிகரிப்பு […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்