Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

பிராமண மத வரம்பைக் கடந்த மக்கள் களம்

18 நிமிட வாசிப்பு

இப்போது கடந்துகொண்டிருக்கும் வரலாற்று மாற்றம் பற்றித் தெளிவு பெறுவதில் சிரமம் இருக்க இயலும். ஏற்படவுள்ள மாற்றத்தின் பேறாக வெளிப்படும் புதிய வாழ்முறையின் தாற்பரியங்களை வைத்தே பலரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது எனக் கண்டறிய வாய்ப்புப் பெறக்கூடும். ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் நடந்தேறிய மாற்றத்தைக் கணிப்பதில் கூடத் தெளிவீனம் உள்ள நிலை ஆய்வுலகில் பல இடங்களில் உள்ளன. பக்தி இயக்கம் பற்றிய கணிப்பு அவற்றுள் ஒன்று. பக்திப் பேரியக்கத்தின் ஊடாக மேற்கிளம்பி வந்தது […]

மேலும் பார்க்க

கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் II

16 நிமிட வாசிப்பு

மட்டக்களப்பு மான்மியமோ மட்டக்களப்புப் பூர்வ சரித்திரமோ முழுக்க முழுக்க செட்டிபாளையம் கணபதிப்பிள்ளை புலவரின் படைப்பாக இருந்துவிடமுடியாது என்பதற்கான சில சான்றுகளை கடந்த தொடரில் பார்த்தோம். ஆனால், ஈழத்துப் பூராடனாரின் வாதங்களிலிருந்து நாம் முற்றிலும் மறுக்கமுடியாதிருக்கின்ற ஒரு விடயம் என்னவென்றால், இன்று மட்டக்களப்பு மான்மியம் என்ற பெயரில் பதிப்பிக்கப்பட்டுள்ள நூலில் கணபதிப்பிள்ளை புலவரின் தாக்கம் ஓரளவுக்கேனும் இருக்கிறது என்பதைத் தான். அவரிடமிருந்தே எஃப். எக்`ச். சீ. நடராசா பதிப்பித்த மட்டக்களப்பு மான்மியத்திற்கான […]

மேலும் பார்க்க

தொழில்களில் வெற்றிபெறத் தேவையான பழக்கவழக்கங்கள்

9 நிமிட வாசிப்பு

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல்”– திருக்குறள் (664) – மு. வரதராசனார் விளக்கம் : இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம். இன்றைய உலக – உள்ளூர் சமூகங்களை அவதானித்தால் எமது கண்ணில் தெரிவது வெற்றிபெற்றவர்களின் கடைசி முடிவுகளே. இது ஐந்தாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வாக இருக்கலாம். அல்லது […]

மேலும் பார்க்க

நிலவியலின் துயரம்

19 நிமிட வாசிப்பு

இந்தப் புத்தகத்தின் அரைவாசிப்பகுதி  நூலாசிரியரின் இளமைக்காலம், குடும்பம், அவரது கிராமத்தின் வாழ்வுச் சூழல், 1980 களின் நடுப்பகுதி வரையான இலங்கைத்தீவின் அரசியல், போராட்ட நிலைமைகள் குறித்த விடயங்களைப் பேசுகின்றது. மீதமுள்ள பகுதி வெளிநாடு ஒன்றுக்குப் பயணமாகும் இலக்குடனான முன்னெடுப்புகள், அதில் எதிர்கொண்ட சிக்கல்கள், போராட்டங்கள் என்பவற்றைப்  பகிருகின்றது. ஈழத்திலிருந்து 1980 களின் நடுப்பகுதியில் போர் மற்றும் குடும்பப் பொருளாதார நிலைமைகள் காரணமாகத் தனது 17 ஆவது வயதில் புலம்பெயர்ந்த இளைஞனைப் […]

மேலும் பார்க்க

இலங்கை போஹ்ராக்கள்

10 நிமிட வாசிப்பு

இலங்கை முஸ்லிம்களின் மற்றொரு உப மரபினமாக போஹ்ராக்கள் விளங்குகின்றனர். ‘போஹ்ரா’ (Bohras) என்ற சொல்லின் பொருள் ‘வர்த்தகர்’ என ஒரு ஆய்வுத்தகவல் குறிப்பிடுகிறது. அவர்களது சமூக வாழ்வியலுக்கும் இந்தச் சொல்லுக்குமான தொடர்பு உண்மையில் ஆழமானது. இந்த அர்த்தத்தில் பார்த்தால் ‘போஹ்ரா’ என்பது ஒரு காரணப்பெயராகவே இந்த சமூகத்தினருக்கு சூட்டப்பட்டிருப்பதை அவர்களது உலக வர்த்தகச் செயல்பாடுகளிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. உலகின் பல பாகங்களிலும் சிறப்பான முறையில் வர்த்தகம் மேற்கொள்கின்ற ஒரு சமூகப்பிரிவினராகவே […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத் தமிழர்களின் சமூக ஒழுங்கமைப்பு – பகுதி 2

15 நிமிட வாசிப்பு

ஆங்கிலமூலம் : மைக்கல் பாங்ஸ்          யாழ்ப்பாணக் கிராமங்களின் கட்டமைப்பு தஞ்சாவூருக்கும் யாழ்ப்பாணத்திற்கும் சாதிக் கட்டமைப்பில் முக்கிய வேறுபாடுகள் உள்ளன. யாழ்ப்பாணக் கிராமங்களின்  கட்டமைப்பு என்னும் விடயம் பற்றிய இப்பகுதியில், இவ் வேறுபாடுகள் ஒப்பீட்டு முறையில் சுட்டப்படும். யாழ்ப்பாணக் கிராமங்களின் உள்ளக ஒழுங்கமைப்பு (INTERNAL ORGANISATION)  தஞ்சாவூரின் கிராமங்களின் உள்ளக ஒழுங்கமைப்பிலிருந்து வேறுபட்டது. பிராமணர்களிடையே நிலவும் உட்சாதிப் பிரிவுகள் என்ற விடயத்தில் தஞ்சாவூருக்கும் யாழ்ப்பாணத்திற்கும்  அடிப்படையில் வேறுபாடு உள்ளது. யாழ்ப்பாணத்தில் […]

மேலும் பார்க்க

அசமத்துவ அதிகாரப்பகிர்வு : ஸ்பானிய நாட்டின் அனுபவம் – பகுதி 4

12 நிமிட வாசிப்பு

ஸ்பானியாவில்  வரலாற்றுத் தேசிய இனங்களது சுயாட்சியின் 25 ஆவது ஆண்டு நிறைவு 2004 இல் கொண்டாடப்பட்டது. அப்போது பஸ்க், கற்றலோனியா, ஹலீசியா என்பன தமது அதிகாரப் பகிர்வு அனுபவங்களை மீளாய்வு செய்தன. ஐரோப்பிய சமூகத்துடன் ஸ்பெயின் தன்னை இணைத்துக் கொள்வதற்காகச் செய்த இசைவினைத் தவிர அதன் அரசியல் யாப்பில் மாற்றங்கள் எதுவும் கொண்டுவரப்பட்டிருக்கவில்லை. சுயாட்சி சமூகங்கள் மத்தியில் அதிருப்தி காணப்படுவது இம் மீளாய்வில் அறியப்பட்டது. தமக்குரிய அதிகாரங்களின் அளவு போதியதாக […]

மேலும் பார்க்க

ஒப்பாரிக் கோச்சியும் நூற்றாண்டுத் துயரும்

8 நிமிட வாசிப்பு

ஒரு நாட்டில் ஒரு நல்ல தலைவன் ஆட்சியில் இருந்தால் மட்டுமே அந்த நாடு சீரும் சிறப்பும் பெற்று செழித்து வளரும் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. ஒரு நல்ல தலைவனை இழந்து ஒரு கொடுங்கோலனின் ஆட்சியில் ஒரு நாடு விழுந்தால் அந்த நாட்டின் மக்கள் எத்தனை கொடுமைகளை அனுபவித்திருப்பார்கள் என்பதற்கும் வரலாற்றிலிருந்து ஆதாரங்களை எடுத்துக்காட்ட முடியும் . இந்த வரலாறுகள் எழுதப்படுவதற்கான முக்கியமான காரணமே அவற்றில் இருந்து நாம் […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரத்தில் கால்நடைத் துறையின் பங்குபற்றலும் வாய்ப்புக்களும்

13 நிமிட வாசிப்பு

வடக்கு-கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் மற்றுமொரு வாய்ப்புமிக்க வளமாகக் காணப்படும் கால்நடைத் துறையில், இப்பிரதேசத்தில் காணப்படும் நிலவளம் முக்கிய ஆதாரமாகக் காணப்படுகிறது. இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 15.2 சதவீதத்தைக் கொண்ட கிழக்கு மாகாணத்தினதும் 13.5 சதவீதத்தைக் கொண்ட வடக்கு மாகாணத்தினதும் நிலப்பரப்புக் கூட்டுத்தொகை 28.7 வீதமாகக் காணப்படுகின்றது. இந்த அதிகளவான நில அமைவின் காரணமாக திறந்தமுறைக் கால்நடை வளர்ப்புப் பாரம்பரியத்தைக் கொண்ட கால்நடைத்துறை வளர்ச்சியடைந்துள்ளது. கால்நடை வளர்ப்புத் துறையின் ஆதாரத்துடன் மேலதிக […]

மேலும் பார்க்க

பெருந்தோட்ட மக்களும் சமூக நலன் சேவைகளும் : நேற்றும் இன்றும் நாளையும்

20 நிமிட வாசிப்பு

அறிமுகம் காலனித்துவ ஆட்சியின் விளைவாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் இலங்கையில் பெருந்தோட்ட விவசாய முறையொன்று தோன்றி வளர்ந்தது என்பதும், இன்று வரையும் அது எமது பொருளாதாரத்தில் கேந்திர முக்கியத்துவம் வகித்து வருகின்றது என்பதும் யாவரும் அறிந்த ஒரு உண்மையாகும். இவ்விவசாய முறையின் பிரதான உற்பத்தி அலகாகவிருக்கும் தோட்டங்கள் முக்கியமானதொரு தாபன அமைப்பாக இன்று விளங்குகின்றன. பெருமளவு எண்ணிக்கையான தொழிலாளரைக் கொண்ட அமைப்பாக இருந்து வரும் அதேவேளையில் இவை தோட்டங்களில் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்