Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

தாயகம் திரும்பியோரின் அவலங்கள்

9 நிமிட வாசிப்பு

1964 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தை அடுத்து இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் வரலாறு இரண்டு பாதைகளாகப் பிரிகின்றது. ஒன்று இலங்கைப் பிரஜைகளாக அந்தஸ்து பெற்று இங்கேயே தங்கி விட்டவர்கள்; நாடற்றவர்கள் என்ற பெயர் பெற்ற மக்கள் கூட்டத்தினரின் வரலாறு. மற்றையது இந்தியப் பிரஜாவுரிமை பெற்று  ‘தாயகம் திரும்பியோர்’ (Repatriate) என்ற திருநாமத்தை பெற்றுக்கொண்ட மற்றுமொரு மக்கள் கூட்டத்தினரின் வரலாறு. எல்லா உரிமைகளும் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – பகுதி 3

16 நிமிட வாசிப்பு

9.5.1895 ‘உதயதாரகை’ பத்திரிகையில் பாடசாலை நூலக விருத்தி பற்றிய சுவாரஸ்யமான செய்தியொன்று காணப்படுகின்றது.  “கோப்பாய் வித்தியாசாலையார் புத்தகசாலை ஒன்றுக்கு அடியிடக் காண்பது சந்தோட கருமம். பிள்ளைகள் துண்டு கொண்டு பணம் தண்டலிற் திரிகின்றனர். வீட்டுக்கு வீடு ஒவ்வொரு புத்தகசாலை இருந்தாலோ என்றும் ஆசை என் மனதில் நெடுங்காலம் குடி கொண்டது. வாய்ச்சியளி இல்லாத தபதியும், கலப்பை நுகமில்லாத வேளாளனும் புத்தகமில்லாத ஆசிரியனும் ஒருவருக்கொருவர் சமம். பாடசாலையோட்டம் முடிந்தால் புத்தகங்கள் ஓட்டம் […]

மேலும் பார்க்க

விவசாய எழுச்சித் திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் ?

18 நிமிட வாசிப்பு

அறிமுகம் இலங்கையின் இன்றைய பொருளாதார வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணங்களில் துறைசார் நிபுணர்கள் மற்றும் விவசாயிகளின் கருத்துக்களைக் கேளாமலும் நன்கு திட்டமிடப்படாமலும் 2019 ஆம் ஆண்டு எதேச்சதிகாரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட நாடு தழுவிய கட்டாய சேதன விவசாயமும் அசேதன விவசாய உள்ளீடுகளுக்கான தடையுமே மிகப் பிரதானமாகப் பார்க்கப்படுகின்றன. இலங்கை கிட்டத்தட்ட 5000 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த சூழல்நேய விவசாயத் திட்டங்களினூடு தற்சார்பு உணவு உற்பத்தி செய்த நாடாக இருந்தும் பின்னர்  திறந்த […]

மேலும் பார்க்க

ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வு : ஸ்கொட்லாந்து, வடஅயர்லாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளின் சுயாட்சி முறைகள் – பகுதி 1

20 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : ஜயம்பதி விக்கிரமரட்ன POWER SHARING : THE INTERNATIONAL EXPERIENCE என்ற நூலை அரசியல் யாப்புக்கான கற்கை நிறுவனம், இலங்கை – ராஜகிரிய என்ற அமைப்பு 2011 ஆம் ஆண்டில் வெளியிட்டது. இந்நூலின் பதிப்பாசிரியர்கள் ரஞ்சித் அமரசிங்க மற்றும் ஜயம்பதி விக்கிரமரட்ன ஆவர். இந்நூலில் ரஞ்சித் அமரசிங்க ஸ்பெயின் நாட்டின் அசமத்துவ அதிகாரப் பகிர்வு குறித்த ஒரு கட்டுரையை எழுதிச் சேர்த்திருந்தார். அதனை தமிழாக்கம் செய்து […]

மேலும் பார்க்க

கடலும் காலநிலைமாற்ற அரசியலும்

20 நிமிட வாசிப்பு

கடலட்டை வளர்ப்பை நியாயப்படுத்த அதிகார வர்க்கத்தினரும், அதன் கடல் விஞ்ஞானிகளும் முன் வைக்கும் சில கூற்றுக்களை ஆராய்வோம். “இன்னும் சில தசாப்தங்களுக்குள் இலங்கையைச் சுற்றியுள்ள கரைகள் சார்ந்த கடற்பிரதேசம் எந்த ஜீவராசியும் வாழ முடியாத பிரதேசம் ஆகிவிடும். ஏற்கனவே வறட்சியும் நன்னீர்த் தட்டுப்பாடும் காணப்படும் கரையோர மீன்பிடிக் கிராமங்கள் மனிதர் வாழ்வதற்குத் தகுதியற்ற இடங்களாகப் போய்விடும். வெப்ப அதிகரிப்புக் காரணமாக புல், பூண்டு கூட முளைக்காத பூமியாகி விடும், கடல் […]

மேலும் பார்க்க

யாழ். பாரம்பரிய சமையலில் சுவையூட்டிகள்

19 நிமிட வாசிப்பு

பொதுவாக முழுமையான சுவை எனப்படுவது, நாக்கினால் உணரப்படும் சுவை, மூக்கினால் உணர்ந்து கொள்ளும் மணம், கண்ணினால் காணும் வடிவம் என்பவற்றின் ஒருங்கிணைந்த செயற்பாடாகும். இவ்வாறான சுவைகளுக்கு, பொதுவாக தாவரப்பொருட்களில் உள்ள தாவர இரசாயனங்களே (Phytochemicals) காரணமாகின்றன. ஏறத்தாழ 25000 தாவர இரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் நன்மைதரக்கூடிய இரசாயனங்களும் உள்ளன. நச்சுப்பொருட்களும் உள்ளன. இவற்றின் அடிப்படையில் உடலுக்கு நன்மை தரக்கூடிய, நோய்களில் இருந்து பாதுகாக்கக்கூடிய தாவர இரசாயனங்களை அதிகமாகக் கொண்டிருக்கக் கூடியனவும், விரும்பக்கூடிய […]

மேலும் பார்க்க

முஸ்லிம்களிடையே வழக்கிலுள்ள தமிழ்க்குடிகள்

12 நிமிட வாசிப்பு

இலங்கையின் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை அவர்கள் மொத்தமாக மத்தியகிழக்கில் இருந்தோ இந்தியத்துணைக்கண்டத்தில் இருந்தோ வந்து இலங்கையில் குடியேறியவர்களல்ல. அவ்வாறு குடியேற்றத்தின் பொருட்டே அவர்களின் முழு நிலவுகையும் காணப்பட்டிருக்குமாயின் அவர்கள் இலங்கை சனத்தொகையில் பத்து சதவீதத்தை அண்மித்துக் காணப்படுவது சாத்தியமற்றதாகும். அவர்கள் இலங்கையின் பூர்வகுடிகளிலிருந்து திருமண பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டதன் மூலமாகவும், இஸ்லாமிய வாழ்க்கைநெறியை பின்பற்றத் தொடங்கிய பூர்வகுடிகள் மூலமாகவுமே இது சாத்தியப்பட்டிருக்கின்றது.  இவர்களின் தாய்மொழி தமிழாகவே இருந்து வந்திருக்கின்றது. இலங்கை முஸ்லிம்கள் […]

மேலும் பார்க்க

இதயத்தில் ஓர் இடம் கேட்ட அமெரிக்க மிசனரிகள்

10 நிமிட வாசிப்பு

இன்று இலங்கையின் முதன்மைத் தேசிய மருத்துவமனையாக விளங்கும் கொழும்பு தேசிய மருத்துவமனையிலே வருடாந்தம் சிகிச்சை பெறும் நோயாளர்களது எண்ணிக்கையானது நாட்டிலுள்ள ஏனைய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரைவிட அதிகமாகும். ஆனால் இலங்கையில் ஐரோப்பிய மருத்துவம் அறிமுகமான 19 ஆம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதியில் யாழ்ப்பாணம் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழக மருத்துவமனையிலே (யாழ். போதனா மருத்துவமனை) இலங்கையின் எந்த ஒரு மாகாண மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுவோரைவிட அதிகளவானோர் சிகிச்சை பெற்றனர். மருத்துவர் […]

மேலும் பார்க்க

இஸ்ரேல் நாட்டின் பாலுற்பத்தி துறை சொல்லும் செய்தி

13 நிமிட வாசிப்பு

இஸ்ரேல் எனும்போது  எமக்கு உடனடியாக பல அரசியல் விடயங்கள் நினைவுக்கு வரும். நீண்டகால பலஸ்தீன – இஸ்ரேல் மோதல், ஹிட்லரின்  யூத இனச் சுத்திகரிப்பின் பின் உருவாகிய நாடு, பலம்மிக்க இஸ்ரேலிய இராணுவம் என பல விடயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றைவிட விவசாயத்தில், குறிப்பாக விலங்கு வேளாண்மையில் இஸ்ரேலியர் அடைந்திருக்கும் சாதனையை  எம்மில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இன்றைய நிலையில் ஒரு இஸ்ரேலியப் பசு, 305 நாட்களைக் கொண்ட […]

மேலும் பார்க்க

தக்காளி : இடைக்காலத்தில் வந்துசேர்ந்த இன்றியமையா உணவு

11 நிமிட வாசிப்பு

காய்க்குக் கபம்தீரும் காரிகையே இவ் இலைக்குவாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண் – தீக்குள்அணக்கிடு வற்றல் உறுபிணியோர்க்கு ஆகும்மணத்தக்காளிக்கு உள்ளவாறு – பதார்த்த குணவிளக்கம் – மணத்தக்காளியின் காய்க்கு சளி தீரும். இதன் இலைக்கு வாயில் ஏற்படும் கிரந்தி, சூடு என்பன மாறும். இதன் வற்றல், நோயாளிகளுக்கு நல்ல பத்திய உணவாகும் என்பது மேற்காணும் பாடல் தரும் செய்தி. ‘மணத்தக்காளி’ என்னும் ஒரு கீரை பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்