Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

எருமை வளர்ப்பு – ஒரு குறுக்கு வெட்டுப் பார்வை

23 நிமிட வாசிப்பு

இந்த கட்டுரையில் எருமை வளர்ப்புத் தொடர்பான பல விடயங்களை ஆராயப் போகிறேன். இதற்கு இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளின் பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியீடுகளையும் பயன்படுத்தியுள்ளேன். பசு மாடுகளைப் போல எருமை மாடுகளிலிருந்தும்  மனித தேவைகளுக்கு கணிசமான அளவில் பால் மற்றும் இறைச்சி பெறப்படுகிறது. இன்று உலகில் அதிக பால் உற்பத்தியாகும் நாடான இந்தியாவில் பசுப் பாலை விட எருமைப் பாலே அதிகம் பெறப்படுகிறது. இந்தியாவைத் தவிர பாக்கிஸ்தான், […]

மேலும் பார்க்க

வணிகம் ஆரம்பிக்க அவசியமான நான்கு தூண்கள்

10 நிமிட வாசிப்பு

“வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவைஆராய்வான் செய்க வினை”-திருக்குறள் (512)- மு.வரதராசனார் விளக்கம்: பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும். எமது பரம்பரைத் தமிழர்களின் வரலாற்றை பார்த்தோமென்றால் அவர்கள் கடலோடி மலையேறி (இப்போது விமானம் ஏறி) நாடுகள் கடந்து தமக்கும், தமது குடும்பத்திற்கும், அதனுடன் அவர்களது சமூகத்திற்கும் பணம் உழைக்க மிக்க சிரமப்பட்டு அவர்களது குறிக்கோள்களை […]

மேலும் பார்க்க

இலங்கையின் வடகடலில் இந்திய அத்துமீறல் : கடல் வள அழிவும் சமூகப் பொருளாதார பாதிப்புகளும் – பகுதி 3

21 நிமிட வாசிப்பு

இந்தியக் கடல்கொள்ளையும், அதை மூடிமறைக்கச் சொல்லப்படும் காரணங்களும் ‘இந்திய மீன்பிடிப் படகுகள், நீரோட்டத்துடன் அவர்களின் வலைகள் அடித்து செல்லப்படுவதால்தான் எல்லை தாண்டுகின்றனர்; இலங்கையின் கடல்பகுதியில் மீன் பிடிப்பதற்கல்ல.’ என இந்திய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இந்திய நாசகார மீன்பிடிக்கு ஆதரவாகச் செயற்படும் சில புலம்பெயர் ‘இடதுசாரித்துவப் புரட்சி’ பேசும் சக்திகளும் இந்தியப் படகுகளின் அத்துமீறலை நியாயப்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் பிரசுரமாகும் ‘புதிய ஜனநாயகம்’ பங்குனி 2011 இதழில், எல்லை தாண்டிய கடற்கொள்ளை […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்கு உயிர்ப் பல்வகைமை : ஓர் அறிமுகம்

9 நிமிட வாசிப்பு

கிழக்குக்கரையின் அம்பாறை தொடங்கி வடமேற்குக் கரையின் புத்தளம் வரை கடற்கரையோரங்களை உள்ளடக்கிய நிலம், நீர்நிலைகள், காடு என்பன உள்ளடங்கலாக ஐவகை நிலங்களை உள்ளடக்கியதே வடக்கு – கிழக்குபிரதேசமாகும். பாரம்பரிய வரலாறுகள், நிகழ்வுகள், இடப்பெயர்வுகள், விவசாய அபிவிருத்திகள் என்பனவற்றை உள்ளடக்கி இலங்கையின் அபிவிருத்தியில் பெரும்பங்காற்றிவருகின்றது இந்தப் பிராந்தியம். பூகோள அமைப்பின்படி, கடலோரங்களையும் ஐவகை நிலங்களையும் கொண்ட இப் பாரம்பரிய பிரதேசம் பலநூற்றாண்டுகாலமாக அழிவடையாமல் இருப்பது பெரும்பேறாகும். இயற்கை அனர்த்தங்கள், மனிதச் செயற்பாடுகள், […]

மேலும் பார்க்க

இலங்கையின் வடகடலில் இந்திய அத்துமீறல் : கடல் வள அழிவும் சமூகப் பொருளாதார பாதிப்புகளும் – பகுதி 2

30 நிமிட வாசிப்பு

மீன்பிடித் திறன் அதிகரிப்பும் கடல்வள அழிவும் கடலில் உருவாகும் மீன்வளத்தின் அடிப்படையில் கிடைக்கவல்ல வருமானத்திற்கு மீறியதான மீன்பிடித் திறனை அதிகரிக்க, முதலீடு செய்வது பாதகமானதாகும். அதைக் கட்டுப்படுத்தி மீன் வளத்திற்கேற்ப முதலீடு செய்வதற்கு வகை செய்யாமல், மீன்பிடித்துறையில் தாராளமய முதலீட்டை ஒரு அரசு தனது கொள்கையாகக் கொண்டிருக்குமானால் அதனால் முதலில் பாதிப்படைவதும், அழிவுக்குள்ளாவதும் கடல்சார் வளங்களே. உற்பத்தி உபகரணங்களில் முதலீடு செய்யும்போது, அதை இலாபத்துடன் திருப்பிப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை […]

மேலும் பார்க்க

பயன்பல கொடுக்கும் பப்பாளி மரம்

11 நிமிட வாசிப்பு

உலகில் அதிகளவில் பயிரிடப்படும் வெப்பமண்டலப் பயிர்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது பப்பாளி ஆகும். வெப்பமண்டல அமெரிக்காவில் அதன் சரியான தோற்றம் தெரியவில்லை என்றாலும், அதன் தோற்றம் மற்றும் வளர்ப்பின் மையமாக மத்திய அமெரிக்கா அல்லது மெக்சிகோ இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. ஐரோப்பியரால் முதன்முதலில் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டொமினிக்கன் குடியரசு மற்றும் பனாமாவில் பப்பாளி கண்டறியப்பட்டது. மத்திய அமெரிக்காவிற்கு அப்பால் பப்பாளி பரவியதற்கு ஸ்பெயின் நாட்டவர்கள் தான் காரணம். […]

மேலும் பார்க்க

ஆரியர் கோட்பாடும் இலங்கையின் ‘சிங்கள பௌத்த’ அடையாள உருவாக்கமும்

25 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் பேராசிரியர் ஆர்.ஏ.எல்.எச். குணவர்த்தன பேராசிரியர் ஆர்.ஏ.எல்.எச். குணவர்த்தன அவர்கள் ‘The People of the Lion: Sinhala Identity and Ideology In History and Historiography’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையொன்றை எழுதினார். இக் கட்டுரை யொனதன் ஸ்பென்சர் பதிப்பித்து Routledge பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘Sri Lanka History and Roots of Conflict (1990)’ கட்டுரைத் தொகுப்பு நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டுரையில் நவீன […]

மேலும் பார்க்க

எம்.ஜி.ஆர் குறித்த ரோகண விஜேவீரவின் அச்சம்

10 நிமிட வாசிப்பு

சுதந்திர இலங்கையின் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த எந்த ஒரு பெரும்பான்மையின நாடாளுமன்ற உறுப்பினரும் மலையகத் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்கள் பற்றியோ, அவர்களது உரிமை மறுக்கப்படுவது தொடர்பிலோ, அவர்களுக்கும் ஒரு துண்டு நிலம் சொந்தமாக வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலோ ஒருபோதும் குரல் குரல் கொடுத்ததாக வரலாற்றுப் பதிவுகள் இல்லை. இறுதியாக அவர்கள் நிகழ்த்திய 1000 ரூபா நாட்சம்பளப் போராட்டத்தின் போது மாத்திரம் அதற்குச் சாதகமாக முற்போக்குச் சிந்தனை […]

மேலும் பார்க்க

இலங்கையின் வடகடலில் இந்திய அத்துமீறல் : கடல் வள அழிவும் சமூகப் பொருளாதார பாதிப்புகளும் – பகுதி 1

23 நிமிட வாசிப்பு

ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் முதல் ஐந்து ஆண்டு ஆட்சிக்காலத்தில் (1994-1999) விடுதலைப் புலிகள் அமைப்புடன் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அந்த சமாதானப் பேச்சுக்களுக்கு மறைமுகமாக உதவிய நோர்வே மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட  இலங்கையின் வடக்கு-கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கும் உடன்பட்டிருந்தன. அந்தப்பேச்சு வார்த்தைகள் முற்று முழுதாக முடிவடையாமல் இருந்தாலும், இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் பற்றி விடுதலைப் புலிகளுக்கும் சந்திரிகா அரசுக்கும் இடையில் பல […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 4

23 நிமிட வாசிப்பு

க.மு.செல்லப்பாவின் யாழ்ப்பாண மத்திய இலவச தமிழ் நூற் கழகம் நகுலேஸ்வரா படிப்பகம் திறக்கப்பட்ட காலகட்டத்தின் பின்னரும் சரி அதற்கு முன்னரும் சரி, குடாநாட்டு பல்வேறு அறிஞர்களின் வீடுகளில் குடும்ப நூலகங்கள் இருந்துள்ளன என்பதை பல்வேறு வகையிலும் அறியமுடிகின்றது. இன்றும் பிரித்தானிய நூலகத்தில், எமது மூதாதையர் பலரின் தனிப்பட்ட சேகரிப்புகள் பாதுகாக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் பிறந்த சேர். முத்து குமாரசுவாமி (Muttu Coomaraswamy, 23.01.1833 – 04.05.1879) பிரித்தானிய இலங்கையின் முதலாவது சட்டவாக்கப் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்