இவ் ஆய்வின் (Homeland orientation of war-torn diasporas) ஆறு கட்டுரைகளில் நான்கு கட்டுரைகள்; பணம் அனுப்புதல் நோக்கங்கள், வழிமுறைகள், விளைவுகள் தொடர்பானவை. இரண்டு கட்டுரைகள்; தாயகம் சார்ந்த பண்பாட்டு நடைமுறைகள், பின்பற்றல்களோடு தொடர்புடையவை. பணம் அனுப்புதல் தொடர்பான கட்டுரைகள், பணம் அனுப்புதற் செயற்பாடுகள் ஊடான தாயகத்துடனான பொருளாதார உறவுகள்- தொடர்புகளையும்; தமிழர்கள், சோமாலியர்களின் நோர்வே வாழ்க்கையிலுள்ள சிக்கல்களைக் கையாள்கின்றன. பண்பாட்டு நடைமுறைகள் பற்றிய கட்டுரைகள், தமிழர்கள் மற்றும் சோமாலியர்களின் […]
பெருந்தோட்டத்துறை ஒட்டுமொத்தமாக அரசுடைமை ஆக்கப்பட்டபோது அங்கிருந்த ஒரு சாராரும் அரச சார்பு தொழிற் சங்கத்தினரும், இனிமேல் தோட்டத் தொழிலாளிகள் எல்லோருமே அரச உத்தியோகத்தர்கள் ஆகிவிட்டார்கள் என்று கொண்டாடினார்கள். ஆனால் அந்த எல்லா கொண்டாட்டங்களும் ஒருசில மாதங்களிலேயே சூரியனைக் கண்ட பனித்துளிகள் போல் கரைந்து போய்விட்டன. தோட்டங்கள் வெறுமனே வெள்ளை தோல் போர்த்த வெள்ளைக்காரனிடம் இருந்து கருப்புத் தோல் போர்த்த கருப்பு துரைகளிடம் மாறினவே அன்றி, அங்கே உண்மையான மாற்றங்கள் எதுவும் […]
கடல்சார் பல்வகைமை மேற்பரப்பு நீர்நிலைகளில் ஒன்றான கடல், வடகிழக்கின் முக்கிய சொத்தாகும். பரந்துபட்ட பிரதேசமாக விரிந்து காணப்படும் இந் நீலநிறப் பிரதேசம் அநேக உயிர் இரகசியங்களை உள்ளடக்கியுள்ளது. இப்பிரதேசம் அறுகம்பே கரையிலிருந்து புத்தளம் வரை எம் பிரதேசவாசிகளால் கையாளப்பட்டுவருகிறது. பருவகாலங்களுக்கு அமைய மாறிமாறி வீசும் காற்றலைகளோடு கடலில் குறித்துக்காட்டப்படும் மாற்றங்கள் நிகழ்வதுண்டு. கடற்கரையோரம், கடற்கரையை அண்டிய பகுதி, தரவைக்கடல் மற்றும் ஆழ்கடல் பகுதி என்பன பல்வேறுவகைப்பட்ட சாகியத்தொகுதிகளை உள்ளடக்கியுள்ளன. இவை […]
மொழியின் பிரதான அம்சமே பெயரிடுவதாகும். பெயர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் விரவிக்கிடக்கின்றன. ஒரு பொருள் அல்லது செயற்பாடு பெயரிடப்படுவதன் மூலமே தனித்துவப்படுத்தப்படுவதோடு, அர்த்தம் கொள்ளச் செய்யப்படுகின்றது. இப்பெயர்கள் தொடர்பான கற்கை Onomastics எனப்படுகின்றது. தமிழில் பெயராய்வு எனலாம். இது பெயர்களின் சொற்பிறப்பியல், வரலாறு, அவற்றின் பயன்பாடு, தனித்தன்மைகள் என்பவற்றை ஆய்வு செய்யும் துறையாகும். இது பலவகைப்படுகின்றது. இடப்பெயராய்வு (Toponomastic) ஆட்பெயராய்வு (Anthrophonomastic) இலக்கியப்பெயராய்வு (Literary Onomastic) சமூகப் பெயராய்வு (Socio Onomastic) […]
வன்னியில் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு வன்னியில் பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் தலமையில் தொல்லியல் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தொல்லியற் திணைக்கள ஆய்வு உத்தியோகத்தர்கள் திரு. கபிலன், திரு. மணிமாறன் ஆகியோர் இணைந்து மேற்கொண்டு வரும் தொல்லியல் ஆய்வின் போது வன்னியில் மரையடித்த குளத்திற்கு அருகே பெரியபுளியங்குளம் என்ற இடத்தில் கி.பி 12-13 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டொன்றை அடையாளம் கண்டுள்ளனர். இக்கல்வெட்டு அப்பிரதேச […]
பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்த உடனேயே கடைசி பிரிட்டிஷ் பிரஜையையும் இலங்கையில் இருந்து விரட்டி விட வேண்டும் என்ற துடிப்பு பேரினவாதிகளிடமிருந்து ஒவ்வொன்றாக வரத் தொடங்கிவிட்டன. அதன் முதலாவது தோட்டா இலங்கையில் இருக்கும் பிரித்தானிய தேயிலை பெருந்தோட்ட உரிமையாளர்களிடம் இருந்து தேயிலைத் தோட்டங்களை பிடிங்கிக்கொண்டு அவர்களை இங்கிருந்து விரட்டி விட வேண்டும் என்பதாகும். அதன் முதல் நடவடிக்கையாக இலங்கையின் பெருந்தோட்ட கம்பனிகளை தேசிய உடமைகள் ஆகிவிடுவது என்று ஆலோசனை […]
ஆங்கில மூலம் : கணநாத் ஒபயசேகர கணநாத் ஒபயசேகர அவர்கள் கொம்பிரிட்ஜ் என்ற அறிஞருடன் இணைந்து ‘Buddhism Transformed : Religious change in Ceylon’ என்ற நூலை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டார். இந் நூல் பௌத்த சமயத்தில் ஏற்பட்ட மாற்றங்களினால் இலங்கையின் மரபுவழிப் பௌத்தம் (Traditional Buddhism) நவீனத்துவக் கூறுகளை உள்வாங்கியதை விபரிக்கிறது. நவீனத்துவம் பௌத்த சமயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை ‘புரட்டஸ்தாந்திய பௌத்தம்’ (Protestant Buddhism) என […]
கீழைக்கரைக்கான வரலாற்றுச் சான்றுகளில், உள்ளூர்க் குடிகளிடையே நீடித்து வரும் தொன்மங்கள் முக்கியமானவை. சமகாலத்தில் எழுத்தாதாரங்களுக்கு மேலதிகமாக தொன்மங்கள், வாய்மொழிக்கதைகள், நாட்டார் பாடல்களை சரித்திர ஆதாரமாகக் கருதவேண்டிய தேவை வலியுறுத்தப்பட்டு வருகின்றது. பொறிப்புச் சான்றுகளோ எழுத்துச் சான்றுகளோ இல்லாத சமூகங்களுக்கிடையே நீடித்து வரும் கர்ண பரம்பரைக் கதைகளை நன்கு ஆராய்ந்து அவற்றுக்கான வரலாற்றுச்சான்றாக முன்வைக்கமுடியும் என்பதே நவீன வரலாற்றுவரைவியல். அந்தவகையில் கீழைக்கரைக்கான தொன்மச் சான்றுகளாக ஊர்சார் வரலாறுகள், சமூகங்கள் சார் தொன்மங்கள், […]
இரண்டு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில், காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், கருப்பின இளைஞர் ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து தப்பியோடவிடாமல் தடுக்கும்பொருட்டு நிலத்தில் சரித்து வைத்துக் கழுத்தை முட்டிக்காலால் நசுக்கியவாறு இருந்ததால் கைதுசெய்யப்பட்ட கருப்பின இளைஞர் இறக்க நேரிட்டது. இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் வழமையானவை; அவற்றுக்கு எதிராக கருப்பின மக்கள் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் அமைதி வழிப்போராட்டங்களை நடாத்தி வந்தவாறுள்ளனர். இந்தச் சம்பவம் தொலைபேசிப் பதிவாகிச் சமூக வலைத்தளங்களில் பரவலானதைத் தொடர்ந்து அமெரிக்காவெங்கும் […]
இலங்கை நாட்டில் சுமார் இருநூறு வருடங்களாக வசித்து வரும் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள் தம்மை ‘இந்திய தமிழர்கள்’ என்று அழைத்துக் கொள்ள வேண்டுமா, அல்லது ‘மலையகத் தமிழர்கள்’ என்று இனம் காண வேண்டுமா என்ற விவாதம் நீண்ட காலமாகவே இம்மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த மக்கள் மத்தியில், இந்தியாவில் ஒருகாலும் இலங்கையில் ஒரு காலும் வைத்துக்கொண்டு, சில சொச்ச நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்காக அடிக்கடி இந்தியாவுக்குச் சென்று, […]