“சனாதன ஒழிப்பு” விவகாரம் ஆப்பிழுத்து மாட்டிக்கொண்டு விழி பிதுங்கும் நிலைக்கு ஆளாக்கிவிட்ட பின்னரும் விடாத தூவானமாக சனாதனக் கோட்பாட்டு அடிப்படைகளைத் தாக்கும் வீரப் பிரதாபங்கள் ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்டவாறுள்ளன. இவ்வகை விட்டுக்கொடுக்காத வீரதீர முழக்கங்களை எழுப்புகிறவர்களாக மார்க்சியம் பேசுகிற சில பேர் இருப்பது காலதேச நிலவரங்களை விடவும் தமது ‘புரட்சி வேடம்’ கலையக் கூடாது என்ற அவர்களுக்கான அக்கறையையே வெளிப்படுத்துகிறது. முன்னத்தி ஏராக ‘சனாதன ஒழிப்பு’ விவகாரத்தைத் தொடக்கி வைத்திருந்த […]
17 ஆம் நூற்றாண்டின் இலங்கைப்படங்களில் யாழ்ப்பாணக் குடாநாட்டை அண்டிய தீவுகள் குறித்த தகவல்களை ஏற்கெனவே பார்த்தோம். அப்படங்களில் யாழ்ப்பாணக் குடாநாடு தொடர்பிலும் அதை அண்டித் தலைநிலத்தில் உள்ள பகுதிகள் தொடர்பிலும் காணப்படும் தகவல்களைத் தொடர்ந்து பார்க்கலாம். அந்நூற்றாண்டில் 1558 வரையான காலப் பகுதியைச் சேர்ந்த இலங்கை நிலப்படங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டைத் தெளிவாகக் காட்டவில்லை என்றும், அப்பகுதி தொடர்பில் குறிப்பிடத்தக்க தகவல்கள் எதுவும் அப்படங்களில் இல்லை என்றும் ஏற்கெனவே அறிந்துகொண்டோம். ஒல்லாந்தர் […]
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்னுயிர்க் கெல்லாம் இனிது-திருக்குறள்- விளக்கம் : பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும். கடல் கடந்து கண்டங்கள் கடந்து ஈழத் தமிழர்களான நாங்கள் இன்று உலகின் பல நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றோம். எமது தாய் நாடான ஈழத்தில் குடும்பங்களாகவும் சிறு சமூகங்களாகவும் ஓர் அடையாளத்துடன் வாழ்ந்துவந்த நாம், எமது நாட்டின் இனப்போர் […]
1970 களை அடுத்து வந்த அரை தசாப்த காலம் தோட்டத் தொழிலாளர் சமூகத்தை பேய் பிடித்து ஆட்டிய காலமாகவே இருந்தது. நூற்றுக்கணக்கானோர் பசி, பட்டினி காரணமாக ஆங்காங்கே செத்து மடிந்த போதும் அரசாங்கம் எதையுமே கண்டுகொள்ளாமல் அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காதது போல் பாவனை செய்துவந்தது. அரசாங்கத்தின் பங்குதாரர்களாக ஒட்டிக்கொண்டு பதவியை கட்டிக்காத்துக் கொண்டிருந்தவர்களான இடதுசாரிக் கூட்டணியினரும் அரசாங்கத்தின் நிலையையே பிரதிபலித்தனர். 1975 ஆம் ஆண்டில் தோட்டப் பகுதி மக்களின் சுகாதார […]
நாட்டில் எங்கு பார்த்தாலும் பசியும் பட்டினியும் தலைவிரித்து தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது. அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு எந்தவிதமான திட்டமும் இருக்கவில்லை. அவர்களின் உள்நாட்டு தேசிய பொருளாதாரத் திட்டமெல்லாம் பொய்யாகிக் கொண்டிருந்தது. அக்காலத்தில், மலையக மக்களுக்கான ஒரு பாராளுமன்ற பிரதிநிதியாக ஜனநாயக தொழிலாளர் காங்கிரசை சேர்ந்த ஏ.அசீஸ் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரால் நியமன பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். தோட்டத் தொழிலாளர்கள் பசியாலும் பட்டினியாலும் செத்து மடிவதை பொறுக்கமுடியாமல், அவர்களுக்கு போதுமான உணவு […]
*இலங்கையில் வத்தகப்பழம் என்றும் இந்தியாவில் தர்ப்பூசணி என்றும் பரவலாக அறியப்படும் இப்பழம் கோடைகாலத்தில் அருந்துவதற்கு மிகவும் சிறந்த ஒரு பழம் என்பதைப் பலரும் அனுபவபூர்வமாக அறிந்துவைத்துள்ளார்கள். இக்கட்டுரையில் வெளிநாட்டில் வாழும் தமிழர் பலரும் அறிந்துவைத்திருக்கும் தர்ப்பூசணி என்னும் பெயரையே பெரிதும் பயன்படுத்தியுள்ளேன். “வத்தகப் பழம் குளிர்ச்சி மன்னிடும் பைத்தியம்போம்சத்திபோம் பித்தம் தீரும் தவறிலாக் கொடி ஈதல்லால்ஒத்த கக்கரியும் வெம்மை ஒழித்துச் சீதளம் உண்டாக்கும்”-பதார்த்தசூடாமணி- “ஒரு தர்ப்பூசணியைச் சாப்பிட்டுப்பார்த்தால் தேவதைகள் என்ன […]
1992 இல் வெளிவந்த தேவர்மகன் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் இப்படி ஒரு வசனம் பேசுவார். ” 2000 வருஷமா, வேல் கம்பையும் அரிவாளயும் தூக்கிட்டு திரிந்த பய. சுபாஷ் சந்திர போஸ் சுதந்திரத்திற்கு ஆள் வேணும் என்று கேட்டப்ப, ஓடிப்போய் முதல் வரிசையில் நின்றவன் முக்காவாசி பேரு நம்ம பய தான். “ அதே போலத்தான், கருவாட்டு கத்தியோடும், கலவாய் கம்பியோடும், மண்டாவோடும் நின்று பழக்கப்பட்டவர்கள் 1976 ஆம் ஆண்டு […]
நகரசபையினர் தாமே ஒரு வாசிகசாலையை ஆரம்பித்து நடத்தலாம் என்று கருதிய வேளையில் ஆர். சுப்பிரமணியம் அவர்கள் இந்நூலகத்தைப் பொறுப்பேற்று நடத்துமாறு பிரேரணை கொண்டு வந்தார். இவ்வாறாக, நூல் நிலைய பரிபாலன சங்கத்தின் காரியதரிசியாய் க.மு.செல்லப்பா அவர்கள் நகரசபைத் தலைவருக்கு 21-12-1934 இல் எழுதிய கடிதம் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். தலைவர்,நகரசபை,யாழ்ப்பாணம். ஐயா, தங்கள் சபையினர் எங்கள் நூல் நிலையத்தை பொறுப்பேற்று நடத்துதல் சம்பந்தமாக நிறைவேற்றிய பிரேரணையை எங்கள் காரிய […]
1884 இல் பிரித்தானிய ஆளுநர் சேர். ஆர்தர் கோர்டன் யாழ்ப்பாணக் கல்லூரியையும் அமெரிக்க மிசனரிகளின் பணியையும் பார்வையிடுவதற்காக யாழ்ப்பாணம் வருகை தந்தார். அமெரிக்க மிசனரிகள் யாழ்ப்பாணத்தில் ஆற்றும் மருத்துவப் பணிகளுக்காகவும் மருத்துவப் பீடத்தை மீள ஆரம்பிக்கவும் 1000 ரூபாவை ஆர்தர் கோர்டன் அமெரிக்க மிசனுக்கு வழங்கினார். உடல்நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து 1873 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குத் திரும்பிய கிறீன் நியூயோர்க்கில் கிறீன்கில் என்ற இடத்தில் உள்ள தனது குடும்ப இல்லத்தில் […]