ஆங்கில மூலம் : றெஜி சிறிவர்த்தன பிரித்தானிய ஏகாதிபத்தியம் இலங்கை தொடர்பாகவும், பொதுவாக அதன் காலனிய நாடுகள் தொடர்பாகவும் கடைப்பிடித்த கொள்கையில் இரு முரண்பட்ட போக்குகள் இருந்தன என றெஜி சிறிவர்த்தன குறிப்பிடுகிறார். பிறேஸ்கேர்டில் விவகாரத்தைப் பற்றிச் சரியான மதிப்பீட்டைச் செய்வதற்கு நாம் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் இரு முகங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இருபதாம் நூற்றாண்டில் (காலனிகளின் ஆட்சியில்) பிரித்தானியாவின் இந்த இரு முகங்களும் வெளிப்பட்டுத் தெரிந்தன. ஒரு முகம் […]
தமிழ்க் காப்பிய அமைப்பில் சிலப்பதிகாரம் இன்றளவும் தோன்றிய காப்பியங்கள் யாவற்றிலும் வேறுபட்டு நிற்கின்ற தன்மையினை உடையதாகின்றது. அவ்வேறுபட்ட தன்மையே இன்று அதனது சிறப்புத் தன்மையாகப் போற்றப்படுகின்றது. அச்சிறப்புத் தன்மைக்கான ஏந்துதல்கள் எவ்வகையில் இளங்கோவடிகளுக்குக் கிடைத்திருக்கும் என்பனவான எண்ணங்கள் தோன்றுதல் இயல்பேயாம். அவ் வகையில் சிலப்பதிகாரத்தின் சிறப்பியல்புகளுக்கான காரணங்கள் இளங்கோவடிகள் காப்பியமியற்றிய காலச் சூழலில் இருந்தே கிடைத்தனவாகக் கொள்ளுதலே பொருத்தமாகவிருக்கும். அவர் காலச் சூழலில் நிலவிய சமயங்களின் தாக்கம் பல வகையிலும் […]
ஆங்கில மூலம்: ஜயம்பதி விக்கிரமரட்ண அரசியல் யாப்பு அறிஞரும், முன்னாள் அமைச்சருமான ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை “CONSTITUTION MAKING IN MULTI – CULTURAL SOCIETIES : SOME INTERNATIONAL EXPERIENCES” ஒரு சிறு நூலின் அளவுடையது. 74 பக்கங்களைக் கொண்ட இந் நீண்ட கட்டுரையின் முதல் 9 பக்கங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைத் தழுவி இத் தமிழ்க் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ‘அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் : […]
வாழ்வாதாரத் தொழில் முனைவுகளில் பெரிதும் விரும்பப்படுவதும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டக் கூடியதுமான தொழிற்துறையாக கைத்தொழிற்துறை இருந்து வருகிறது. வளர்ச்சியடைய விரும்பும் எந்தப் பொருளாதாரமும் கைத்தொழிற்துறையின் மீது வளர்ச்சியை ஏற்படுத்தினால் தான் அது நிலைபேறுடைய பொருளாதார வளர்ச்சியாக அமையும். இலங்கையின் தற்போதைய பொருளாதாரக் கொள்கையிலும், முன்னுரிமைப்படுத்தப்பட்ட அபிவிருத்திக்கான 7 பிரதான பகுதிகளில், நான்கு துறைகள் கைத்தொழிற் துறை சார்ந்தே காணப்படுகின்றன. பின்வருவன அந்த 07 பிரதான பகுதிகள் : உணவுப் பாதுகாப்பு […]
ஒருவர் ஈழத்தில் இயக்கமொன்றில் இணைந்து போராடியதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்திருக்கலாம். முக்கியமாய் போர் உக்கிரமாய் நடைபெறும் பிரதேசங்களில் – போராட்டத்தில் இணைந்துகொள்ள – புறக்காரணிகள் இன்னும் அதிக நெருக்கடிகளைக் கொடுக்குமென்பதை நாமனைவரும் அறிவோம். எமது இயக்கங்களில் பலர் பெருந்தொகையாய்ச் சேர 1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுச் சம்பவமும், 1981 இல் யாழ். நூலக எரிப்பும், 1983 இல் ஜூலைக் கலவரமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய காரணங்களாய் அமைந்தன. ஆனால் யாழ். […]
கடந்த கட்டுரையில் கறவை மாடு வளர்ப்பின் போது தோன்றும் இனப்பெருக்கம் சார்ந்த பல பிரச்சனைகளை ஆராய்ந்திருந்தேன். இந்தக் கட்டுரையும் அதன் நீட்சியே. எனினும் தீர்வுகளை மையப்படுத்திய கட்டுரையாக அமைகிறது. கறவை மாடுகள் சினை பிடிக்காமைக்கும் ஏனைய இனப்பெருக்கம் சார்ந்த பல பிரச்சினைகளுக்கும் வெப்ப அயர்ச்சி (Heat stress) மிக முக்கியமான ஒரு காரணியாகும். அண்மைக் காலங்களில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் முன்பு இருந்ததை விட அதிக வெப்பநிலை நிலவுகிறது. உலக […]
இந்தத் தொடரின் சென்ற இரண்டு கட்டுரைகளில் லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பிலுள்ள யாழ்ப்பாணக் கட்டளையகத்தை முழுமையாகக் காட்டும் நிலப்படத்தின் சில அம்சங்கள் குறித்து ஆராய்ந்தோம். அதன் தொடர்ச்சியாக, இந்தக் கட்டுரையிலும் மேற்படி நிலப்படத்தில் உள்ள வேறு சில அம்சங்களைப் பற்றிப் பார்க்கலாம். போக்குவரத்தும் வீதிகளும் ஏற்கெனவே யாழ்ப்பாணக் கட்டளையகத்தைக் காட்டும் தூர்சியின் நிலப்படம் தொடர்பாக எழுதியபோது, அக்காலத்தில் கட்டளையகத்தில் இருந்த வீதிகளைப் பற்றியும் விளக்கினோம். உண்மையில் தூர்சியின் நிலப்படம் வரைந்த காலத்துக்கும் […]
ஆங்கில மூலம் : றெஜி சிறிவர்த்தன றெஜி சிறிவர்த்தன அவர்கள் 2000 ஆம் ஆண்டில் எழுதிய ஆய்வுக் கட்டுரையொன்றின் ஆங்கிலத் தலைப்பு பின்வருமாறு அமைந்தது: “THE BRACE GIRDLE AFFAIR IN RETROSPECT: CONTRADICTIONS OF IMPERIALISM, OF THE POST COLONIAL STATE AND OF THE LEFT” மேற்படி கட்டுரையின் மையப் பொருளாக தனிநபர் உரிமைகளும் அரசு அதிகாரமும் (RIGHTS OF THE INDIVIDUAL AND THE […]
அனுராதபுரத்தை ஒரு அரசன் ஆளும் போது அவனுக்கு அடுத்து அரசராகத் தகுதி உடைய அரசரின் நெருங்கிய உறவினன் ஒருவன் ‘உபராசன்’ என்ற பெயரில் மகாவலி கங்கைக்கு கிழக்காக இருந்த உரோகணப் பகுதியை ஆள்வது வழக்கமாக இருந்தது. உரோகணத்தின் முதன்மையான நகரங்களாக சம்மாந்துறைப்பற்று தெற்கு தீகவாவியும், அம்பாந்தோட்டையின் மாகம்பற்று மாகாமமும் (இன்றைய கிரிந்த) திகழ்ந்தன. இவற்றில் ஒன்றையே அனுராதபுரத்தின் உபராசன் தன் ஆட்சித்தானமாகக் கொண்டிருந்திருக்கிறான். சில சந்தர்ப்பங்களில் அனுரையின் மேலாதிக்கத்தை நீங்கி உரோகண […]
அறிமுகம் இந்திய மண்ணில் தோற்றம் பெற்ற தொன்மைச் சமயங்களில் ஒன்றான சைவத்தின் தொன்மைப் பிரிவுகளில் ஒன்று வைரவம். இது வடநாட்டில் தோற்றம் பெற்றதாகவே பெரிதும் நம்பப்படுகிறது. காவல் தெய்வமாகச் சித்தரிக்கப்படும் வைரவரை சிவனின் அம்சமாகவும் மகனாகவும் புராணங்கள் கூறுகின்றன. இவர் பிரமனின் தலையைக் கொய்தவராகவும், வானவரிடம் கபாலத்தில் இரத்தத்தைப் பெற்றவராகவும், அந்தகாசுரனை வதைத்தவராகவும் சிறுதொண்டர் நாயனாரிடத்துப் பிள்ளைக்கறி பெற்றவராகவும் கூறப்படுகிறார். உக்கிரப் போர்த் தெய்வமாகச் சுட்டப்படுகின்ற இவருக்கு சோதிட நூல்களால் […]