இந்தத் தொடரின் சென்ற இரண்டு கட்டுரைகளில் லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பிலுள்ள யாழ்ப்பாணக் கட்டளையகத்தை முழுமையாகக் காட்டும் நிலப்படத்தின் சில அம்சங்கள் குறித்து ஆராய்ந்தோம். இனி யாழ்ப்பாணக் கட்டளையகத்தின் பல்வேறு பிரிவுகளை விவரமாகக் காட்டும் நிலப்படங்கள் தரும் தகவல்கள் குறித்துப் பார்க்கலாம். லெயுசிக்காமின் தொகுப்பில் யாழ்ப்பாணக் கட்டளையகத்தை முழுமையாகக் காட்டும் நிலப்படத்துக்கு அடுத்ததாக யாழ்ப்பாணப் பட்டினத்தின் நான்கு பிரிவுகளையும் அதற்கு அயலிலுள்ள தீவுகளையும் ஒருங்கே காட்டும் நிலப்படம் உள்ளது (படம்-1). ஒல்லாந்தின் […]
“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல்”-திருக்குறள் (664)- மு. வரதராசனார் விளக்கம் : இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம். சொல்லியபடி செய்து முடித்தல் அரியனவாம். ஈழத்தில் நாமும் எங்களின் மூதாதையர்களும் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம். இந்த வறண்ட பூமியையும் குறைந்த இயற்கை வளங்களையும் கொண்டு மிகச் சந்தோசமாக வாழ்ந்த நாட்கள் எனது நினைவில் உண்டு. எமது வாழ்க்கையானது ஒவ்வொரு […]
தமிழில் : த. சிவதாசன் கோவிட் – 19 பெருந்தொற்றின் பேரழிவு கொண்டுவந்த பொதுமுடக்கம் சில காரியங்களுக்கும் காரணமாக அமைந்துவிட்டது. முதல் தடவையாக, மேற்கு மாகாணத்துக்கு வெளியில் தூங்கிக்கொண்டிருந்த நகரங்கள் விழித்தெழ ஆரம்பித்தன. கொழும்பில் பணிபுரிந்த பலர் சொந்த ஊர்களுக்குக் குடிபெயர்க்கப்பட்டு அங்கு தமது குடும்பங்களுடன் வீடுகளுக்குள் முடக்கப்படலாயினர். துர்ப்பாக்கியமாகச் சிலர் வேலைகளை இழக்கவேண்டி ஏற்பட்டதும் உண்மை தான். உடலுழைப்பு அவசியமான பணிகளைச் செய்தவர்கள் நகர் முடக்கம் காரணமாகவும், பொதுவான […]
யாழ்ப்பாணத்தில் உருவாகிய தனித்துவமான சனசமூக நிலைய நூலக மரபு தத்தமது கிராமங்களின் சமூக மேம்பாடு, சமூகத்துக்கான பொது அறிவினை வழங்கல், சமூகத்தினரிடையே ஒற்றுமையைப் பேணல், சுயசிந்தனை கொண்ட அறிவுசார் சமூகமொன்றுக்கான அடித்தளத்தை வழங்கும் வகையில் வாசிப்புக் கலாசாரத்தை உருவாக்குதல் என்பன போன்ற காரணிகளை முன்வைத்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிகளில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உருவாகியதே சனசமூக நிலையச் சிந்தனையாகும். அக்காலகட்டத்தில், குறிப்பாக ஆங்கிலேயர் காலத்தில் பிரபுக்களுக்கும், அரச அதிகாரிகளுக்கும் மட்டுமே கிட்டியிருந்த […]
மத நாயகம் இயக்கி வந்த மனித சமூக வரலாற்றில் ஜனநாயகத்தினுடைய இயங்காற்றல் வேகம் கொள்ளத் தொடங்கிய பத்தொன்பதாம் நூற்றாண்டை இப்போது அலச வேண்டியவர்களாக இருக்கிறோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைக்கூறில் (1789) ஏற்பட்டிருந்த பிரான்சியப் புரட்சி நிலப்பிரபுத்துவ முடியாட்சியைத் தகர்த்ததைத் தொடர்ந்து முதலாளித்துவ ஜனநாயக வாழ்முறை விரிவாக்கம் பெற்று வளர்ந்தது. அரை நுற்றாண்டுப் போராட்டங்கள் ஊடாகவே முதலாளித்துவ ஜனநாயக அரசு முறைமை நிலைபேறான உறுதியினைப் பிரான்சிலும் எட்ட இயலுமாயிற்று. அவ்வாறு எட்டிய […]
கூட்டுறவின் தனித்துவ அடையாளம், அதன் அரசியல் மொழி தொடர்பான கருத்துரைகள் மிக அவசியமானவை. ஏனெனில், கூட்டுறவின் இன்றைய தேக்க நிலையைப் படம் பிடிக்கவும் அதன் தொடரும் நெருக்கடிகளை ஆராய்ந்து நாடி பிடிக்கவும் இவைகளைப் பற்றிய தெளிவு மிக அவசியம். கூட்டுறவின் ஆரம்ப நிலை, அதன் அடையாளம், சிறப்புத் தன்மைகள் மற்றும் இன்றைய செல்நெறி வழி நோக்கின், ஓர் அரசியற் கருவியாக கூட்டுறவு ஏன் வலுவிழந்தது? என்பதைத் தெளிவுறக் காணலாம். […]
1920 கள் மற்றும் 1930 களில் இலங்கைச் சோனகர்கள் அகில இலங்கை முஸ்லிம் லீக் மற்றும் அகில இலங்கைச் சோனகர் சங்கம் என இரண்டு போட்டி அரசியல் வம்சமாகப் பிளவுபட்டனர். இவ்விரு அரசியற் சங்கங்களின் தலைமைகளான T.B. ஜாயா மற்றும் சேர் ராசிக் ஃபரீட் ஆகிய இருவருமே புதிய அரசியல் சீர்திருத்தச் சட்டசபையில், சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் ‘50 : 50’ அமைய வேண்டும் என்ற வீணான கோரிக்கையை முன்வைத்த இலங்கைத் […]
கனவும் நிமித்தமும் கனவும் நிமித்தங்களும் நிகழவிருக்கும் நிகழ்வினை முன்னுரைக்கும் தன்மையுடையன. கனவிற்கும் நிமித்தங்களுக்குமான பலன்களைத் தமிழ்க்கணியன்கள் ஆய்ந்துரைப்பர். கி.பி. பத்தாம் நூற்றாண்டிலேயே கனவும் கனவின் தன்மையும் கனவிற் தோன்றும் காட்சிகளும் எவ்வகையில் பலிதமாகக்கூடியன. பகலிற் காணும் கனவு பலிக்காது என்ற நம்பிக்கை. கனவு காணும் காலம் : இதனை இரவின் முன் யாமத்தில் கண்ட கனவு, நடு யாமத்தில் கண்ட கனவு, பின் யாமத்திற் கண்ட கனவு என மூன்றாகப் […]
தொடக்கக் குறிப்புகள் இலங்கையின் வரலாற்றில் மிகப்பாரிய அபிவிருத்தித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது மகாவலி அபிவிருத்தித் திட்டடமாகும். இன்றுவரை இலங்கையின் முதன்மையான பல்நோக்கு அபிவிருத்தித் திட்டமாக இது விளங்குகிறது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில் முதன்மையான இடம் இத்திட்டத்திற்கு உண்டு. ஆனால் இலங்கையின் வரலாற்றாளர்களின் பார்வையில் இது ஒரு அபிவிருத்தித் திட்டம் மட்டுமே. அதேவேளை அபிவிருத்தி தொடர்பான ஆய்வாளர்கள், பணியாளர்கள் ஆகியோரின் பார்வையில் இதுவொரு வெற்றிகரமான அபிவிருத்தித் திட்டமாகும். கொள்கை வகுப்பாளர்களைப் பொறுத்தவரையில் […]
அனுராதபுரம் மாவட்டத்தில் மொத்தமாக 431 பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 347 கல்வெட்டுகள் ஆங்கிலேயர் காலத்திலும், 84 கல்வெட்டுகள் அண்மையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம் மற்றும் இந்துத் தெய்வங்கள் தொடர்பான 116 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் நாகர் பற்றி 31 கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுராதபுரம் நகரில் இருந்து திருகோணமலைக்குச் செல்லும் வீதியில் 15 கி.மீ தொலைவில் மிகுந்தலை என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு மலைப் பாறைகள் நிறைந்த பிரதேசத்தில் […]