மகாசேனனுக்குப் பின்னர் (276 – 301) அவன் மகன் மேகவண்ணன் அனுரை அரியணையில் அமர்ந்தான் (301 – 328). அவன் காலத்தில் கலிங்க நாட்டுப் பிராமணப் பெண்ணொருத்தி புத்தரின் திருப்பற்சின்னத்தை அனுரைக்குக் கொணர்ந்ததாகவும் அது மேகவண்ணன் தேவானாம்பிரிய திசையனால் அமைக்கப்பட்ட “தருமச்சக்கரம்” எனும் கட்டடத்தில் வைக்கப்பட்டதாகவும், அன்று முதல் அது “தலதா மாளிகை” என்று அழைக்கப்பட்டதாகவும் மகாவம்சம் சொல்கின்றது (மவ. 37:90-95). ஆனால் இராசாவழி நூல் சொல்வதன்படி, அந்தப் பெண்ணின் […]
கிழக்குப் பிராந்தியத்தில் தமிழரும் சோனகரும் : ஒரு முக்கியமான சோதனை இன்று, தமிழ் அரசியல் தலைமையின் புறக்கணிப்பு மற்றும் அவமரியாதைச் செயல்கள் காரணமாகவும், தங்களின் அரசியல் தலைவர்களின் வழிகாட்டல்களுக்கு பதிலளிக்கும் விதமாகவும், இலங்கைச் சோனகர்கள் தங்களை ஒரு தனித்துவமான இனம் மற்றும் மதக்குழுவினர் என்ற தெளிவான பிம்பத்தைப் பெற்றுள்ளனர். 1980 களின் முற்பகுதியில் ஈழப் போர் வெடித்ததில் இருந்து, இனவாத நலன்களைப் பிரிதிநிதித்துவப்படுத்திய சிங்கள பெரும்பான்மைக் கட்சிகள், தமிழ் பேசும் […]
மாத்தளை மாவட்டத்தில் மொத்தமாக 62 முற்கால பிராமிக் கல்வெட்டுகளும், 6 பிற்கால பிராமிக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இவற்றில் 3 கல்வெட்டுகளில் மட்டுமே நாகர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை பற்றிய விபரங்களைப் பார்க்கலாம். கரடித காமத்தில் வாழ்ந்த வீம நாகன் பற்றிய பிதுரங்கல கல்வெட்டு மாத்தளை மாவட்டத்தின் வடபகுதியில் பிரசித்தி பெற்ற சிகிரியா மலைக்குன்று அமைந்துள்ளது. இம்மலைக்குன்று பண்டைய காலத்தில் சிவகிரி, சிம்மகிரி ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. தற்போது இது […]
தொடக்கக் குறிப்புகள் இலங்கையர்களுக்கு மின்சாரத்தை உறுதி செய்ததில் நீர் மின்சாரத்தின் பங்கு பெரிது. சுதந்திரத்துக்குப் பிந்தைய மூன்று தசாப்தகாலத்தில் இலங்கையர்களில் பெரும்பான்மையோருக்கு மின்சாரத்தை தங்கள் வீடுகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அமைந்தது. 1990 களின் நடுப்பகுதியில் இலங்கையின் மின் உற்பத்தியில் 96% நீர்மின்சாரத்தில் இருந்து பெறப்பட்டது. இலங்கை மின்சார உற்பத்தியில் தன்னிறைவை அடைந்திருந்தது. இதன்மூலம் சூழலுக்கு மாசற்ற முறையில் பெரும்பான்மையான மின்சாரத்தை உற்பத்தி செய்த நாடுகளில் இலங்கை முதன்மையானதாக இருந்தது. இவ்வாறான […]
‘திக்குகள் எட்டும்’ தொடரின் கடந்த பாகம் நோர்வேஜியப் பேராசிரியர் ஒய்வின்ட் புக்லறூட் எழுதி 2019 இல் வெளிவந்த ‘இலங்கையின் போரும் சமாதானமும் – நோர்வேயின் சமாதானத் தோல்வியின் விளைவுகள்’ நூலின் முதல் இரண்டு அத்தியாயங்களின் அறிமுகமாக அமைந்தது. அது, இலங்கைத் தீவின் புவியியல் அமைவிலிருந்து அதன் மொழி, இன, கலாசார, சமூக, பொருளாதாரக் கூறுகளை வரலாற்று ரீதியாகவும் தகவல், தரவுகள் ரீதியாகவும் முன்வைக்கின்றன. சிங்களத் தேசியவாதத்தின் தோற்றத்திலிருந்து அதன் போக்கு, […]
“தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்நீங்கா நிலனான் பவர்க்கு” -திருக்குறள் (383)- மு. வரதராசனார் விளக்கம் : காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை. எமது வாழ்க்கையின் இன்றைய நிலையை இரண்டு விதமான நிகழ்வுகள் வடிவமைத்திருக்கும். முதலாவது, நுண் (Micro) அளவில் நாம் ஒவ்வொரு நாளும் செய்யும் செயல்கள், முடிவுகள், அதனால் வரும் விளைவுகள். இரண்டாவது, பெரிய (Macro) […]
இதுவரை நிலவி வந்த உலக ஒழுங்கு பாரிய மாற்றத்தை கண்டு வரும் செயலொழுங்குகள் முனைப்புடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் தமிழ்ப் பண்பாட்டு உருவாக்கத்தையும் அதன் விருத்திகளையும் பார்த்து வருகிறோம். ஏகாதிபத்திய நாடுகளும் அதன் தலைமைக் கேந்திரமான ஐக்கிய அமெரிக்காவும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து,மீண்டெழுவதன் பொருட்டு ஆறேழு வருடங்களாக எடுத்து வரும் எத்தனங்கள் பற்றிப் பல தளங்களிலும் பேசப்படுகின்றன. தம்மை முந்திவிடக் கூடும் என முன்னாள் சோசலிச நாடான ருஷ்யாவைக் கருதி, […]
இலங்கையில் விஜயனின் வருகைக்கு முன்பும், பௌத்த சமயத்தின் வருகைக்கு முன்பும், ஆசீவகச் சமயம் செல்வாக்குப் பெற்றிருந்தமைக்கான பல சான்றுகளை மகாவம்சம் முதலான பாளி மொழி நூல்களின் வழியாகவும், தமிழர் – சிங்களர் முதலானோரின் வாழ்வியல் தொன்மங்கள் வழியாகவும் அறியலாம். கி.பி.6 ஆம் நூற்றாண்டில் பாளி மொழியில் எழுதப்பட்ட இலங்கை அரசர்களின் மரபுகளைக் கூறக்கூடிய மகாவம்சம் என்ற நூலில், ஆசீவகம் குறித்ததான பல செய்திகள் காணப்படுகின்றன. ‘விஜயன் இலங்கை வந்து முப்பத்து […]
அரசியல் யாப்புச் சட்டங்களின் ஒப்பீடு ‘பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களிற்குப் பொருத்தமான அரசியல் யாப்புக்களை வரைதல் : சர்வதேச அனுபவங்கள் சில’ என்னும் கட்டுரையின் சில பக்கங்களில் உள்ள கருத்துக்களை மேலே சுருக்கித் தந்தோம். இக்கட்டுரைத் தலைப்பு, இக்கட்டுரை ஆராயும் விடயங்கள் ஆகியன அரசியல் யாப்புச் சட்டம் பற்றியவை. குறிப்பாக அரசியல் யாப்புச் சட்டங்களின் ஒப்பீடு (COMPARATIVE CONSTITUTIONAL LAW) என்ற பாடத்தின் பகுதியாக அமையும் விடயங்களையே விக்கிரமரட்ண ஆராய்விற்கு எடுத்துக் […]
1 நெடும் வருடங்கள் நடந்த ஒரு யுத்தத்தில் ஒரு நாளைப் பிரித்தெடுத்து நிதானமாய்ப் பார்த்தால் என்னவாகும்? உயிர் தப்பியதே அதிசயமாய்த் தோன்றுவது ஒருபுறமிருக்க, அந்த நாளொன்றில் இந்தளவு சம்பவங்கள் நிகழ்ந்ததா என்ற ஆச்சரியம் இன்னொருவகையில் ஒருவரைத் திகைக்க வைக்கக்கூடும். அனுக் அருட்பிரகாசம் எழுதிய ‘The Story of a Brief Marriage’ நாவல், எறிகணைத் தாக்குதலில் காயமடையும் ஆறுவயதுச் சிறுவனை, இளைஞனான தினேஷ் வைத்தியசாலைக்குள் தூக்கிக்கொண்டு வருவதோடு தொடங்குகின்றது. அதேபோல […]