மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் மலைகள் நிறைந்த ஓர் இடம் காணப்படுகிறது. இது படர்கல் மலைப் பகுதி எனப் பெயர் பெற்றுள்ளது. செங்கலடியில் இருந்து மகா ஓயாவுக்குச் செல்லும் வீதியில் உள்ள மாவடி ஓடை சந்தியில் இருந்து மேற்குப் பக்கத்தில் 23 கி.மீ தூரத்தில் அடர்ந்த காட்டின் மத்தியில் படர்கல் மலைப் பிரதேசம் அமைந்துள்ளது. மாவடி ஓடை சந்தியில் இருந்து மேற்குப் பக்கமாக படர்கல் மலையை நோக்கிச் செல்லும் பாதையில் […]
பஸ்தியாம்பிள்ளை அவர்களின் ஆய்வுக் கட்டுரை பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரித்தானியக் காலனிய அரசின் கொள்கைகளும் நடைமுறைகளும் சாதி உறவுகள் தொடர்பாக எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தின என்பதை ஆராய்வதாக பேராசிரியர் பஸ்தியாம்பிள்ளை அவர்களின் கட்டுரை அமைந்துள்ளது. 19 ஆம் நூற்றண்டின் நடுப்பகுதி என்ற குறுகிய கால எல்லையை தமது ஆய்வுக்கான காலமாக வகுத்துக் கொண்ட பேராசிரியர் தமது கட்டுரையின் தலைப்பைப் பின்வருமாறு குறித்துள்ளார்: ‘CASTE IN NORTHERN SRI LANKA AND […]
இந்த இயலுடன் இருபதாம் நூற்றாண்டு வரையான தமிழ்ப் பண்பாட்டுச் செல்நெறி நிறைவுக்கு வரும். இங்கிருந்தான பயணிப்புக்கான தேடல் குறித்து அடுத்த பகுதிக்குரிய நான்கு இயல்கள் பேசவுள்ளன. இங்கே பேசுபொருளாக உள்ள தலித் – ஹரிஜன் என்பன தமிழகத்துக்கு அப்பாலான விடயங்களாக இருந்த போதிலும் தமிழ்ப் பண்பாட்டில் ஆழத் தடம் பதித்தவை. எந்தவொரு மக்கள் பிரிவினரும் ஏனைய பகுதியினரது தாக்குறவு இல்லாமல் சுயமாக விருத்தி பெற்றதும் இல்லை, அவற்றின் வாயிலாக ஏற்படும் […]
சமூகச் செயற்பாடுகள் பல்வேறு வழிகளிலும் வடிவங்களிலும் இடம்பெறுகின்றன. பால்நிலை ரீதியில் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கான சமூகச் செயற்பாடுகள் அண்மைக் காலங்களில் அதிகம் இடம்பெறுவதனை அவதானிக்க முடிகிறது. இலங்கை மக்களிடையே 2010 ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் உள்ளடங்கலான இணையவழி ஊடகங்களின் பாவனையானது அதிகரித்தது எனலாம். இணையவழி ஊடகங்கள் குயர் மக்களுடைய செயற்பாடுகளுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கின்றன. நாளாந்த வாழ்வில் ஏராளமான குயர் மக்கள் இணையவழி ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். அண்மைக்காலங்களில் […]
தமிழ்/சோனக பண்பாட்டு வேறுபாடுகள் குறித்து பல்வேறு கருத்துகள் அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. ஆனால் ஒவ்வொரு குழு உறுப்பினர்களிடமிருந்தும் கிடைத்த கருத்துகளில் சில அடிப்படைக் கருத்துகள் வெளிப்பட்டன. சோனகர்கள் மிகவும் ஆற்றலும், கடின உழைப்பும் கொண்டவர்கள் என்று தமிழர்கள் பொதுவாக ஒப்புக்கொள்கிறார்கள். அவர்களின் மேம்படுத்தப்பட்ட வீடுகள் மற்றும் வளர்ந்து வரும் செல்வம் போன்றவை இந்த உண்மையைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. உண்மையில், சோனகர்களின் பெருகிவரும் செழிப்பு பல தமிழ் உயர்சாதியினருக்கு கடுமையான கவலையை ஏற்படுத்துகிறது. […]
காரைநகர் தீவை யாழ்ப்பாணத்துடன் இணைக்கும் இணைப்புத் தெருவின் வடமேற்கு மூலையில் இருக்கிறது மூளாய் என்னும் ஒரு சிறு கிராமம். பிரபலமான கசூரினா கடற்கரை மற்றும் யாழ்ப்பாணக் கல்லூரி அமைந்திருக்கும் வட்டுக்கோட்டை ஆகியவற்றை யாழ்ப்பாணத்துடன் இணைக்கும் முக்கிய கிராமமும் இதுவே. மூளாய் கூட்டுறவு மருத்துவமனை இல்லாவிட்டால் இக்கிராமம் இவ்வளவு பிரபலமாகியிருக்க முடியாது. பிரித்தானிய மலாயாவிலிருந்து தாயகம் திரும்பும் தமிழரது சேமிப்பையும் ஓய்வூதியத்தையும் மூலதனமாகக் கொண்டு 1935 இல் ஆரம்பிக்கப்படது இந்த மருத்துவமனை. […]
அம்பாந்தோட்டை நகரிலிருந்து திஸமஹராமைக்கு செல்லும் வீதியில் 9 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பள்ளேமலல சந்தியிலிருந்து வட மேற்கு நோக்கிச் செல்லும் வீதியில் உள்ள யஹன்கல மலைப் பகுதியிலிருந்து வடக்குப் பக்கமாக மேலும் 5 கி.மீ தூரத்தில் உள்ள பண்டகிரிய குளத்தின் அருகில் பண்டகிரிய மலைப்பகுதி அமைந்துள்ளது. பொ.ஆ.மு. 2 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த காவந்தீசன் எனும் மன்னனால் பண்டகிரிய மலையில் பெளத்த ஆலயம் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் […]
இயற்கையோடு ஒட்டி வாழத் தலைப்பட்ட காலத்தில் இருந்து மனித வாழ்வில் சடங்குகளும் சமயங்களும் உருவாகத் தொடங்கின. இயற்கையை வழிபடத் தொடங்கிய மனிதர், அதனைத் திருப்திப்படுத்த பல சடங்கு சம்பிரதாயங்களைச் செய்ய முற்பட்டனர். மக்களின் வாழ்க்கையோடு இயைந்த வழக்காறாக, நிலப் பண்பாடாக அவை வளர்ந்தன; சமய வழிபாட்டு முறைகள், சடங்குகள், நம்பிக்கைகள், கலைகள் என பன்முகப்படுத்தப்பட்டன. அவை பற்றி உரையாடல்கள் கர்ண பரம்பரைக் கதைகள், வாய்மொழிப் பாடல்கள், வெறியாடல்கள், கூத்துகள் எனப் […]
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியின் நிர்ணயக் காரணிகளில் ஒன்றாக விளங்கும் நன்னீர் மூலங்கள் இவ்விரு மாகாணங்களையும் விவசாயம் சார் பொருளாதாரம் நிலவும் பிராந்தியங்களாக உருமாற்றக் காரணமாகியுள்ளன. மழைக் காலத்தில் அதிகம் பெறும் நீரைச் சேமித்து வைப்பதன் மூலம், இவ்விரு மாகாணங்களின் 60 சதவீதமான மக்கள் விவசாயம் சார் தொழில் முனைவுகளை தமது நிரந்தர ஆதாரமாகக் கொண்டு இயங்கி வருகின்றனர். இதனால் இவ்விரு மாகாணங்களின் எழுச்சிமிக்க பொருளாதாரத் தொழில் […]
அபிவிருத்திக் காரணங்கள் வடக்கு மாகாணத்தில் யுத்தத்தின் பின்னர் குறிப்பாக 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பூரணப்படுத்தப்பட்ட பல்வேறு வகையிலான வீதி சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களான ‘கார்பெட்’ தெருக்களின் நிர்மாணம், உள்ளூர் வீதி அமைப்புகள், புகையிரத வீதி நிர்மாணம் போன்ற நடவடிக்கைகளின் காரணமாக வடிகால் பாங்குகள் குழப்பமடைந்து பல பிரதேசங்களில் வெள்ள அனர்த்த நிலைமைகள் உருவாக்கப்பட்டு இருப்பதைக் காண முடிகின்றது. யாழ்ப்பாணக் குடா நாட்டினுடைய புகையிரதப் பாதைகள் மழைநீரைக் கடத்தும் அல்லது […]