கார்த்திகேசு இந்திரபாலா, Author at Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

கார்த்திகேசு இந்திரபாலா

நவீன இலங்கை வரலாற்றின் போக்கினை நிர்ணயித்த 1920கள்

15 நிமிட வாசிப்பு

மகாத்மா காந்தி இலங்கைக்கு 1927 நவம்பர் 12 இல் வந்தார். மறுநாள், நவம்பர் 13 இல், லண்டனில் இருந்து டொனமூர் ஆணைக்குழுவினர் வந்திறங்கினர். இந்த இரண்டு நிகழ்வுகளும் இலங்கையின் எதிர்கால அரசியல் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணக்கூடிய வலுவைப் பெற்றிருந்தன. ஆனால், ஒன்று, குறுகிய கால விளைவுகளை மட்டும் ஒரு குறுகிய பிரதேசத்தில் உண்டுபண்ணி வலுவிழந்து மறக்கப்பட்டது. மற்றது, அரசியல் வரலாற்றின் போக்கினைத் திசை திருப்பியது. மறக்கப்பட்ட நிகழ்வு மகாத்மாவின் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் மகாத்மா காந்தி

19 நிமிட வாசிப்பு

இந்திய விடுதலை இயக்கத்தில் திருப்பம் ஆங்கிலம் கற்ற இந்திய மத்திய வகுப்பைச் சேர்ந்த தேசியவாதத் தலைவர்கள் ஆங்கிலேயர் முன்மாதிரியாகக் காட்டிய அரச யாப்பு முறைப்படியான முயற்சிகள் மூலம் தமக்குக் கூடுதலான ஆட்சிப் பொறுப்பைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி தென் ஆபிரிக்காவில் இருந்து தாய்நாட்டுக்கு வந்தார். அவர் வருகை விடுதலை இயக்கத்தில் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. மத்திய வகுப்பினர் செயற்பாடாக மந்த வேகத்தில் சென்றுகொண்டிருந்த […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் இலங்கையர் தேசியவாதம்

15 நிமிட வாசிப்பு

மகாத்மா காந்தி 1920 இல் இந்தியத் தேசிய இயக்கத்தை வழிநடத்திச் செல்லும் தலைவரானார். அனைவரையும் கவரும் ஆளுமையும், இறுக்கமான ஒழுக்கநெறியும், முழுமூச்சாக முன்னின்று இயக்கத்தை நடத்திச்செல்லும் ஆற்றலும் இந்தியாவில் மட்டுமல்ல வெளியேயும் அவருக்குப் பெருமதிப்பைக் கொடுத்தன. அயலில், ஆங்கிலேயர் ஆட்சியைத் தொல்லைகள் இல்லாது அனுபவித்துக்கொண்டிருந்த இலங்கையர் மீதும் அவருடைய எழுச்சியின் தாக்கம் ஏற்பட்டது. ஏழு ஆண்டுகளுக்குள், 1927 இல், யாழ்ப்பாண இளைஞர் அழைப்பை ஏற்று, மகாத்மா காந்தி யாழ்ப்பாணத்துக்கு வந்து […]

மேலும் பார்க்க

இழந்த ஹெளமொழியும் இல்லாத இசைக்கலையும்

18 நிமிட வாசிப்பு

இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் நவீன இலங்கையின் வரலாற்றை நிர்ணயிக்கும் நிகழ்வுகள் பல இடம்பெற்ற காலம். இவை, அடுத்து வந்த இரண்டாம் காலில், அரசியலைப் பொறுத்து இலங்கையர் இன அடிப்படையில் பிளவுபட்டுப் பிரிந்து செல்ல வழிவகுத்தன. அரசியல் புலத்தில் மட்டுமல்லாது, பண்பாட்டுப் புலத்திலும் முக்கிய அபிவிருத்திகள் ஏற்பட்டு, 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பண்பாடு, மொழி, மதம் ஆகியவை சங்கமித்துச் சிங்கள சமூகத்தில் ஒரு புரட்சியை உண்டுபண்ணின. பண்பாட்டு அடையாளத்தைத் […]

மேலும் பார்க்க

மொழிசார் தேசியவாதத்தின் ஊற்றுகள்

18 நிமிட வாசிப்பு

அநகாரிக தர்மபால பௌத்த மக்களைத் தட்டி எழுப்பி, முன் நோக்கி வழிநடத்திச் செல்ல, பிற பண்பாட்டுப் புலங்களிலும் காலனியாட்சிக்குப் பணிந்து நடந்த சிங்கள மக்களிடையே விழிப்புணர்ச்சியைத் தூண்டுவதற்கு வேறு தலைவர்கள் செயற்பட்டனர்.  மொழியின் புது வகிபாகம் அந்நியர் ஆட்சிக்குள் அகப்பட்டிருந்த ஆசியச் சமூகங்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தத்தம் பண்பாட்டு அடையாளத்தை (Cultural Identity) பேணுவதற்குச் செயற்பட்டபோது, அந்த அடையாளத்தின் ஒரு முக்கிய சின்னமாக (Marker) தம் மொழியைக் கருதினர். […]

மேலும் பார்க்க

அரசியல் தேசியவாதத்துக்கு அடித்தளம் அமைத்த பண்பாட்டு மலர்ச்சி

16 நிமிட வாசிப்பு

விடுதலை இலக்கு இல்லாத தேசியவாதம் பொன்னம்பலம் அருணாசலம் தொடக்கியது அரசியல் தேசியவாதத்தில் (Political Nationalism) அடங்கும். அவர் 1919 இல் இலங்கைத் தேசிய காங்கிரஸை அமைத்து, அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டபோது, அவர் வைத்த இலக்கு அல்லது குறிக்கோள் ஒரு முழுமையான அரசியல் தேசியவாதப் பண்பை வெளிப்படுத்தவில்லை எனலாம். அந்நியர் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு நாட்டில் எழும் அரசியல் தேசிய இயக்கம் அந்த நாட்டவரின் விடுதலையை இலக்காக வைப்பது அவசியமாகும். […]

மேலும் பார்க்க

அருணாசலமும் அனைத்து இலங்கையர் தேசியவாதமும்

14 நிமிட வாசிப்பு

மிதவாதத் தலைவர்கள் பிரித்தானிய ஏகாதிபத்தியம் 19 ஆம் நூற்றாண்டு முடிவடைந்தபோது தென் ஆசியாவில் உறுதிபெற்ற நிலையில் இருந்தது. மேல்நாட்டார் ஆட்சியை எதிர்ப்பவர்களாகக் குறிப்பிடத்தக்க தலைவர்கள் இருக்கவில்லை. இலங்கையில், ஆங்கிலக் கல்வி பெற்ற மத்திய வகுப்பினரும், காலனி ஆட்சியில் தோன்றிய புதிய வாய்ப்புகளை இறுகப்பற்றி மேலுக்கு வந்தோரும், புதிய ஆட்சி அறிமுகப்படுத்திய சட்டமுறைகளுக்கு அமைய உருவாகிய ஒழுங்குள்ள அமைப்புக்குள் அமைதியுடன் வாழ்ந்த பொதுமக்களும் பிரித்தானியர் ஆட்சியை வெறுக்காது ஏற்றுக்கொண்ட நிலை காணப்பட்டது […]

மேலும் பார்க்க

நாடு நலம் பெற நட்ட விதைகள்

15 நிமிட வாசிப்பு

ஐரோப்பாவில் தேசியவாதம் ஐரோப்பாவில் 19ஆம் நூற்றாண்டு தேசியவாதம் எழுச்சி பெற்ற காலம். பல்வேறு பேரரசுகளுக்குள் அடங்கிக் கிடந்த பல்லினச் சமூகங்கள் தனிநாடுகளாகப் பிரிந்து சென்றதன் விளைவே இன்று நாம் காணும் ஐரோப்பிய நாடுகள். இத்தேசியவாதப் போக்கு அண்மைக்காலம் வரை நீடித்தது. ஐரோப்பாவில் எழுந்த தேசியவாத நிகழ்வுகளுள் இரண்டு முக்கியமானவை. இவை இத்தாலியையும் ஜெர்மனியையும் உருவாக்கிய இயக்கங்கள். பல சிறு அரசுகளாகப் பிரிந்து காணப்பட்ட இத்தாலியத் தீபகற்பத்தின் கூறுகள் 1861இல் இணைந்தபோது […]

மேலும் பார்க்க

தேசியத் தரு தழைக்க உதவிய உரம்

12 நிமிட வாசிப்பு

ஆங்கிலக் கல்வியும் அறிஞர் ஆய்வுகளும் உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலம் தென் ஆசியாவின் எதிர்கால அரசியல் அமைப்புகளை உருவாக்க உழைத்த சக்திகள் எழுந்த காலம். இவற்றுள் எவை பெருவெற்றி பெற்று மேலோங்கும் என்பது இரண்டாம் உலகப் போரின் பின் நிர்ணயிக்கப்பட்டது. இப்படியான சக்திகளுள் பெரிதும் முக்கியத்துவம் பெறுவது இன – மத அடிப்படையிலான சக்தியாகும். இது ஒரு புறம் இனப்பற்றையும் மறுபுறம் இனவெறுப்பையும் எழுச்சிபெறச் செய்து, பிரித்தானியர் நாட்டைவிட்டுச் சென்றதும் […]

மேலும் பார்க்க

போரும் புதிய போக்குகளும்

12 நிமிட வாசிப்பு

முதலாம் உலகப் போர் ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா ஆகிய அண்டைப் பிரதேசங்களிலும் நடந்த முதலாம் உலகப்போர் (1914 – 1918) யாழ்ப்பாணத்தை எந்தவிதத்திலும் தொடவில்லை என்று கூறமுடியாது. இப்போர் தென் ஆசியாவில் நடக்காவிட்டாலும் தென் ஆசியர் பிரித்தானியப் பேரரசின் படைகளில் சேர்க்கப்பட்டிருந்தனர். பிரித்தானியர் ஆண்ட இந்தியாவில் இருந்து ஏறத்தாழ 160,000 போராளிகள் பிரான்ஸில் ஜெர்மன் படைகளை எதிர்த்துப் போராட அனுப்பப்பட்டனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. போரில் இவர்களுள் 47,000க்கு […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்