July 2025 - Page 2 of 2 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

July 2025 தொடர்கள்

ஆனைக்கோட்டைத் தொல்லியலாய்வு 

17 நிமிட வாசிப்பு

 அறிமுகம் ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம் தென்மேற்குப் பகுதியின் மேற்குப் பக்கத்தில், நவாலிக்குத் தெற்கே யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் AB 17 வீதிக்கருகே யாழ்ப்பாணக் கடலேரிக்குக் கிழக்காக அமைந்த பண்டைய கிராமம். முன்னொரு காலத்தில் வன்னியில் யானைகளைப் பிடித்து, ஆனையிறவு வழியாக யாழ்ப்பாணம் கொண்டுவந்து, அவற்றை இக்கிராமத்தில் உள்ள அடைப்பரண்களில் (Corral) அடைத்து வைத்துப் பின்னர் கப்பல் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்த காலப்பகுதியில் இக்கிராமத்திற்கு ‘ஆனைக்கோட்டை’ […]

மேலும் பார்க்க

பூசைக்கிழவி என்னும் தெய்வம்

15 நிமிட வாசிப்பு

அறிமுகம் மனித குல வரலாற்றோடு பின்னிப்பிணைந்த இயற்கை – இயற்கை வழிபாட்டின் வழி உருவான தெய்வங்களுள் பெண் தெய்வங்களுக்குத் தனியிடம் உண்டு. தமிழர் சமயவியலின் தொடக்கத்தில் கொற்றவை எனும் பாலை நிலத் தெய்வம் அடையாளப்படுத்தப்படுகின்றாள். தமிழர் வாழ்வியல் புலத்தில், ஏன் மனிதரின் வரலாற்றில், வேட்டையாடலுக்குத் தலைமை தாங்கி இனக்குழுவை வழிநடத்தியது தொடக்கம் நிலையான குடியிருப்பு, உற்பத்திச் செயற்பாடுகள் என்பவற்றில் பெண்ணின் பங்கு பிரதானமானது என்பதை அறிய முடிகிறது. அவளது பிள்ளைப்பேறு […]

மேலும் பார்க்க

1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 2

15 நிமிட வாசிப்பு

அல்லைத்திட்டம் இத்திட்டமே திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது திட்டமிட்ட விவசாயக் குடியேற்றமாகும். இது 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டு தொடக்கமே மக்கள் குடியேறத் தொடங்கினர். மகாவலி ஆற்றை மறித்து வாய்க்கால் மூலம் திருப்பி அல்லைக் குளத்தை நிரப்பி அதனோடு சூழவுள்ள கிராமங்களுக்கு நீர்ப்பாசன வசதி செய்து கொடுப்பதற்காகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னரும் கூட இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1868 இல் வாய்க்கால் வெட்டப்பட்டு தாழ்நிலமாக இருந்த […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – மயிலிட்டி

9 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் தெல்லிப்பழைக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், மயிலிட்டிக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலுள்ள விவரங்களை ஆராயலாம். (படம்-1) நிலப்படத்தில் உள்ளபடி மயிலிட்டிக் கோவிற்பற்று, ஏழு துணைப்பிரிவுகளை உள்ளடக்கியது. இவை மயிலிட்டி, பலாலி, வயாவிளான், வறுத்தலைவிளான், தையிட்டி, வீரமாணிக்கதேவன் துறை, பெரியநாட்டுத்தேவன் துறை என்பன.  எல்லைகள் லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி மயிலிட்டிக் கோவிற்பற்றின் வடக்கு […]

மேலும் பார்க்க

இளமையைத் தொலைக்கும் இளையோர்: இனிமையின் விலை

17 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் ‘இளையோர்’ என்ற கருத்து சமூக மற்றும் பண்பாட்டு ஆய்வில் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. உலகம் மிகவும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு வருவதால், இளையோர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் மிகவும் சிக்கலானதாகி வருகின்றன. போரின் பின்னரான ஈழத்தமிழ்ச் சமூகத்தைப் புரிந்துகொள்வதாயின், இளைஞர்களின் வாழ்க்கையை வடிவமைக்கும் இயக்கவியலைப் புரிந்துகொள்வது முக்கியம். நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தை நடாத்திய ஒரு சமூகத்தின் மையமாக, இயங்கியலாக, ஆதாரசுருதியாக சில தசாப்தங்கள் இளையோர் […]

மேலும் பார்க்க

தேசியத் தரு தழைக்க உதவிய உரம்

12 நிமிட வாசிப்பு

ஆங்கிலக் கல்வியும் அறிஞர் ஆய்வுகளும் உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலம் தென் ஆசியாவின் எதிர்கால அரசியல் அமைப்புகளை உருவாக்க உழைத்த சக்திகள் எழுந்த காலம். இவற்றுள் எவை பெருவெற்றி பெற்று மேலோங்கும் என்பது இரண்டாம் உலகப் போரின் பின் நிர்ணயிக்கப்பட்டது. இப்படியான சக்திகளுள் பெரிதும் முக்கியத்துவம் பெறுவது இன – மத அடிப்படையிலான சக்தியாகும். இது ஒரு புறம் இனப்பற்றையும் மறுபுறம் இனவெறுப்பையும் எழுச்சிபெறச் செய்து, பிரித்தானியர் நாட்டைவிட்டுச் சென்றதும் […]

மேலும் பார்க்க

மூலோபாயப் பகுதி பற்றிய அடிப்படைத் தகவல்கள் – பகுதி 5

10 நிமிட வாசிப்பு

கிழக்கு மாகாணத்தின் மாகாண மட்டத்திலான நீர் வளங்கள்  1.2.2.1 மட்டக்களப்பு மாவட்டம்  மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் பரந்த கடற்கரை எல்லை மற்றும் சிறப்பான நீரியல் அமைப்புகளைக் கொண்டது. இதன் பரப்பளவு 2,854 சதுர கிலோமீட்டராகும்; இது கடலோரச் சமவெளிகளாகவும் உள்நாட்டுப் பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுச் சராசரி மழைப்பொழிவு 1,250 –1,750 மி.மீ ஆகவும், வெப்பநிலை வீச்சு 25°C–32°C ஆகவும் உள்ளன. வடகிழக்கு பருவக்காற்றுக் (அக்டோபர்–ஜனவரி) […]

மேலும் பார்க்க

கூத்து இன்றுவரை கிராமங்களில் நிலைபெற்றிருப்பதற்கான காரணங்கள் – பகுதி 2

15 நிமிட வாசிப்பு

கூத்தின் நிலைபேற்றுக்கான பிரதானமான காரணங்களைத் தந்து, அவற்றுள் ஐந்தினைச் சென்றமுறை விளக்கி இருந்தேன். இன்னும் சில காரணங்களும் உண்டு. அக்காரணங்களையும் இங்கு பார்ப்போம். மீதிக் காரணங்களை இந்த கட்டுரையில் பின்வருமாறு நோக்குவோம்: 6. திருமணத்திற்கு மாப்பிள்ளைகளை, பெண் பிள்ளைகளைக் கண்டுபிடித்தல்  தமிழரிடையே மாப்பிள்ளை, பெண் தெரிவு பல வகைகளில் நடைபெறுவது மரபு. தமிழரின் திருமண முறைகள் பற்றி பலர் ஆராய்ந்து எழுதியும் உள்ளனர். இந்த மரபில் கூத்தரங்கின் பணியாது? கூத்தரங்கு […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்