இலங்கையில் ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’யின் தோற்றமும் இன்றைய நிலையும் Archives - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

இலங்கையில் ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’யின் தோற்றமும் இன்றைய நிலையும்

பிரித்தானிய இலங்கையில் தோன்றிய தேசியவாதம், சிங்கள இனவாதம் மற்றும் சமஷ்டி சிந்தனை

24 நிமிட வாசிப்பு

செயல்பூர்வ அர்த்தத்தில் இராமநாதன் வம்சத்தின் ஒரு நூற்றாண்டு காலத் தலைமைத்துவத்தின் முடிவும், டொனமூர் அரசியல் யாப்பின் பிறப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாய் அமைந்தன. ஒரு நூற்றாண்டு கால இராமநாதன் வம்சத்தின் கொழும்புத் தமிழ்த் தலைமைத்துவத்தின் அரசியலுக்குப் பதிலாக, யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் அரசியல் 1920களின் இறுதியில் எழுச்சிபெறத் தொடங்கியது. ஆயினும், இது தமிழ்த் தேசிய அரசியல் இயக்கமல்ல. அது இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தால் கவரப்பட்ட காந்திய இயக்கச் […]

மேலும் பார்க்க

இலங்கையை ஆக்கிரமித்த இந்தியாவும் உலகப் பேரரசுகளும்

29 நிமிட வாசிப்பு

உலகளாவிய அர்த்தத்தில் எங்கு பேரரசுகள் எழுகின்றனவோ அங்கெல்லாம் அவை ஓர் உயிரியைப் போல தாம் வாழும் அண்டைய பிரதேசத்துக்குள் தமது கால்களை அகட்டி நகர்ந்து பரவும். அது இந்தியப் பேரரசுக்கும் விதிவிலக்கானது அல்ல. கி.மு நான்காம் நூற்றாண்டில் முதலாவதாக இந்தியாவில் எழுந்த மௌரியப் பேரரசு அண்டை நாடுகளை நோக்கிப் பரந்து விரிவடையத் தொடங்கியது. மௌரியப் பேரரசு அசோகச் சக்கரவர்த்தியின் தலைமையில் பேரரச தத்துவமாய் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய பௌத்த […]

மேலும் பார்க்க

இலங்கை மக்களின் வாழ்வில், தீவின் புவியியல், அரசியல், புவிசார் – அரசியல், புவிசார் – வரலாற்றுக் கட்டமைப்புகளின் பங்கு

15 நிமிட வாசிப்பு

இதுவரை இங்கு நாம் பேசிவந்த நடைமுறை சார்ந்த பின்னணியில் இலங்கைத் தீவில் நிகழும் ஈழத் தமிழருக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை அதற்கே உரிய வகையில் முழுமைப்படுத்தப்பட்ட வரலாற்றுப் பார்வைக்கூடாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஈழத் தமிழருக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான முக்கிய அடிப்படை  இந்து மாகடலின் மையத்தில்  இலங்கை – இந்திய அரசுகள் சார்ந்து அமைந்திருக்கக்கூடிய  புவிசார் – அரசியல்  அமைவிடக் கட்டமைப்பாகும். இந்தவகையில், இலங்கை – இந்திய அரசியலினதும், […]

மேலும் பார்க்க

முள்ளிவாய்க்கால் படுகொலையின் கொடிய வேர்களை இலங்கையின் நீண்டகால அரசியல், சமூக, பொருளாதாரக் கட்டமைப்புகளில் காண முடிவது எப்படி?

16 நிமிட வாசிப்பு

தூய இலட்சியங்களினாலும், தர்ம போதனைகளினாலும், ஓசோனை உடைக்கவல்ல ஒப்பாரிகளினாலும், வரலாற்றை நிர்ணயிக்க முடியாது. சிங்கத்தின் பிடியில் யானையின் அலறல் காட்டைப் பிளந்து ஓசோனை உடைக்கும். ஆனாலும் கூட, யானையைக் கூறுபோட்டுச் சிங்கங்கள் உண்ணத் தவறுவதில்லை. “எதனையும் அரசியலாகப் பார்க்க வேண்டும்;அனைத்தும் அரசியலுக்குக் கீழ்ப்பட்டவையே” அரசியல் என்பது நலன்களைக் கையாள்வது பற்றிய இயங்கியல் ஆகும். உறவுகள் நலன்களால்  ஆனவை. நலன்கள் கொடுக்கல், வாங்கல் அல்லது ஆக்கிரமிப்பாலானவை. தாய்க்கும் – பிள்ளைக்கும், காதலனுக்கும் […]

மேலும் பார்க்க

அறிமுகம்: இலங்கை வரலாற்றில் ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’யும் அதற்கான தத்துவார்த்த அணுகுமுறையும்

10 நிமிட வாசிப்பு

இனப்படுகொலை என்பது ஏதோ ஒரு நாளில் நிகழ்ந்துவிடும் தன்னியல்பான நடவடிக்கை அல்ல. மாறாக அது ஓர் ஒடுக்கும் சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது தொடர்ந்து, நீண்டகால அளவில் படிப்படியாகச் செயற்படுத்தும் பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளின் இறுதி விளைவாகவே நடக்கிறது. எனவேதான் இனப்படுகொலையைக் ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ என்று அழைக்கிறோம். கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையும் அதற்கான தத்துவார்த்த அணுகுமுறையும் பற்றிய ஆழமான பார்வை நமக்கு அவசியமானது. காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான எந்தவொரு தேசிய விடுதலைப் போராட்டமும் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்