மலையக மக்களின் வாய்மொழி பாடல் பேசும் வாழ்வியல் Archives - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

மலையக மக்களின் வாய்மொழி பாடல் பேசும் வாழ்வியல்

மலையக நாட்டார் பாடல்களில் வெளிப்படும் காதல் உணர்வு

13 நிமிட வாசிப்பு

நாட்டுப்புறப் பாடல்கள் ஆண்டுகள் பல கடந்தும் மக்களின் மனதை உறுத்துகின்றன என்றால், ஆய்வாளர்களைத் தேடித்தேடி ஆய்வு செய்யத் தூண்டுகின்றன என்றால், இதன் ஆழமும் அகலமும் விரிவானதே. உலகில் மனிதன் மொழியைப் பயன்படுத்தத் தொடங்கிய காலம் முதல் நாட்டுப்புற வாழ்வியலைப் பேசும் இலக்கியமும் தோன்றி வளர்ந்து வந்திருக்கிறது. எனவே ஒவ்வொரு இனத்தினதும் மொழியினதும் அடிப்படை இலக்கியமாகவும் மூல இலக்கியமாகவும் திகழ்வது நாட்டுப்புற இலக்கியமே ஆகும். இன்று உலகில் பேசப்படுகின்ற புராண, இதிகாசக் […]

மேலும் பார்க்க

மலையக மக்களின் வாழ்வியலும் தாலாட்டுப் பாடல்களும்

13 நிமிட வாசிப்பு

நவீன சமூகங்கள் பன்முகத்தன்மை கொண்டவை. ஒரு பொதுவான பண்பாட்டுக் கட்டமைப்பிற்குள் வாழும் பல்வேறு குழுக்கள், அப்பண்பாட்டின் அனைத்துக் கூறுகளையும் அப்படியே ஏற்பதில்லை. மாறாக, தங்களின் தேவைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் ஏற்பச் சில பிரத்தியேகப் பண்புகளை வளர்த்தெடுத்துக் கொள்கின்றனர். இத்தகைய உருவாக்கமே, ஒரு பெரிய சமூகத்திற்குள் அக்குழுவைத் தனித்துவமான அடையாளத்துடன் வேறுபடுத்திக் காட்டுகிறது. இது மானிடவியல் ரீதியாகச் சமூகப் பரிணாமத்தின் ஒரு முக்கிய அடையாளமாகும்.  இத்தகைய பண்பாட்டுத்தளத்தில் உருவாகிய மலையகச் சமூகம், தென்னிந்தியாவிலிருந்து […]

மேலும் பார்க்க

மலையக வாய்மொழிப் பாடல்களில் கங்காணிமார்களின் இருப்பு

18 நிமிட வாசிப்பு

இலங்கை மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து இருநூறு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இம்மக்களின் வாழ்வியலையும் அவர்கள் எதிர்கொண்ட சவால்களையும் பல்வேறு வகையான வரலாற்று ஆய்வுகள் வெளிக்கொண்டு வந்துள்ளன. அதேவேளை, இந்தியத் தொழிலாளர்கள் அதிகமாக வறுமை காரணமாகவே இலங்கைக்கு வந்தார்கள் என்ற கருத்தை இன்றைய வரலாற்று ஆய்வுகள் நிராகரிக்கின்றன. பிரித்தானியாவில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியினால் உருவான புதிய முதலாளித்துவப் பண்பாடு, தன்னுடைய நாட்டை முழுமையாகக் கட்டுப்படுத்தியதோடு, உலகில் காணப்படும் அனைத்து […]

மேலும் பார்க்க

மலையக நாட்டார் இலக்கியம் வெளிப்படுத்தும் தொழிற்களமும் விடுதலை உணர்வும்

8 நிமிட வாசிப்பு

மலையக மக்களின் வாழ்வியல் ஏனைய இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களிலிருந்து வேறுபட்ட ஒன்றாகும். தென்னிந்தியாவில் இருந்து காலனித்துவ ஆட்சியாளர்களால் அழைத்துவரப்பட்ட இம்மக்கள் முழுமையாக தமிழர்களாகவே இருந்தார்கள். இலங்கையில் பூர்விகமாக வாழும் தமிழர்களின் வாழ்வியல் முறையிலிருந்து இவர்கள் வேறுபட்டாலும், கலாசார ரீதியாகவும், மொழி ரீதியாகவும், மத ரீதியாகவும் ஒருமைப்பாடு உடையவர்களாக இருந்தார்கள். ஆனாலும், இவர்களின் வாழ்வியல், பொருளாதாரம், சமூகக் கட்டமைப்பு என்பன இவர்களை இலங்கைவாழ் மக்களிடமிருந்து தனித்துவமாக்கியது. இவர்களின் வருகையானது பட்டுக் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்