இலங்கை: பயங்கரவாதத் தடைச் சட்டம் - ஒரு விமர்சனரீதியான மதிப்பீடு
இலங்கையில் சித்திரவதைகளைத் தடுப்பதற்கான சர்வதேச விதிமுறைகளை நடைமுறைப்படுத்துதல்
33 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: அருட்தந்தை நோயல் டயஸ் இலங்கையில், சித்திரவதையிலிருந்து விடுபடுவதற்கான ஒரு தனிநபருக்குரிய உரிமையைப் பாதுகாப்பதில் மிகவும் கடினமான பிரச்சினையாக இருப்பது, சர்வதேசரீதியான கடப்பாடுகளை அங்கு அமுல்படுத்துவதில் உள்ள சிக்கலாகும். இலங்கை முழுமையான இணக்கத்துடன் செய்துகொண்டுள்ள இரண்டு முக்கியமான ஒப்பந்தங்கள் நடைமுறையில் இருந்தன. இதில் முதலாவது, ‘சித்திரவதைகள், பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது மோசமான தாக்குதல்கள் அல்லது தண்டனைகள்’ என்பவற்றுக்கு எதிரான ஐ.நா. மாநாட்டின் (இனி இது இக்கட்டுரையில் CAT […]
மேலும் பார்க்க
இலங்கையில் நடந்த சித்திரவதைகள்: உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் சமூக – அரசியல் ரீதியாகவும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதம் – பகுதி 2
45 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: பேராசிரியர் தயா சோமசுந்தரம் பலர் சித்திரவதையிலிருந்து தப்பிப் பிழைப்பதில்லை, ஆனால் அப்படிப் பிழைப்பவர்கள் கடுமையானதும் அசாதாரணமானதுமான மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் போது, வளைந்து கொடுக்கக்கூடிய, சமாளிக்கும் உத்திகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் தப்பிக்கொள்கிறார்கள். சித்திரவதையின் குறுகிய, நீண்டகால, நரம்பியல், உளவியல் ரீதியான விளைவுகள் மிகவும் நோய்கொண்ட சூழ்நிலையிலும் உயிர்வாழ்வதைச் சாத்தியமாக்கும் ஒரு ‘வலுவானதும் வலிமையானதுமான அரசியலமைப்பிற்கான அர்த்தமுள்ள எதிர்வினைகளாகக் காணப்படுகின்றன’ (டிராட்மேன், 1964). பாதிக்கப்பட்ட இவ்வகையானவர்களில் பெரும்பாலோர் சமூகத்தைச் […]
மேலும் பார்க்க
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) விசத்தை ருசித்தல்!
39 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: ஜெயத்திலகே டி சில்வா இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு நடந்ததை நினைவு கூர்வது என்பது, குறிப்பாக நீங்கள் உங்கள் அறுபதுகளின் இறுதியில் இருந்தாலன்றி, எளிதான ஒன்றல்ல. அதேபோல், கதையில் நிகழ்வுகள் வெளிப்படும் சூழலுக்குப் பழக்கமில்லாத இளம் வாசகருக்கும், ஒருவேளை பயங்கவாதத் தடைச் சட்டம் தொடர்பான கல்வி சார்ந்த ஆர்வம் மட்டுமே உள்ளவர்களுக்கும், வயதானவர்களின் நினைவுகளைப் படிப்பது சலிப்பை ஏற்படுத்தக்கூடும். இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் என்ற […]
மேலும் பார்க்க
அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மீதான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தாக்கம்
26 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: வி.எஸ். கணேசலிங்கம் சித்திரவதைகளிலிருந்தான விடுதலை, சட்டத்தின் சமமான பாதுகாப்பு, தன்னிச்சையான கைதும் சட்டவிரோத தடுப்புக்காவலும் ஆகியவற்றிலிருந்து விடுதலை, நியாயமான விசாரணைக்கான உரிமை, குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை ஒருவர் குற்றமற்றவர் என்று கருதப்படுவதன் அவசியம், பேச்சுரிமை, ஒன்றுகூடுதல், சங்கம் அமைத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கான மக்களுக்கிருக்கும் உரிமை என்பவை, நமது 1978 அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட (மக்களது) அடிப்படை உரிமைகளில் அடங்குகின்றன. சட்டப் பிரிவு 13 (1) ஆனது, சட்டத்தால் […]
மேலும் பார்க்க
அரசியலமைப்புவாதமும், பயங்கரவாதத் தடைச்சட்டமும், நிறைவேற்று அதிகாரத்துக்கான வாய்ப்பும்
8 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புக் குறித்த பெரும்பாலான விமர்சனங்கள், இந்தச் சட்டத்தின் உள்ளடக்கங்கள், சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுடனான அதன் முரண்பாடுகள், அதன் செயற்படுத்தலில் மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்கள் என்பவை தொடர்பாக நியாயமான முறையில் கவனம் செலுத்துகின்றன. இருப்பினும், இதுபோன்ற ஒரு கடுமையான சட்டம் நாட்டின் சட்டப் புத்தகங்களில் எவ்வாறு நுழைந்தது என்பதை ஆராய்வதும்கூட ஒரு முக்கியமான விடயம்தான். பெரும்பாலான ஜனநாயக அரசியலமைப்பு நாடுகளின் சட்டங்களில், நிர்வாகம் […]
மேலும் பார்க்க
பயங்கரவாதத் தடைச் சட்டமும் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டமும்
29 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: சாலிய எதிரிசிங்க ஒரு முற்குறிப்பு: சென்ற இதழில் வந்த இந்தத் தொடர் தொடர்பான அறிமுகக் குறிப்பில் “இன்னமும் பழைய பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசாங்கத்தால் பயன்படுத்தக் கூடிய வகையில் நடைமுறையில் உள்ளது. அதை ஓர் அரசாங்கம் தனது நடவடிக்கைகளுக்காகக் கைகளில் எடுக்கின்றதா இல்லையா என்பதைப் பொறுத்தே அது அதிகமாகப் பேசப்படும் சூழல் உருவாகிறது.” என்று குறிப்பிட்டிருந்தோம். இப்போது அந்தச் சட்டத்தை இன்றைய ‘தேசிய மக்கள் சக்தி’ அரசாங்கமும் […]
மேலும் பார்க்க
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் முன்னோடிகள்
20 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: சூரியா விக்ரமசிங்க இந்தக் கட்டுரை, ஏற்கனவே உள்ள சட்டங்களில் காணப்படும் விதிகளைப் போலவே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திலும் (PTA)1 உள்ளடக்கப்பட்டுள்ள, சில ஏற்பாடுகளைச் சுட்டிக்காட்டுவதை நோக்கமாகக் கொண்டதாக அமைகிறது. பலரும் நினைப்பது போல, இந்த ஒற்றுமைகள், வெறுமனே அவசரகாலச் சட்டங்கள் சம்பந்தப்பட்டவை மட்டுமல்ல, சில சந்தர்ப்பங்களில் அவை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களிலும் கூடக் காணக்கூடியதாக இருக்கின்றன. இந்தக் கட்டுரையின் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கும் சட்டவிதிகள், (அவ்வப்போது கொண்டுவரப்பட்ட) […]
மேலும் பார்க்க