ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர்கூட ஒரு விரலசைப்பில் உலக நாடுகளை வழிக்குக்கொண்டுவர இயலுமாக இருந்த ஐக்கிய அமெரிக்காவுக்கு என்ன நேர்ந்துவிட்டது? கறாரான வரிவிதிப்பின் ஊடாகப் பிறதேசங்களை அடங்கி ஒடுங்கிப்போக வைத்துவிடலாம் என்று நினைத்தால் சொந்த நாட்டு மக்களே கிளர்ந்தெழுந்து முட்டுக்கட்டை போட்டுவிடுகிறார்களே? புதிதாய்த் தலைமையேற்ற புதுத் தும்புத்தடியாக வேகம் காட்டுகிற ஜனாதிபதியிடம் வெளிப்படும் தடுமாற்றங்களா இவை? ஐக்கிய அமெரிக்க ஆளும் அதிகாரசக்தியின் நிலைதடுமாறுகிற தளம்பல் இன்றைய அரசியல் தலைமை வாயிலாக வெளிப்படுகிறதா? […]
இன்று உருவாகியுள்ள புதிய உலக ஒழுங்கில் இந்தியா, சீனா, இலங்கை என்பன இணைந்து இயங்குவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது எனும் குரல் ஏற்கனவே வெளிவந்துள்ளது. இத்தகைய புதிய செல்நெறி துலக்கமாகத் தெரிகிறதா எனும் கேள்வி பலரிடமும் தோன்ற இடமுள்ளது. ஏற்கனவே நிலவி வந்த ஒற்றை மையமான ஐக்கிய அமெரிக்க மேலாதிக்கம் தளம்பல் நிலையை அடைந்து, பழைய நியமங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கும் மாறுநிலைக் காலம் என்பதைக் கடந்து, உறுதியான புதிய உலக ஒழுங்கு […]