மலையகத் தமிழர்களின் அரசியலும் பண்பாடும்
18 ஆம் நூற்றாண்டின் காலனித்துவக் கால அடிமைக் குடியேற்றங்களும் மலையகத் தமிழர்களும்
11 நிமிட வாசிப்பு
இந்தியாவும் காலனித்துவமும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சேர, சோழ, பாண்டியர்களால் ஆளப்பட்ட இந்தியாவின் தென்னாடும், மொகலாயப் பேரரசுகளால் ஆளப்பட்ட வடநாடும் படிப்படியாக வலுவிழந்து போயின. 1498 ஆம் ஆண்டு வாஸ்கொடகாமா இந்தியாவின் மேற்குகரையில் உள்ள கோழிக்கோடு (Calicut) துறைமுகத்தை வந்தடைந்தார். இவரது வருகையோடு பரவிய போர்த்துக்கேயரின் ஆட்சி 1600 ஆம் ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வருகையோடு வீழ்ச்சியுற்றது. பட்டு, வாசனைத் திரவியங்களின் வாணிபத்திற்காக வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி படிப்படியாக […]
மேலும் பார்க்க
இலங்கை மலையகத் தமிழர் வரலாறு: ஓர் அறிமுகம்
24 நிமிட வாசிப்பு
மலையகம் என்பது கடல் மட்டத்திலிருந்து 1000 அடிக்கு மேற்பட்ட பகுதிகளை மட்டும் உள்ளடக்குவதில்லை. உண்மையில், கரையோரத்தில் அமைந்துள்ள தென் மாகாணப் பகுதிகளான காலி உடுகம மலைகள், மாத்தறை மாவட்டத்தின் தெனியாயப் பிரதேசம், பத்தேகமப் பிரதேசங்களில் வாழும் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களையும், அண்சமவெளிப் பிரதேசங்களில் அமைந்துள்ள களுத்துறை, கம்பஹா, கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை மாவட்டத் தொழிலாளர்களையும், மத்திய மலைநாட்டில் 3000–5000 அடி உயரத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய பகுதிகளும் மலையகம் […]
மேலும் பார்க்க
இலங்கை மலையகத் தமிழர்களின் அடையாளப் பிரச்சினைகளும் அரசியல் அடையாளத்துக்கான போராட்டங்களும்
23 நிமிட வாசிப்பு
இலங்கையில் இன்று ‘மலையகத் தமிழர்கள்’ என அடையாளப்படுத்தப்படுகின்ற மக்கள், பதினெட்டாம் நூற்றாண்டில் தெற்காசியா முழுவதும் பரவியிருந்த மேலைத்தேயக் காலனித்துவத்தின் விளைவாகத் தோன்றியவர்கள் ஆவர். குறிப்பாக, பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் தவிர்க்க முடியாத ஒரு விளைவாக மலையகத்தில் குடியேற்றப்பட்டவர்கள். இம்மக்கள் தென்னிந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர். வரலாற்றுத் தகவல்களின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து சுமார் 35% பேரும், சேலம் மாவட்டத்திலிருந்து 18% பேரும், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 10% பேரும், மதுரையிலிருந்து […]
மேலும் பார்க்க