தமிழ் இராச்சியத்தின் தோற்றம்பற்றிய முன்னைய வரலாற்றுப் பார்வையை மீள்வாசிப்பிற்கு உட்படுத்தும் அரிய தமிழ்க் கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு
14 நிமிட வாசிப்பு
புகைபடர்ந்திருக்கும் இலங்கைத் தமிழரின் ஆதிகால, இடைக்கால வரலாற்றுக்குப் புது வெளிச்சமூட்டி வருவதில் தொல்லியற் கண்டுபிடிப்புக்களுக்கு முக்கிய இடமுண்டு. அக்கண்டுபிடிப்புக்களில் கல்வெட்டுக்கள் நம்பகரமான முக்கிய சான்றுகளாகப் பார்க்கப்படுகின்றன. அவை இலக்கியங்களைப் போல் விரிவான வரலாற்றுச் செய்திகளைத் தராவிட்டாலும் அவை வரலாற்றுச் சம்பவங்கள் நடந்த சமகாலத்திலேயே பெரும்பாலும் எழுதப்பட்டிருப்பதினால் அவற்றில் இருந்து அறியப்படும் வரலாற்றுச் செய்திகள் நம்பகரமானவையாகவே பார்க்கப்படுகின்றன. இவை ஒரு நாட்டில் வாழும் பல இன மக்கள் பற்றிய பாரம்பரிய வரலாற்று […]
மேலும் பார்க்க
நமது வியர்வையில் தான் இந்த நாடு கட்டி எழுப்பப்படுகிறது
8 நிமிட வாசிப்பு
இலங்கைத் திருநாட்டை ஒரு சடுதியான வளர்ச்சிக்கு உட்படுத்தி ஒரு நவீன பொருளாதாரமாக மாற்றி அமைத்தவர்கள் பின்னர் வந்தேறு குடிகள் என்று கொச்சையாக அழைக்கப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தான். இந்த நாட்டின் முதல் நவீன பொருளாதாரமான கோப்பிக் கைத்தொழில் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் தொழில் புரிவதற்காக முதன் முதலாக இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்டார்கள். ஆனால் இலட்சக்கணக்கான ஏக்கரில் கோப்பியைப் பயிரிட்டுவிட்டு அதனை வைத்துக் கொண்டு என்ன […]
மேலும் பார்க்க
காதல் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது எனின், பால் வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டதா?
5 நிமிட வாசிப்பு
தன்பாலீர்ப்பு என்பது வடபுல சமூகத்தளத்தில் பெரும்பாலானவர்களால் விலக்கப்பட்ட (Taboo) ஒரு விடயமாகப் பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக தன்பாலீர்ப்பாளர்கள் இந்த சமூகத்திற்குள் தம்மை வெளிப்படுத்த முடியாதவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். பல போராட்டங்களுக்கு மத்தியில் தம்மை வெளிப்படுத்தும் தன்பாலீர்ப்பினரை இந்தச் சமூகம் பார்க்கும் பார்வை மதிப்பிற்குரியதுதானா? தன்பாலீர்ப்பு (Homosexual) என்பது ஒருவர் தன்பாலினத்தை சேர்ந்த ஒருவர் மேல் காதல் கொள்ளுதல் எனலாம். இதில் பெண் தன்பாலீர்ப்பாளர்கள் (Lesbian) மற்றும் ஆண் தன்பாலீர்ப்பாளர்கள் (Gay) […]
மேலும் பார்க்க
மருத்துவர் கிறீனும் மருத்துவக் கலைச்சொற்களும்
7 நிமிட வாசிப்பு
பயணங்களின்போது நூல்களை வாசிப்பதற்காகக் கொண்டு செல்லும் வழமை இன்றைய திறன்பேசி (Smartphone) யுகத்தில் அருகிவிட்டாலும் முற்றாக இல்லை என்று கூறிவிட முடியாது. இன்று புகையிரதப் பயணங்களில் திறன்பேசிகளில் இசையை, விரிவுரையைக் கேட்டவாறு செல்வார்கள்; பிடித்தமான ஏதோவொன்றைப் பார்த்தும் கேட்டும் ரசித்தும் பயணங்கள் தொடரும். 40 வருடங்களுக்கு முன்னர் 1975 – 1979 காலப்பகுதியில் கட்டுப்பெத்தை வளாகத்தில் (தற்போதைய மொரட்டுவப் பல்கலைக்கழகம்) கட்டுமானப் பொறியியல் (Civil Engineering) படிக்கச் சென்ற நாகலக்ஷ்மி […]
மேலும் பார்க்க
கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : தமிழ் இலக்கியங்கள்
10 நிமிட வாசிப்பு
இலங்கையில் எழுந்த தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் கீழைக்கரையின் வரலாறு, பண்பாடு பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றில் யாழ்ப்பாண வைபவ மாலை, வையாபாடல், கைலாயமாலை, கோணேசர் கல்வெட்டு, கைலாச புராணம், திரிகோணாசல புராணம், மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம், நாடுகாட்டுப்பரவணி என்பன முக்கியமானவை[1]. இவற்றோடு எழுந்த பெரியவளமைப்பத்ததி, குளக்கோட்டன் கம்பசாத்திரம், இராசமுறை ஆகிய நூல்கள் இன்று கிடைக்கப்பெறவில்லை. இலங்கையின் தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் மொழிநடை அடிப்படையிலும் பேசுபொருள் அடிப்படையிலும் 16ஆம் நூற்றாண்டுக்கு முற்படாதவை […]
மேலும் பார்க்க
பன்முகத்தன்மை (Diversity): குடும்பமும் தொழில்முனைவோருக்கான ஆரம்பப் பயிற்சிகளும்
7 நிமிட வாசிப்பு
“எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்நுண்பொருள் காண்ப தறிவு” – திருக்குறள் (424) சாலமன் பாப்பையா விளக்கம்: அரிய கருத்துகளைக்கூடக் கேட்பவர்க்கு விளங்கும்படிஎளியனவாகவும், அவர்மனங் கொள்ளும்படியும் சொல்லும்;பிறர் சொல்லும் கருத்து நுண்ணியதுஎன்றாலும் அதைஎளிதாக விளங்கிக் கொள்ளும்; இது அறிவு. இன்றைய கால வாழ்க்கையில் எம்மை மேலே உயர்த்தவும் நாட்டை அபிவிருத்தி செய்யவும், அத்தோடு உலகளாவிய வகையில் இணைந்து வாழ்வதற்கும் புதுத்தொழில் முறை (Startup companies) மிக்க உதவியாக இருக்கிறது. இந்த புதுத்தொழில் […]
மேலும் பார்க்க
நவீன உலகத்தின் உதயமும் இலங்கையின் நவீனத்துவமும் 1848 மாத்தளைக் கிளர்ச்சியும்
15 நிமிட வாசிப்பு
இதுவரை உலகம் கண்டிராத தார்ப் பாதைகள், புகையிரத வண்டிகள், நீராவிக் கப்பல்கள், தொலைத்தொடர்புச் சாதனங்கள் அனைத்துமே இக்காலத்துக்குரியவை. 1760 ஆம் ஆண்டு முதல் 1820 – 1840 வரை – அதற்குப்பின்னரும் – பிரித்தானியாவில் தொடர்ந்த இயந்திரக் கைத்தொழில் புரட்சியே உலகத்தை நவீன யுகத்துக்குக் கொண்டுவந்தது. 1820 இல் தான் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் லவுடன் மக்அடம் (Johon Loudon MacAdam) என்பவரால் முதற்தடவையாக பாதைகள் கற்களால் சமப்படுத்தப்பட்டு கற்தூள்களால் […]
மேலும் பார்க்க
வட இலங்கையில் சாதி: பிரித்தானிய காலனிய அரசின் கொள்கையும் நடைமுறைகளும் – 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி குறித்த நுண்ணாய்வு – பகுதி 3
8 நிமிட வாசிப்பு
ஆங்கிலத்தில் பேராசிரியர் B. E. S. J. பஸ்தியம்பிள்ளை நொத்தாரிஸ் பதவி நியமனம் – நல்லூர் 1864ஆம் ஆண்டில் நல்லூர் பகுதியில் பொற்கொல்லர் சாதியைச் சேர்ந்த ஒருவரை அரசாங்க அதிபர் டைக் நொத்தாரிஸ் பதவிக்கு நியமித்தார். இந்த நியமனத்திற்கு அப்பகுதியின் உயர்சாதித் தலைமைக்காரர்களும், முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளியிட்டனர். தமது முடிவை நியாயப்படுத்தும் குறிப்புகளை டைக் பதிவுசெய்தார். நல்லூர் பகுதியில் உயர்சாதியினரால் தாழ்த்தப்பட்டவர் எனக் கருதப்படும் நபர் ஒருவருக்கு முன்னர் […]
மேலும் பார்க்க
காந்தியின் வருகையும், நேருவின் விஜயமும்
7 நிமிட வாசிப்பு
1930 களை அடுத்து வந்த தசாப்தத்தில் இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களை பொறுத்தவரையில் சில சுவாரஸ்யமான அரசியல் மற்றும் தொழிற்சங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இத்தகைய நிகழ்வுகளில் ஜஹவர்லால் நேருவின் இலங்கைக்கான இரண்டு விஜயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவரது முதலாவது விஜயம் 1931 இலும் இரண்டாவது விஜயம் 1939 இலும் இடம்பெற்றன. இதற்கு முன் மகாத்மா காந்தி 1927ஆம் ஆண்டு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். மகாத்மா காந்தி அவர்களும் பண்டித நேரு அவர்களும் […]
மேலும் பார்க்க
தீகவாபியின் குடிமகனான தமிழ் வணிகன் பற்றிய குடிவில் கல்வெட்டு
5 நிமிட வாசிப்பு
அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை நகரின் தெற்கில் 13 கி.மீ. தூரத்தில் இறக்காமம் குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தின் வடக்குப் பக்கத்தில் மாயக்கல் எனும் சந்நியாசி மலை காணப்படுகிறது. இதை அடுத்து மாணிக்கமடு எனும் சிறிய கிராமமும், ஓட்டுத் தொழிற்சாலையும் அமைந்துள்ளன. இவற்றைக் கடந்தவுடன் குடிவில் எனும் கிராமம் காணப்படுகிறது. இக்கிராமத்தின் வடகிழக்கில் குடிவில் குளம் அமைந்துள்ளது. குளத்திற்கு சற்று தூரத்தில் கல்லோயா எனும் பட்டிப்பளை ஆறு ஓடுகிறது. கிராமத்தின் இடது […]
மேலும் பார்க்க