மொழிபெயர்ப்புக் கட்டுரை : கென்னத் டேவிட் பகுதி 1 இல் நான் ஒரு குறிப்பிட்ட வகைச் சமூகச் செயல் பற்றிக் குறிப்பிட்டேன். இது புவி வெளியை Space ஒழுங்கமைத்துக் கொள்வது பற்றியது. இப்பகுதியில் சாதிகளுக்கிடையிலான நடத்தை நடைபெறும் இரு மாதிரிகளை modes of intercaste canduct) விளக்குவேன். இம்மாதிரிகள் இருவகைப்படும். 1. கட்டுண்ட சாதிகளின் நடத்தை அல்லது உறவு 2. கட்டுப்படாத சாதிகளின் நடத்தை விவசாயக் கிராமம், […]
குணமாக்கல் இன்றைய காலகட்ட நடைமுறைச் சூழலானது மனிதருட்பட உலகின் அனைத்துக் கூறுகளினையும் இயல்பிறந்த இயைபற்ற தன்மையுள் சிக்கித் தவிக்க விட்டுக் கொண்டே இருக்கின்றது. இதனை மறுப்பதற்கு எவராலும் முடியாது, காரணம் வெள்ளம் கடந்து விட்ட பின் அணை கட்டுதல் சாத்தியமற்றதல்லவா. இவ்வாறான போக்குகள் மலிந்து விட்ட இவ்வுலகியல் போக்கிலே மனிதரையும், மனித மனங்களையும் ஓரளவாவது மீட்டெடுக்கும் செயற்பாட்டுத் திறனைக் கொண்டதாகவே குணமாக்கல் கலை என்பது நடைமுறையில் கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு […]
மொழிபெயர்ப்புக் கட்டுரை : கென்னத் டேவிட் வட இலங்கையின் யாழ்ப்பாணத் தீபகற்பம் – அறிமுகம் ஆட்சேர்ப்பு (Recruitment) நேரம் /காலம் (Time புவிவெளி அல்லது இடவெளி(Space) வாடிக்கையாளர் (Clientele) விலைப்பொறிமுறை (Price Mechanism) சூழமைவு (Context) சமச்சீர் – சமச்சீர் இன்மை இருவேறு சாதி இடையூடாட்ட முறைகளிலும் செயலிகள் (Actors) தமது செயல்களை ஒன்றுக்கொன்று எதிரான நியமத்திட்டங்களின்படி (Normative Schemes) அமைத்துக் கொள்வர். ஒவ்வொரு நியமத்திட்டமும் குறிப்பிட்ட வகைக் குறியீடுகளுடனும் […]
2017இல் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்குகின்ற கலையார்வலர் குழுவொன்று தென்னிந்திய ‘பறை’ வாத்தியத்தை யாழ்ப்பாணத்திலும் இலங்கைத் தீவின் வேறு சில பிராந்தியங்களிலும் உள்ள ஆர்வலர்களுக்கு பயிற்றுவித்தது. இதற்காக தமிழகத்திலிருந்து ‘பறை’ வாசிக்கும் ஒரு குழுவினர் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். மேற்படி ‘பறை’ வாத்தியக் கருவி இலங்கையில் வாசிக்கப்படும் பறை மேள வடிவத்திலிருந்து மாறுபட்ட ஒன்று. இந்தக் கருவி இலங்கையில் மலையக மக்களிடம் பாவனையில் உள்ளது. அங்கு அது ‘தப்பு வாத்தியம்’ […]
சில குறிப்புக்கள் அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பிறந்து மருத்துவம் பயின்று அமெரிக்க மிஷனரியிற் சேர்ந்து இலங்கையின் வடபுல யாழ்ப்பாணத்தில் 26 வருடங்கள் தன்னலமற்ற சேவை செய்த அமெரிக்க மருத்துவரான சாமுவேல் பிஸ்க் கிறீன் (Dr. Samuel Fisk Green) அவர்கள் மறைந்து 138 வருடங்கள் நிறைவு பெற்றமை அண்மையில் (28.05.2022) நினைவு கூரப்பட்டது. தமிழ்மொழி வரலாற்றில் மானிப்பாய் முக்கியத்துவம் பெறும் இரு சந்தர்ப்பங்களைக் குறிப்பிடுவது இவ்விடத்தில் பொருத்தமானது. 1. மானிப்பாய் அகராதி […]
மரம், கல், உலோக வார்ப்பு வேலைகளை உள்ளடக்கிய பாரம்பரியத் தமிழ் செதுக்குப் பாரம்பரியம் பல நூற்றாண்டு கால வரலாற்றை உடையவொன்றாக இலங்கை உள்ளிட்ட தென்னிந்திய பண்பாட்டு வட்டகையின் பல்வேறுபட்ட பிராந்தியங்களிலும் வழங்கி வருகிறது. பொதுவாக விஸ்வகர்ம குலத்தினர் எனச் சிற்ப சாஸ்திர நூல்களால் இனங்காணப்படுகின்ற சமூகக் குழுவினர் இச் செதுக்குத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூரில் பஞ்சகம்மாளர் என அழைக்கப்படுகின்ற இவர்கள் வெவ்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த பல்வேறு பட்டறைகளை அல்லது […]
மொழிபெயர்ப்புக் கட்டுரை : கென்னத் டேவிட் யாழ்ப்பாணத்தில் பெண்களைப் பற்றிய பண்பாடு, சமூகம், பொருளாதாரம் என்பனவற்றின் நோக்கிலான ஒரு விபரிப்பு யாழ்ப்பாணத்துப் பெண்களின் சமூகநிலை அவர்களைப் பற்றிய பண்பாட்டு வெளிப்படுத்தல்கள் என்ற இரு பிரச்சினைகளே இக்கட்டுரையின் பிரதான விடயப் பொருளாகும். இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியின் தமிழ்ப் பெண்கள் வெவ்வேறு பருவங்களில் எதிர்கொள்ளும் வாழ்வு, அவற்றோடு தொடர்புடைய சடங்குகள் என்பன கட்டுரையின் முற்பகுதியில் விபரிக்கப்பட்டுள்ளன. இவ்வாழ்க்கை வட்டத்தூடே பயணிக்கும் பெண்கள் வெவ்வேறுபட்ட […]
கிழக்கிலங்கை களுவன்கேணி வேடர்களை மையப்படுத்திய பார்வை கரையோர வேடர்கள் எனப்படுவோர் கிழக்கிலங்கையின் தமிழ் பேசும் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் இலங்கை வேடர்களினதும், இலங்கைத் தமிழர்களினதும் வழித்தோன்றல்களாகக் காணப்படுகின்றனர். அதே சமயம் இன்றைய சூழலில் இவர்களில் தூய (கலப்பற்ற) வேடர்களைக் காண்பது அரிதாகவே உள்ளது. வலிந்து ஏற்படுத்தப்பட்ட குடியேற்றத் திட்டங்கள் மற்றும் புவியியல் மாறுதல்களின் விளைவாக ஏனைய சமூகங்களுடன் வாழ்வியல் முறைகள் மற்றும் மரபு ரீதியில் கலப்புற்றவர்களாக இவர்கள் […]
நவீன காலத்தில் அச்சு முதலாளித்துவம் பெருக்கெடுத்த பெரும் பண்பாட்டுக் களங்களில் ஈழத்தமிழ் பண்பாடும் ஒன்றாகும். காலனியம் உருவாக்கிய சமூக, பண்பாட்டு தொழில்நுட்ப நிலவரங்களின் விளைவாக அது காணப்பட்டது. உலகின் முதலாவது அச்சிடப்பட்ட நூல் வெளிவந்து ஒரு நூற்றாண்டுக்குள்ளாகவே (1465) தமிழின் முதலச்சுப் புத்தகம் ‘தம்பிரான் வணக்கம்’ (1554) இல் கேரளத்திலிருந்து வெளியாகியது. இவற்றைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான அச்சிடப்பட்ட நூல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், துண்டுப்பிரசுரங்கள் எனப் பல்வேறு வடிவங்களிற் தொடர்ச்சியாக, தீவின் […]
யாழ்ப்பாணப் பாரம்பரிய வீடுகளிற் காணக் கிடைக்கக்கூடிய கட்டுமான அலகுகளில் ஒன்று சங்கடப் படலை எனும் வாயிற் கட்டட அமைப்பாகும். பேராசிரியர் கா.சிவத்தம்பி யாழ்ப்பாணத்தில் வீடு என்பது வளவுடன் கூடிய வேலியால் (மதிலால்) எல்லையிடப்பட்ட முழு மனையமைப்பு பரப்பாகும் என்பார். அதாவது வீட்டுக்கட்டடம், கொட்டில், கிணற்றடி, முற்றம் முதலியவற்றை உள்ளடக்கிய கட்டுமானங்களும், அதனைச் சூழ்ந்த எல்லையிடப்பட்ட பரப்பே யாழ்ப்பாணத்தில் வீடென்பதன் பரந்த பொருள் கொள்ளலாகும். இந்த எல்லையானது பாரம்பரியமாகப் பனையோலை அல்லது […]