Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

தேயிலையின் பசுமையும், சோர்வின் விளிம்பிலே நின்று உழைக்கும் தோட்டத்தொழிலாளரும்

19 நிமிட வாசிப்பு

இலங்கையின் மலைநாட்டில் அடியெடுத்து வைக்கும் எவருக்குமே அப்பிரதேசத்தின் இயற்கை வனப்பினைக்கண்டு அதில் தமது உள்ளத்தைப் பறிகொடுக்காதிருக்க முடியாது. பச்சைக்கம்பளம் விரித்ததுபோன்று மலைச்சரிவுகளிலே பரந்துவிரிந்து கிடக்கும் தேயிலைத் தோட்டங்களும், அங்குத் தேயிலைச் செடிகளிலே செழித்து வளர்ந்திருக்கும் பசுந்தளிர்களும், மலைமுகடுகளிலிருந்து பாய்ந்துவரும் அழகிய நீரோடைகளும், முகில்களால் அரவணைக்கப்பட்ட மலைச்சிகரங்களும் பார்ப்போருக்குப் பரவசமூட்டும் காட்சிகளாகும், இயற்கையின் இந்த எழில்கொஞ்சும் காட்சிகளிலிருந்து எமது பார்வையைச் சற்றுத்திருப்பி அங்கு தேயிலைச் செடிகளுக்கிடையே மழை, வெயில், பனி, காற்று […]

மேலும் பார்க்க

ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை – ஓர் அறிமுகம்

10 நிமிட வாசிப்பு

“மனிதன் கதைசொல்லி விலங்கு”. அன்றாடம் என்பது மனிதனுக்குக் கதைகள் இல்லாமல் நகர்வதில்லை. சோறுண்ண அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு அன்னையர் நிலாச்சோறு ஊட்டும் போது ஆரம்பிக்கும் கதையிலிருந்து, இறுதிமூச்சு பிரியும் வரை, மனிதவாழ்வு கதைகளின் பெருக்கு மீது தான் அலை பாய்ந்தபடி செல்கிறது. சாதாரணமாகப் பேசுவதையே, ‘கதைத்தல்’ என்று புழங்கும் ஈழத்தமிழர் மத்தியிலோ கதைகளுக்கு என்றுமே குறைவிருந்ததில்லை. இப்போதெல்லாம் அரசியல் செயற்பாடு, அடையாள முன்னிறுத்துகை, கருத்தியல் செயற்பாடு என்றெல்லாம்  கதை வேறொரு பரிணாமம் […]

மேலும் பார்க்க

பூர்வகுடிகள் தம் வாழ்வியல் அசைவுகளில் இயற்கையின் வகிபங்கு – பகுதி 2

10 நிமிட வாசிப்பு

காரை இலை – (தாவரவகைப்பாடு: Canthium parviflorum) பொதுத்தன்மை காரை இலை என்பது, பூர்வகுடிகளின் உணவுத்தாவரங்களின் பழந்தாவரங்களில் ஒன்றாகும். இது காரைச்செடி என்றும் அழைக்கப்படும் இதன் காய்கள் காரைக்காய் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு முட்செடியாகும். இதில் சாதாரண காரை, சோத்துக்காரை (சோற்றுக்காரை) எனும் வகைகள் உண்டு. இது ஒரு பூக்கும் தாவர இனமாகும். இதன் காய்கள் பிஞ்சுப் பருவத்தில் பச்சை நிறத்தில் காணப்படும். பிறகு முதிர்ந்து மஞ்சள் நிறமாகி […]

மேலும் பார்க்க

பூர்வகுடிகள் தம் வாழ்வியல் அசைவுகளில் இயற்கையின் வகிபங்கு – பகுதி 1

10 நிமிட வாசிப்பு

இயற்கையுடன் இணைந்து அன்றும், இன்றும், என்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற பழங்குடிகளின் பண்பாட்டு அசைவுகளில் உணவுமுறைகள் பிரதான இடத்தினை வகிக்கின்றன. அவ்வகையில் இன்றும் இலங்கைத் தீவின் கிழக்குக்கரையில் வசிக்கின்ற பூர்வகுடிகளிடம் காணப்படுகின்ற உணவுமுறைகள், அவற்றில் காணப்படுகின்ற மருத்துவக் குணங்கள், வழிபாட்டுப் பயன்பாடுகள் போன்ற நடைமுறை விளக்கி விபரிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். யாவரும் இயற்கையின் பிரதி பலன்களினை ஏதோ ஒரு வகையில் அனுபவித்துக் கொண்டு வருகின்றமை அறிந்த விடயம். ஆனால் பூர்வகுடிகளோ […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய முதல் மருத்துவர் : ஓர் அமெரிக்கர்

10 நிமிட வாசிப்பு

சில குறிப்புக்கள் மருத்துவர் ஜோன் ஸ்கடர்(Rev. Dr. John Scudder M.D., D.D.) மானுடம் மேம்பட வேண்டும் என்ற சிந்தனையும், சிந்தனையைச் செயற்படுத்தும் திடமும், தியாக மனப்பான்மையும் உள்ள, எண்ணிக்கையில் மிகக் குறைவான மனிதர்களே உலக வரலாற்றை மாற்றியமைக்கிறார்கள். உலகக் கிறிஸ்தவ மிசன்களது வரலாற்றில் முதல் மருத்துவக் கலாநிதியாக விளங்கியவர் டேவிற் லிவிங்ஸ்டன். இவர் ஆபிரிக்காவில் மருத்துவராகப் பணியாற்றச் செல்ல 20 வருடங்களுக்கு முன்பே மருத்துவக் கலாநிதி ஜோன் ஸ்கடர் […]

மேலும் பார்க்க

வடபகுதி – கடல்வளம்

10 நிமிட வாசிப்பு

வடமாகாணம் அதன் அமைவிடம், அதன் அமைப்புக் காரணமாக இயற்கையாகவே கடல்வளம் நிறைந்த ஒரு பகுதியாகவே விளங்குகின்றது. இப்பிரதேசத்தில் கரையோரங்களில் வாழுகின்ற மக்களின் பிரதான பொருளாதார நடவடிக்கைகளில் இக்கடல் வளத்துறையானது நீண்டகாலமாக பிரதான இடத்தினை வகித்துவருகின்றது. வடபகுதி ஐந்து நிர்வாக மாவட்டங்களை கொண்டிருக்கிறது. இவற்றுள் வவுனியா மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களும் (மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைதீவு) கடலோர எல்லைகளை கொண்டிருப்பதினால், அங்கு வாழ்கின்ற மக்கள் ஜீவனோபாயத் தொழிலாக மீன்பிடித் […]

மேலும் பார்க்க

தேயும் ஈழத் தமிழ்மொழி

10 நிமிட வாசிப்பு

  சந்தேகம் இல்லாமல் பண்பாட்டின் ஏனைய அலகுகள் யாவையும் போல பேசும் மொழியும் ஒரு மாறும் பொதுமைதான். ஆனால், அண்மைய ஒரு தசாப்த காலமாக ஈழத் தமிழ் மொழி சென்று கொண்டிருக்கும் மாறு திசையும் – அதன் வேகமும் – அந்த மாற்றத்தின் காரணங்களும் அதன் காவிகளும் – அது தொடர்பில் எம்மிடமுள்ள அசட்டையும் பண்பாட்டு நோக்கில் வேதனை தருமொன்றாக இருக்கிறது.  இன்று வரைக்கும் தமிழ் நாட்டில் பலரிடம் ‘ஈழத்தமிழ் […]

மேலும் பார்க்க

சாதிகளின் குடியிருப்புக்களின் நியமத் திட்டம் – பகுதி 3

10 நிமிட வாசிப்பு

மொழிபெயர்ப்புக் கட்டுரை : கென்னத் டேவிட் நியமப் பகுப்பாய்வு (Normative analysis) நியமத் திட்டம் உயர் குடித்திட்டம் படித்தர முறையிலான நல்லுறவு (hierarchical Amity) வர்த்தகத் திட்டம் படித்தர முறையிலான பயன் நோக்கு (hierachical Instrumentality) பொருத்தமான உறவுகளின் தெரிவு குறிப்பு : ‘Spatial Organization and Normative Schemes in Jaffna, Northern Sri Lanka’ என்ற தலைப்பில் 1973 ஆம் ஆண்டு Modern Ceylon Studies, 4 […]

மேலும் பார்க்க

பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த இந்தியர்களும், வெளிநாடுகளில் இந்திய சமூகங்களும் ஓர் ஒப்பீட்டுக் கண்ணோட்டம் – பகுதி 2

20 நிமிட வாசிப்பு

புலம்பெயர்ந்த இந்தியர்களின் இன்றைய நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த இந்தியரின் வழித்தோன்றல்களே இன்று உலகில் பல நாடுகளிலும் காணப்படும் இந்தியச் சமூகங்களாகும். மொறிசியஸ், கயானா, பிஜி ஆகிய நாடுகளில் பெரும்பான்மையினராகவும், வேறு சில நாடுகளில் பிரதான சிறுபான்மை இனமாகவும், இன்னும் சில நாடுகளில் மிகச்சிறிய சிறுபான்மைக் குழுக்களாகவும் அவர்கள் உள்ளனர். இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் சுமார் 7 வீதமாகவும், மலேசியாவில் 11 வீதமாகவும், சிங்கப்பூரில் 5.6 வீதமாகவும், கயானாவில் 50 […]

மேலும் பார்க்க

பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த இந்தியர்களும், வெளிநாடுகளில் இந்திய சமூகங்களும் ஓர் ஒப்பீட்டுக் கண்ணோட்டம் – பகுதி 1

10 நிமிட வாசிப்பு

இந்தியர்கள் புலம்பெயர்ந்து சென்று வெளிநாடுகளில் குடியேறியமைக்கு நீண்டதொரு வரலாறு உண்டு. தென் கிழக்காசிய நாடுகளுடனும் கிழக்காபிரிக்க கரையோரப் பிரதேசங்களுடனுமான இந்திய கலாசார, வர்த்தக உறவுகள் கிறிஸ்து சகாப்தத்திற்கு முந்திய காலத்திலிருந்தே இடம்பெற்று வந்துள்ளதாகத் தெரிகின்றது. இந்தியாவிற்குள்ளேயே ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களினால் இவ்வித குடிப்பெயர்வுகள் காலப்போக்கில் அருகி வந்தன. எனினும், அளவிலும் பண்பிலும் வேறுப்பட்ட புதியதொரு குடிப்பெயர்வு பத்தொன்பதாம் நூற்றாண்டில் இடம்பெற்றது. வரலாற்றின் முந்திய காலங்களில் குடிப்பெயர்ந்தோர் ஒரு மாபெரும் நாகரிகத்தினதும் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்