1890 ஆம் ஆண்டுகளிலிருந்தே மாக்ஸ்சிசச் சிந்தனைகள் இலங்கைக்கு அறிமுகமாயின. இக் காலப்பகுதியில் தொழிற்சங்க இயக்கங்களும் தொழிற்சங்கப் போராட்டங்களும் முனைப்புப் பெற்றதைத் தொடர்ந்து இலங்கைத் தொழிலாளர்கள் தங்களுக்கிடையிலான இனம், மதம், மொழி, சாதி, பிரதேசம் என்பவற்றைக் கடந்து வர்க்கங்களாக அணிதிரண்டனர். உதாரணமாக 1893 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை அச்சுத் தொழிலாளர் சங்கத்தைக் குறிப்பிட முடியும். இதில் சிங்களவர், தமிழர், பறங்கியர்கள் சங்க உறுப்பினர்களாகவும் தலைமைப்பீடத்தின் உறுப்பினர்களாகவும் இருந்தனர். இது போன்றே […]
பனை ஒரு காலத்திலே எங்கள் வாழ்வியலுடன் ஒன்றித்துப் போயிருந்தது. இலங்கை தேசம் பல்லினப் பனை மரங்களின் இருப்பிடமாக, வாழிடமாகத் திகழ்ந்திருந்ததன் சான்றுகளாக காலனித்துவ கால நூல்களே இன்று எம் மத்தியில் எஞ்சியிருக்கின்றன. பல பனை மர இனங்கள் இன்று அழிந்து போய்விட்டன. சில பேராதனைப் பூங்காவில் மாத்திரமே காணப்படுகின்றன. நாம் இன்றும் சாதாரணமாகக் காணும் பனை மரங்கள் ஓரிரு இனங்கள் மாத்திரமே. கடதாசியும் அச்சிடலும் அறிமுகமாக முன்னர், ஓலைச் சுவடிகளே […]
ஒரு வரலாறு என்பது எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது என்பதை சென்ற தொடரில் பார்த்த நாம், அதன் வழியே கீழைக்கரை வரலாற்றை எழுதத் தொடங்குவோம் என்று கூறியவாறு, போன இதழில் விடைபெற்றிருந்தோம். ஆனால் வரலாறுக்குள் நுழைவதற்கு முன்னர், நம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட “கீழைக்கரை” என்ற சொல்லை மிகச்சரியாக வரையறுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்தத் தொடரில் கீழைக்கரையை வரலாற்றுப் பார்வையில் ஆராயப்போகும் நாம், அப்போது தான் ஆய்வுப்பரப்புக்குள் திருத்தமாக நின்றபடி […]
ஒரு நாட்டினது பொருளாதார அபிவிருத்திக்கும் கல்வித்துறையில் அந்நாட்டில் ஏற்பட்டு வரும் சமூக – பொருளாதார முன்னேற்றங்களுக்குமிடையேயான நெருங்கிய தொடர்பு அண்மைக்காலங்களில் பல்வேறு ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்து வந்துள்ளது. சிறந்த கல்வியும், சிறந்த சுகாதார நிலைமைகளும் ஒரு நாட்டினது பொருளாதார அபிவிருத்திக்கு ஆக்கபூர்வமாகப் பங்களிப்பதோடு, தனிமனிதரது திறமைகளையும், ஆற்றல்களையும் மேம்படுத்துவதனூடாக அவர்களது சுயமுன்னேற்றத்திற்கும் உதவுகின்றன. கல்வியானது வறுமை, சனத்தொகை வளர்ச்சி, போசாக்கின்மை, சிசு மரணவிகிதம் என்பவற்றைக் குறைப்பதற்கும், வருமானம், உற்பத்தி, வாழ்க்கைத்தரம் […]
மருத்துவர் ஐடா சோபியா ஸ்கடரது மருத்துவப்பணியைக் கேள்வியுற்று 1928 ஆண்டு இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தி அவர்கள் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரிக்கு வருகைதந்து அவரது சேவையைப் பாராட்டுகிறார். ஐடா ஸ்கடர் 1912 இல் பெண்களுக்கென தனியான ஒரு மருத்துவக்கல்லூரியை ஆரம்பிக்கும் எண்ணத்தை வெளியிட்ட போது பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புக்களை எதிர்கொண்டார். அமெரிக்க மிசனரியினரும் ஆரம்பத்தில் அனுமதியளிக்கவில்லை. ஐடா ஸ்கடரின் பிரார்த்தனை 1918 இல் நிறைவேறியது. ஆசியாவில் பெண்களுக்கான முதலாவது […]
டச்சு அரசாங்கத்தின் இலங்கை ஆளுநரான யோன் சைமன்ஸ் 1704 ஆம் ஆண்டில், கரையார் சமூகப் பிரிவினரின் குறைகளைக் கேட்டறிந்தமை பற்றிக் குறிப்பிட்டோம். யோன் சைமனுக்கு அப்போது சாணார் என்ற இன்னொரு சமூகப் பிரிவினரும் தம் குறைகளை முறையீடு செய்திருந்தமை எமது கருத்தை வலுப்படுத்தும் இன்னொரு சான்றாக அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் பழைய குடியேறிகளான வேளாளர்களுக்கு அடுத்த படிநிலையில் தாம் இருப்பதாக சாணார் கூறியிருப்பதானது சுவாரசியமான ஒரு தகவலாகும். இவர்கள் தென்னிந்தியாவின் மலபார் […]
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் நாட்டில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சி காரணமாக கொழும்பை மையமாகக் கொண்ட தொழிலாளர் அமைப்புகள் உருவாகின. இதே காலப்பகுதியில் எழுச்சி அடைந்த பிரித்தானியக் காலனித்துவத்திற்கு எதிரான தேசிய எழுச்சியின் ஓர் அங்கமாகவே இது கருதப்பட்டது. தொழிலாளர் மத்தியிலான வாசிக்கும் அறிவு, அவர்களின் உரிமைகளை அறிந்து கொள்ளவும், அதனைப் பெற்றுக் கொள்ள குரல் கொடுக்கவும் அவர்களை தூண்டியது. ஏ. ஈ. குணசிங்க […]
தமிழர்கள் தங்களுடைய போராட்ட அரசியலை ஆரம்பித்து கிட்டத்தட்ட 70 வருடங்கள் எனலாம். இந்த எழுபது வருட காலத்தில் தமிழர்களின் அடிப்படைக் கொள்கையும் அதனை அடைவதற்கான போராட்ட வடிவங்களும் அணுகுமுறைகளும் பலவாறு மாற்றம் அடைந்து வந்திருக்கின்றன. இருந்தபோதிலும் இவை தமிழர்களுடைய அடிப்படை அரசியல் இருப்பை, அதனூடான அரசியல் உரிமைகளை எந்தளவுக்கு தமிழர்களுக்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றன என்றொரு கணக்கெடுப்புக்கு வருவோமாயின் நிச்சயமாக மறை பெறுமானத்தில் தான் எமது விடை கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இது […]
பெருகிவரும் நோய்நிலைகள் மனித சமுதாயத்துக்கு பெரும் சவாலாகவே இருக்கின்றன. இதற்குமேலாக தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையானது உடல் உள ரீதியில் பாரிய நெருக்குதலை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக உளநெருக்கீடுகள், தொற்றா நோய்கள், ஊட்டச்சத்துக் குறைபாடுகள் என்பனவற்றை நாளடைவில் அதிகரிக்க ஏதுவாகின்றது. இதற்கு தற்சார்பு பொருளாதாரம் பலவீனமான நிலையில் உள்ளமை மிகப்பெரிய காரணமாக உள்ளது. உடல் நலத்தைப் பொறுத்தவரையில் அருகி வரும் பாரம்பரிய உணவுமுறைகள் தொற்றா நோய்கள், ஊட்டச்சத்துக்குறைபாடுகள் மற்றும் நோய் எதிர்ப்புச்சக்தி […]
இன்னமும்கூட தமிழ்ச் சமூகத்தில் பெண்கள், ஆண் அடிமைத்தனம் அல்லது ஆணாதிக்க வாதத்தில் இருந்து மீள முடியாமல் இருப்பதற்கு அவர்கள் காலம் காலமாக பின்பற்றி வரும் இந்துமதமும் அதில் மிக தந்திரமாக நுணுக்கமான முறையில் பின்னப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் “பதிவிரதம்” என்ற மிகப் பிற்போக்கான எண்ணக்கருவும் காரணமாகும் என ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். ஆணாகப் பிறப்பதும் பெண்ணாகப் பிறப்பதும் ஆணுக்குப் பெண் அடங்கி கீழ்படிந்து நடக்க வேண்டும் என்பதும் நாம் பிறப்பால் பெற்று […]