Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

18ம் நூற்றாண்டில் வடஇலங்கையின் வேளாளர்கள் : நிலமும் உழைப்பும் சமூக உறவுகளும் – பகுதி 3

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: பேராசிரியர் சி. அரசரத்தினம் 1674 ஆம் ஆண்டு டச்சுக்காரர் யாழ்ப்பாண மாவட்டத்தின் நான்கு பிரிவுகளினதும் காணிகளின் உடைமையாளர்கள் பற்றிய பதிவினை மேற்கொண்டனர் என்பதை முன்னர் குறிப்பிட்டோம். இக்காணிப் பதிவு நடவடிக்கையின் பயனாக 12,000 குத்தகைக்காரர்களின் (Tenants) கணக்கை வேளாளத் தலைமைக்காரர்களால் காண்பிக்க முடியவில்லை. குத்தகைக்காரர்களின் பெயரில் தலைமைக்காரர் காணிகளைத் தமக்கு சொந்தமாக்கி பயனை அனுபவித்தனர் என்பது தெரியவந்தது. காணிப் பதிவு நடவடிக்கையினால் ஏற்பட்ட கசப்புணர்வைப் பயன்படுத்தி வேளாளத் […]

மேலும் பார்க்க

டொனமூர்க் குழுவினரின் சிபார்சுகளும் தமிழ் தலைவர்களின் நிலைப்பாடும்

22 நிமிட வாசிப்பு

மானிங் அரசியல் அமைப்பில் இருந்த குறைபாடுகளை நீக்கி இலங்கைக்குப் பொருத்தமான ஓர் அரசியல் அமைப்பினை உருவாக்கும் பொருட்டு 1927ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த டொனமூர் குழுவினர் இரண்டு முக்கிய சிபார்சுகளை முன்வைத்தனர். 1. கல்வித் தகமை, வருமானம் என்பவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்ட வாக்குரிமையினை நீக்கி 21 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை. 2. சட்ட நிருபண சபையில் இருந்து வந்த இனவாரி பிரதிநிதித்துவத்தினை நீக்கி அதற்குப் பதிலாக பிரதேச […]

மேலும் பார்க்க

சுயபுலம்பெயரிகள்: இலங்கைக்கு தாமே வந்த தோட்டத்தொழிலாளர்கள்

8 நிமிட வாசிப்பு

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய வம்சாவளித் தமிழரின் சனத்தொகையில் கணிசமான அளவுக்கு அதிகரிப்பு காணப்பட்டது. 1871 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 444 ஆக இருந்த இவர்களின் சனத்தொகை 1906 ஆம் ஆண்டு 4 லட்சத்து 36 ஆயிரத்து 622 ஆக அதிகரித்தது.  பின்னர் 1936 ஆம் ஆண்டு 6 லட்சத்து 92 ஆயிரத்து 540 ஆக அதிகரித்தது. இவர்களில் சுமார் 88 சதவீதத்தினர் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக […]

மேலும் பார்க்க

ஈழத் தமிழ் உணவு மரபுரிமை

7 நிமிட வாசிப்பு

கொழும்பிலுள்ள பிரபலமான ‘சைவ உணவகங்கள்’ (???) என அழைக்கப்படும்  மரக்கறி உணவுச்சாலையில் நண்பர்களுடன் உணவருந்திக் கொண்டிருக்கையில் ஈழத்தமிழர்களின் உணவுப் பாணியிற் சமைக்கப்பட்ட அல்லது பாரம்பரிய ஈழத்தமிழ் உணவுகளை இலங்கையில் எங்கு சாப்பிடலாம் என்ற ஒரு உரையாடல் எழுந்தது. அப்படியொரு இடம் இலங்கையின் தலைநகரத்திலோ – தமிழ் மக்களின் பூர்வீகமாக வாழ்ந்து வருமிடங்களிலோ இல்லை என்பது துரதிர்ஷ்டவசமான ஒரு உண்மை. சில வேளைகளில் அவ்வகைப்பட்ட அதிகாரபூர்வமான உள்ளூர் உணவுச்சாலை என சில […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்கள்

13 நிமிட வாசிப்பு

தமிழர்களின் உணவுப்பழக்கவழக்கங்கள் எனும்போது அவர்கள் வாழும் இடத்துக்கு ஏற்பவும், காலநிலை மாற்றங்களுக்கு ஏற்பவுமே அவர்களது உணவுப்பழக்கங்கள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் காணப்படுள்ளன. இடத்துக்கிடம் சிறுசிறு வேறுபாடுகளைக் கொண்டாலும் உணவுப்பழக்கவழக்கத்தின் அடிப்படைகள் ஒன்றாகவே இருந்துள்ளன. பாரம்பரிய உணவுப்பழக்க வழக்கங்கள் ஆனது பின்வருவனவற்றில் கூடுதலான கவனத்தை செலுத்தியிருக்கின்றன. 01. இயற்கைசார்ந்த உணவுகளாக இருத்தல் – இயற்கையோடு இணைந்த பசளைகள், பூச்சி கொல்லிகள், மாற்று பயிர்கள் போன்றவற்றுடன் காலநிலைகளுக்கு ஏற்ப பயிர்வகைகள், உணவுவகைகள் காணப்படல். பெரும்பொழுதுகளான […]

மேலும் பார்க்க

இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள் – பகுதி 1

15 நிமிட வாசிப்பு

இலங்கை தொடர்பாக அண்மைக் காலங்களில் வெளிவந்த வரலாற்று ஆய்வுகள், அரச வரலாற்றுப்பாட நூல்கள், தொல்லியற் கண்டுபிடிப்புக்கள் என்பன இலங்கையின் பூர்வீகமக்கள், பண்பாடு என்பவற்றின் தொடக்க காலத்தை விஜயன் வருகைக்கு முந்திய நாகரிகத்தில் இருந்து ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும் என்பதைக் கோடிட்டுக்காட்டுவதாக உள்ளன. பிரித்தானிய ஆட்சியிலிருந்து இலங்கையின் பூர்வீக வரலாறு தீபவம்சம், மகாவம்சம் முதலான பாளி இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுவந்துள்ளன. அவ்விலக்கியங்கள் கி.மு.6ஆம் நூற்றாண்டளவில் வடஇந்தியாவில் இருந்து விஜயன் தலைமையில் […]

மேலும் பார்க்க

பண்டைய இலங்கையில் போரும் நல்லிணக்கமும்!

8 நிமிட வாசிப்பு

கடந்த காலங்களில் ஒரு சில சந்தர்ப்பங்களைத் தவிர, நீண்ட காலமாக பல்வேறு கலாசார பின்புலம்கொண்ட, மக்கள்  அமைதியாக  சகவாழ்வு நடத்தும்   ஒரு முன்மாதிரியான நாடாக இலங்கை இருந்து வந்திருக்கிறது. தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான உறவுகள் ஒரு சில பக்கச்சார்பான  வரலாற்றாசிரியர்கள்  சித்திரிப்பதைப்போல  எப்போதும் அல்லது தொடர்ச்சியாக பகை முரண்பாடானதாக இருக்கவில்லை. பண்டைக் காலங்களில் அவ்வப்போது  இடம்பெற்ற தென்னிந்தியப் படையெடுப்புகளை உள்நாட்டில் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்மீது தொடுத்த யுத்தங்களாக சில […]

மேலும் பார்க்க

மலையக மக்களும் எட்டாக்கனியாக்கப்பட்ட கல்வியும்

9 நிமிட வாசிப்பு

கொழும்பிலும் மற்றும் நகர்ப்புறங்களிலும் இருந்ததை விட பன்மடங்கு விசாலமான தொழிலாளர் படையணி பெருந்தோட்டங்களிலேயே காணப்பட்டது. நகர்ப்புற தொழிலாளர் மத்தியில் குறைந்தபட்ச கல்வியறிவேனும் காணப்பட்டது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் சிறிதுகூட கல்வி அறிவு இருக்கவில்லை. 1893 ஆம் ஆண்டு முதல் 1923 ஆம் ஆண்டு வரை சுமார் எட்டு பெரிய வேலை நிறுத்தப் போராட்டங்கள் (1893 அச்சுத் தொழிலாளர், 1896 சலவைத் தொழிலாளர், 1906 கருத்தை ஓட்டுபவர்கள், 1912 புகையிரத தொழிலாளர்கள், […]

மேலும் பார்க்க

வடபகுதிக் கடலோடும் படகுகள்

4 நிமிட வாசிப்பு

2021 ஆம் ஆண்டு கணிப்பின்படி வடபகுதியில் மீன்பிடியில் ஈடுபடுத்தப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 14,674 ஆகும். இது இலங்கையின் மொத்தப்படகுகளின் எண்ணிக்கையில் சுமார் 50 சதவீதமாகும். இப்பிரதேசத்தில் OFRP  எனப்படும் வெளி இணைப்பு இயந்திரம் பூட்டப்பட்ட கண்ணாடி நாரிழையிலான படகுகளே கூடுதலாக மீன்பிடியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆழ்கடலில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற பலநாட்கலங்களின் எண்ணிக்கை (IMUL) மிக குறைவாகவே உள்ளன, ஆக 150 பலநாட்கலப் படகுகளே பயன்படுத்தப்பட்டு வருவதாக தரவுகள் காட்டுகின்றபோதிலும், அந்தப்படகுகள் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணமும் மருத்துவ – அறிவியல் கற்கைகளின் பரவுகையும்!

7 நிமிட வாசிப்பு

மருத்துவர் ஜோன் ஸ்கடரை அடுத்து அமெரிக்காவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த 2 ஆவது  தகுதிவாய்ந்த மருத்துவர் நேத்தன் உவோட் ஆவர். இவர் அமெரிக்காவில் நியூ ஹம்ப்சயரில் உள்ள பிளைமோத் என்னுமிடத்தில் 1804 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி பிறந்தார். பௌடுன் மருத்துவக் கல்லூரியில் (Bowdoin Medical College) பயின்று மருத்துவப் பட்டம் பெற்று அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். வெளிநாடு சென்று மருத்துவ மிசனில் பணியாற்ற விரும்பி […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்