மருத்துவர் கிறீனது 2 ஆவது வருகை மருத்துவர் கிறீன் 1862 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் திகதி பிறதேசங்களுக்கு மிஷனரிகளை அனுப்பும் அமெரிக்க மிஷன் சங்கத்துக்கு (ABCFM) எழுதிய கடிதத்தில் தான் யாழ்ப்பாணம் புறப்படுவதற்குத் தயாராகி இருந்தமையைத் தெரிவித்திருந்தார். கப்பல் புறப்படுவதற்காக 5 மாதங்கள் வரை கிறீன் காத்திருக்க வேண்டியிருந்தது. நியூயோர்க்கிலிருந்த கிறீன், 82 வயதான தந்தையிடம் இறுதி பிரியாவிடை பெறுவதற்காக கிறீன் கில்லிற்குச் (Green Hill) […]
கிழக்கிலங்கை, இலங்கையில் முஸ்லிம்கள் செறிந்த வாழ்கின்ற பிரதேசமாகும். 2012 ஆண்டு சனத்தொகைக்கணக்கெடுப்பின் பிரகாரம் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே அதிக முஸ்லிம் சனத்தொகை சதவீதம் காணப்படுகின்றது[i]. இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களின் பண்பாட்டுக்கூறுகள் மட்டக்களப்புத் தமிழர்களின் பண்பாட்டுக்கூறுகளோடு பல விடயங்களில் ஒத்ததாகவும் வேறுபட்டும் காணப்படுவதோடு பிற முஸ்லிம் பிராந்திய கலாசாரக்கூறுகளிலிருந்தும் தனித்துவமானதாக காணப்படுகின்றது. கிழக்கில் தொன்றுதொட்டு வாழ்ந்துவரும் தமிழர்களோடு இஸ்லாமிய மதநம்பிக்கை கொண்ட மக்கள் ஆரம்பகாலங்களில் கொண்ட திருமணபந்த உறவினாலும், வங்காள […]
அறிமுகம் கடந்த பல நூற்றாண்டுகளாகப் பாரம்பரிய விவசாய முறைகளைப் பயன்படுத்தி வளர்ந்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சுகாதாரமான உணவை, எமது விவசாயப் பெருமக்களால் அனைத்து மக்களுக்கும் வழங்க முடிந்தது. எனினும் நான்காம் அத்தியாயத்தில் குறிப்பிட்டது போல் 18 ஆம் நூற்றாண்டில் மனிதப் பெருக்கத்தின் அசுர வளர்ச்சியானது மிகப் பயங்கரமான உணவுப் பஞ்சம், இடப்பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, காலநிலை மாற்றம், நாடுகளுக்கு இடையான போட்டி எனப் பல விளைவுகளை ஏற்படுத்தியது. பாரம்பரிய முறைகள் […]
கோப்பியின் பரிதாப வீழ்ச்சியும் மாற்று முயற்சிகளும் கோப்பி நோய் சுனாமி போல் ஓரிரவுக்குள் கோப்பிப் பெருந்தோட்டத்தை அழித்துவிடவில்லை. அதன் பரவல் மெதுவாக ஆனால் நிச்சயமானதாக நடைபெற்றது. கோப்பிப் பெருந்தோட்ட உற்பத்தி முற்றாக அழிவதற்கு சுமார் 20 வருடம் பிடித்தது. பலரும்அறியாத ஒரு விடயம் என்னவென்றால் இந்நோய் 1861 ஆம் ஆண்டு கென்யாவில் வளர்ந்த காட்டுக் கோப்பியில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆயினும், ஸ்டூவர்ட் மெக்கூக் மற்றும் ஜான் வாண்டர்மீர் ஆகிய இருவரின் […]
அது 1967ஆம் ஆண்டு. பேராசிரியர் சி.பத்மநாதன் யாழ்ப்பாண வைபவமாலை நூலைப் பதிப்பிப்பதற்காக அதன் சுவடிகளைத் தேடிக்கொண்டிருந்தபோது இலண்டனிலுள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் ஒரு சுவாரசியமான கையெழுத்துப் பிரதியொன்றைக் கண்டடைந்தார். அப்பிரதி “நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு” என்று பெயரிடப்பட்டிருந்தது. அப்பெயர் கொண்ட நூல் பற்றிய உரையாடல் எதுவும் அவருக்குத் தெரிந்தவரை ஈழத்துப் புலமைத்தளத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கவில்லை. எனவே அந்த மைப்பிரதியைக் கவனமாக ஆராய்ந்த அவர், அந்நூலை சிறு முன்னுரையுடன் 1976ஆம் ஆண்டு வெளியான அனைத்துலகத் […]
மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக (கி.மு 7 தொடக்கம் கி.மு 3ஆம் நூற்றாண்டுகள் வரை) குறிஞ்சி, முல்லை, நெய்தல் ஆகிய திணைகளின் இயற்கை விளைபொருட்களது வணிகமும் – வணிக எழுச்சியுடன் கைகோர்த்தவாறு கைத்தொழில் விருத்தியும் ஏற்படுத்தித் தந்த வாழ்வியல் செழிப்பு தமிழகத்தில் வீறுமிக்க பண்பாட்டு எழுச்சி ஏற்பட வழிகோலியது. தமது ஆள்புலத்தை விரிவாக்கும் ஆக்கிரமிப்பு யுத்தங்களை எவராலும் மேற்கொள்ள இயலாத வாழ்நிலை காரணமாக திணைகள் ஒவ்வொன்றுக்கும் இடையே சமத்துவமான பரிமாற்றங்கள் நிலவின; […]
மன்னர் காலத்திற்குப் பின்னர் “நாம் தமிழ் இனம்” என்ற பிரக்ஞை தமிழ்நாட்டில் சுதந்திர இயக்கப் போராட்டங்களுடன் இணைந்தே மீண்டும் எழுச்சி பெற்றது. இதன் பிரதிபலிப்புகள் இலங்கையிலும் காணப்பட்டன. இத்தகு எழுச்சி தமிழ்நாட்டில் பார்ப்பனருக்கு எதிரான எழுச்சியுடன் ஆரம்பமாகிறது. இவ்வெழுச்சிக்குக் காரணமாக “தமிழன்” மற்றும் “திராவிடன்” என்ற மனவெழுச்சி ஏற்படுத்திய பிரவாகம் இருக்கிறது. இந்த மனவெழுச்சியுடன் இணைந்து பிராமணர்களுக்கு எதிரான “சுயமரியாதை” இயக்கம் 1925 ஆம் ஆண்டு ஆரம்பமானது. இந்த எழுச்சியின் […]
இங்கு குறிப்பிடப்படும் தாவர உணவு வகைகளின் குணங்கள் அவற்றின் தனியான குணங்களாகும். இவற்றினை நாம் உணவாக்கிக் கொள்ளும்போது அவற்றின் குணங்களில் மாற்றங்கள் ஏற்படக் கூடியவாறே எமது பாரம்பரிய உணவுப்பழக்கங்கள் அமைந்துள்ளன. உணவுப்பொருட்கள் எல்லாவற்றுக்குமே இவை பொருந்தும். உணவுப் பொருட்களில் உள்ள நற்குணங்களை அதிகரிக்கவும், ஒவ்வாத குணங்களை இல்லாமல் செய்வதற்கு அல்லது குறைப்பதற்கும் ஏற்றவாறே நமது பாரம்பரிய உணவுத் தயாரிப்பு முறைகள் அமைந்துள்ளன. ஏற்கனவே குறிப்பட்டதுபோல் திரிதோச சமதிரவியங்கள் உணவு வகைகளில் […]
இடமொன்றின் தெரிந்தெடுக்கப்பட்ட இயல்புகளைக் குறியீட்டு அடிப்படையில் காட்டுவதே நிலப்படம் ஆகும். இது பெரும்பாலும் மட்டமான தளத்தில் வரையப்படுகின்றது.1 நிலப்படங்கள், அவை வரையப்பட்ட காலத்தின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்துவனவாக உள்ளன. நிலப்படங்கள் முதன்மையாக, முழு உலகினதோ அதன் பகுதிகளினதோ புவியியலை விளக்குவனவாக இருந்தபோதும், அவை அப்பகுதிகளின் வரலாறுகளைப் புரிந்துகொள்வதற்கும் உதவுகின்றன. “நிலப்படங்கள் சிறப்பான வரலாற்று மூலங்கள். பழைய நிலப்படம் ஒன்று, அதன் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஒரு கதையை உள்ளடக்கியிருக்கலாம். வரலாற்று நிலப்படங்களின் […]