வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்தே, குழுக்களாக மனிதர்கள் கூடி வாழத் தொடங்கிய காலத்தில் இருந்தே, மனித இனக்குழு ஒன்றின் சகல முன்னெடுப்புக்களிலும் பெண்களின் பங்களிப்பே முக்கியமானதாக இருந்திருக்கிறது. தத்தமது கூட்டத்தை வழிநடத்துபவளாக பெண்ணே இருந்திருக்கிறாள். உடல் வலுவிலும், உணவுத்தேடலுக்கான உழைப்பிலும், ஆணுக்குச் சமமாகவும் சில தருணங்களில் ஆணை விஞ்சியே பெண்ணின் செயற்பாடுகள் இருந்துள்ளன. “வருவிருந்து அயரும் விருப்பினள்” (புறம்.326:12) எனும் புறநானூற்றுப் பாடல் வேட்டைச் சமூகத்தில் உணவுப்பங்கீடு செய்வதில் அவளுக்கிருந்த நிர்வாகத்திறனின் தொடர்ச்சியைப் புலப்படுத்துவதாகக் காணப்படுகிறது. […]
இலங்கையின் பூர்வீக மக்கள், அவர்களது பண்பாடு தொடர்பாகக் கூறப்பட்டு வந்த நீண்ட பாரம்பரிய வரலாற்று நம்பிக்கைகள் சமீபகாலத் தொல்லியல் ஆய்வுகளால் மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம். விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் நாகரிகயுகம் தோன்றிவிட்டதாகக் கூறும் இலங்கையின் மூத்த தொல்லியல் அறிஞர்களில் ஒருவரான பேராசிரியர் சேனகபண்டாரநாயக இலங்கை மக்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் விஜயன் வருகைக்கு முந்திய பண்பாடுகளில் இருந்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனக் கூறுகின்றார். இதற்கு, விஜயன் தலைமையில் வடஇந்தியக் குடியேற்றம் நடந்தாகக் […]
இந்த நாட்டை தொடர்ச்சியாக ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இவர்களுடன் கூட்டு அரசாங்கத்தில் ஈடுபட்ட பிரதான இடதுசாரிக் கட்சிகள்; இவைகள் அனைத்துமே இனவாதத்தைக் கக்கித்தான் இந்த நாட்டை ஆட்சி செய்தன. இவற்றுக்கு மேலதிகமாக அதிதீவிர இடதுசாரித்தத்துவம் என்று கூறிக்கொண்ட, மார்க்சிய-லெனினிய-மாவோவிய-சேகுவேராக் கொள்கைகளை துல்லியமாகக் கடைப்பிடிக்கிறோம் என்று கூவிக்கொண்டு செங்கொடியை தூக்கிப்பிடித்துக் கொண்டுவந்த ஜே. வி. பி என்றழைக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி, இந்திய வம்சாவழித் தமிழர்களை […]
உணவில் யாழ்ப்பாணத்து பழங்கள் எமது நாட்டு தட்பவெப்பநிலைக்கு பழவகைகள் இன்றியமையாததாக இருக்கின்றன. குறிப்பாக பல்வேறு பருவ காலநிலைகளைக் கொண்ட எமது நாட்டில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காலநிலைக்கும், காலநிலை மாறுபாட்டால் ஏற்படக்கூடிய உபாதைகளுக்கும் ஏற்ப பழவகைகள் பருவ காலங்களில் இயற்கையாகவும் விவசாயத்தின் மூலமாகவும் கிடைக்கின்றன. கூடுதலாக வெப்பகாலங்களில் பழங்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. மாம்பழம், பலாப்பழம், விளாம்பழம், அன்னமுன்னாப்பழம், சீதாப்பபழம், ஈச்சம்பழம், வத்தகப்பழம், வெள்ளரிப்பழம், இலந்தைப்பழம், வில்வம்பழம், நாவற்பழம், பனம்பழம், நாரைத்தோடை, கொய்யாப்பழம், […]
அமெரிக்க இலங்கை மிசனரியினர் (ACM) 1879 ஆம் ஆண்டின் காலாண்டுக் கூட்டத்தொடர் ஒன்றில் மானிப்பாய் மருத்துவக் கல்லூரி தொடர்பில் சில தீர்மானங்களை மேற்கொண்டனர். அதிலே மருத்துவக் கல்லூரிக்கு ஒரு வகுப்பில் ஆகக் கூடுதலாக 15 மாணவர்களையே அனுமதிப்பதென்றும் ஒவ்வொரு மாணவரிடமும் மாதாந்தம் 3 ரூபாவை பள்ளிக் கட்டணமாக அறவிடுவதென்றும் தீர்மானித்தனர். இதற்கமைய ஒவ்வொரு மாணவரும் வகுப்பில் அனுமதிக்கப்படும் போது முற்பணமாக 25 ரூபாவை கட்டணமாகச் செலுத்துமாறு கேட்கப்பட்டனர். இந்நிபந்தனைகளுக்கு அமைவாக […]
பூர்வ சரித்திரம் சொல்வனவற்றில் புறச்சான்றுகளைக் கொண்டும் ஊகத்தின் அடிப்படையிலும் ஏற்கத்தக்க விடயங்களை நாட்டார் தொன்மங்கள் என்ற ரீதியிலும், சிலவற்றை வரலாற்றுண்மைகள் என்ற ரீதியிலும் வகைப்படுத்திப் பார்க்கலாம். அவற்றில் முதலாவது, கூத்திக மன்னனால் மட்டுக்களப்பு எனும் அரசு உருவான கதை. சேனன், கூத்திகன் (237 – 215) என்போர் சேர நாட்டுக் குதிரை வணிகர் மைந்தர் என்பது மகாவம்சக்கூற்று. இலங்கையின் பாளி மொழி இலக்கியங்களில் தென்னகத்தவராக இனங்காணப்பட்டுள்ள அரசர்களின் பெயர்களை அக்காலச்சூழலுக்கு […]
கூட்டுறவு மூலம் பாலுற்பத்தியில் தன்னிறைவு கண்ட ஒரு மக்கள் அமைப்பின் பெயர்தான் அமுல். இந்தியாவில் அமுல் என்ற பெயரும் அதன் விளம்பரச் சுட்டியான ஒரு குழந்தையும் மிகவும் பிரபலமானவை. அமுல் என்ற பெயரைக் கேட்டவுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாயில் எச்சில் ஊறும். அமுல் என்றால் இந்தியாவின் பாற் பொருட்கள் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கேடா மாவட்டத்தின் ஆனந்த் நகரினை தலைமை இடமாக கொண்டு செயற்படும் […]
ஆங்கில மூலம் : கலாநிதி சரத் அமுனுகம கத்தோலிக்க இயக்கத்திற்கு எதிர்ப்பு இலங்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களை ஈர்ப்பதற்கு கத்தோலிக்கமும், கிறீஸ்தவப் பிரிவுகளும் போட்டியிட்டன. இது பௌத்த பிக்குகளின் மனதில் பாதுகாப்பற்ற உணர்வை தோற்றுவித்தது. 1950 களில் பௌத்தர்கள் கத்தோலிக்க மதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். அக்காலத்தில் “Catholic Action” (கத்தோலிக்க இயக்கம்) என்ற அச்சுறுத்தல் பற்றிய பேச்சு அரசியலில் முதன்மை பெற்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி பௌத்தர்களின் பாதுகாவலன் […]
17 ஆம் நூற்றாண்டில், போர்த்துக்கேயரின் ஆதிக்கத்தின் கீழிருந்த இலங்கையின் கரையோரப் பகுதிகள் படிப்படியாக ஒல்லாந்தரின் ஆளுகைக்குள் வந்தன. இறுதியாக, 1658 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியப் பகுதிகளை ஒல்லாந்தர் கைப்பற்றினர். ஒல்லாந்தர் ஆட்சிக் காலத் தொடக்கத்தில் வரையப்பட்ட இலங்கைத் தீவின் நிலப்படங்களில் போர்த்துக்கேயர் கால நிலப்படங்களின் தாக்கம் காணப்பட்டபோதும், ஒல்லாந்தர்கால நிலப்படங்கள் தரத்திலும் துல்லியத்திலும் முன்னேற்றமடைந்து வந்தன. 1658 இற்கு முந்திய ஒல்லாந்தரின் இலங்கைப் படங்கள் யாழ்ப்பாண இராச்சியத்தை ஒல்லாந்தர் […]
ஆங்கில மூலம் : ஜயம்பதி விக்கிரமரட்ன பெரிய வெள்ளி உடன்படிக்கை (GOOD FRIDAY AGREEMENT) வட அயர்லாந்தின் உல்ஸ்ரர் யூனியனிஸ்ட் கட்சி (ULSTER UNIONIST PARTY) அப் பகுதியின் பெரும்பான்மை கட்சியாகும். அது சமாதானச் செயல் முறையில் பங்கேற்றது. பிரித்தானியாவும் அயர்லாந்தும் ஒரு தீர்வைக் கொண்டு வரும் எனவும் தனது பங்கேற்பு அதற்கு உதவும் என்றும் இக் கட்சி நம்பியது. ஆனால் அயர்லாந்தின் இரண்டாவது பெரிய கட்சியான ஜனநாயக யூனியனிஸ்ட் […]