வடக்குப் பிராந்தியத்தின் புவியியல் அமைவிடம் அதன் காலநிலையைக் கட்டுப்படுத்துகின்றது. அந்த வகையில் பின்வரும் காரணிகள் வடக்குப் பிராந்தியத்தின் காலநிலையைக் கட்டுப்படுத்துகின்றன. 1. தீபகற்ப தோற்றப்பாடு : வடக்குப் பகுதி மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டுள்ளது. மேற்கில் அரபிக் கடல் உள்ளது. வடக்கு எல்லை பாக்கு ஜலசந்தி, கிழக்கு எல்லை வங்காள விரிகுடாவாக உள்ளது. வடக்கு மாகாணத்தின் தீபகற்ப நிலவமைப்பு காரணமாக வடக்கு பிராந்தியத்தின் வளி வெப்பநிலை, கடல் நீரின் அருகாமையால் […]
ஒரு சமூகத்தில் உற்பத்தியும் செல்வமும் உபரியாகின்ற போது அந்த சமூகத்தில் அதிக செல்வத்தை வைத்திருக்கின்ற தனிநபர்கள் செல்வாக்குப் பெற்று ஆதிக்க வர்க்கமாக உருவெடுக்கிறார்கள். அப்படி ஆதிகாலத்தில் தோன்றிய முதல் செல்வாக்கான நபர்களிலிருந்தே நிலக்கிழார்களும் பின் அரசர்களும் தோன்றினார்கள் என்பதை போன அத்தியாயத்தில் பார்த்தோம். அப்படி இலங்கையின் வடபாதியில் தோன்றிய தொல்லரசு அனுராதபுரியைத் தலைநகராகக் கொண்டிருந்தது என்பதையும் அந்த முதல் அரசை உருவாக்கிய மூதாதையராக விசயன் என்ற இலாட நாட்டினன், சிங்களன் […]
தமிழ் மக்களாக இயங்கும் எமது வாழ்வியலில் அடித்தளமாக அமைந்து தாக்கம் செலுத்தி வருகின்ற பணபாட்டுக் கோலங்களின் தொடக்கம் – மாற்றங்கள் – விருத்திகள் என்பவற்றை இந்தத் தொடரில் பார்த்து வருகின்றோம். ஏற்பட்டிருக்கும் ஒரு முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டுமாயின் அதன் தொடக்கம் – ஊடுபாவு – முடிவிடம் என்பவை கண்டறியப்படுதல் அவசியம். ஒன்றுக்கு மேற்பட்ட முடிச்சுகள் உள்ள நிலையில் அடிப்படையான மூலத்தை அவிழ்ப்பதனூடாக ஏனையவற்றையும் மீட்டெடுக்கும் இலகு வழியைக் கண்டடைவோம். எமக்கான […]
கோடை காலத்தில் கறவை மாடுகள் பல்வேறு அசெளகரியங்களைச் சந்திக்கின்றன. இந்த நாட்களில் ஏற்படும் அதிகரித்த வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக ஏற்படும் நீர் மற்றும் தீவனத்தின் பற்றாக்குறை கால்நடைகளின் வழமையான உடலியல் தொழிற்பாடுகளை கடுமையாகப் பாதிக்கின்றன. இவற்றின் காரணமாக பால் உற்பத்தி குறைதல், இனப்பெருக்க ஆற்றல் குறைதல், உடல் எடை குறைதல் போன்ற துர் விளைவுகள் ஏற்படுகின்றன. இதனால் இவற்றை நம்பி வாழும் பண்ணையாளர்கள் பொருளாதார ரீதியாக பின்னடைவைச் சந்திக்கின்றனர். […]
ஆங்கில மூலம் : G.B கீரவல்ல கிராமத்துத் தொழிலாளர்களையும் விவசாயக் குடியான்களையும் விட உயர் வருமானத்தைப் பெறும் வர்க்கமான கிராமத்துக் குட்டி முதலாளித்துவ வர்க்கம், நகரத் தொழிலாளர் வர்க்கத்தோடு கொண்டுள்ள பிணைப்புகள் கிராம, நகர உறவுகளில் முக்கியத்துவம் பெற்றன. கிராமத்தில் சொத்துக்களை வைத்துக் கொண்டு நகரத்தில் தொழில் செய்யும் தொழிலாளர்களின் வர்க்க உணர்வு நிலை மட்டுப்பாடுடையதாக விளங்கியது. இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தின் பெரும்பகுதியினர் குட்டி முதலாளித்துவ உணர்வு நிலையை உடையவர்களாகக் […]
இருபதாம் நூற்றாண்டில் சோனக இனத்துவ அரசியல் நவீன காலத்தில், கேரளா மற்றும் தமிழக முஸ்லிம்கள் – அவர்களுக்கிடையில் கலாச்சார பன்முகத்தன்மை, உள்ளக சமூகப் பிரிவுகள் இருந்தபோதிலும் – தாங்கள் ‘யார்’ என்பதில் ஒரு நியாயமான பாதுகாப்பு சார்ந்த அச்சத்தை உணர்ந்தனர். இதற்கு மாறாக, இலங்கைச் சோனகரின் முன்னணி சமூகத் தலைமைகள், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, அவர்களின் உயிரியல் – கலாசாரத் தோற்றம் மற்றும் வளர்ந்து வரும் இனக்குழும […]
“பிறப்பென்னும் பேதைமை நீங்கச்சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு”-திருக்குறள் 358- மு.வரதராசனார் விளக்கம் : பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு. இன்றைய உலகில் தொழில்நுட்ப மாற்றங்கள் மிகவும் துரிதப்பட்டுக்கொண்டு வருகின்றது. முதலாவது தொழில்துறை புரட்சி (Industrial Revolution) 1800ம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் 1900ம் ஆண்டுகளின் முற்பகுதிகளிலும் தொடங்கி உலகில் பெரும் மாற்றங்களை உருவாக்கியது. 1900ம் ஆண்டுகளின் பின் பகுதிகளில் […]
தொடக்கக் குறிப்புகள் இலங்கையின் கடந்த அரைநூற்றாண்டு கவனங்கொள்ளத் தவறிய முக்கியமான துறைகளில் ஒன்று சூழலியல். இன முரண்பாடும் பொருளாதாரச் சிக்கல்களும் சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் சமூகப் பொருளாதார அரசியலரங்குகளை ஆக்கிரமித்து நின்றன. இப்பின்புலத்தில் நமது இயற்கையும் வளங்களும் அபிவிருத்தியின் பெயரால் கொள்ளையடிக்கப்பட்டன. விவசாய மையப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டிருந்த நாடு சேவை மையப் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தது. வளமான மண்ணும் கடலும் தந்திருக்கக் கூடிய பயன்களை வினைத்திறனுடனும் பேண்தகைமையுடனும் தக்கவைக்க […]
ஆங்கில மூலம் : G.B கீரவல்ல வித்தியோதயாப் பல்கலைக்கழக வளாகத்தின் பிக்கு மாணவர் விடுதியில் 1971 ஏப்ரல் 2 ஆம் திகதி ‘ஜனதா விமுக்தி பெரமுன’ என்னும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் ‘பொலிட் பீரோ’வின் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் 1971 ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி பி.ப 11.30 மணிக்கு நாட்டில் உள்ள எல்லா பொலிஸ் நிலையங்கள் மீதும் ஆயுதப் படைகளின் நிலைகள் மீதும் தாக்குதல் […]
கலாநிலையம் நூலகம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 1920 ஆம் ஆண்டு ஆசிரியராகச் சேர்ந்து 1958 வரை பணியாற்றியவர் கலைப்புலவர் க. நவரத்தினம். தன்னிடமிருந்த பெரும்பாலான நூல்களைக் கொண்டு ‘கலாநிலையம்’ என்ற பெயரில் ஒரு அறிவுத்தேடலுக்கான கழகமாக, ஒரு நூலக நிறுவனமாக உருவாக்கி, 1930 டிசம்பர் மாதம் 5ம் திகதி அதனைத் தொடக்கிவைத்தார். யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையின் மேற்கில் உள்ள பன்றிக்கோட்டுப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த மனையொன்றில் ‘கலாநிலையம்’ இயங்கத் தொடங்கியது. […]