“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின்”-திருக்குறள்- மு. வரதராசனார் விளக்கம் : பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும். ஓர் ஆரம்ப நிறுவனத்தை அமைக்க முதலில் ஓர் சிந்தனை (Idea) தேவை. இண்டாவது அந்தச் சிந்தனையை உற்பத்தியாக உருவாக்கும் தகுதி கொண்ட குழுவினர் (People/Team) தேவை. பின்பு அந்த உற்பத்திக்கான சந்தை (Market) அவசியம். இவை […]
ஆங்கில மூலம் : டேவிட்.ஆர். கமரன் கனடா ஒரு பாராளுமன்ற ஜனநாயக முறையை உடைய நாடு. கனடாவின் அரசுத் தலைமையாளாக பிரித்தானியாவின் எலிசபெத் II அரசி விளங்குகிறார். அவரின் பிரதிநிதியான ஆளுநர் நாயகம் சமஷ்டி அரசின் பிரதிநிதியாக விளங்குவார். அவ்வாறே மாகாணங்களில் ஆளுநர்களும் அரசியின் பிரதிநிதியாக உள்ளனர். கனடாவின் புவி இடப்பரப்பு 9 மில்லியன் சதுர கிலோமீற்றர் ஆகும். இப் புவிப்பரப்பு மூன்று நேர வலயங்களை (TIME ZONES) உள்ளடக்கியது. இந்நாட்டின் […]
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வாழ்வாதாரத் தேவையின் ஒரு பகுதியை நிறைவு செய்துவரும் நன்னீர் மீன்பிடித் தொழில்துறையானது நன்னீர் மீன்பிடி நிலைகளை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தியடைந்து வருகிறது. வடக்கு மாகாணத்தில் காணப்படும் நன்னீர் மூலங்களாகவுள்ள பாரிய மற்றும் நடுத்தர குளங்களும் 1,740 சிறிய குளங்களும் 1,605 சிறு குட்டைகளும் 60 அணைக்கட்டுக்களும் நன்னீர் மீன்பிடியை பெரிய, சிறிய அளவுகளில் மேற்கொள்ளக் கூடியதாகக் காணப்படுகின்றன. குறிப்பாக வடமாகாணத்தில் 15,455 சதுர கிலோமீற்றர் […]
கறவை மாடு வளர்ப்பில் இனப்பெருக்க முகாமைத்துவம் மிக முக்கியமானது. ஒரு மாடு சினைப்பட்டு கன்றை ஈனும் போதுதான் பால் கிடைக்கும். வளர்ப்பதற்கு கன்றுகள் கிடைக்கும். எனவே கறவை மாடு வளர்ப்பின் முக்கிய அடிப்படையே மாடுகள் சினைப்படுவது தான். இயற்கையில் மாடுகள் சினைப்படுதல் அவ்வளவு இலகுவானது கிடையாது. பல காரணிகளால் அச் செயற்பாடு தடைப்படுகின்றது; தாமதமடைகிறது. முன்னைய காலத்தில் இயற்கையில் பசுமாடுகளும் காளைகளும் ஒருங்கே காணப்பட்டு ஒரு விகிதத்தில் கன்றுகள் பிறந்தன. […]
இலங்கைத் தீவின் அரசியலை அதன் கொலனித்துவக் காலத்திலிருந்து, சிங்களப் பெருந்தேசியவாதத்தின் எழுச்சி, இன முரண்பாடு, தமிழர்களின் விடுதலைப் போராட்டம், போர்கள், சமாதான முயற்சிகள், போருக்குப் பின்னான நிலைமைகள், சமகாலம் என பெரும் பரப்பினை இந்நூல் பேசுகின்றது. இலங்கைத்தீவின் இன முரண்பாடுடன் தொடர்புடைய உள்நாட்டுத்தரப்புகள், பிராந்திய சக்திகள், தமிழ் டயஸ்போறா, நோர்வே உட்பட்ட சர்வதேச சக்திகள் என அனைத்துத் தரப்பினரைப் பற்றியதும் நோக்கியதுமான விமர்சனங்களும் கணிசமாக உள்ளன. நூலாசிரியர்: ஒய்வின்ட் புக்லறூட் […]
இந்தத் தொடரின் சென்ற கட்டுரையில் லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பிலுள்ள யாழ்ப்பாணக் கட்டளையகத்தை முழுமையாகக் காட்டும் நிலப்படத்தின் சில அம்சங்கள் குறித்து ஆராய்ந்தோம். அதன் தொடர்ச்சியாக, இந்தக் கட்டுரையில் மேற்படி நிலப்படத்தில் வேறு சில அம்சங்களைப் பற்றிப் பார்க்கலாம். கோட்டைகளும் நகரங்களும் இந்த நிலப்படத்திலும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் யாழ்ப்பாணக் கோட்டை, ஆனையிறவுக் கோட்டை, பெஸ்ச்சூட்டர் கோட்டை, பைல் கோட்டை என்பவற்றையும்; தீவுப் பகுதியில் ஊர்காவற்றுறைக் கடற் கோட்டையையும்; தலை நிலத்தில் பூநகரிக் […]
கருவிக்கையாட்சி, மொழிப்பயன்பாடு என்பவற்றின் வழி மனிதனின் பகுத்தறிவுச் சிந்தனை தொழிற்படத் தொடங்கியது. அப்போதே இயற்கையின் அதீத ஆற்றல் மனிதனுக்கு அதன் மீது பயத்தையும், பக்தியையும் உருவாக்கியது. தன்னை மீறிய மேம்பட்ட சக்தி உண்டு என்ற பிரக்ஞையும் நம்பிக்கைகயும் மேலோங்கத் தொடங்கின. இயற்கை மீதான பயபக்தி இயற்கை வழிபாடாகவும் பின் இயற்கைத் தெய்வ வழிபாடாகவும் பரிணாமமுற்றது. நிலத்தெய்வங்கள், குலதெய்வங்கள், அச்சத்தால் உருவாக்கப்பட்ட பல தெய்வங்கள் எனப் பல்வகைத் தெய்வங்கள் உருவாக்கம் பெற்றன. […]
தமிழில் : த. சிவதாசன் இலங்கை பூராகவும் உள்ள இளைய தலைமுறையினர் உகந்த வேலையைப் பெறுவதில் மிகுந்த சிரமப்படுகிறார்கள். இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரப்படி, 15 முதல் 19 வயது வரையுள்ள இளையவர்களில் 4 பேர்களில் ஒருவர் வேலையைப் பெறமுடியாது அவஸ்தைப்படுகின்றார். 20 முதல் 29 வயதுள்ளவர்களில் 7 பேர்களில் ஒருவருக்கு வேலை கிடைப்பது அரிது. ஒருவர் வேலை தேடி, அது கிடைக்காதபோது அவர் வேலையற்றவர் (unemployed) என்ற அந்தஸ்தைப் […]
இலங்கையில் பௌத்த சமயத்தின் வரலாறு பற்றிய சமூகவியல் நோக்கிலான ஆய்வுகளை எழுதியவர்களில் முக்கியமான ஒருவரான கித்சிறி மலல்கொட அவர்களின் நூல் பற்றிய அறிமுகமாக இக்கட்டுரை அமைகிறது. கித்சிறி மலல்கொட 1960 களின் பிற்பகுதியில் ஒக்ஸ்போர்ட் பல்லைக்கழகத்தில் கலாநிதிப் பட்ட ஆய்வை மேற்கொண்டார். 1970 இல் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு பின்னர் திருத்தங்களுடன் 1976 இல் ‘யுனிவர்சிட்டி ஒவ் கலிபோர்னியா பிரஸ்’ வெளியீடாகப் பிரசுரிக்கப்பட்டது. ‘BUDDHISM IN SINHALESE SOCIETY 1750 […]
இலங்கைத் தமிழர் வரலாற்றில் ஒரு மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட முதலாவது அரசாக நல்லூரைத் தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண அரசு காணப்படுகின்றது. கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை ஆட்சியில் இருந்த இவ்வரசின் ஆதிக்கத்துக்குள் வடஇலங்கையும் கிழக்கிலங்கையின் சில பாகங்களும், சில சந்தர்ப்பங்களில் தென்னிலங்கையும் உள்ளடங்கியிருந்தது. இவ்வாறு ஏறத்தாழ 350 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இவ்வரசின் வரலாற்றை அறிய உதவும் நம்பகரமான ஆதாரங்களில் ஒன்றாக அவ்வரசு காலத்தில் […]