Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

இலங்கையின் கறவை மாடுகளைப் பாதிக்கும் முக்கியமான தொற்று நோய்கள்

13 நிமிட வாசிப்பு

இலங்கையின் கறவை மாடுகளை பல தொற்று நோய்கள் பாதிக்கின்றன. அவற்றுள்  கால்வாய் நோய் (foot and mouth disease), தொண்டையடைப்பான் நோய் (Hemorrhagic septicemia), கருங்காலி நோய் (Black quarter), லம்பி தோல் கழலை நோய் (lumpy skin disease), புருசெல்லா கருச்சிதைவு நோய் (Brucellosis), மடியழற்சி நோய்கள் (Mastitis), குடற்புழு நோய்கள் (gastro intestinal worms) என்பன குறிப்பிடத்தக்கன. இந்த நோய்கள் கறவை மாடுகளைப் பாதித்து அவற்றின் உற்பத்தியைப் […]

மேலும் பார்க்க

வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்தல் : பொருளாதார முன்னேற்றமும் சமூகப் பொறுப்பும் 

15 நிமிட வாசிப்பு

தமிழில் : த. சிவதாசன் சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றின் பிரதான பணிப்பாளர் ஒருவருடன் பேசக் கிடைத்தது. ஓய்வு வயதை அண்மித்துக்கொண்டிருக்கும் அந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெரியவரிடம் “போர் முடிந்து பலவருடங்களாயினும் ஏன் அந்நிறுவனம் வடக்கில் முதலீடு செய்யவில்லை” எனக் கேட்டேன். “வடக்கை விட இலகுவாக இலாபமீட்டக்கூடிய இதர இடங்கள் இருக்கின்றன” என அவர் சாவதானமாகக் கூறினார். அதில் எந்தவிதத் தவறுமில்லை. பங்குச்சந்தை முதலீட்டை நம்பியிருக்கும் […]

மேலும் பார்க்க

ரோஹண விஜயவீரவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களும் : சமூகவியல் நோக்கு – பகுதி 1

24 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : சரத் அமுனுகம சமூகவியலாளர் கலாநிதி சரத் அமுனுகம அவர்கள் ‘WIJEWEERA AND THE LEADERSHIP OF THE J.V.P: A SOCIOLOGICAL PERSPECTIVE’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரையை எழுதியுள்ளார். 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘DREAMS OF CHANGE – LAND LABOUR AND CONFLICT IN SRI LANKA’ என்ற இவரது கட்டுரைத் தொகுப்பு நூலின் ஆறாவது அத்தியாயமாக (பக். 184 – […]

மேலும் பார்க்க

நாக இனக் குழுவும் இலங்கைத் தமிழரும் – பகுதி 2

28 நிமிட வாசிப்பு

கட்டுக்கரையைத் தொடர்ந்து வடஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு முக்கிய பெருங்கற்கால பண்பாட்டு மையமாக நாகபடுவான் என்ற இடம் காணப்படுகின்றது. இவ்விடம் பூநகரிப் பிராந்தியத்தில் முழங்காவிலுக்கு அண்மையில் காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் இலங்கையில் நாக வழிபாட்டு மரபு தோன்றி வளர்ந்த வரலாறு பற்றிய எதிர்கால ஆய்வுகளுக்குப் புதிய செய்திகளைக் கூறுவதாக இருக்கின்றன. எமது அறிவுக்கு எட்டியவரை இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சில வகையான சான்றுகள் தென்னாசியாவின் […]

மேலும் பார்க்க

இலங்கையின் வடக்குப் பகுதியின் மழைவீழ்ச்சி

28 நிமிட வாசிப்பு

அறிமுகம் வட பிராந்தியத்தின் வருடாந்த மழைவீழ்ச்சி 1230 மி.மீ. ஆயினும்கூட, ஆண்டுக்கு ஆண்டு, இடத்திற்கு இடம் மற்றும் பருவத்திற்குப் பருவம் இது வேறுபடும் (படம் 7.1). இருப்பினும், வடகிழக்கு பருவக்காற்றின் தாக்கம் மற்றும் வங்காள விரிகுடாவில் பல்வேறு காற்றழுத்த தாழ்வுகள் உருவாகி வருவதால், மொத்த மழையில் 75 சதவீதம் (700மி.மீ.) வடகீழ் பருவக்காற்றின் போது பெறப்படுகிறது (Alahacoon & Edirisinghe, 2021b). மேலும், வடக்கு பிராந்தியத்தில் 60% மழை (550 […]

மேலும் பார்க்க

எதியோப்பியாவின் சமஷ்டி அரசியல் யாப்பு : ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்களின் ஆய்வுரையை முன்வைத்து ஓர் உரையாடல் – பகுதி I

18 நிமிட வாசிப்பு

உரையாடலுக்கு ஆதாரமான பிரதி – ஆங்கிலத்தில் : கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண சட்ட அறிஞர் ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்கள் ‘TOWARDS DEMOCRATIC GOVERNANCE IN SRI LANKA – A CONSTITUTIONAL MISCELLANY’ என்ற தலைப்பிலான கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். பத்துக் கட்டுரைகளின் தொகுப்பாக அமையும் இந்நூல் 2014 ஆம் ஆண்டு ‘INSTITUTE FOR CONSTITUTIONAL STUDIES’ என்னும் ஆய்வு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்நூலின் தலைப்பை பொருள் விளக்கம் செய்யும் […]

மேலும் பார்க்க

நாக இனக் குழுவும் இலங்கைத் தமிழரும் : அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு – பகுதி 1

21 நிமிட வாசிப்பு

தென்னாசியாவில் பண்டு தொட்டு பெரிதும் புழக்கத்தில் இருந்து வந்த ஒரு பெயராக வடமொழியில் ‘நாஹ’ என்ற பெயரும், தமிழில் ‘நாகம், நாகன், நாகர்’ என்ற பெயர்களும் காணப்படுகின்றன. மத வழிபாட்டில் நாகத்தை குலமரபுத் தெய்வமாகக் கொண்டிருந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. வட இந்தியாவில் அரசமைத்த குப்தரும், தக்கணத்தில் ஆட்சி புரிந்த சாதவாகனரும் தம்மை நாக குலத்தவர் என அழைத்துக் கொண்டனர். தமிழகத்தின் பண்டைய தலைநகரான நாகபட்டினம் நாகரின் தலைநகர் […]

மேலும் பார்க்க

நாக யுவராஜனின் தவறான சமய நம்பிக்கை பற்றிக் குறிப்பிடும் திஸ்ஸமகராம கல்வெட்டு

13 நிமிட வாசிப்பு

இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை மாவட்டத்தில் திஸ்ஸமகாராமை அமைந்துள்ளது. இவ்விடம் பண்டைய மாகம இராச்சியத்தின் முக்கிய நகரமாகும். இது பண்டைய காலத்தில் அக்குறு கொட என அழைக்கப்பட்டது. பண்டைய ருகுணு இராச்சியத்தின் முக்கிய பகுதியாக இந்நகரமும், இதனை அண்டிய பகுதியும் விளங்கியது. இந்த இராச்சியத்தின் எச்சங்களாக பல பெளத்த தூபிகளும், கல்வெட்டுகளும், கட்டிட இடிபாடுகளும், தொல்பொருள் சின்னங்களும் இங்கு அதிகளவில் காணப்படுகின்றன.  இங்குள்ள திஸ்ஸவாவி குளத்தின் கிழக்குப் பகுதியில் அக்குறு […]

மேலும் பார்க்க

நன்மையின் நம்பிக்கையுரு கிங்கிலியர்

17 நிமிட வாசிப்பு

அறிமுகம் நாட்டுப்புறவியலின் இயங்கு தளங்களில் ஒன்றாக மந்திரம் காணப்படுகின்றது. இறையியல், சமயவியல் பற்றிய கருத்தாக்கத்திற்கு சமமாகவும் சமாந்தரமாகவும் மந்திரம் முதன்மை பெறுகின்றது. ஆவியுலக நம்பிக்கை, முன்னோர் வழிபாடு போன்றன தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை மந்திரம், மனிதர்களிடம் – அந்நம்பிக்கைகளை உடைய இனக் குழுக்களிடம் செல்வாக்குற்றுள்ளது. ‘இயற்கையை, அதன் அதீத ஆற்றல்களைப் புரிந்து கொள்ள முடியாத ஆதிமனிதர்கள், அதன் மீதான திகைப்பு, பயம் என்பவற்றிலிருந்து விடுபட்டு அதனைக் கட்டுப்படுத்தவும் தனக்குத் […]

மேலும் பார்க்க

கிழக்கிந்தியக் கம்பெனிகளும் அவற்றின் வியாபாரத் தந்திரங்களும்

11 நிமிட வாசிப்பு

இலங்கையை வளம் கொழிக்கும் நாடாக மாற்றுவதற்கு, மலையகத் தமிழ் மக்களின் உழைப்பைச் சுரண்டியதில், கிழக்கிந்தியக் கம்பெனியினரே முதற் பங்கு வகித்தனர். கிழக்கிந்தியக் கம்பெனிகளின் ஆதிக்கமானது இலங்கையில் அவர்கள் தடம் பதிப்பதற்கு முன்னரே இந்திய நாட்டில் ஆரம்பித்துவிட்டது. உடல் உழைப்பை மாத்திரம் மூலதனமாகக் கொண்ட இந்திய விவசாயச் சமூகத்தில், 17 ஆம் நூற்றாண்டானது பழமையும் முதுமையுமாக செயற்பட முடியாமல் இருந்த காலமாகக் கணிக்கப்படுகின்றது. இக் காலத்தில் தமிழர்களை ஆட்சி செய்த வேற்று […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்