Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

செவ்வாச்சியம்மன் வழிபாடு

15 நிமிட வாசிப்பு

அறிமுகம்  ஐரோப்பியக் காலனிய ஆட்சிமுறைக்கு உட்பட்ட காலத்தில் தென்னிந்தியச் சமூகம் எதிர்கொள்ளாததும் எதிர்பாராததுமான சமய ஒடுக்குமுறைக்கு இலங்கை முழுவதும் உட்பட்டது. குறிப்பாக கரையோரப் பிரதேசங்களில் இருந்த சைவ, பௌத்த, இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்கள் யாவும் இடித்து அழிக்கப்பட்டன. சுதேச சமய வழிபாட்டு முறைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் ஈழத்துத் தமிழ்ச் சமூகம் தன் வாழ்வோடும் தொழிலோடும் இணைந்த, பண்டையகால வழிபாட்டு முறையான இயற்கைப் பொருள் வழிபாட்டுக்குத் திரும்பியது. மரம், கல் […]

மேலும் பார்க்க

வடக்கின் தொழில்துறை – நேற்றும், நாளையும்

15 நிமிட வாசிப்பு

தமிழில்: த. சிவதாசன் யாழ்ப்பாணம் வர்த்தக, தொழில்துறை சம்மேளனம் (Chamber of Commerce and Industries of Yalpanam – CCIY) 1999 இல் நிறுவப்பட்டது. 16 வருடங்களாக எரிந்துகொண்டிருந்த இலங்கையின் இனப்போர் முடிவுக்கு வருகிறது என்ற நம்பிக்கை குற்றுயிராகவிருந்த காலத்தில் அது முளைத்தது. போராடுபவர்கள் எதிரும் புதிருமாய் ஒரு மேசையில் உட்கார்ந்திருந்தார்கள். அத்தற்காலிக நம்பிக்கை சிதறடிக்கப்பட்டு போர் மேலும் 10 வருடங்களுக்கு இழுத்தடிக்கப்பட்டு 2009 இல் நிறைவுக்கு வந்தது. […]

மேலும் பார்க்க

ஈழத்துக் கூத்துகளை நாடக இலக்கியமாகக் கொள்ளலாமா?

20 நிமிட வாசிப்பு

சொக்கன் எனும் புனைபெயரில் க. சொக்கலிங்கம் எழுதிய ‘ஈழத்தமிழ் நாடக இலக்கியம்’ எனும் ஆய்வு நூல் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்க ஒரு நூலாகும். இது, பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களின் மேற்பார்வையில், 1970களில், மேற்பட்டப் படிப்பிற்காக அவர் செய்த ஆய்வாகும். 1917 தொடக்கம் 1977 வரை ஈழத்தில் வெளிவந்த நாடகப் பனுவல்கள் பற்றிய இவ் ஆய்வு 1997 இல் வெளிவந்தது. 1997 இன் பின்னர், ஈழத்தமிழ் நாடக உலகில், ஏராளம் மரபு நாடகப் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணப் பட்டினம்: பொங்கொலிநீர்ச் சிங்கைநகர் – பகுதி 1

25 நிமிட வாசிப்பு

“யாபா படுனவில் அரச கட்டிடங்கள் பல நிரைகளாக அமைந்துள்ளன. இக் கட்டிடங்களில் பொன்னாலான கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. அத்துடன் இக் கட்டிடங்களில் விலை மதிப்பற்ற இரத்தினக் கற்கள் இழைத்துக் காணப்பட்டமையால் எங்கும் பிரகாசம் பொருந்தி விளங்குகின்றன. இவை தரும் ஒளி, இவற்றன் அழகு குபேரனுடைய அழகாபுரிக்கு இணையானது.” – Kōkila – Sandēsa, P.S. Perera ed. 1906. v. 243. “மேற்கு – கிழக்கு ஆசிய உலகங்களையும், கிழக்கு […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – அச்சுவேலி

15 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் மயிலிட்டிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், அச்சுவேலிக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலுள்ள விவரங்களை ஆராயலாம். லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி அச்சுவேலிக் கோவிற்பற்றில் வடக்குப் புரொவீன் (Wadakoeprowene), தெற்குப் புரொவீன் (Tickoeprowene), நவக்கீரி, பத்தவேனி, கதிரிப்பாய், தம்பாலை, வளலாய் ஆகிய துணைப்பிரிவுகள் உள்ளன (படம்-1). இங்கே அச்சுவேலி என்ற பெயரில் துணைப்பிரிவுகள் எதுவும் […]

மேலும் பார்க்க

1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 3

20 நிமிட வாசிப்பு

உதவி : ஜீவராசா டிலக்ஷனா சிங்கள மொழியின் தோற்றம் – 1956 தமிழ் மக்கள் தேசிய இனமாக இருப்பதை அழிப்பதில் இரண்டாவது திட்டமாக மொழி விவகாரம் இலக்காக்கப்பட்டது. ஐ.நா அறிக்கை ஓர் இனத்தை வேண்டுமென்றே பலவீனப்படுத்தக் கூடியவகையில் நிலத்தைப்பறித்தல், மொழியைப் புறக்கணித்தல், பொருளாதாரத்தைச் சிதைத்தல், கலாசாரத்தை அழித்தல் இன அழிப்பாகக் கொள்ளப்படும் என்று கூறுகின்றது. இலங்கையில் 1956 ஆம் ஆண்டு  அறிமுகப்படுத்தப்பட்ட சிங்களம் அரசகரும மொழிச்சட்டம் ஒரே நேரத்தில் இன […]

மேலும் பார்க்க

இன முரண்பாட்டால் பாதிக்கப்பட்ட வறண்ட மண்டலங்களின் மீள்தோற்றத்திற்கான நீர்வள, வேளாண்மை மேம்பாட்டு உத்தியும் அணுகுமுறைகளும்

20 நிமிட வாசிப்பு

2.1 அறிமுகம் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்கள் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய எட்டு மாவட்டங்களை உள்ளடக்கியவை. இப்பகுதியின் பரப்பளவு 18,881 சதுர கிலோமீட்டர் ஆகும். 1981 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் தொகை 2.08 மில்லியனாக இருந்தது. இதன்பிறகு, மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் துறையின் மதிப்பீடுகளின்படி, 1989 ஆம் ஆண்டில் […]

மேலும் பார்க்க

நாடு நலம் பெற நட்ட விதைகள்

15 நிமிட வாசிப்பு

ஐரோப்பாவில் தேசியவாதம் ஐரோப்பாவில் 19ஆம் நூற்றாண்டு தேசியவாதம் எழுச்சி பெற்ற காலம். பல்வேறு பேரரசுகளுக்குள் அடங்கிக் கிடந்த பல்லினச் சமூகங்கள் தனிநாடுகளாகப் பிரிந்து சென்றதன் விளைவே இன்று நாம் காணும் ஐரோப்பிய நாடுகள். இத்தேசியவாதப் போக்கு அண்மைக்காலம் வரை நீடித்தது. ஐரோப்பாவில் எழுந்த தேசியவாத நிகழ்வுகளுள் இரண்டு முக்கியமானவை. இவை இத்தாலியையும் ஜெர்மனியையும் உருவாக்கிய இயக்கங்கள். பல சிறு அரசுகளாகப் பிரிந்து காணப்பட்ட இத்தாலியத் தீபகற்பத்தின் கூறுகள் 1861இல் இணைந்தபோது […]

மேலும் பார்க்க

மலையக வீதிப்பாடல்களின் தோற்றத்திற்கு அடித்தளமிட்ட மீனாட்சியம்மாள்

17 நிமிட வாசிப்பு

‘மலையகம்’ என்ற எண்ணக்கரு உருவாக்கத்திற்கு வலிமை சேர்ப்பதாக வீதிப்பாடல்களின் வகிபங்கு முக்கியத்துவம் பெறுகிறது. எழுத்துப்பதிவை பெறாத நிலையில், வாய்மொழிப் பாடல்களும் ‘மலையகம்’ எனும் சமூக உருவாக்கத்திற்கு அடித்தளமிட்டவைகளாகத் திகழ்கின்றன. ஏனைய சமூகத்தினரின் நாட்டார் பாடல்களில் இருந்து மலையக நாட்டார் பாடல்கள் உணர்ச்சியிலும் கருத்து நிலையிலும் வேறுபட்டு நிற்கின்றமை கவனத்திற்குரியதாகும். அதன் தொடர்ச்சி நிலையிலேயே அவலங்களையும் பாதிப்பு நிலைகளையும் விடுதலை வேட்கையையும் உட்சுமந்ததாக மலையக வீதிப்பாடல்கள் அமையப்பெற்றுள்ளன. ஆரம்பக் காலத்தில், பாரதியின் […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ளூர் அதிகார சபைகளும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்

15 நிமிட வாசிப்பு

கிராமிய அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியைச் செயற்படுத்துவதில் கிராம அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் உள்ளூராட்சித் திணைக்களம் என்பன முக்கிய பங்காற்றுகின்றன. இந்த அமைப்புகள், மக்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தும் வகையில், பிரதேச, நகர மற்றும் மாநகர நிர்வாகங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைத்துவத்தின் வழியாகச் செயற்படுகின்றன. கிராமிய மட்டத்தில், கிராம அபிவிருத்திச் சங்கங்களும், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களும் செயலில் உள்ளன. இவை அடிமட்ட மக்களின் பிரதிநிதித்துவ அமைப்புகளாக உள்ளன. உள்ளூராட்சிச் சபைகள், […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்