ஆங்கில மூலம்: ஏ.ஜே. வில்சன் இலங்கை பிரித்தானியாவினதும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியினதுமான இரட்டைக் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறி 1802 ஆம் ஆண்டில், முதலாவது பிரித்தானிய முடிக்குரிய காலனியாக மாறியது. அந்த ஆண்டு, ஜனவரி முதலாம் திகதி ஃபிரடெரிக் நோர்த் ஆளுநராகப் பதவியேற்றார். காலனிகளுக்கான வெளியுறவுச் செயலாளர் ஹென்றி டன்டாஸ் – அவருக்கு வழங்கப்பட்ட பிற அதிகாரங்களுடன் மேலாக – சர்ச்சைக்குரிய விஷயங்களில் அவருக்கு ஆலோசனை வழங்கும் ஆலோசகர்கள் குழுவொன்றை நிறுவுமாறு அறிவுறுத்தினார். […]