உள்ளகச் சுயநிர்ணய உரிமை குறித்து மேற்கு நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் பின்தொடரப்பட்ட கோட்பாட்டு அணுகுமுறைகள் – பகுதி 2
14 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: கலன சேனரத்தின ஐரோப்பாவின் 35 நாடுகள் ஒன்று கூடி 1975 ஆம் ஆண்டில் ஹெல்சிங்கி நகரில் ‘Helsinki Final Act’ எனப்படும் ஆவணத்தை இயற்றின. ஐரோப்பாவின் பாதுகாப்பும் கூட்டுறவும் பற்றிய (Conference on Security and Cooperation in Europe) அம்மாநாடு ‘CSCE’ என்ற சுருக்க எழுத்தால் அழைக்கப்படும். ‘CSCE’ இயற்றிய மேற்படி ஆவணம் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் சாசனத்தில் கூறப்பட்ட ‘Peoples’ என்ற சொல்லை உபயோகித்ததோடு, […]
மேலும் பார்க்க
1968 – 1983: ஆயுதப் போராட்டத்தை நோக்கி – பகுதி 4
25 நிமிட வாசிப்பு
குட்டிமணி, தங்கத்துரை கைது – 1981.04.05 1981 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி பருத்தித்துறைப் பிரதேசத்தில் உள்ள மணல்காடு என்னும் இடத்தில் இலங்கை கடற்படையின் சுற்றிவளைப்பில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதில் குட்டிமணி அவர்கள் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது இனத்தின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து சிறைச்சாலையிலும், தலைமறைவிலுமாகத் தனது வாழ்க்கையை மேற்கொண்டவர். தங்கத்துரை தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவராவார். இவர் தொண்டமானாறைச் சேர்ந்தவர். 1983 […]
மேலும் பார்க்க
மாந்தை: பண்டைய இலங்கையின் நெடுங்கடல் வர்த்தகத் துறைநகர்
49 நிமிட வாசிப்பு
மாந்தைத் துறைமுக நகரத்தைச் சுற்றிவர உள்ள இரட்டை மதில் சுவரைக் காட்டும் வான்வெளிப் படம். அடியில் வலது பக்கத்தில் பாலாவி ஏரி காணப்படுகிறது. Image Source: 1980 Aerial Photograph. மாந்தை (மாதோட்டம்) இலங்கையிலுள்ள துறைமுக நகரங்களில் மிகப் பழைமையான துறைமுக நகரங்களில் ஒன்று மாந்தை. இலங்கையில் இது ‘மாந்தைத்துறை’ என நெடுங்காலமாக அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் இது மாந்தை, மாதோட்டம், பெருந்துறை ஆகிய பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. சங்ககால […]
மேலும் பார்க்க
இலங்கை மலையக மக்களின் வாழ்வியலில் சடங்குகள் – பகுதி 2
30 நிமிட வாசிப்பு
சமூகவியல் மற்றும் மானிடவியல் ஆய்வுகளில் சடங்குகள் என்பவை வெறும் கலாசார நிகழ்வுகள் மட்டுமல்ல, அவை ஒரு சமூகத்தின் அடிப்படை விழுமியங்கள், அதிகாரப் படிநிலைகள் மற்றும் உறவுமுறை அமைப்புகளைக் கட்டமைக்கும் வலுவான கருவிகளாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக, ஒரு தனிமனிதனின் வாழ்க்கைப் பயணத்தில் நிகழும் உயிரியல் மாற்றங்களைச் சமூக அந்தஸ்து மாற்றங்களாக மாற்றியமைக்கும் பூப்புச் சடங்கும், இரு வேறு சமூகக் குழுக்களை இணைக்கும் ஒருமைப்பாட்டு நிகழ்வாக அமையும் திருமணச் சடங்கும் மானிடவியல் ஆய்வாளர்களுக்கு […]
மேலும் பார்க்க
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிப் போக்குகளில் வடக்கு – கிழக்குப் பிராந்தியங்களின் பங்களிப்பும் நீர்வளம், விவசாயம், கொள்கை, மேலாண்மை மற்றும் வளர்ச்சித் தந்திரங்களும் – பகுதி 1
29 நிமிட வாசிப்பு
5.1 இலங்கைப் பொருளாதார வளர்ச்சி, மற்றும் பிராந்திய ‘GDP’ பங்களிப்பு இலங்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மொத்த உற்பத்தி (GDP) நிலை 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் முக்கியமான முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில், நாட்டின் மொத்தப் பொருளாதாரம் LKR 29.89 டிரில்லியன் (அமெரிக்கா $99 பில்லியன்) என மதிப்பிடப்பட்டது. அதே நேரத்தில், GDP வளர்ச்சி 5% வரை உயர்ந்தது, இது கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட […]
மேலும் பார்க்க
மலையக மக்களின் வாழ்வியலும் தாலாட்டுப் பாடல்களும்
13 நிமிட வாசிப்பு
நவீன சமூகங்கள் பன்முகத்தன்மை கொண்டவை. ஒரு பொதுவான பண்பாட்டுக் கட்டமைப்பிற்குள் வாழும் பல்வேறு குழுக்கள், அப்பண்பாட்டின் அனைத்துக் கூறுகளையும் அப்படியே ஏற்பதில்லை. மாறாக, தங்களின் தேவைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் ஏற்பச் சில பிரத்தியேகப் பண்புகளை வளர்த்தெடுத்துக் கொள்கின்றனர். இத்தகைய உருவாக்கமே, ஒரு பெரிய சமூகத்திற்குள் அக்குழுவைத் தனித்துவமான அடையாளத்துடன் வேறுபடுத்திக் காட்டுகிறது. இது மானிடவியல் ரீதியாகச் சமூகப் பரிணாமத்தின் ஒரு முக்கிய அடையாளமாகும். இத்தகைய பண்பாட்டுத்தளத்தில் உருவாகிய மலையகச் சமூகம், தென்னிந்தியாவிலிருந்து […]
மேலும் பார்க்க
உள்ளகச் சுயநிர்ணய உரிமை குறித்து மேற்கு நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் பின்தொடரப்பட்ட கோட்பாட்டு அணுகுமுறைகள் – பகுதி 1
13 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: கலாநிதி கலன சேனரத்தின பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைத் தலைவராக விளங்கும் கலாநிதி கலன சேனரத்தின ‘Internal Self-determination in International Law History, Theory and Practice’ என்னும் விடயப் பொருள் குறித்து ஆய்வு நூல் ஒன்றை 2021 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார். இந்நூல் அறிமுகம், முடிவுரை ஆகியன உட்பட 9 அத்தியாயங்களைக் கொண்டது. 2014 ஆம் ஆண்டு ஹொங்கொங் பல்கலைக்கழகத்திற்கு கலன சேனரத்தின அவர்கள் […]
மேலும் பார்க்க
ஆயில் என்ஜின்கள்: இயந்திரமயமாதலும் அறிவியல் தமிழும்
20 நிமிட வாசிப்பு
1 ஆங்கிலேயக் காலனிய ஆட்சி நடைமுறைகளாலும் அவற்றினால் விளைந்த சமூக பொருளாதார மாற்றங்களாலும் நவீன அறிவியலின் பரவல் தமிழ்ச் சூழலில் வேகம்பெறத் தொடங்கியது. நவீன இயந்திரங்களின் வருகையும் வளர்ச்சியும் இந்தியாவின் உற்பத்தியிலும் விநியோகத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தின. சமுதாயத்தின் அடிக்கட்டுமானமும் மேற்கட்டுமான அம்சங்களும் அறிவியல் பயன்பாட்டை முதன்மையான உள்ளீடாகக் கொள்ளத் தொடங்கின. கல்வித் துறையில் அறிவியல் கற்கைகள் உள்வாங்கப்பட்டன. அவற்றுக்கான பாடநூலாக்க முயற்சிகள் இடம்பெற்றன. பாதிரிமார்கள் உள்ளடங்கலாக மேலைநாட்டவரும் உள்நாட்டவரும் அறிவியல் […]
மேலும் பார்க்க
யாழ்ப்பாணத்தில் இலங்கையர் தேசியவாதம்
15 நிமிட வாசிப்பு
மகாத்மா காந்தி 1920 இல் இந்தியத் தேசிய இயக்கத்தை வழிநடத்திச் செல்லும் தலைவரானார். அனைவரையும் கவரும் ஆளுமையும், இறுக்கமான ஒழுக்கநெறியும், முழுமூச்சாக முன்னின்று இயக்கத்தை நடத்திச்செல்லும் ஆற்றலும் இந்தியாவில் மட்டுமல்ல வெளியேயும் அவருக்குப் பெருமதிப்பைக் கொடுத்தன. அயலில், ஆங்கிலேயர் ஆட்சியைத் தொல்லைகள் இல்லாது அனுபவித்துக்கொண்டிருந்த இலங்கையர் மீதும் அவருடைய எழுச்சியின் தாக்கம் ஏற்பட்டது. ஏழு ஆண்டுகளுக்குள், 1927 இல், யாழ்ப்பாண இளைஞர் அழைப்பை ஏற்று, மகாத்மா காந்தி யாழ்ப்பாணத்துக்கு வந்து […]
மேலும் பார்க்க