18 ஆம் நூற்றாண்டின் காலனித்துவக் கால அடிமைக் குடியேற்றங்களும் மலையகத் தமிழர்களும்
11 நிமிட வாசிப்பு
இந்தியாவும் காலனித்துவமும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சேர, சோழ, பாண்டியர்களால் ஆளப்பட்ட இந்தியாவின் தென்னாடும், மொகலாயப் பேரரசுகளால் ஆளப்பட்ட வடநாடும் படிப்படியாக வலுவிழந்து போயின. 1498 ஆம் ஆண்டு வாஸ்கொடகாமா இந்தியாவின் மேற்குகரையில் உள்ள கோழிக்கோடு (Calicut) துறைமுகத்தை வந்தடைந்தார். இவரது வருகையோடு பரவிய போர்த்துக்கேயரின் ஆட்சி 1600 ஆம் ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வருகையோடு வீழ்ச்சியுற்றது. பட்டு, வாசனைத் திரவியங்களின் வாணிபத்திற்காக வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி படிப்படியாக […]
மேலும் பார்க்க
உள்ளகச் சுயநிர்ணய உரிமை குறித்து மேற்கு நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் பின்தொடரப்பட்ட கோட்பாட்டு அணுகுமுறைகள் – பகுதி 3
14 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: கலன சேனரத்தின மூன்றாம் உலக நாடுகள் அரசியல் விடுதலையைப் பெற்ற பின்னர் அரசியல் சுயநிர்ணயமும் சுதந்திரமும் (Political Self – Determination and Independence) மட்டும் காலனியத்தில் இருந்து விடுதலையை வழங்க மாட்டாது என்பதை விரைவில் உணர்ந்தன. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அரசியல் விடுதலையைப் பெற்ற போதும் மேற்கு நாடுகளின் அரசியல், பொருளாதார, சட்ட ஒழுங்கமைப்புகளுக்குக் கட்டுப்பட்டனவாக இருப்பதை மூன்றாம் உலக நாடுகள் விரைவிலேயே உணர்ந்து […]
மேலும் பார்க்க
வீதிப்பாடகர் ஜபார் ஜில் சுல்தான்: பதுளை மண்ணிலிருந்து ஓங்கி ஒலித்த குரல்
19 நிமிட வாசிப்பு
மூன்று சீர்களைப் பெற்ற சிந்தடிகளால் அமையப் பெற்ற பாடல்களைச் சிந்து என வரையறுப்பார்கள். முதலடியும் அடுத்த அடியும் சீரின் எண்ணிக்கையால் ஒத்து இருப்பின் அது சமநிலைச் சிந்து என அழைக்கப்படுகிறது. அடியும் சீரும் எண்ணிக்கையால் வேறுபட்டு இருப்பின் அதனை வியனிலைச் சிந்து என்கிறோம். சிந்து இலக்கியங்கள் காலங்களுக்கு ஏற்ப மாறுதல்களை கொண்டமைந்திருந்தன. பிற்காலத்தில் சிந்துப் பாடல்கள் கீர்த்தனைகளுக்குரிய அமைப்பையும் உள்வாங்கிக் கொண்டு மாற்றங்களோடு வெளிவந்தன. சிந்து இலக்கியம் 13 ஆம் […]
மேலும் பார்க்க
நூல் அறிமுகம்: இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மனிதப் பண்பியல் கல்வியின் ஒரு நூற்றாண்டு வரலாறு
17 நிமிட வாசிப்பு
இலங்கைப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வியின் ஒரு நூற்றாண்டு வளர்ச்சியையும் வரலாற்றையும் எடுத்துக்கூறும் இரு நூல் தொகுப்புகளை வெளியிட்டது. இந்நூல் தொகுப்புகளின் தலைப்பு ஆங்கிலத்தில் வருமாறு: Beyond Boundaries: One Hundred Years of Humanities and Social Sciences in Sri Lankan Universities. ‘எல்லைகளுக்கு அப்பால்: இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கல்வி’ என மேற்படி […]
மேலும் பார்க்க
‘போருக்குப் பின்னரான’ இலங்கை: ஆய்வுச் சவாலும் தத்துவார்த்தச் சிக்கல்களும் – பகுதி 2
32 நிமிட வாசிப்பு
போருக்குப் பின்னரான ஆட்சியை மறுபரிசீலனை செய்தல் போருக்குப் பின்னரான ஆட்சியில் சட்ட மற்றும் அரசியலமைப்பு வழிமுறைகளும் பங்கு வகிக்கின்றன. அவசரகாலச் சட்டங்கள் நீக்கப்பட்டிருக்கலாம், ஆனால் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அவை கைது மற்றும் கண்காணிப்புக்கான பரந்த அதிகாரங்களை வழங்குகின்றன. இந்தச் சட்டங்கள் அவற்றின் மறைந்திருக்கும் அச்சுறுத்தலை விட அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் குறைவாகவே செயற்படுகின்றன, சாத்தியமான கோரிக்கையின் பயத்தின் மூலம் நடத்தையை வடிவமைக்கின்றன. அதே நேரத்தில், நில […]
மேலும் பார்க்க
இலங்கையில் நடந்த சித்திரவதைகள்: உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் சமூக – அரசியல் ரீதியாகவும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதம் – பகுதி 1
36 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: பேராசிரியர் தயா சோமசுந்தரம் இலங்கையில் ஏற்கனவே நிலவிவந்த சட்டங்கள், சமூகக் கட்டமைப்புகள், நிர்வாக வழிமுறைகள் என்பவற்றை வைத்துக்கொண்டே, அது ஒரு நிறுவன மயமாக்கப்பட்ட பலாத்கார அரச இயந்திரமாக மாற்றமடைந்தது இப்படித்தான் என்பதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லப்படக்கூடிய ஒரு சட்டம் தான் ‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்’. இந்தச் சட்டமும் (PTA), அவசரகால விதிமுறைகளும் (ER) குற்றச்சாட்டுகளோ அல்லது விசாரணைகளோ இல்லாமல் ஒருவரை நீண்டகாலமாக தொடர்பு கொள்ளப்பட முடியாத தடுப்புக்காவலில் […]
மேலும் பார்க்க
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வடமராட்சி – உடுப்பிட்டி
10 நிமிட வாசிப்பு
லெயுசிக்காமின் வடமராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் கட்டைவேலிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரை உடுப்பிட்டிக் கோவிற்பற்றுத் தொடர்பாக லெயுசிக்காமின் நிலப்படம் தரும் தகவல்களை விளக்குகிறது. உடுப்பிட்டிக் கோவிற்பற்றில் உடுப்பிட்டி, கரணவாய் ஆகிய இரண்டு துணைப்பிரிவுகள் இருப்பதை நிலப்படத்திலுள்ள விளக்கக் குறிப்பிலிருந்தும் நிலப்படத்திலிருந்தும் அறியமுடிகிறது (படம்-1). எல்லைகள் உடுப்பிட்டிக் கோவிற்பற்றின் வடக்கு எல்லையில் பாக்கு நீரிணையும்; கிழக்கில் கட்டைவேலிக் […]
மேலும் பார்க்க
‘போருக்குப் பின்னரான’ இலங்கை: ஆய்வுச் சவாலும் தத்துவார்த்தச் சிக்கல்களும் – பகுதி 1
31 நிமிட வாசிப்பு
தொடக்கக் குறிப்புகள் மே 2009 இல், இலங்கை அரசு கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால ஆயுத மோதலின் முடிவை அறிவித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வி அமைதி, ஒற்றுமை மற்றும் இறையாண்மையை மீட்டெடுப்பதாகக் கருதப்பட்டது. கிட்டத்தட்ட உடனடியாக, போரின் மொழி அபிவிருத்தி, நல்லிணக்கம் மற்றும் தேசிய புதுப்பித்தல் ஆகியவற்றின் மொழியால் மாற்றப்பட்டது. சாலைகள் மீண்டும் கட்டமைக்கப்பட்டன, சுற்றுலாப் பயணிகள் அழைக்கப்பட்டனர், தேர்தல்கள் நடத்தப்பட்டன, சர்வதேச நன்கொடையாளர்கள் மறுகட்டமைப்பில் பங்கேற்க […]
மேலும் பார்க்க
வடக்கின் ஏற்றுமதியாளர் சம்மேளனம் (CNE): பொருளாதார உச்சத்தை மீட்டெடுக்கும் பயணத்தில்
10 நிமிட வாசிப்பு
தமிழில்: த. சிவதாசன் “நாங்கள் இன்னும் அதிகமாக ஏற்றுமதிகளைச் செய்ய வேண்டும்” – இச்சொல்லாடலை நாங்கள் பலதடவைகள் கேட்டுவிட்டோம். அரசியல்வாதிகள், பொருளாதார வல்லுநர்கள், பல்தகமை கொண்ட பலவகையான கருத்தாளர்கள் எனப் பலரிடமிருந்தும் பல தடவைகள் இதைக் கேட்டுவிட்டோம். இது அந்தளவுக்கு அப்பட்டமானதோர் உண்மையாயிருக்க, அதை ஏன் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ள வேண்டும்? இது எங்களுக்கு எப்போதே தெரியும். அப்படியிருந்தும் இது குறித்து நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? ஏற்றுமதி வர்த்தகம் என்பது […]
மேலும் பார்க்க
பிரதேசக் கூத்து வகைகளின் தனித்துவங்களும் அவற்றினிடையே காணப்பட்ட ஊடாட்டங்களும்
14 நிமிட வாசிப்பு
அறிமுகம் பிரதேசக் கூத்து மரபை நாம் வடபிரதேசக் கூத்து மரபு, வன்னிக் கூத்து மரபு, கிழக்குப் பிரதேசக் கூத்து மரபு, வடமேற்குப் பிரதேசக் கூத்து மரபு (மன்னார், சிலாபம்), மத்திய பிரதேசக் கூத்து மரபு என ஐந்து பிரிவுகளாகப் பிரித்து நோக்கலாம். இது புரிந்து கொள்வதற்கான ஒரு பிரிப்பே தவிர வேறொன்றுமில்லை. சிலர் இதனை வேறு விதமாகவும் பிரிப்பர். முதலில் பிரதேசக் கூத்து மரபின் சில தனித்துவங்களைச் சுருக்கமாக அறிந்து […]
மேலும் பார்க்க