December 2025 - Page 2 of 3 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

December 2025 தொடர்கள்

இலங்கைவாழ் இந்தியத் தமிழர்களின் சமூகமாற்றம்: 1920 – 1990

20 நிமிட வாசிப்பு

இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட பெருந்தோட்டங்களில் தொழில்புரிவதற்காகக் குடிபெயர்ந்து வந்த தென்னிந்தியத் தமிழர்கள் பல சவால்களை எதிர்நோக்கினர். இலங்கையில் அவர்களது சமூகம் மற்றும் தேசிய அரசியலில் அவர்களின் பங்களிப்பு ஒரு கட்டத்தில் எழுச்சி நிலையில் இருந்துள்ளது. பின்னர் அவர்களது வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகக் காணப்பட்டது. அடுத்த நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய கல்வி வாய்ப்புகள் அவர்களை வளர்ச்சி பெற்றுவரும் ஒரு சமூகமாக மாற்றமடையச் செய்துள்ளது. இந்த மூன்று மாற்றங்களையும்  கால அடிப்படையில் எடுத்து […]

மேலும் பார்க்க

காலனித்துவக் காலமும் கருத்து நிலைகளும் 

27 நிமிட வாசிப்பு

கீரிமலையில் தனது முதலாவது மாநாட்டினை விபுலானந்த அடிகள் தலைமையில் ‘யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ்’ எனும் அமைப்பு நடாத்தியதன் முதலாவது நூற்றாண்டாக இவ்வருடம் அமைந்துள்ளது. பெண் விடுதலை, சாதி ஏற்றத்தாழ்வினைத் தகர்த்தல் பூரண சுதந்திரம் எனும் குறிக்கோள்களை அந்த அமைப்பு முன்னிறுத்தி இயங்கத் தொடங்கி இருந்தது. இந்த மாநாடு இடம்பெறுவதற்கு நான்கு ஆண்டுகளின் முன்னர் தனது சிந்தனையையும் செயல்வேகத்தையும் தானியங்கிய தமிழ்ச் சமூகத்திடம் கையளித்துவிட்டு மகாகவி பாரதி விடைபெற்றேகி இருந்தார். தமிழகம் […]

மேலும் பார்க்க

இலங்கையின் அரசமைப்புத் திருத்தம் பற்றிய விவாதங்கள்: அரசியல் விஞ்ஞானத்துறை ஆய்வாளர்களுக்கான கையேடு – பகுதி 1

15 நிமிட வாசிப்பு

இலங்கையின் அரசமைப்பைத் திருத்துதல் அல்லது சீர்திருத்தம் செய்தல் என்னும் விடயம் ஆங்கிலத்தில் ‘State Reform’ என்ற தொடரால் குறிப்பிடப்படுகிறது. ‘ஸ்டேட் றிபோம்’ என்ற சொற்தொடர் அரசுக்கட்டமைப்பை மாற்றம் செய்தல், அரசமைப்பு ஒன்றின் அங்கங்களுக்கிடையிலான உறவுகளையும், அதிகாரப்பகுப்பையும், மறுகட்டமைப்புச் செய்தல் (Restructuring the State) என்ற விரிந்த பொருள் உடையதுமாகும். அரசமைப்புத் திருத்தம் என்ற தொடரை ‘Amendment to the Constitution’ என்ற குறுகிய பொருளில் இல்லாது அரசுக்கட்டமைப்பைத் திருத்தம் செய்தல் […]

மேலும் பார்க்க

இலங்கை மலையக மக்களின் வாழ்வியலில் சடங்குகள் – பகுதி 1

29 நிமிட வாசிப்பு

சடங்கு என்பது மனித வாழ்வியலில் முக்கியமான பண்பாட்டுக் கூறாகும். மனித வாழ்விலிருந்து பிரிக்க முடியாத, அத்துடன் மனித வாழ்வியலோடும், நம்பிக்கையோடும் நீண்ட ஒரு தொடர்புப் பயணத்தைக் கொண்டுள்ள அம்சம் சடங்கு. இச்சடங்குகள் பற்றி பல்வேறு வரைவிலக்கணங்களும் விளக்கங்களும் சமூகவியல் மற்றும் மானிடவியல் துறைகளில் வெளிவந்துள்ளன. அவற்றினை அடிப்படையாகக் கொண்டு, சடங்குகள் பற்றி நோக்கும் போது, “தன் வாழ்க்கைப் போரில் இயற்கைச் சக்திகளையும் பருவகால மாற்றங்களையும் தன்வயப்படுத்த மனிதன் கையாண்ட சில […]

மேலும் பார்க்க

இலங்கையில் ஆதி இரும்புக்காலமும் பெருங்கற் பண்பாடும் – பகுதி 2

40 நிமிட வாசிப்பு

II பெருங்கற் புதையல் நிவேதனப் பொருட்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் காட்டும் மக்களின் வாழ்வியல் ஆதி-இரும்புக்காலப் பெருங்கற் பண்பாட்டின் அச்சாணிகளாக ஈமச் சின்னங்கள், குடியிருப்புகள், குளங்கள், வயல்கள் என நான்கு அம்சங்கள் விளங்கின. மக்கள் தமது வசிப்பிடங்களைச் சிறப்பாக அமைப்பதைக் காட்டிலும் ஈமச் சின்னங்களைச் சிறப்பாக அமைப்பதிலேயே அதிக கவனம் காட்டியதனால், இவர்கள் அமைத்த ஈமச் சின்னங்களில் இறந்தோருக்கு அளித்த பொருட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. பெருங்கற் புதையல்களில் காணப்படும் நிவேதன, […]

மேலும் பார்க்க

நாவலப்பிட்டியைச் சேர்ந்த எஸ்.எம். ராஜப்பா எனும் வீதிப்பாடலாசிரியர் 

29 நிமிட வாசிப்பு

மலையக வீதிப்பாடல் இலக்கியத்திற்கு நாவலப்பிட்டி மண்ணிலிருந்து பல ஆளுமைகள் வலிமை சேர்த்துள்ளனர். அவர்களில் எஸ்.எம். ராஜப்பாவின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். எஸ்.எம்.ஆர். எனவும் அறியப்பட்ட அவர், நாடகத் துறையில் ஆழ்ந்த ஆர்வத்துடன் செயற்பட்ட ஆளுமையாவார். அக்கால நாடகங்களில் ‘ராஜாபாட்’ என்ற பாத்திரம் பெரும் கவனத்தைப் பெற்றிருந்தது. இவர் அந்தப் பாத்திரத்தின் பெயரையே அடைமொழியாகக் கொண்டு அழைக்கப்பட்ட நாடகத்துறைச் செயற்பாட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மலையகக் கலையுலகம் அவரை ‘ராஜாபாட் ராஜப்பா’ என்று அன்புடன் […]

மேலும் பார்க்க

அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மீதான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தாக்கம்

26 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: வி.எஸ். கணேசலிங்கம் சித்திரவதைகளிலிருந்தான விடுதலை, சட்டத்தின் சமமான பாதுகாப்பு, தன்னிச்சையான கைதும் சட்டவிரோத தடுப்புக்காவலும் ஆகியவற்றிலிருந்து விடுதலை, நியாயமான விசாரணைக்கான உரிமை, குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை ஒருவர் குற்றமற்றவர் என்று கருதப்படுவதன் அவசியம், பேச்சுரிமை, ஒன்றுகூடுதல், சங்கம் அமைத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கான மக்களுக்கிருக்கும் உரிமை என்பவை, நமது 1978 அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட (மக்களது) அடிப்படை உரிமைகளில் அடங்குகின்றன. சட்டப் பிரிவு 13 (1) ஆனது, சட்டத்தால் […]

மேலும் பார்க்க

இழந்த ஹெளமொழியும் இல்லாத இசைக்கலையும்

18 நிமிட வாசிப்பு

இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் நவீன இலங்கையின் வரலாற்றை நிர்ணயிக்கும் நிகழ்வுகள் பல இடம்பெற்ற காலம். இவை, அடுத்து வந்த இரண்டாம் காலில், அரசியலைப் பொறுத்து இலங்கையர் இன அடிப்படையில் பிளவுபட்டுப் பிரிந்து செல்ல வழிவகுத்தன. அரசியல் புலத்தில் மட்டுமல்லாது, பண்பாட்டுப் புலத்திலும் முக்கிய அபிவிருத்திகள் ஏற்பட்டு, 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பண்பாடு, மொழி, மதம் ஆகியவை சங்கமித்துச் சிங்கள சமூகத்தில் ஒரு புரட்சியை உண்டுபண்ணின. பண்பாட்டு அடையாளத்தைத் […]

மேலும் பார்க்க

இலங்கையில் ஆதி இரும்புக்காலமும் பெருங்கற் பண்பாடும் – பகுதி 1

45 நிமிட வாசிப்பு

வட இலங்கையின் சில பெருங்கற் பண்பாட்டு மையங்கள். Image Source: Dr S. Seneviratne, 1984. 1. காரைநகர் 2. ஆனைக்கோட்டை 3. கந்தரோடை. 4. மாந்தை, 5. தெக்கம் 6. பொம்பரிப்பு 7. மாமடுவ 8. அலுத்பொம்புவ 9. கரம்பன்குளம் 10. தெமன்ன-கொடல்ல 11. குருகல்ஹின்ன 12. வடிகவேவா 13. கோக்கபே 14. திவுல்வேவா 15. ரொபீவா 16. மச்சகம 17. அநுராதபுர கெடிகே 18. கதிரவெளி 19. […]

மேலும் பார்க்க

சடங்குகளின் அரசியல்: எதிர்காலத்தை இறந்தகாலத்தில் கட்டமைத்தல் – பகுதி 2

40 நிமிட வாசிப்பு

பகிரப்பட்ட வடிவங்கள்: தார்மீக உட்கட்டமைப்பாகச் சடங்கு முதல் வெளிச்சத்தில், குளம் அமைதியாக இருக்கிறது. பனைமரத் தண்டுகளில் மூடுபனி ஒட்டிக்கொண்டிருக்கிறது, காற்றில் புகை மற்றும் உப்பு வாசனை இலேசாக வீசுகிறது. பனியால் நனைந்த புடவைகளுடன் ஒரு சிறிய பெண்கள் குழு அமைதியாக நிற்கின்றது. அவர்கள் பூமாலைகளையும் ஒரு களிமண் விளக்கையும் ஏந்திச் செல்கிறார்கள். அவர்களில் ஒருவர் தனது மூச்சின் கீழ் முணுமுணுக்கிறார் – பாதி பாடல், பாதி புலம்பல். மற்றவர்கள் மெதுவாக […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்