December 2025 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

December 2025 தொடர்கள்

இலங்கை மலையகத் தமிழர் வரலாறு: ஓர் அறிமுகம்

24 நிமிட வாசிப்பு

மலையகம் என்பது கடல் மட்டத்திலிருந்து 1000 அடிக்கு மேற்பட்ட பகுதிகளை மட்டும் உள்ளடக்குவதில்லை. உண்மையில், கரையோரத்தில் அமைந்துள்ள தென் மாகாணப் பகுதிகளான காலி உடுகம மலைகள், மாத்தறை மாவட்டத்தின் தெனியாயப் பிரதேசம், பத்தேகமப் பிரதேசங்களில் வாழும் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களையும், அண்சமவெளிப் பிரதேசங்களில் அமைந்துள்ள களுத்துறை, கம்பஹா, கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை மாவட்டத் தொழிலாளர்களையும், மத்திய மலைநாட்டில் 3000–5000 அடி உயரத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய பகுதிகளும் மலையகம் […]

மேலும் பார்க்க

மலையக வாய்மொழிப் பாடல்களில் கங்காணிமார்களின் இருப்பு

18 நிமிட வாசிப்பு

இலங்கை மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து இருநூறு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இம்மக்களின் வாழ்வியலையும் அவர்கள் எதிர்கொண்ட சவால்களையும் பல்வேறு வகையான வரலாற்று ஆய்வுகள் வெளிக்கொண்டு வந்துள்ளன. அதேவேளை, இந்தியத் தொழிலாளர்கள் அதிகமாக வறுமை காரணமாகவே இலங்கைக்கு வந்தார்கள் என்ற கருத்தை இன்றைய வரலாற்று ஆய்வுகள் நிராகரிக்கின்றன. பிரித்தானியாவில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியினால் உருவான புதிய முதலாளித்துவப் பண்பாடு, தன்னுடைய நாட்டை முழுமையாகக் கட்டுப்படுத்தியதோடு, உலகில் காணப்படும் அனைத்து […]

மேலும் பார்க்க

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) விசத்தை ருசித்தல்! 

39 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஜெயத்திலகே டி சில்வா இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு நடந்ததை நினைவு கூர்வது என்பது, குறிப்பாக நீங்கள் உங்கள் அறுபதுகளின் இறுதியில் இருந்தாலன்றி, எளிதான ஒன்றல்ல. அதேபோல், கதையில் நிகழ்வுகள் வெளிப்படும் சூழலுக்குப் பழக்கமில்லாத இளம் வாசகருக்கும், ஒருவேளை பயங்கவாதத் தடைச் சட்டம் தொடர்பான கல்வி சார்ந்த ஆர்வம் மட்டுமே உள்ளவர்களுக்கும், வயதானவர்களின் நினைவுகளைப் படிப்பது சலிப்பை ஏற்படுத்தக்கூடும். இந்தப் பயங்கரவாதத்  தடைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் என்ற […]

மேலும் பார்க்க

வீதிகள் எங்கே போகின்றன: கலாசாரப் பெருங்கலன் – பகுதி 2

27 நிமிட வாசிப்பு

சந்தைகள், இயக்கம், இராணுவமயமாக்கப்பட்ட இயல்புநிலை 2010களின் நடுப்பகுதியில், இலங்கையின் வடக்குக் கிழக்கு மாவட்டங்கள் ஒரு விசித்திரமான அமைதியின் ஆய்வகங்களாக மாறிவிட்டன. இதைக் குடியிருப்பாளர்கள் பெரும்பாலும் ‘இராணுவ அமைதி’ அல்லது ‘அபிவிருத்தியின் அமைதி’ என்று விவரித்தனர். வீதிகள் திறந்திருந்தன, சந்தைகள் பரபரப்பாக இருந்தன, பேருந்துகள் சரியான நேரத்தில் இயங்கின, ஆனால் இந்த மேற்பரப்பு ஒழுங்கின் கீழ் கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் தழுவல் ஆகியவற்றின் அமைதியான அசைவியக்கம் இருந்தது. புதிய வீதிகள், வர்த்தகம் […]

மேலும் பார்க்க

ஸ்டான்லி ஜே. தம்பையா அவர்களின் ‘பௌத்தத்திற்குத் துரோகம்? இலங்கையில் சமயமும், அரசியலும், வன்முறையும்’ என்னும் நூல்

14 நிமிட வாசிப்பு

மானிடவியலாளர் ஸ்டான்லி ஜே. தம்பையா அவர்கள் 1990 ஆம் ஆண்டில் ‘Buddhism Betrayed? Religion, Politics and Violence in Sri Lanka’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூலின் தலைப்பையே மேலே தமிழில் தந்துள்ளோம். பௌத்த நாடான இலங்கையில் 1970க்கும் 1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வன்முறைக் கிளர்ச்சிகளும், கலகங்களும் ஏற்பட்டன. 1971 இல் ஜே.வி.பியின் முதலாவது கிளர்ச்சி இடம்பெற்றது. இக்கிளர்ச்சியை இலங்கை அரசாங்கம் கொடிய முறையில் அடக்கியது. […]

மேலும் பார்க்க

வீதிகள் எங்கே போகின்றன: கலாசாரப் பெருங்கலன் – பகுதி 1

35 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் 2009 இல் இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்த சில மாதங்களில், வடக்கில் மீண்டும் தோன்றிய முதலாவது உட்கட்டமைப்புகள் வீதிகளாகும். நீண்ட பிரிவினைக் கோடான A9 நெடுஞ்சாலையானது, வழமைக்குத் திரும்புதல், வர்த்தகம், அரசு இருப்பின் உறுதிப்பாடு ஆகியவற்றின் அடையாளமாக மாறியது. 2010க்கும் 2024க்கும் இடையில், யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை, மன்னார் வரையிலான இந்த வழித்தடங்களில் – ஒரு காலத்தில் பிரிவினையின் அடையாளங்களாக இருந்த வீதிகள் எவ்வாறு புனரமைப்பு என்பதன் […]

மேலும் பார்க்க

தமிழ்பேசும் குயர் மக்களும் ஊடகங்களும்

10 நிமிட வாசிப்பு

தமிழ்ச் சூழலில் குயர் மக்களுடைய பிரதிநிதித்துவப்படுத்தலில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கிருக்கின்றது. சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுச் சூழலில் பால், பால்நிலை மற்றும் பாலியல்பு சார்ந்த மீள்வருவார்ப்புகளைக் (Stereotype) கட்டமைப்பதில் ஊடகங்கள் பெரும்பங்காற்றுகின்றன. குயர் மக்கள் பற்றிய மீள்வருவார்ப்புகள் பல்வேறு வடிவங்களில் கட்டமைக்கப்படுவதை அவதானிக்கலாம். மீள்வருவார்ப்புகள் எந்த வடிவங்களில் இருந்தாலும் அவை சமூகத்தில் பாதகமான விளைவுகளையே தோற்றுவிக்கும். பால், பால்நிலை அசமத்துவமானது பல்வேறு ஒடுக்குமுறைகளை ஏற்படுத்துகின்றது. பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான […]

மேலும் பார்க்க

இலங்கையின் அரசமைப்புத் திருத்தம் பற்றிய விவாதங்கள்: அரசியல் விஞ்ஞானத்துறை ஆய்வாளர்களுக்கான கையேடு – பகுதி 2

13 நிமிட வாசிப்பு

1948 இல் இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பிற்பட்ட காலத்தில் அரசமைப்புத் திருத்தம் பற்றிய விவாதம் (State Reform) ஒற்றையாட்சி – சமஷ்டி (Unitary – Federal), சிங்களவர் – தமிழர் என்ற எதிர் இணைகளின் அடிப்படையில் துருவமயப்படுத்தப்பட்டதை (Polarisation) இக்கட்டுரையின் முற்பகுதியில் எடுத்துக்காட்டினோம். அமெரிக்க அரசியல் விஞ்ஞானிகளான றொபர்ட் என். கெயர்ணி (Robert N. Kerney) என்பவரும், இலங்கையரான ஏ.ஜே. வில்சனும் அரசமைப்பைத் திருத்தும் விவாதம் இனத்துவத் தேசியவாதங்களின் அடிப்படையில் திசை […]

மேலும் பார்க்க

நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர் மேம்பாடும் முகாமைத்துவமும்: யாழ்ப்பாணக் குடாநாடு, வன்னிப் பெருநிலப்பரப்பு, கிழக்குப் பிராந்தியம் – பகுதி 3

40 நிமிட வாசிப்பு

4.6. யாழ்ப்பாண நதித் திட்டம் ‘A River for Jaffna’ – ஆறுமுகம் திட்டம் 4.6.1 யாழ்ப்பாண நதித் திட்டத்தின் உண்மையான நோக்கம் மற்றும் அதன் தவறான பொருளாக்கம் யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்கான குடிநீர் விநியோகப் பிரச்சினைக்கான தீர்வாக ‘A River for Jaffna என்ற திட்டத்தை மீளத் திறப்பது’ என்பது முற்றிலும் தவறான கருத்தாகும். இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம் குடிநீர் வழங்கல் அல்ல; மாறாக, தீபகற்பத்தின் நில உற்பத்தித் […]

மேலும் பார்க்க

இலங்கையில் ஆதி இரும்புக்காலமும் பெருங்கற் பண்பாடும் – பகுதி 3

26 நிமிட வாசிப்பு

IV பெருங்கற் பண்பாடும் தமிழ்மொழியின் பரவலும் இலங்கைக்கு தென்னிந்தியாவிலிருந்து பெருங்கற் பண்பாட்டு அம்சங்களும், நீர்ப்பாசன விவசாயமும் பரவியபோது அவற்றுடன் தமிழ் மொழியின் பரவலும் இன்றியமையாத, கட்டாயமான அங்கமாக இருந்தது. தமிழ்மொழி இலங்கைக்குப் பரவியது பற்றிய பேராசிரியர் இந்திரபாலாவின் கணிப்பீடு கவனிக்கவேண்டியது: “When the urn burial practices of Adichanallur were carried over to Pomparippu and when the technology of the iron tools and […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்