November 2025 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

November 2025 தொடர்கள்

அரசியலமைப்புவாதமும், பயங்கரவாதத் தடைச்சட்டமும், நிறைவேற்று அதிகாரத்துக்கான வாய்ப்பும்

8 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புக் குறித்த பெரும்பாலான விமர்சனங்கள், இந்தச் சட்டத்தின்  உள்ளடக்கங்கள், சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுடனான அதன் முரண்பாடுகள், அதன் செயற்படுத்தலில் மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்கள் என்பவை தொடர்பாக  நியாயமான முறையில் கவனம் செலுத்துகின்றன. இருப்பினும், இதுபோன்ற ஒரு கடுமையான சட்டம் நாட்டின் சட்டப் புத்தகங்களில் எவ்வாறு நுழைந்தது என்பதை ஆராய்வதும்கூட ஒரு முக்கியமான விடயம்தான். பெரும்பாலான ஜனநாயக அரசியலமைப்பு நாடுகளின் சட்டங்களில், நிர்வாகம் […]

மேலும் பார்க்க

மலையக நாட்டார் இலக்கியம் வெளிப்படுத்தும் தொழிற்களமும் விடுதலை உணர்வும்

8 நிமிட வாசிப்பு

மலையக மக்களின் வாழ்வியல் ஏனைய இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களிலிருந்து வேறுபட்ட ஒன்றாகும். தென்னிந்தியாவில் இருந்து காலனித்துவ ஆட்சியாளர்களால் அழைத்துவரப்பட்ட இம்மக்கள் முழுமையாக தமிழர்களாகவே இருந்தார்கள். இலங்கையில் பூர்விகமாக வாழும் தமிழர்களின் வாழ்வியல் முறையிலிருந்து இவர்கள் வேறுபட்டாலும், கலாசார ரீதியாகவும், மொழி ரீதியாகவும், மத ரீதியாகவும் ஒருமைப்பாடு உடையவர்களாக இருந்தார்கள். ஆனாலும், இவர்களின் வாழ்வியல், பொருளாதாரம், சமூகக் கட்டமைப்பு என்பன இவர்களை இலங்கைவாழ் மக்களிடமிருந்து தனித்துவமாக்கியது. இவர்களின் வருகையானது பட்டுக் […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வடமராட்சி – கட்டைவேலி

10 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் வடமராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் பருத்தித்துறைக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரை கட்டைவேலிக் கோவிற்பற்றுத் தொடர்பாக லெயுசிக்காமின் நிலப்படம் தரும் தகவல்களை விளக்குகிறது. கட்டைவேலிக் கோவிற்பற்றில் கரவெட்டி, அல்வாய், துன்னாலை, வல்லிபுரம் ஆகிய நான்கு துணைப்பிரிவுகள் இருப்பதை நிலப்படத்திலுள்ள விளக்கக் குறிப்பிலிருந்தும் நிலப்படத்திலிருந்தும் அறியமுடிகிறது (படம்-1). பருத்தித்துறையைப் போலவே இக்கோவிற்பற்றுக்குப் பெயர் கொடுத்த கட்டைவேலிக் கிராமத்தின் […]

மேலும் பார்க்க

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞானக் கல்வி: ஆராய்ச்சியும், அறிவு உற்பத்தியும், நூல் வெளியீடும் – பகுதி 2

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஏ.எம். நவரட்ண பண்டார, ஜயதேவ உயன்கொட லக்சிறி பெர்ணான்டோ பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் அவர்களின் மாணவராக கனடாவின் நியு பிரண்ஸ்விக் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பின்பட்டப் படிப்பை மேற்கொண்ட இன்னொருவர் பேராசிரியர் லக்சிறி பெர்ணான்டோ (Laksiri Fernando) ஆவார். அவர் வித்தியோதயப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையில் விரிவுரையாளராக தனது கல்விப் பணியை ஆரம்பித்தார் (இப்பல்கலைக்கழகம் பின்னர் சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது). லக்சிறி பெர்ணான்டோ […]

மேலும் பார்க்க

பயங்கரவாதத் தடைச் சட்டமும் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டமும்

29 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: சாலிய எதிரிசிங்க ஒரு முற்குறிப்பு: சென்ற இதழில் வந்த இந்தத் தொடர் தொடர்பான அறிமுகக் குறிப்பில் “இன்னமும் பழைய பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசாங்கத்தால் பயன்படுத்தக் கூடிய வகையில் நடைமுறையில் உள்ளது. அதை ஓர் அரசாங்கம் தனது  நடவடிக்கைகளுக்காகக் கைகளில் எடுக்கின்றதா இல்லையா என்பதைப் பொறுத்தே அது அதிகமாகப் பேசப்படும் சூழல் உருவாகிறது.” என்று குறிப்பிட்டிருந்தோம். இப்போது அந்தச் சட்டத்தை இன்றைய ‘தேசிய மக்கள் சக்தி’ அரசாங்கமும் […]

மேலும் பார்க்க

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞானக் கல்வி: ஆராய்ச்சியும், அறிவு உற்பத்தியும், நூல் வெளியீடும் – பகுதி 1

19 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஏ.எம். நவரட்ண பண்டார, ஜயதேவ உயன்கொட சமூக விஞ்ஞானங்களில் ஒன்றான ‘அரசியல் விஞ்ஞானம்’ என்ற கல்வித்துறை 1921 இல் இலங்கைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் 80 ஆண்டுகளுக்கு மேலாக, பல்கலைக்கழக நிலையில் ஒரு கற்கைத் துறையாக வளர்ச்சியுற்ற வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துக்கூறும் ‘இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞான கல்வியின் வரலாறு’ என்ற தலைப்பிலான கட்டுரை ‘எழுநா’ செப்டெம்பர் இதழில் பிரசுரிக்கப்பட்டது. அக்கட்டுரை ஏ.எம். நவரட்ண பண்டார, […]

மேலும் பார்க்க

இலங்கை மலையகத் தமிழர்களின் அடையாளப் பிரச்சினைகளும் அரசியல் அடையாளத்துக்கான போராட்டங்களும்

23 நிமிட வாசிப்பு

இலங்கையில் இன்று ‘மலையகத் தமிழர்கள்’ என அடையாளப்படுத்தப்படுகின்ற மக்கள், பதினெட்டாம் நூற்றாண்டில் தெற்காசியா முழுவதும் பரவியிருந்த மேலைத்தேயக் காலனித்துவத்தின் விளைவாகத் தோன்றியவர்கள் ஆவர். குறிப்பாக, பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் தவிர்க்க முடியாத ஒரு விளைவாக மலையகத்தில் குடியேற்றப்பட்டவர்கள். இம்மக்கள் தென்னிந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர். வரலாற்றுத் தகவல்களின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து சுமார் 35% பேரும், சேலம் மாவட்டத்திலிருந்து 18% பேரும், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 10% பேரும், மதுரையிலிருந்து […]

மேலும் பார்க்க

நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர் மேம்பாடும் முகாமைத்துவமும்: யாழ்ப்பாணக் குடாநாடு, வன்னிப் பெருநிலப்பரப்பு, கிழக்குப் பிராந்தியம் – பகுதி 2

22 நிமிட வாசிப்பு

4.5.4 யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு பாதுகாப்பான நீரை வழங்குவதற்கான நீண்டகால நிலையான வழிகள் யாழ்ப்பாணத்திற்கு பாதுகாப்பான நீரை வழங்குவதற்கான நீண்டகால நிலையான ஒரே தீர்வு, யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வெளியே, ஆனால் வடக்கு மாகாணத்திற்குள் இருக்கும் ஆறுகள், ஏரிகள், அணைகள், நீர்த்தேக்கங்கள், குளங்கள் போன்ற நிலப்பரப்பு நீர் மூலங்களில் இருந்து நீரைக் கொண்டு வருவதே என்பது கீழே உள்ள அட்டவணை 4.1 மூலம் எந்தச் சந்தேகத்திற்கும் இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணக் குடாநாட்டின் […]

மேலும் பார்க்க

வட இலங்கைப் பெருநிலத்தில் ஆதிமனிதக் குடியேற்றங்கள்

33 நிமிட வாசிப்பு

ஹோமோ இரக்டஸ் எனப்படும் ஆதி மனிதன் (பச்சை) ஆபிரிக்காவிலிருந்து ஆசியா வரை பெயர்ந்ததையும், நியண்டதல் எனப்படும் ஆதி ஐரோப்பியரின் (மஞ்சள்) பரவலையும், ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் நவீன மனிதனின் (சிவப்பு) அகில உலக இடப்பெயர்வையும் காட்டும் படம். ஆபிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து வந்த ஆதி மனித இனங்கள் வாழ்ந்த இடங்களில் வட இலங்கையின் வன்னிப் பகுதி முக்கியமானதொரு இடமாகும். காலவரிசை (Chronology) (இ.மு – இற்றைக்கு முற்பட்ட ஆண்டுகள்) ஒரு குறிப்பு: […]

மேலும் பார்க்க

இலங்கையை ஆக்கிரமித்த இந்தியாவும் உலகப் பேரரசுகளும்

29 நிமிட வாசிப்பு

உலகளாவிய அர்த்தத்தில் எங்கு பேரரசுகள் எழுகின்றனவோ அங்கெல்லாம் அவை ஓர் உயிரியைப் போல தாம் வாழும் அண்டைய பிரதேசத்துக்குள் தமது கால்களை அகட்டி நகர்ந்து பரவும். அது இந்தியப் பேரரசுக்கும் விதிவிலக்கானது அல்ல. கி.மு நான்காம் நூற்றாண்டில் முதலாவதாக இந்தியாவில் எழுந்த மௌரியப் பேரரசு அண்டை நாடுகளை நோக்கிப் பரந்து விரிவடையத் தொடங்கியது. மௌரியப் பேரரசு அசோகச் சக்கரவர்த்தியின் தலைமையில் பேரரச தத்துவமாய் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய பௌத்த […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்