September 2025 - Page 2 of 2 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

September 2025 தொடர்கள்

இலங்கையின் சமய மறுமலர்ச்சி இயக்கமும் முதலாளித்துவமும்: அநகாரிக தர்மபாலவின் வகிபாகம்

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: குமாரி ஜயவர்த்தன குமாரி ஜயவர்த்தன அவர்கள் எழுதிய ‘Nobodies to Somebodies: The Rise of the Colonial Bourgeoisie in Sri Lanka’ என்னும் நூல் இலங்கையில் காலனிய காலத்து முதலாளித்துவத்தின் தோற்றம் பற்றியும், முதலாளித்துவ வகுப்பின் தோற்றத்தின் விளைவாக ஏற்பட்ட சமூக, பொருளாதார அரசியல் மாற்றங்கள் பற்றியும் ஆராயும் நூலாகும். இந்நூல் ‘அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை: இலங்கையில் காலனித்துவ முதலாளித்துவ வகுப்பின் தோற்றம்’ என்ற […]

மேலும் பார்க்க

ஈழத் தமிழ்க்கூத்தின் நாடகக் கட்டமைப்பு முறை 

20 நிமிட வாசிப்பு

பொதுவான நாடக அமைப்பு நாடகம் ஒரு முழுமையான வடிவமாக உருவாகியமைக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. ஆரம்பத்தில் சடங்குகளே ஆற்றுகைகளாக இருந்தன. இந்தச் சடங்குகள் நம்பிக்கையோடு செய்யப்பட்டன. அந்தச் சடங்குகள் செய்யும் முறையில் ஓர் அமைப்பு உண்டு. அதாவது இப்படி ஆரம்பித்து இப்படிச் சென்று இப்படி முடிக்க வேண்டும் என்று ஓர் அமைப்பு அதற்கு உண்டு. சடங்கில் இருந்து பிறந்தவைதான் பொழுதுபோக்குக்குரிய கதை தழுவாத ஆட்ட வடிவங்கள். அந்த ஆட்ட […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நீர்வளம், வேளாண்மைத் துறை பற்றிய அடிப்படைத் தகவல்கள்: முரண்பாட்டுக்கு முன்னரும் பின்னரும்

20 நிமிட வாசிப்பு

3.1 அறிமுகம் விவசாயத்துறையில் காடுகள் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளும் அடங்கும். இது இம்மாகாணங்களின் முதன்மைப் பொருளாதார நடவடிக்கையாகும். 1980களில், நாட்டின் மொத்த விவசாய உற்பத்தியில் ஏறத்தாழ 20.5% வரை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பங்களித்தன. தேசிய திட்டமிடல் துறையால் தயாரிக்கப்பட்ட 1981-1990 காலகட்டத்திற்கான (1975 ஆம் ஆண்டு மாறாத விலையில்) மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Provincial GDP) தற்காலிக மதிப்பீட்டின்படி, அக்காலகட்டத்தின் தொடக்கத்தில் தேசிய மொத்த […]

மேலும் பார்க்க

வல்லிபுரமும் நாகர்கோயிலும்

30 நிமிட வாசிப்பு

வல்லிபுரம் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சிப் பகுதியில் இன்று ஒரு சிறு கிராமமாகக் காட்சியளிக்கிறது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மக்கள் குடியேற்றம் செறிந்த, பிரபலமான, ஓர் ஆரம்பகால கடற்கரை நகரமாக அது விளங்கியிருக்கிறது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்? இன்று புன்னாலையிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் வடக்குக் கடற்கரை வீதி வழியே சென்றால், வீதி முடிவிலிருந்து இரண்டு மைல்களுக்கு அப்பால் இக்கிராமம் இருக்கிறது. இப்போதைய வல்லிபுரம் கிராமம் கடற்கரையிலிருந்து […]

மேலும் பார்க்க

1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 4

14 நிமிட வாசிப்பு

தமிழரசுக்கட்சி தடை செய்யப்படுதலும் அதன் தலைவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படலும் தமிழரசுக்கட்சி தடை செய்யப்பட்டதுடன் கே.எம்.பி. ராஜரட்னாவின் இயக்கமும் தடை செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பிரசார ஏடான ‘சுதந்திரன்’ பத்திரிகையும் தடை செய்யப்பட்டது. 1958 யூன் 05 ஆம் திகதி கட்சியின் தலைவர்களும் மத்திய குழு உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். பெரும்பாலானோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட, அமிர்தலிங்கம், வன்னியசிங்கம், இராசவரோதயம், செ. இராசதுரை, வி.என். நவரத்தினம், வி. நவரத்தினம், செனட்டர் நடராசா என்போர் […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – புத்தூர்

10 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் அச்சுவேலிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், புத்தூர்க் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலுள்ள விவரங்களை ஆராயலாம்.  புத்தூர்க் கோவிற்பற்றில் புத்தூர், சிறுப்பிட்டி, அச்செழு, ஆவரங்கால் ஆகிய நான்கு துணைப்பிரிவுகள் இருப்பதை நிலப்படம் காட்டுகிறது (படம்-1). எல்லைகள் புத்தூர்க் கோவிற்பற்றின் வடக்கு எல்லையில் அச்சுவேலிக் கோவிற்பற்றும்; மேற்கில் மயிலிட்டி, மல்லாகம் ஆகிய கோவிற்பற்றுகளும்; […]

மேலும் பார்க்க

அருணாசலமும் அனைத்து இலங்கையர் தேசியவாதமும்

14 நிமிட வாசிப்பு

மிதவாதத் தலைவர்கள் பிரித்தானிய ஏகாதிபத்தியம் 19 ஆம் நூற்றாண்டு முடிவடைந்தபோது தென் ஆசியாவில் உறுதிபெற்ற நிலையில் இருந்தது. மேல்நாட்டார் ஆட்சியை எதிர்ப்பவர்களாகக் குறிப்பிடத்தக்க தலைவர்கள் இருக்கவில்லை. இலங்கையில், ஆங்கிலக் கல்வி பெற்ற மத்திய வகுப்பினரும், காலனி ஆட்சியில் தோன்றிய புதிய வாய்ப்புகளை இறுகப்பற்றி மேலுக்கு வந்தோரும், புதிய ஆட்சி அறிமுகப்படுத்திய சட்டமுறைகளுக்கு அமைய உருவாகிய ஒழுங்குள்ள அமைப்புக்குள் அமைதியுடன் வாழ்ந்த பொதுமக்களும் பிரித்தானியர் ஆட்சியை வெறுக்காது ஏற்றுக்கொண்ட நிலை காணப்பட்டது […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்