September 2025 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

September 2025 தொடர்கள்

இலங்கையில் உள்ளூராட்சி அரசாங்கம்: பிரித்தானியர் ஆட்சியின் தொடக்கம் முதல் 1920 வரையான வரலாறு

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: பிரேமசிறி ஹெட்டியாராச்சி ஆய்வாளர் பிரேமசிறி ஹெட்டியாராச்சி அவர்கள் The Local Government in Sri Lanka: The Historical Background என்னும் தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். பேராசிரியர் ஜயதேவ உயன்கொட அவர்களால் பதிப்பிக்கப்பட்ட ‘Local Government and Local Democracy in Sri Lanka: Institutional and Social Dimensions’ என்னும் நூலின் (2015) முதலாவது அத்தியாயமாக அமையும் (பக். 1-37) இக்கட்டுரை இலங்கையில் […]

மேலும் பார்க்க

தொலைந்த கிறிஸ்தவத் திருமறைகள்

20 நிமிட வாசிப்பு

பால்தேயஸ் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பின்பு, இலங்கைத் தமிழர்கள் இன்னும் முப்பது ஆண்டுகள் இன்னுமொரு தமிழ் வேதத் திருப்புதலுக்கு (மொழிபெயர்ப்பிற்கு) காத்திருக்க வேண்டியிருந்தது. பதினேழாம் நூற்றாண்டின் காலனிய யாழ்ப்பாணத்தில், கிறிஸ்தவத் திருமறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் தமிழ்மொழி வடிவம் பெற்றன. இந்த முயற்சிக்கு வழிவகுத்த இரண்டு நபர்களும் இந்தியாவுடன் தொடர்புடையவர்கள்; இருவரும் இந்தியாவில் பிறந்து பின்னர் யாழ்ப்பாணத்திற்குக் குடியேறியவர்கள். அவர்களில் ஒருவர் டச்சு – தமிழ்க் கலப்பின சமூகத்தினரான அட்ரியன் […]

மேலும் பார்க்க

மலையகத்தில் கூட்டுறவு முயற்சிகள்

20 நிமிட வாசிப்பு

இலங்கைத் தேயிலை நாட்டுக்கு ஒரு தனித்துவமான இடத்தையும், மதிப்பையும், குறியீட்டையும் அளித்தது. ஆனால் பெரும்பாலான தேயிலைத் தொழிலாளர்கள் இன்னும் பல தசாப்தங்களாக லயன் காம்பிராக்களில் வசிக்கின்றனர். கல்வி, சுகாதாரம், சமூக நல்வாழ்வு ஆகிய துறைகளில் அவர்கள் தொடர்ந்தும் புறக்கணிப்பை அனுபவிக்கிறார்கள். 1948 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம் (எண் – 18) இதற்கான முக்கிய தொடக்கமாக அமைந்தது. அப்போது, சுமார் 6.3 மில்லியன் மக்கள் தொகையில் 1.2 மில்லியன் […]

மேலும் பார்க்க

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞானக் கல்வியின் வரலாறு

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஏ.எம். நவரத்தின பண்டார, ஜயதேவ உயன்கொட முன்னுரை இலங்கையின் பல்கலைக்கழகங்களில் ‘அரசியல் விஞ்ஞானம்’ என்ற பாடம் ஒரு கல்வித் துறையாக வளர்ச்சியுற்ற வரலாற்றைப் பேராசிரியர் ஏ.எம். நவரத்தின பண்டாரவும், பேராசிரியர் ஜயதேவ உயன்கொடவும் இணைந்து எழுதியுள்ள ‘Political Science and Public Policy: Cultivating the Critical Spirit’ என்னும் தலைப்பிலான ஆங்கிலக் கட்டுரையில் விவரித்து எழுதியுள்ளனர். இக்கட்டுரை One Hundred Years of Humanities and […]

மேலும் பார்க்க

கூத்தின் ஆட்ட முறைகளும் அதன் ஆற்றுகை அமைப்பும்

15 நிமிட வாசிப்பு

கூத்துப் பிரதியும் ஆற்றுகைப் பிரதியும் சென்ற முறை நாங்கள் கூத்தின் நாடக அமைப்பைப் பார்த்தோம். அது கூத்தினுடைய எழுத்துப் பனுவல் அல்லது எழுத்துப் பிரதி அமைக்கப்படுகின்ற முறை. இந்தப் பனுவலே மேடையில் ஆற்றுகை வடிவம் பெறுகிறது. எழுத்தில் உள்ள பனுவலில் அல்லாத மிகப் பல விஷயங்கள் மேடையிலே நடைபெறும். பனுவல் படிக்கும் அனுபவம் வேறு; பனுவலில் உள்ளவற்றைக் காட்சியாக மேடையில் பார்க்கும் அனுபவம் வேறு. இரண்டும் இரண்டு வேறு உலகங்கள் […]

மேலும் பார்க்க

இன்றைய இருப்பின் மீதான கடந்தகாலத் தாக்கம்

20 நிமிட வாசிப்பு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுப் போயிருந்த இஸ்ரேல் எனும் நாட்டை கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் ‘கண்டுபிடித்து’ மீள் குடியேற்றம் மேற்கொள்ள யூதர்கள் உத்தேசித்த போது ஐரோப்பியக் கண்டத்தைச் சேர்ந்த ஏகாதிபத்திய நாடுகள் அதனுடன் பிணைந்திருந்த தமது மேலாதிக்க நலன் காரணமாக இணக்கம் தெரிவித்தன. ஜெர்மனி புதிய மேலாதிக்க வல்லரசாகும் முனைப்பில் யுத்த வெறியுடன் இரண்டாம் உலக மகா யுத்தத்தைத் தொடக்கிய போது அதன் தலைவரான ஹிட்லர் நடாத்திய யூத எதிர்ப்புக் […]

மேலும் பார்க்க

தற்கொலைகள்: சமூக அவலத்தின் கண்ணாடி

40 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் 2013 ஆம் ஆண்டு கள ஆய்வொன்றிற்காக முல்லைத்தீவுக்குச் சென்றிருந்தோம். குறித்த தினம் எமது கள ஆய்வை நிறைவுசெய்து, எமக்கு உதவிபுரிந்த நண்பர் ஒருவரின் வீட்டில் மாலை இளைப்பாறிக் கொண்டிருந்தோம். தீடிரென ஒருவர் ஓடி வந்தார். அவர்களது அயலவர் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும் அவரைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் சொன்னார். ஆனால் அதற்கான போக்குவரத்து வசதி இருக்கவில்லை. ஏனெனில் நாம் தரித்து நின்ற […]

மேலும் பார்க்க

கதிர்காமம்: தமிழ் நாட்டவர்க்கான யாத்திரை வழிகாட்டி

25 நிமிட வாசிப்பு

இலங்கையின் புராதன முருகன் ஆலயங்களுள் ஒன்றான கதிர்காமம் சைவர்களதும் பௌத்தர்களதும் பிரதான யாத்திரைத்தலமாக விளங்கி வருகின்றது. நாடு முழுவதுமிருந்து முருக பக்தர்கள் கதிர்காமத்துக்கு யாத்திரை செல்கின்றனர். இந்த யாத்திரையும் யாத்திரைக் காலத்து நடைமுறைகளும் இலங்கையின் கலாசார வாழ்வின் முக்கியமான கூறுகளாக விளங்குவதுடன் ஒவ்வொரு இனத்தினதும் பிராந்தியத்தினதும் வழமைகளுக்கு ஏற்ப, தனித்துவம்மிக்க உபபண்பாட்டுக் கூறுகளும் உருவாக்கம் பெற்றுள்ளன.  கதிர்காமத்தோடும் கதிர்காம யாத்திரையோடும் தொடர்புபட்ட வகையில் ஆலய உருவாக்கங்கள், ஆலய நடைமுறைகள் முதலானவை […]

மேலும் பார்க்க

இந்தியச் சமஷ்டி முறை

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஜயம்பதி விக்கிரமரட்ண உலக நாடுகளின் சமஷ்டி முறைகளில் இந்தியாவின் சமஷ்டி முறை தனித்துவம் மிக்கது. இந்தியாவின் சமஷ்டி முறை அரசியல் யாப்புகளை உருவாக்குதல் (Constitution Making) தொடர்பாகச் சிறந்த பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கான முன் உதாரணமாகத் திகழ்வது. சட்ட அறிஞர் ஜயம்பதி விக்கிரமரட்ண ‘Constitution Making in Multi – cultural Societies: Some International Experiences’ என்னும் கட்டுரையில் ‘Success in India’ என்னும் உப தலைப்பின் […]

மேலும் பார்க்க

முள்ளிவாய்க்கால் படுகொலையின் கொடிய வேர்களை இலங்கையின் நீண்டகால அரசியல், சமூக, பொருளாதாரக் கட்டமைப்புகளில் காண முடிவது எப்படி?

16 நிமிட வாசிப்பு

தூய இலட்சியங்களினாலும், தர்ம போதனைகளினாலும், ஓசோனை உடைக்கவல்ல ஒப்பாரிகளினாலும், வரலாற்றை நிர்ணயிக்க முடியாது. சிங்கத்தின் பிடியில் யானையின் அலறல் காட்டைப் பிளந்து ஓசோனை உடைக்கும். ஆனாலும் கூட, யானையைக் கூறுபோட்டுச் சிங்கங்கள் உண்ணத் தவறுவதில்லை. “எதனையும் அரசியலாகப் பார்க்க வேண்டும்;அனைத்தும் அரசியலுக்குக் கீழ்ப்பட்டவையே” அரசியல் என்பது நலன்களைக் கையாள்வது பற்றிய இயங்கியல் ஆகும். உறவுகள் நலன்களால்  ஆனவை. நலன்கள் கொடுக்கல், வாங்கல் அல்லது ஆக்கிரமிப்பாலானவை. தாய்க்கும் – பிள்ளைக்கும், காதலனுக்கும் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்