August 2025 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

August 2025 தொடர்கள்

சமூகவியலும் மானிடவியலும்: சான்றுகளின் அடிப்படையில் சமூக உலகம் பற்றி ஆராயும் கற்கைத்துறைகள் – பாகம் 2

28 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: காலிங்க ரியுடர் சில்வா மற்றும் சசங்க பெரேரா ரால்ப் பீரிஸ் அவர்கள் தனக்குக் கிடைத்த மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை உபயோகித்து நாட்டின் தேவைகளுக்கேற்ற முறையில் சமூகவியல் பாடநெறி ஒன்றை வகுத்து, அதனைச் செயற்படுத்தினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் கல்வியின் வளர்ச்சிக்கு அவரின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது. ரால்ப் பீரிஸ் அவர்கள் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் சேர்வதும் பின்னர் அடிக்கடி பதவி விலகுவதுமாக இருந்தார். இது சமூகவியல் கல்வித்துறையின் வளர்ச்சிக்குத் தடையாக […]

மேலும் பார்க்க

‘மலையக வீதிப்பாடல்கள்’ எண்ணக்கரு விருத்திக்கு வலிமை சேர்த்த இரு பெண்மணிகள்

17 நிமிட வாசிப்பு

“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்.” என பாரதி தனது பாஞ்சாலி சபதம் நவீன காவிய முகவுரையில் குறிப்பிடுகிறார். அதனை வலியுறுத்திய வாய்மொழிப் பாடல்களைப் பாடும் புலவர்கள் காலத்துக்குக் காலம் இருந்து வந்துள்ளார்கள். “இவ் வாய்மொழிப் பாடல்களின் மரபைத் தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தும் போதுதான் அவற்றின் சிறப்பு, […]

மேலும் பார்க்க

சமூகவியலும் மானிடவியலும்: சான்றுகளின் அடிப்படையில் சமூக உலகம் பற்றி ஆராயும் கற்கைத் துறைகள் – பகுதி 1

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: காலிங்க ரியுடர் சில்வா மற்றும் சசங்க பெரேரா இலங்கைப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மனிதப்பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானங்களின் ஒரு நூற்றாண்டு வரலாற்றை எடுத்துக்கூறும் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுதியொன்றை வெளியிட்டது. இத்தொகுதியின் தலைப்பு ஆங்கிலத்தில் ‘Beyond Boundaries: One Hundred Years of Humanities and Social Science in Sri Lankan Universities’ என்பதாகும். 1921 ஆம் […]

மேலும் பார்க்க

அறிமுகம்: இலங்கை வரலாற்றில் ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’யும் அதற்கான தத்துவார்த்த அணுகுமுறையும்

10 நிமிட வாசிப்பு

இனப்படுகொலை என்பது ஏதோ ஒரு நாளில் நிகழ்ந்துவிடும் தன்னியல்பான நடவடிக்கை அல்ல. மாறாக அது ஓர் ஒடுக்கும் சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது தொடர்ந்து, நீண்டகால அளவில் படிப்படியாகச் செயற்படுத்தும் பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளின் இறுதி விளைவாகவே நடக்கிறது. எனவேதான் இனப்படுகொலையைக் ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ என்று அழைக்கிறோம். கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையும் அதற்கான தத்துவார்த்த அணுகுமுறையும் பற்றிய ஆழமான பார்வை நமக்கு அவசியமானது. காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான எந்தவொரு தேசிய விடுதலைப் போராட்டமும் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணப் பட்டினம்: பொங்கொலிநீர்ச் சிங்கைநகர் – பகுதி 2

30 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணக் கோட்டைத் தொல்லியல் ஆய்வுகள் யாழ்ப்பாணக் கோட்டை மேலாய்வுகள் 2011-12 2010 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைத் தொல்லியல் திணைக்களம் நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் அழிவடைந்த யாழ்ப்பாணக் கோட்டையை மீள்புனரமைப்புச் செய்துவரும் காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் 62 ஏக்கர் பரப்பில் அமைந்த கோட்டையின் பெரும்பகுதி தொல்லியல் மேலாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அவற்றுள் அழிவடைந்த கிறிஸ்தவத் தேவாலயம், இராணி மாளிகை, ஆயுதக் களஞ்சியங்கள், பீரங்கித் தளங்கள், படைவீரர்களின் இருப்பிடங்கள், காவல் மையங்கள் என்பன […]

மேலும் பார்க்க

அநகாரிக தர்மபாலவின் பௌத்த சமயச் சீர்திருத்த இயக்கம்: தனிநபர் அடையாளமும், பண்பாட்டு நெருக்கடியும்

45 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: கணநாத் ஒபயசேகர  1 தியோசொபிக்கல் சபை என்ற அமைப்பை 1875 ஆம் ஆண்டில் ஹென்றி ஸ்டீல் ஒல்கொட், பிளவாட்ஸ்கி அம்மையார் என்ற இருவரும் அமெரிக்காவில் நிறுவினர். கிழக்குத் தேசங்களின் சமயங்களிலும் அவற்றின் ஆன்மிகச் சிந்தனையிலும் அக்கறை கொண்டவர்களான இவர்கள் 1878 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தனர். இந்தியா வந்து சேர்ந்த இவ்விருவரும் சென்னையின் அடையாறு என்னும் இடத்தில் தலைமையகம் ஒன்றை அமைத்தனர். அநகாரிக தர்மபாலவின் வாழ்க்கையில் பெரும் […]

மேலும் பார்க்க

ஒற்றன்: ஆங்கிலேய ஒற்றர் புகழும் இந்திய யதார்த்தமும்

20 நிமிட வாசிப்பு

முதலாம் உலக மகாயுத்தம் தொடங்குவதற்கு ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னரே உளவாளிகள் பற்றிய ஐயமும் அச்சமும் அபரிமிதமாகப் பெருகியுள்ளன. இங்கிலாந்துக்குள் ஜெர்மனிய உளவாளிகள் ஊடுருவி இரகசிய வலையமைப்பைக் கட்டமைத்துள்ளனர், அவர்களினால் பேரனர்த்தம் நிகழப்போகிறது முதலான கருத்துகள் சமூகத்துள் ஆழமாக விதைக்கப்பட்டு, விழிப்புடனிருக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. போருக்கான ஆயத்த நடவடிக்கைகளும் எதிர்ப் படைகளின் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற பதட்டமும் உளவுப் பீதியையும் உளவாளிகள் மீதான அச்சத்தையும் எல்லா மட்டங்களிலும் மிகுவித்தன. அவற்றைக் […]

மேலும் பார்க்க

மாலதி எழுதிய ‘எனது தேசத்தில் கடந்துபோன ஒரு தருணம்’ – தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் அரசின் இறுதி ஆண்டுகள் – பகுதி 1

20 நிமிட வாசிப்பு

இந்த நூல் N. மாலதி எழுதி, 2012 இல் வெளிவந்ததாகும். மாலதி அவர்கள் நியூசிலாந்து நாட்டினை வதிவிடமாகக் கொண்ட ஈழத்தமிழ் டயஸ்போறா சமூகத்தைச் சேர்ந்தவர். கணினித் தொழில்நுட்பத்துறையில் கலாநிதி ஆய்வுக்கல்வியை (PhD) நியூசிலாந்துப் (University of Canterbury) பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்தவர். அத்துறையில் ஆய்வாளராகவும் புரோக்கிராமராகவும் பணியாற்றியவர். முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது, அரசுசாரா ஆயுதப் போராட்டங்களின் வரலாற்றில் (History of Armed Struggles by Non-state Actors) முக்கியமான அம்சமாகும்; […]

மேலும் பார்க்க

புலம்பெயர் புலம்பல்கள்: யதார்த்தத்திற்கு வெகுதொலைவில்

25 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் ஈழத்தமிழரின் புலப்பெயர்வுக்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. அது வெறுமனே போருடனோ, அல்லது இலங்கையின் இன முரண்பாட்டுடனோ மட்டும் தொடர்புடையதல்ல. பிரித்தானியக் கொலனித்துவ காலத்திலேயே இந்தப் புலப்பெயர்வு தொடங்கியது. முதலில் பிரித்தானியக் கொலனிகளில் பிரித்தானியரின் நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக, ஆசிரியர்களாக, பொறியியலாளர்களாக, நிர்வாகிகளாக எனப் பலதரப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஈழத்தமிழர்கள் பிரித்தானியக் கொலனியெங்கும் புலம்பெயர்ந்தார்கள். இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின்னர், பல நாடுகளில் பிரித்தானியக் கொலனியாதிக்கம் முடிவுக்கு  வரத்தொடங்கியது. […]

மேலும் பார்க்க

செவ்வாச்சியம்மன் வழிபாடு

15 நிமிட வாசிப்பு

அறிமுகம்  ஐரோப்பியக் காலனிய ஆட்சிமுறைக்கு உட்பட்ட காலத்தில் தென்னிந்தியச் சமூகம் எதிர்கொள்ளாததும் எதிர்பாராததுமான சமய ஒடுக்குமுறைக்கு இலங்கை முழுவதும் உட்பட்டது. குறிப்பாக கரையோரப் பிரதேசங்களில் இருந்த சைவ, பௌத்த, இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்கள் யாவும் இடித்து அழிக்கப்பட்டன. சுதேச சமய வழிபாட்டு முறைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் ஈழத்துத் தமிழ்ச் சமூகம் தன் வாழ்வோடும் தொழிலோடும் இணைந்த, பண்டையகால வழிபாட்டு முறையான இயற்கைப் பொருள் வழிபாட்டுக்குத் திரும்பியது. மரம், கல் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்