நவீன உலகை அண்மித்தல் இருபதாம் நூற்றாண்டின் உதயத்தை உலக வரலாற்றில் ஒரு புது யுகம் தொடங்குவதைக் குறிக்கும் நிகழ்வாகக் கொள்ளலாம். மேற்குலகிலும் பிற இடங்களிலும் 19 ஆம் நூற்றாண்டின் தொழிற்புரட்சி எவ்வளவுதான் மாற்றங்களைக் கொண்டுவந்தபோதிலும் அந்த நூற்றாண்டு 1900 இல் முடிவடைந்தபோது, இன்று நாம் நவீன வாழ்வின் அத்தியாவசியப் பொருட்களாகக் கருதும் பல முன்னேற்றமான உபகரணங்கள் புழக்கத்தில் இருக்கவில்லை. இவை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து துரிதமாகப் பெருந்தொகையான […]