January 2023 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

January 2023 தொடர்கள்

வாணிப புத்திசாலித்தனமும் அதன் அடித்தளமும் (Business Acumen and its foundation)

7 நிமிட வாசிப்பு | 13442 பார்வைகள்

“அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமும் சூழ்ந்து செயல்”– திருக்குறள் (461) மு.வரததாசனார் விளக்கம்: (ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும். உலகில் மிகப்பிரபலமான  மைக்ரோசொஃப்ட் (Microsoft) நிறுவனத்தைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பர். அதன் நிறுவுநர் பில் கேட்ஸ் (Bill Gates). உலகின் விரல்விட்டு எண்ணக்கூடிய முதன்மைப் பணக்காரர்களில் பில்கேட்ஸும் ஒருவர். பில்கேட்ஸ் உருவாக்கிய மென்பொருட்களைப் பயன்படுத்தாத எவருமே […]

மேலும் பார்க்க

மருத்துவர் கிறீனிடம் காணப்பட்ட பன்மைத்துவம்

7 நிமிட வாசிப்பு | 9477 பார்வைகள்

யாழ்ப்பாணத்தில் பத்து ஆண்டுகள் மிஷன் பணியை நிறைவு செய்த மருத்துவர் கிறீன் அமெரிக்காவுக்குத் திரும்பியமையை 1858.07.24 அன்று வெளிவந்த நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை கிறீன் இந்தியாவிலிருந்து திரும்பியதாக செய்தி வெளியிட்டது என்று கடந்தவாரம் பார்த்தோம். யாழ்ப்பாணத்திலிருந்து சென்றவரை இந்தியாவிலிருந்து திரும்பியதாகப் பத்திரிகை குறிப்பிட்டதற்குப் பல காரணங்கள் உண்டு. யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கென்று அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் தமது மிஷன் பயணத்தை ஆரம்பிக்கவில்லை. அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் இந்தியாவுக்குத்தான் வந்தார்கள். ஆனால் அவர்கள்  […]

மேலும் பார்க்க

கனடாவில் பன்மைப் பண்பாட்டுவாதம் – பகுதி 5

25 நிமிட வாசிப்பு | 11102 பார்வைகள்

ஆங்கில மூலம்: அலெய்ன் ஜி. கக்நொன் மற்றும் றிச்சார்ட் சிமியோன் கனடாவின் வரலாறு ஆரம்பம் தொடக்கம் கனடாவின் வரலாற்றில் ஒன்டாரியோவும், கியுபெக்கும் பிரதான வகிபாகம் பெற்றன. அத்திலாந்திக் மாநிலங்கள் பிரித்தானியாவின் காலனிகள் என்ற வகையில், தனித்துவமான வரலாற்றை உடையவை. தனித்துவமான அடையாளங்களும் அவற்றுக்கு உண்டு. கொண்பெடரேசன் அமைக்கப்பட்ட பின்னர், மேற்குப் பகுதியில் உள்ள மனிடோபா, சஸ்கற்சுவான், அல்பேர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா ஆகியன கொண்பெடரேசனில் இணைந்தன. அந்த மாநிலங்களும் தமக்கே உரியதான […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் விவசாயத்துறையும் வாய்ப்புகளும்: வடமாகாணத்தின் ஏனைய பயிர்செய்கைகள்

10 நிமிட வாசிப்பு | 17095 பார்வைகள்

வடமாகாணத்தின் ஏனைய பயிர்செய்கைகள் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் தன்னாதிக்கமுள்ள உற்பத்தித் துறையாக விளங்கும் விவசாயத்துறையில் நெல் விவசாயம் பற்றிய செயல் மதிப்பீட்டை கடந்த கட்டுரையில் பார்வையிட்டோம். இம்முறை நெல் தவிர்ந்த பழப்பயிர்கள், மரக்கறிப்பயிர்கள், ஏனைய தானியப் பயிர்கள் மூலம் இவ்விருமாகாணங்களும் கொண்டுள்ள வாழ்வாதார வாய்ப்புகளையும் உணவுப்பாதுகாப்பையும் மதிப்பிடுவதாக இந்த ஆய்வானது இடம்பெறுகிறது. இதில் முதலாவதாக தானியப் பயிர்களின் உற்பத்தி தொடர்பாக நோக்கலாம். வடக்கு – கிழக்கு ஆகிய இரு […]

மேலும் பார்க்க

கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் ஆற்றுகைகளும் அதன் இன்றைய நிலையும்

9 நிமிட வாசிப்பு | 33423 பார்வைகள்

இன்றைய நவீன காலனித்துவ உலகம் மனிதனை இயற்கையிலிருந்து பிரித்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மனித குலத்தின் பாரம்பரியங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் கலாசார நடவடிக்கைகள் அனைத்தும் சீர்குலைந்துள்ளன. இதைத் தாமதமாகவேனும் உணர்ந்துகொண்டே மனிதச் சிந்தனையானது தன் இயல்பான வாழ்க்கை முறையை நோக்கி நகர முற்பட்டுள்ளது. பல இடங்களில் வியாபாரமாகவும், சில இடங்களில் திறமான கருத்தாடலாகவும் இது காணப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தான் நவீன உலகில் மானுடவியல் ஆய்வுகளும் ஆய்வாளர்களும் […]

மேலும் பார்க்க

உரிமைகள் மறுக்கப்படுதலும் வறுமையும்

26 நிமிட வாசிப்பு | 19721 பார்வைகள்

பெருந்தோட்ட மக்களின் வறுமைநிலை இலங்கைவாழ் இந்தியத்தமிழர்களுள் பெரும்பாலானோர் (60 – 65 வீதமானோர்) இன்றும் பெருந்தோட்டங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். எஞ்சியோர் நாட்டின் சில பிரதேசங்களில் செறிவாகவும், வேறுசிலவற்றில் பரவலாகவும் வாழுகின்றனர். தோட்டங்களுக்கு வெளியே வாழும் இவர்களைப் பின்வரும் ஆறு பிரிவுகளுக்குள் அடக்கலாம்: பெரியதும் சிறியதுமான வர்த்தகர்கள் அரச – தனியார் துறைத்தாபனங்களில் தொழில்புரிவோர் தொழில்சார் வல்லுநர்கள் அண்மைக்காலங்களில் தோட்டங்களைவிட்டு வெளியேறி கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் சில்லறைக்கடைகள், சிற்றுண்டிச்சாலைகள், உல்லாசப்பயண விடுதிகள் போன்றவற்றில் […]

மேலும் பார்க்க

புலம்பெயர் தமிழர்களும், மரபுரிமையும் – II

12 நிமிட வாசிப்பு | 17446 பார்வைகள்

புலம்பெயர் மரபுரிமை என்பது தமது தாயகங்களை விட்டு, பிற தேசங்களில் வாழ்பவர்கள் காவிச் சென்றதும், நினைவு கூர்வதும், புலம்பெயர்ந்த நிலங்களில் உருவாக்கிக் கொண்டதும், பிற பண்பாடுகளிலிருந்து உள்வாங்கிக் கொண்டதுமான ஒரு கலப்பொட்டான மரபுரிமையை (hybrid heritage) எடுத்துக்காட்டுவது. இதிற் பெரும்பகுதியாக அவர்களோடு கூடவே புலம்பெயர்ந்த அவர்களது முன்னோர்கள் வழிவந்த பரம்பியப் பயில்வுகள் அவற்றின் முக்கியமான பகுதியாக இருக்கும். இன்னொருவகையில் அவர்கள் காவிச்சென்று அவர்களது தலைமுறைகள்தோறும் கடத்தப்பட்டு வந்த மரபுரிமை புலம்பெயர் […]

மேலும் பார்க்க

பூதாகாரமாகும் மேய்ச்சல் தரைப்பிரச்சினை

19 நிமிட வாசிப்பு | 18603 பார்வைகள்

கடந்த சில வருடங்களாக  கால்நடைகள் மற்றும் மேய்ச்சல் தரை தொடர்பான பல செய்திகளை ஊடகங்கள் வழியாக அவதானிக்க முடிகிறது. செய்தி 1 – மட்டக்களப்பின் எல்லைப் பகுதியில் கால்நடைகளின் மேய்ச்சல் தரைகள் அபகரிக்கப்படுவதாக அங்குள்ள கால்நடை வளர்ப்பாளர்களும் அரசியல்வாதிகளும் அரசுடன் போராடுவதை காண முடிகிறது. செய்தி 2 – கிளிநொச்சி மாடுகள் முறிகண்டிப் பகுதியில் கூட்டம் கூட்டமாக மேய்க்கப்படுவதாகவும் அவை முறிகண்டிப் பகுதி விவசாய நிலங்களில் மேய்ந்து நாசமாக்குவதாகவும்  முறைப்பாடு […]

மேலும் பார்க்க

பிரஜா உரிமை பறிக்கப்பட்ட கரிய வரலாறு

8 நிமிட வாசிப்பு | 17251 பார்வைகள்

இந்த நாட்டில் இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் முதலாவது பிரசன்னத்தில் இருந்தே அவர்கள் இந்த நாட்டுக்காக வியர்வையையும் இரத்தத்தையும் சிந்தி உழைக்க ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் உழைத்துத் தந்த உள்நாட்டு உற்பத்தியும் ஏற்றுமதி வருமானமுமே இந்த நாட்டை ஆளும் வர்க்கத்தினரும் மேட்டுக்குடி மக்களும் சுகபோக வாழ்க்கை வாழ வழியமைத்துக் கொடுத்தது. ஆனால் அவர்கள் இதுவரை இவர்களை அடித்து உதைத்து நசித்து வந்திருக்கின்றனரேயன்றி அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஒருபோதும் செய்து கொடுக்க முன்வரவில்லை. அவர்களது […]

மேலும் பார்க்க

இலங்கை முஸ்லிம்கள்: உப மரபினங்கள்

6 நிமிட வாசிப்பு | 14222 பார்வைகள்

இலங்கை முஸ்லிம்கள் பன்மையான மரபினக் கலவையைக் கொண்டுள்ள, மதரீதியாக தங்கள் இன அடையாளத்தை கட்டமைத்துள்ள இனம் என்பதை கடந்த அத்தியாயங்களில் எடுத்துக்காட்டினேன். முஸ்லிம்கள் எனும் இந்த இன உருவாக்கம் பண்பாட்டு ரீதியானதேயன்றி மரபணு சார்ந்தது அதாவது உயிரியல் சார்ந்தது அல்ல என்பதையும் பார்த்தோம். இலங்கையின் சமூக அரசியல், சமூக சூழ்நிலைகள் மற்றும் நலன்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்கள் அரசியல்ரீதியாக தங்களை ஒரு இனமாக முன்னிறுத்தினர். இன்றுள்ள நிலையில் சிலவேளை கலப்புத் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்