ஆங்கில மூலம் பேராசிரியர் ஆர்.ஏ.எல்.எச். குணவர்த்தன பேராசிரியர் ஆர்.ஏ.எல்.எச். குணவர்த்தன அவர்கள் ‘The People of the Lion: Sinhala Identity and Ideology In History and Historiography’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையொன்றை எழுதினார். இக் கட்டுரை யொனதன் ஸ்பென்சர் பதிப்பித்து Routledge பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘Sri Lanka History and Roots of Conflict (1990)’ கட்டுரைத் தொகுப்பு நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டுரையில் நவீன […]
ஆங்கில மூலம் : கலாநிதி சரத் அமுனுகம கத்தோலிக்க இயக்கத்திற்கு எதிர்ப்பு இலங்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களை ஈர்ப்பதற்கு கத்தோலிக்கமும், கிறீஸ்தவப் பிரிவுகளும் போட்டியிட்டன. இது பௌத்த பிக்குகளின் மனதில் பாதுகாப்பற்ற உணர்வை தோற்றுவித்தது. 1950 களில் பௌத்தர்கள் கத்தோலிக்க மதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். அக்காலத்தில் “Catholic Action” (கத்தோலிக்க இயக்கம்) என்ற அச்சுறுத்தல் பற்றிய பேச்சு அரசியலில் முதன்மை பெற்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி பௌத்தர்களின் பாதுகாவலன் […]
ஆங்கில மூலம் : ஜயம்பதி விக்கிரமரட்ன பெரிய வெள்ளி உடன்படிக்கை (GOOD FRIDAY AGREEMENT) வட அயர்லாந்தின் உல்ஸ்ரர் யூனியனிஸ்ட் கட்சி (ULSTER UNIONIST PARTY) அப் பகுதியின் பெரும்பான்மை கட்சியாகும். அது சமாதானச் செயல் முறையில் பங்கேற்றது. பிரித்தானியாவும் அயர்லாந்தும் ஒரு தீர்வைக் கொண்டு வரும் எனவும் தனது பங்கேற்பு அதற்கு உதவும் என்றும் இக் கட்சி நம்பியது. ஆனால் அயர்லாந்தின் இரண்டாவது பெரிய கட்சியான ஜனநாயக யூனியனிஸ்ட் […]
ஆங்கில மூலம் : கலாநிதி சரத் அமுனுகம அரசாளும் தொழில் மரபு வழிச் சமூகத்தில் சத்திரியர்க்கு உரியது. இராச வம்சத்திற்குரிய இந்த அரசாளும் தொழிலில் புத்த துறவிகள் ஈடுபடுதல் ‘விநய’ ஒழுக்கங்களுக்கு முரண்பாடான நிலையைத் தோற்றுவிக்கும். இலங்கையின் நவீன கால அரசியல் வரலாற்றில் இவ்வாறான முரண் நிலைகள் தோன்றியதுண்டு. 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 29 ஆம் தேதி இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாதிடப்பட்டது. அவ்வேளை ‘மௌபிம சுறக்கீமே […]
ஆங்கில மூலம் : ஜயம்பதி விக்கிரமரட்ன கல்மன் ஆணைக்குழு ஸ்கொட்லாந்தின் அதிகாரப் பகிர்வு பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஆணைக்குழு ஒன்றை ஐக்கிய இராச்சிய அரசு நியமித்தது. இந்த ஆணைக்குழு, கல்மன் ஆணைக்குழு (CALMAN COMMISSION) என அழைக்கப்படுகிறது. 1995 ஆம் ஆண்டின் ஸ்கொட்லாந்து சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னரான அனுபவங்கள் பற்றி ஆராய்ந்து அரசியல் யாப்பு தொடர்பாக செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் எவையென சிபாரிசு செய்தலும், ஸ்கொட்லாந்தின் பாராளுமன்றம் ஸ்கொட்லாந்து […]
ஆங்கில மூலம் : பேராசிரியர். ஏ ஜே. வில்சன் ஏ.ஜே வில்சன் பேராதனை பல்கலைக்கழகத்தில் அரசியல் துறையின் பேராசிரியராக விளங்கியவர். இலங்கையின் அரசியல் பற்றி ஆய்வு நூல்களையும் ஆய்வு கட்டுரைகளையும் இவர் 1950 களின் முற்பகுதி முதல் தொடர்ச்சியாக எழுதி வந்தார். 2000 ஆம் ஆண்டில் இவர் எழுதி வெளியிட்ட SRI LANKAN TAMIL NATIONALISM எனும் நூல் இவரது வாழ்வு காலத்தின் இறுதியில் எழுதிய நூலாகும். 1980 களில் […]
ஆங்கில மூலம் : ஜயம்பதி விக்கிரமரட்ன POWER SHARING : THE INTERNATIONAL EXPERIENCE என்ற நூலை அரசியல் யாப்புக்கான கற்கை நிறுவனம், இலங்கை – ராஜகிரிய என்ற அமைப்பு 2011 ஆம் ஆண்டில் வெளியிட்டது. இந்நூலின் பதிப்பாசிரியர்கள் ரஞ்சித் அமரசிங்க மற்றும் ஜயம்பதி விக்கிரமரட்ன ஆவர். இந்நூலில் ரஞ்சித் அமரசிங்க ஸ்பெயின் நாட்டின் அசமத்துவ அதிகாரப் பகிர்வு குறித்த ஒரு கட்டுரையை எழுதிச் சேர்த்திருந்தார். அதனை தமிழாக்கம் செய்து […]
ஆங்கிலமூலம் : மைக்கல் பாங்ஸ் யாழ்ப்பாணக் கிராமங்களின் கட்டமைப்பு தஞ்சாவூருக்கும் யாழ்ப்பாணத்திற்கும் சாதிக் கட்டமைப்பில் முக்கிய வேறுபாடுகள் உள்ளன. யாழ்ப்பாணக் கிராமங்களின் கட்டமைப்பு என்னும் விடயம் பற்றிய இப்பகுதியில், இவ் வேறுபாடுகள் ஒப்பீட்டு முறையில் சுட்டப்படும். யாழ்ப்பாணக் கிராமங்களின் உள்ளக ஒழுங்கமைப்பு (INTERNAL ORGANISATION) தஞ்சாவூரின் கிராமங்களின் உள்ளக ஒழுங்கமைப்பிலிருந்து வேறுபட்டது. பிராமணர்களிடையே நிலவும் உட்சாதிப் பிரிவுகள் என்ற விடயத்தில் தஞ்சாவூருக்கும் யாழ்ப்பாணத்திற்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளது. யாழ்ப்பாணத்தில் […]
ஸ்பானியாவில் வரலாற்றுத் தேசிய இனங்களது சுயாட்சியின் 25 ஆவது ஆண்டு நிறைவு 2004 இல் கொண்டாடப்பட்டது. அப்போது பஸ்க், கற்றலோனியா, ஹலீசியா என்பன தமது அதிகாரப் பகிர்வு அனுபவங்களை மீளாய்வு செய்தன. ஐரோப்பிய சமூகத்துடன் ஸ்பெயின் தன்னை இணைத்துக் கொள்வதற்காகச் செய்த இசைவினைத் தவிர அதன் அரசியல் யாப்பில் மாற்றங்கள் எதுவும் கொண்டுவரப்பட்டிருக்கவில்லை. சுயாட்சி சமூகங்கள் மத்தியில் அதிருப்தி காணப்படுவது இம் மீளாய்வில் அறியப்பட்டது. தமக்குரிய அதிகாரங்களின் அளவு போதியதாக […]
ஒரு விமர்சன அறிமுகம் பத்தினி வழிபாடு கேரளத்தில் இருந்து வந்து குடியேறிய மக்களால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தக் குடியேற்றம் 12-14 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்டது. இந்தக் குடியேறிகள் தற்போதைய வகைப்படுத்தலாக அமையும் மேல் மாகாணம், தென் மாகாணம், சப்பிரகமுவ மாகாணம் ஆகிய இடங்களில் குடியேறினர். இவர்கள் சிங்கள மொழி பேசுவோராகவும் பௌத்தர்களாகவும் காலப்போக்கில் மாறினர். இவ்வாறாக அவர்கள் பௌத்த – சிங்களப் பண்பாட்டில் தம்மைக் கரைத்துக் கொண்டனர். கேரளத்தில் இருந்து […]