ஆங்கில மூலம் : கலாநிதி சரத் அமுனுகம அரச அதிகாரத்தை கைப்பற்றுதல் அரச அதிகாரத்தைக் கைப்பற்றுதல் (CAPTURE OF STATE POWER) பற்றிய மார்க்சியக் கோட்பாடுகள் சீன-சோவியத் வாதங்களின் போது மேற்கிளம்பின. சீனா, கியுபா, வியட்நாம் ஆகிய நாடுகளின் அனுபவங்கள் மரபுவழி மார்க்சிஸ்டுகள் முன்வைத்த மாதிரியில் இருந்து வேறுபட்டதாக இருந்தன. சீனாவின் ஷங்காய் நகரின் தொழிலாளர் வர்க்கத்தின் கிளர்ச்சி கொடூரமாக அடக்கப்பட்டது. அதன் பின்னர் ‘மா ஓ சேதுங்’ யெனான் […]
அரசியல் யாப்புச் சட்டங்களின் ஒப்பீடு ‘பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களிற்குப் பொருத்தமான அரசியல் யாப்புக்களை வரைதல் : சர்வதேச அனுபவங்கள் சில’ என்னும் கட்டுரையின் சில பக்கங்களில் உள்ள கருத்துக்களை மேலே சுருக்கித் தந்தோம். இக்கட்டுரைத் தலைப்பு, இக்கட்டுரை ஆராயும் விடயங்கள் ஆகியன அரசியல் யாப்புச் சட்டம் பற்றியவை. குறிப்பாக அரசியல் யாப்புச் சட்டங்களின் ஒப்பீடு (COMPARATIVE CONSTITUTIONAL LAW) என்ற பாடத்தின் பகுதியாக அமையும் விடயங்களையே விக்கிரமரட்ண ஆராய்விற்கு எடுத்துக் […]
ஆங்கில மூலம் : சரத் அமுனுகம சமூகவியலாளர் கலாநிதி சரத் அமுனுகம அவர்கள் ‘WIJEWEERA AND THE LEADERSHIP OF THE J.V.P: A SOCIOLOGICAL PERSPECTIVE’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரையை எழுதியுள்ளார். 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘DREAMS OF CHANGE – LAND LABOUR AND CONFLICT IN SRI LANKA’ என்ற இவரது கட்டுரைத் தொகுப்பு நூலின் ஆறாவது அத்தியாயமாக (பக். 184 – […]
உரையாடலுக்கு ஆதாரமான பிரதி – ஆங்கிலத்தில் : கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண சட்ட அறிஞர் ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்கள் ‘TOWARDS DEMOCRATIC GOVERNANCE IN SRI LANKA – A CONSTITUTIONAL MISCELLANY’ என்ற தலைப்பிலான கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். பத்துக் கட்டுரைகளின் தொகுப்பாக அமையும் இந்நூல் 2014 ஆம் ஆண்டு ‘INSTITUTE FOR CONSTITUTIONAL STUDIES’ என்னும் ஆய்வு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்நூலின் தலைப்பை பொருள் விளக்கம் செய்யும் […]
ஆங்கில மூலம் : றெஜி சிறிவர்த்தன பிரித்தானிய ஏகாதிபத்தியம் இலங்கை தொடர்பாகவும், பொதுவாக அதன் காலனிய நாடுகள் தொடர்பாகவும் கடைப்பிடித்த கொள்கையில் இரு முரண்பட்ட போக்குகள் இருந்தன என றெஜி சிறிவர்த்தன குறிப்பிடுகிறார். பிறேஸ்கேர்டில் விவகாரத்தைப் பற்றிச் சரியான மதிப்பீட்டைச் செய்வதற்கு நாம் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் இரு முகங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இருபதாம் நூற்றாண்டில் (காலனிகளின் ஆட்சியில்) பிரித்தானியாவின் இந்த இரு முகங்களும் வெளிப்பட்டுத் தெரிந்தன. ஒரு முகம் […]
ஆங்கில மூலம்: ஜயம்பதி விக்கிரமரட்ண அரசியல் யாப்பு அறிஞரும், முன்னாள் அமைச்சருமான ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை “CONSTITUTION MAKING IN MULTI – CULTURAL SOCIETIES : SOME INTERNATIONAL EXPERIENCES” ஒரு சிறு நூலின் அளவுடையது. 74 பக்கங்களைக் கொண்ட இந் நீண்ட கட்டுரையின் முதல் 9 பக்கங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைத் தழுவி இத் தமிழ்க் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ‘அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் : […]
ஆங்கில மூலம் : றெஜி சிறிவர்த்தன றெஜி சிறிவர்த்தன அவர்கள் 2000 ஆம் ஆண்டில் எழுதிய ஆய்வுக் கட்டுரையொன்றின் ஆங்கிலத் தலைப்பு பின்வருமாறு அமைந்தது: “THE BRACE GIRDLE AFFAIR IN RETROSPECT: CONTRADICTIONS OF IMPERIALISM, OF THE POST COLONIAL STATE AND OF THE LEFT” மேற்படி கட்டுரையின் மையப் பொருளாக தனிநபர் உரிமைகளும் அரசு அதிகாரமும் (RIGHTS OF THE INDIVIDUAL AND THE […]
ஆங்கில மூலம் : பிரசன்ன டி சொய்சா சாதி ஒதுக்குதலுக்கும் பாரபட்சம் காட்டுதலுக்கும் எதிரான சட்டப் பாதுகாப்பின்மை இலங்கையில் சாதி பாரபட்சம் காட்டுதலைத் தடுக்கக் கூடியதான அரசியல் யாப்புச் சட்டப் பாதுகாப்பின் போதாமை சுட்டிக் காட்டப்பட வேண்டியது. சட்டப் பாதுகாப்பைப் பெறுவதற்கான நிறுவன ரீதியான தடைகளும் உள்ளன. இக் காரணங்களால் பொது வெளியில் கேள்விக்கு உட்படுத்தப்படாதனவான மறைமுகமான வெளித் தெரியாத காரணிகள் ஜனநாயக விலக்கலுக்குத் துணை புரிகின்றன. இலங்கையில் விளிம்பு […]
ஆங்கில மூலம் : பிரசன்ன டி சொய்சா விகிதாசாரத் தேர்தல் முறையும் சாதி வாக்குகளும் 1978 ஆம் ஆண்டின் அரசியல் திட்டம் முன்பிருந்த தேர்தல் முறையை மாற்றி விகிதாசார முறையைப் புகுத்தியது. முந்திய முறையில் பல வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் போட்டியிடுவர். அவ் வேட்பாளர்களுள் ஆகக் கூடிய வாக்குகளைப் பெறுபவர் வெற்றி பெற்றவராகத் தெரிவு செய்யப்படுவார். இதனை ‘FIRST-PAST–THE-POST’ தேர்தல் முறைமை என அழைப்பர். முன்னைய முறையில் தேர்தல் தொகுதி […]
ஆங்கில மூலம் : பிரசன்ன டி சொய்சா இலங்கையில் காலனிய காலத்தில் முதலாளித்துவம் மேலாண்மையுடைய முறையாக வளர்ச்சியுற்ற போதும் நிலமானிய உறவுகளை அது முற்றாக அழிக்கவில்லை. முதலாளித்துவத்திற்கு முந்திய நிலமானிய சமூக உறவுகளின் இயல்புகள் (PRE-CAPITALIST CHARACTERISTICS) தொடர்ந்து நீடித்தன. நிலமானிய சமூகம் சாதியை அடிப்படையாகக் கொண்டது. முதலாளித்துவ வளர்ச்சியுடன் வர்க்கங்கள் தோற்றம் பெற்றன. இலங்கையில் சிங்கள சமூகத்தில் சாதியும் வர்க்கமும் ஒரு சேரக் கலப்புற்று இருப்பதைக் காண முடிகிறது. […]