ஆங்கில மூலம்: குமாரி ஜெயவர்த்தன சர்வசன வாக்குரிமையும் கராவ சாதியினரின் வீழ்ச்சியும் 1920களில் சட்டசபை உறுப்பினர்கள், இலங்கையின் அப்போதைய சனத்தொகையின் 4 வீதத்தினரான எண்ணிக்கையுடைய வாக்காளர்களால் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களோடு நியமன உறுப்பினர்களும் சட்ட சபையில் அங்கம் வகித்தனர். 1920கள் உண்மையில் கராவ சாதியினரின் பொற்காலம் ஆகும். 1925 இல் பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம் அறிமுகமானதும், சட்டசபையில் அவர்களின் விகிதாசாரம் குறைந்தது. 1930களில் சர்வசன வாக்குரிமை அறிமுகமானதும் கராவ சாதியினரின் சட்டசபை […]
இந்தியாவிற்கு வெளியே பரவிய பௌத்தம், முதலில் இலங்கைக்குப் பரவியது. அதன் பின்னரே பௌத்தம் உலகின் ஏனைய நாடுகளுக்குப் பரவியது. இலங்கையில் பரவிய பௌத்தம் தேரவாதம் ஆகும். இலங்கையின் பௌத்தத்திற்கு 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொடர்ச்சியான வரலாறு உள்ளது. இக்காரணங்களினால் இலங்கையின் பௌத்தம் தனக்கேயுரிய சிறப்பியல்புகளை உடையதாய் இருக்கிறது. இச்சிறப்பியல்புகளை ‘தத்துவமும் நடைமுறையும்’ என்னும் தலைப்பில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கடவுள் மறுப்புக் கொள்கை பௌத்தம் கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்டது. […]
ஆங்கில மூலம்: குமாரி ஜெயவர்த்தன இத்தமிழ்க்கட்டுரை குமாரி ஜயவர்த்தன அவர்களின் ‘Nobodies to Somebodies: The Rise of the Colonial Bourgeoisie in Sri Lanka’ என்னும் நூலின் 19 ஆவது அத்தியாயமாக அமையும் கட்டுரையின் தமிழாக்கமாகும். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலத்தில் சட்டசபைப் பிரதிநிதித்துவம் இன அடிப்படையிலான நியமனமுறைப் பிரதிநிதித்துவமாக (Communal Representation) இருந்தது. 1911 ஆம் ஆண்டில் தேர்தல் மூலம் சட்ட சபைக்கு ஓர் உறுப்பினர் […]
ஆங்கில மூலம்: அசங்க வெலிக்கல இலங்கை மக்கள் ஜனாதிபதிமுறை தொடர்ந்திருப்பதை விரும்புகிறார்களா? 1978 அரசியல் யாப்புக் கொண்டுவரப்பட்டு 42 ஆண்டுகள் கடந்தபின் இன்று (2020இல்) ஜனாதிபதிமுறை தொடர்ந்து இருந்துவிட்டுப் போகட்டும், அதனைத் திருத்த வேண்டாம் என்ற அபிப்பிராயம் உடையவர்கள் பலர் இருப்பது உண்மையே. ஜனாதிபதிமுறைக்குப் பரவலான ஆதரவு உள்ளது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஆயினும் ஜனாதிபதிமுறைக்கு எதிரான மூன்று வாதங்கள் பரிசீலனைக்கு உரியனவாகும். 1978இல் ஜனாதிபதிமுறை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட […]
ஆங்கில மூலம்: பேராசிரியர் ஜயதேவ உயன்கொட சிவில் சமூகம் (Civil Society) என்னும் அரசியல் விஞ்ஞானக் கலைச்சொல் இன்று சாதாரண மக்கள் மத்தியிலும் அறிமுகமாகியுள்ள சொல்லாக உள்ளது. ஆனால் இச்சொல் பற்றிய கோட்பாட்டு விளக்கங்களை உள்ளடக்கிய கட்டுரைகள் தமிழில் போதியளவு இல்லை. ‘சிவில் சமூகம்’, ‘சிவில் சமூக அமைப்புகள்’, ‘ஜனநாயக சமூகத்தில் சிவில் சமூக அமைப்புகளின் வகிபாகம்’ என்பனவற்றை விளக்கும் முறையில் ‘சிவில் சமூகம்’ (Civil Society) என்னும் தலைப்பில் […]
ஆங்கில மூலம்: நவரட்ண பண்டார மூன்றாவது தலைமுறை மூன்றாவது தலைமுறை அரசியல் வர்க்கம் 1977இல் ஜே.ஆர். ஜயவர்த்தன நிறைவேற்று ஜனாதிபதியாக ஆட்சியில் அமர்ந்த காலத்தில் இருந்து உருவானது. இந்த வர்க்கம் உருவான காலத்தில் புதியதொரு தேர்தல்முறை (New Electoral System) நடைமுறைக்கு வந்தது. அத்தோடு அதிகாரங்கள் குறைக்கப்பட்ட பலவீனமான பாராளுமன்றம் உருவானது. நீதித்துறையும் பலவீனமுடையதாக ஆக்கப்பட்டது. ஜே.ஆர். ஜயவர்த்தன ஆட்சிக்காலத்தில் புதிய பொருளாதாரக் கொள்கையும் (A New Economic Policy) […]
ஆங்கில மூலம்: அசங்க வெலிக்கல கோத்தபாயராஜபக்ச 2019இல் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும் ஜனாதிபதிமுறையைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவரது ஆட்சிக் காலத்தில் 20ஆவது அரசியல் யாப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இத்திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி இலங்கையை முன்னெடுத்துச் செல்வதற்கான பிரதான நகர்வாக அமைந்தது. இத்திருத்தம் கொண்டுவரப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை ஜனாதிபதி முறைக்கு (Presidentialism) ஆதரவாக முன்வைக்கப்பட்ட வாதங்களை மறுத்து பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்பட்டன. அசங்க வெலிக்கல (Asanga Welikala) என்னும் […]
ஆங்கில மூலம்: நவரட்ண பண்டார அரசியல் பேராசிரியர் நவரட்ண பண்டார 2014ஆம் ஆண்டில் The New Class in Sri Lanka (இலங்கையில் ஒரு புதிய வர்க்கம்) என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “அரசியல்வாதிகள் இன்று ஒரு புதிய வர்க்கமாக எழுச்சி பெற்றுள்ளார்கள். இந்தப் புதிய வர்க்கம் நான்கு தசாப்தத்திற்கு மேற்பட்ட காலமாக பலமான ஒரு சமூக வர்க்கமாக உருவாக்கம் பெற்று இலங்கைச் […]
ஆங்கில மூலம்: ஜயம்பதி விக்கிரமரட்ண உலகின் பெரும்பாலான நாடுகள் பன்மைப் பண்பாடுகளை உடைய சமூகங்களாக (Multi-cultural Societies) விளங்குகின்றன. ஒரு தேசிய இனம், ஒரு மொழி, ஒற்றைப் பண்பாடு என அழைக்கக் கூடிய நாடுகள் உலகில் வெகு அரிதாகவே காணப்படுகின்றன. பன்மைப் பண்பாடுகளைக் கொண்ட சமூகங்களில் பெரும்பான்மையானவை ஆழமான பிளவுகளையுடைய சமூகங்கள் (Deeply Divided Societies) என அரசியல் விஞ்ஞானிகள் சிலர் குறிப்பிடுவர். ஆழமான பிளவுகளையுடைய சமூகங்களின் சிறுபான்மைத் தேசிய […]
ஆங்கில மூலம் : பசன் ஜயசிங்க, பீற்றர் றீட், அசங்க வெலிக்கல 1978 ஆம் ஆண்டு யாப்பு இலங்கையில் பாதி – ஜனாதிபதிமுறையை ஏற்படுத்தியது. பாதி ஜனாதிபதி முறையென்பதை ஆங்கிலத்தில் ‘Semi – Presidential System’ என அழைப்பர். இப்பாதி ஜனாதிபதிமுறை இரு உப பிரிவுகளைக் கொண்டது என அரசியல் ஆய்வாளர்கள் கூறுவர். அவையாவன: முதலாவது உப வகையான ஜனாதிபதி – பாராளுமன்றமுறையில் பிரதமரும் மந்திரிசபையும் கூட்டாக ஜனாதிபதிக்கும், பாராளுமன்றத்திற்கும் பொறுப்புக்கூற […]