ஆங்கில மூலம் : மைக்கல் பாங்ஸ் மைக்கல் பாங்ஸ் ஆய்வு குறித்த ஓர் அறிமுகம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ரினிட்டிக் கல்லூரியின் மாணவராக இருந்த போது மைக்கல் பாங்ஸ் (Michael Banks) 1950களின் முற்பகுதியில் கள ஆய்வு வேலைக்காக யாழ்ப்பாணம் வந்தார். இவர் தம் ஆய்விற்கான களப்பணியில் ஒரு வருடம் சிறுப்பிட்டி என்ற கிராமத்திலும் ஆறுமாதங்கள் கிளிநொச்சியிலும் செலவிட்டார். யாழ்ப்பாணத் தமிழர்களின் சமூக ஒழுங்கமைப்பு (The social organization of Jaffna […]
அசமத்துவச் சுயாட்சி சமூக முறைமை அரசியல் யாப்பை வரைவதற்கான சபையில் கருத்து வேறுபாடுகள் பல எழுந்தன. உணர்வுகளை தூண்டக்கூடியதான பிராந்திய சுயாட்சி என்ற விடயமே இக்கருத்து வேறுபாடுகள் யாவற்றிலும் முதன்மையானது. பஸ்க், கற்றலன், ஹலீசியா ஆகிய தேசிய இனங்கள் மொழியிலும் பண்பாட்டிலும் நாட்டின் பிறபகுதியினரை விட வேறுபட்டதாய் இருந்தன. அது மட்டுமன்றி அவை கடந்த காலத்தில் சுயாட்சி உடைய சுதந்திரமான சமூகங்களாகச் செயற்பட்டன. ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்த பிராங்கோவின் […]
ஆங்கில மூலம் : ரஞ்சித் அமரசிங்க பண்பாட்டு அடையாளம் பற்றிய பிரச்சினையும் அதிகாரப் பகிர்வும் அதிகாரப் பகிர்வு பற்றிய புதுமைகளை வெளிப்படுத்தியதாக ஸ்பெயினின் அரசியல் யாப்பு அமைந்தது. அரசியல் யாப்பினை வரைந்தவர்கள் விட்டுக்கொடுப்போடும் இணக்கபாட்டுடனும் நடந்து கொண்டனர். புதிய ஜனநாயக அரசியலுக்கு வழிசமைத்த இவ்வரசியல் யாப்பு நடைமுறை உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. ஸ்பானிய அரசு ஜனநாயக அரசாக மாற்றம் பெற்றது. அந்நாட்டின் பிராந்தியங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்த வரலாற்றுத் திருப்பத்துக்கு காரணமாக […]
ஆங்கில மூலம் : ரஞ்சித் அமரசிங்க இலங்கையில் மாகாணசபை முறை 13 ஆவது அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் பயனாக ஏற்படுத்தப்பட்டபோது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரு அலகாகவும் ஏனைய 7 மாகாணங்கள் தனித்தனி அலகுகளாகவும் கொள்ளப்பட்டன. இந்த எட்டு அலகுகளிற்கு இடையிலும் அதிகாரப்பகிர்வு சமத்துவமான முறையில் பகிரப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதிகாரங்களையும் பொறுப்புக்களையும் மாகாணசபையிடம் சமமான முறையில் பகிர்தல் சமத்துவமான அதிகாரப்பகிர்வு எனப்படும். இதற்கு மாறான […]
ஆங்கிலத்தில் : எச். எல். செனிவிரத்தின 1943 ஆம் ஆண்டில் பௌத்த பிக்கு ஒருவர் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டார். பௌத்த பிக்கு ஒருவர் தேர்தல் அரசியலில் இறங்கிய முதலாவது உதாரணமாக இது அமைந்தது. ஆயினும் அவர் அந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். 1977ம் ஆண்டில் தான் முதன்முதலாக பிக்கு ஒருவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அவரும் அந்தத்தேர்தலில் தோல்வியுற்றார். அதன் பின்னர் பத்தேகம சமித்த என்ற பௌத்த […]
ஆங்கில மூலம் : ஜயதேவ உயன்கொட சோவியத் சமஷ்டி அரசு சோவியத் சமஷ்டி அரசு அதன் தோற்றகாலம் முதலாக பல்தேசியங்களின் அரசு (Multinational State) என்ற இயல்பைக் கொண்டதாய் இருந்தது. அந்தச்சமஷ்டி அரசில் பலதேசிய அரசுகள் இணைக்கப்பட்டிருந்தன என்பதையே பல்தேசியங்களின் அரசு என்ற தொடர் குறிப்பிடுகிறது. சோவியத் சமஷ்டியில் 15 யூனியன் குடியரசுகள் சுயவிருப்பப்படி இணைந்திருந்தன. ‘பல்தேசியங்கள்’ என்ற சொல் சோவியத் யூனியனின் 1977 அரசியல் யாப்பிலும் சேர்க்கப்பட்டிருந்தது. அந்த […]
ஆங்கில மூலம் : ஜயதேவ உயன்கொட அரசு உருவாக்கச் செயல்முறையின் குறித்தவகைப் போக்கு ஒன்றாகவும், தனித்துவமான வரலாற்று அனுபவமாகவும் முன்னாள் சோவியத் யூனியனும் முன்னாள் யுகோசிலாவியாவும் விளங்குகின்றன. அங்கு முன்பு இருந்து வந்த அரசு முறை வீழ்ச்சியுற்றுப் புதிய அரசு உருவாக்கங்கள் மேற்கிளர்ந்தன. இவ்விரு நாடுகளும் புரட்சிக்குப் பிந்திய சமூகங்களாகவும் விசேடமான அரசு வடிவத்தைக் கொண்டனவாகவும் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் உருவாக்கம் பெற்றன. இவ்வகையில் இந்நாடுகளின் அரசு உருவாக்க […]
ஆங்கில மூலம் : றொபேர்ட் எஸ் பேரின்பநாயகம் பெருநெறிக் கோயில்களின் ஆகமுறைப்படியான சடங்குகளும் விழாக்களும் ஆகம முறைப்படியான சடங்குகளும் விழாக்களும் சிவன், விநாயகர், சுப்பிரமணியர், காளி முதலிய பெருநெறித் தெய்வங்களுக்கான கோயில்களிலேயே இடம்பெறும். இவ்வகைக் கோயில்கள் பொது உடைமையான கோயில்களாக இருப்பதில்லை. செல்வாக்குள்ள வேளாளக் குடும்பம் ஒன்றின் உடைமையாக இவ்வகைக்கோயில் ஒன்று இருக்கும். இக்குடும்பத்தின் மூதாதையர் ஒருவர் இக்கோயிலை கட்டியிருப்பார். பிற எல்லா உடைமைகளும் பரம்பரைவழி எப்படி உரிமை கொள்ளப்படுகின்றனவோ […]
ஆங்கில மூலம் : றொபேர்ட் எஸ் பேரின்பநாயகம் கட்டுரைக்குள் நுழைய முன்னர்… ’Caste, Religion and Ritual in Ceylon’ என்ற தலைப்பில் 1965 ஆம் ஆண்டு Anthropology Quarterly என்னும் பருவ இதழில் (1965.38(4): 218 -227) ஆய்வுக்கட்டுரையொன்றினை றொபேர்ட் எஸ். பேரின்பநாயகம் ஆங்கிலத்தில் வெளியிட்டார். இவ்வாய்வில் கூறப்படும் கருத்துக்களைத் தழுவியும், சுருக்கியும் இந்தக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஆங்கில மூலத்தில் ‘இலங்கை’ (Ceylon) எனக் குறிப்பிட்டுள்ளபோதும், கட்டுரையாசிரியர் யாழ்ப்பாணத்தைப் […]
ஆங்கில மூலம் – கெல்லி பிறியன் – பெல்ஜியம் சமஷ்டியின் சாதகமான அம்சங்கள் 1. பல்வேறு மக்கள் குழுக்களுக்கும் அவர்களின் குரலை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் பெல்ஜியம் சமஷ்டியை இலங்கைக்குப் பொருத்தமானதெனச் சிலர் குறிப்பிட்டுள்ளனர். இலங்கையில் இனக்குழுமங்களின் பரம்பலில் பெல்ஜியம் போன்றதொரு நிலை காணப்படுகிறது. தமிழர் செறிந்து வாழும் பகுதியான வடக்குக் கிழக்கு, சிங்களவர் செறிந்து வாழும் ஏனைய மாகாணங்கள் என்ற மொழி அடிப்படையான பிரிவுகள் உள்ளன. இதனைவிட இலங்கையின் மத்திய […]